APOLLOPARTHIBAN

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Tuesday, August 12, 2014

Windows media playerல் அனைத்து வீட்டியோவும் play ஆக வேண்டுமா ?

 நம் கம்ப்யூட்டரில் விண்டோ மீடியா பிளேயர் என்று ஒன்று இருப்பது எல்லோருக்கும் தெரியும். அந்த விண்டோ மீடியா பிளேயரில் நாம் ஒரு ஆடியோ பாடல் கேட்க்க நினைத்தால் கேட்டுவிடலாம் ஒரு சிறிய வீடியோ கிளிப்பை பிளே செய்ய நினைத்தால் பிளே ஆகிவிடும் ஆனால் ஒரு DVD படத்தை நம்மால் அதில் பார்க்க நினைத்தால் பார்க்க முடியாது. நம்முடைய கம்ப்யூட்டரில் DVD படம் போடும் DVD-RW பொருத்தப்பட்டு இருந்தும் நம்மால் இந்த விண்டோ மீடியா பிளேயரில் டிவிடி படத்தை போட்டு பார்க்கமுடியவில்லையே என்று சிலருக்கு வருத்தமாக இருக்கும்.



இருந்தாலும் என்ன செய்ய வேறு வழி இல்லாமல் மற்ற சில டிவிடி பிளே செய்யக்கூடிய மென்பொருட்களை இன்ஸ்டால் செய்து அதன் உதவியோடு டிவிடியை இயக்கி பார்த்துகொள்வார்கள்.



ஆனால் இங்கு நான் கொடுத்திருக்கும் Codec Pack என்ற மென்பொருளை நீங்கள் இன்ஸ்டால் செய்தால் எந்த பிரட்ச்சனையும் இல்லாமல் உங்கள் விண்டோ மீடியா பிளேயரிலேயே நீங்கள் உங்கள் DVD கேசட்டை இயக்கலாம். அதோடு மட்டுமல்ல உங்கள் மொபைல் கிளிப்புகளான .3gp டைப் வீடியோ மற்றும் .avi, .flv, .mkv, .mp4 போன்ற அனைத்துவகையான வீடியோ கிளிப்புகளையும் நீங்கள் விண்டோ மீடியா பிளேயரிலேயே பார்த்துக்கொள்ளலாம்.

இந்த K -lite Mega Codec Pack என்ற மென்பொருளை முதலில் கீழே கொடுத்துள்ள சுட்டியை கிளிக் செய்து டவுண்லோடு செய்துகொள்ளுங்கள்.



                                                

பிறகு நீங்கள் டவுண்லோடு செய்து இந்த Codec Pack என்ற ஐக்கானை டபுல்கிளிக் செய்து இன்ஸ்டால் செய்ய ஆரம்பியுங்கள். இண்டால் ஆரம்பம் செய்ததற்க்கு அடையாளமாக இங்கு கீழே காண்பதுபோன்ற ஒரு தட்டு ஓப்பன் ஆகும். இதில் Next ஐ அழுத்துங்கள்.




               

அடுத்து அடுத்து வரும் தட்டுகளிலும் Next, Next என்ற பட்டனை அழுத்தி கீழே உள்ள தட்டு வரும் வரை செல்லுங்கள். பிறகு இங்கு கிழே உள்ள தட்டில் Windows Media Player என்பதை தேர்வு செய்துவிட்டு Video Formate என்பதையும் கிளிக் செய்துவிட்டு இந்த தட்டின் வலது பக்கம் உள்ள சைடுபாரை (Side Bar)கீழே நகர்த்தி கீழே செல்லுங்கள்...



அடுத்து இங்கு கீழே உள்ள தட்டில் காண்பதுபோல் Audio Formats என்பதையும் டிக் செய்யுங்கள்.




அடுத்து இங்கு கீழே காண்பதுபோல் டிக்குகளையும் செய்துகொள்ளுங்கள்...




அடுத்து உங்களிடம் உள்ள ஸ்பீக்கர் என்ன என்பதை இங்கு செலெக்ட் செய்துகொண்டு Next ஐ அழுத்துங்கள்.


அடுத்ததாக உங்களுக்கு இந்த கீழ் காணும் தட்டு ஓப்பன் ஆகும் இதில் Install என்ற பட்டனை அழுதுங்கள்.






நீங்கள் இன்ஸ்டால் என்ற பட்டனை அழுத்தியதும் உங்கள் கம்ப்யூட்டரில் Codec Pack இன்ஸ்டால் செய்ய ஆரம்பித்துவிடும்.


கடைசியாக வரும் இந்த தட்டில் Finish என்பதை அழுத்தி உங்கள் இன்ஸ்டால் செட்டப்பை முடித்துவிடுங்கள்.


அவ்வளவுதான். இனி நீங்கள் உங்கள் மொபைல் கிளிப் .3gp, மற்றும் mp4, .avi, mpeg, flv, DVD Formate VOB எதுவாக இருந்தாலும் சரி உங்கள் Windows Media Player என்ற மென்பொருளிலேயே Play செய்துகொள்ளலாம்.

Wednesday, July 16, 2014

உங்கள் புகைப்படம் ஒரிஜினலா அல்லது எடிட் செய்யப்பட்டதா?


    நண்பர்களே நாம் நிறைய புகைப்படம் கணணியில் வைத்து இருப்போம் ஆனால் அதில் எத்தனை புகைப்படங்கள் உண்மையானவை என்று தெரியும் உங்களுக்கு புகைப்படக்கருவி மூலம் எடுத்தாத அல்லது அடோப் போட்டோஷாப் மூலம் எடிட் செய்து உருவாக்கப்பட்டது எந்த புகைப்படக்கருவி மூலம் எடுக்கப்பட்டது அதை எவ்வாறு கண்டுபிடிப்பது இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் இந்த மென்பொருள்  மூலம் கிடைத்து விடும்.

இதன் சிறப்பம்சங்கள்

1. .JPG, .THM, .AVI, .DNG, .CRW, .CR2, .NEF, .ORF, .PEF, .MOV, .PDF
No Preview Available - Windows Explorer
Drawing Failed - Windows Picture & Fax Viewer
This document may be damaged (the file may be truncated or incomplete) - Photoshop
Can't read file header! Unknown file format or file not found! - IrfanView
Could not complete your request because an unknown or invalid JPEG marker type is found - Photoshop
இது போன்ற பிழைகள கூறும் புகைப்படங்களை திறக்க முடியும்.
 

2. இந்த மென்பொருள் மூலம் பார்க்க திறக்க முடியாத புகைப்படங்களையும் திறக்க முடியும் (Corrupt Photos Recover & View)

இதற்கு உதாரணமாக சில புகைப்படங்கள் கீழே


                                
                                                          

                          

மென்பொருள் தரவிறக்கம் 


                                                                                                      
 

Saturday, June 14, 2014

விண்டோஸ் 8 முகப்புப் பக்கத்தை விண்டோஸ் 7 போல் மாற்ற

விண்டோஸ் 8 இல் உள்ள Metro-Style user Interface ஆனது tablet PC பாவனையாளர்களுக்கே மிகவும் பொருத்தமானது. நீங்கள் ஒரு வீட்டுக்கணணி பாவனையாளர் எனின் இது உங்களுக்கு பாவனைக்கு கடினமானதாக இருக்கலாம். எனவே நன்றாகப் பழகிய விண்டோஸ் 7 Start Menu தோற்றம் போல் எவ்வாறு மாற்றலாம் என்பது பற்றியதே இப்பதிவாகும்.


இதற்கு முதலில் விண்டோஸ் 8 இல் “Search Apps” இற்குச் சென்று அங்கு “regedit” என்று type செய்யவும். இப்போ இடப்பக்கத்தில் தேடல் முடிவாக Registry Editor Icon ஆனது தோன்றும். இதனை Double-Click செய்து திறந்துகொள்ளவும். இப்போ Winows Registry Editor ஆனது திறந்துகொள்ளும்.


இதிலே கீழ் உள்ள ஒழுங்கில் சென்று “Explorer” என்பதை அடையவும்.
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer 


இப்போ வலப்பக்கத்தில் உள்ள “RPEnabled” என்பதை Double-Click செய்து திறந்துகொள்ளவும்.


இப்போ தோன்றும் விண்டோவில் Value dataஎன்பதற்கு 0 என்று கொடுத்து OK செய்யவும்.

இப்போ உங்கள் விண்டோஸ் 8 இல் உள்ள Metro-Style user Interface ஆனது விண்டோஸ் 7 Start Menu தோற்றம் போல் மாற்றமடைந்திருக்கும்.

Monday, December 2, 2013

ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து கணினியில் பதிவிறக்கம் செய்ய


கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள அப்ளிகேஷன்களை நேரடியாக கணினியில் பதிவிறக்கம் செய்வது எவ்வாறு என்று ஏற்கனவே எழுதியிருந்தேன் . அது ஒரு மென்பொருள் உதவியுடன் பதிவிறம் செய்வது ஆகும். ஆனால் இந்த முறைமையானது ஆன்லைன் உதவியுடன் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்வது எவ்வாறு என பார்ப்போம். ஆன்ட்ராய்ட் பற்றியோ கூகுள் பிளே ஸ்டோர் பற்றியோ பெரிய முன்னுரை தேவையில்லை என்று நினைக்கிறேன்.

ஆன்ட்ராய்ட் என்பது கூகுள் நிறுவனத்தின் மொபைல்/டேப் களுக்கான இயங்குதளம் ஆகும். இந்த இயங்குதளத்தில் இயங்கும் அப்ளிகேஷன்களுக்கென ஒரு சந்தையினை உருவாக்கியது அதற்கு பெயர் தான் பிளேஸ்டோர் ஆகும். இச்சந்தையில் தற்போது கூகுள் நிறுவனத்தின் சோதனைக்குட்பட்ட மென்பொருள்கள் மட்டுமே உள்ளன.

கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் அப்ளிகேஷன்களை நாம் நேரிடையாக கணினியில் பதிவிறக்கம் செய்ய முடியாது. ஆன்ட்ராய்ட் இயங்குதளம் நிறுவப்பட்ட மொபைல் சாதனம் மற்றும் டேப்  லிருந்து மட்டுமே ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்ய முடியும்.

கூகுள்பிளேஸ்டோரில் இருக்கும் அப்ளிகேஷன்களை கணினியில் பதிவிறக்கம் செய்ய ஒரு தளம்  உதவி செய்கிறது.

தளத்திற்கான சுட்டி 

எந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டுமோ அதற்கு குறிப்பிட்ட அப்ளிகேஷனின் URL முகவரி கண்டிப்பாக வேண்டும். URL முகவரியினை பெற பிளேஸ்டோர் சென்று குறிப்பிட்ட அப்ளிகேஷனின் முகவரியினை பெற்றுவிட முடியும்.


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, குறிப்பிட்ட அப்ளிகேஷனின் முகவரியை (url) குறிப்பிட்டு பின் Generate Download Link என்னும் பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டி கிடைக்கும் அதை பயன்படுத்தி கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.



கணினியில் தரவிறக்கம் செய்யும் ஆன்ட்ராய்ட் மென்பொருள்களை வழக்கம்போல் ஆன்ட்ராய்ட் சாதனங்களில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
                              
 

Saturday, October 26, 2013

ட்ரைவ் ஐகான்களை மாற்ற


வன்தட்டினை தனித்தனி பகுதிகளாக பிரித்து வைத்திருப்போம், விண்டோஸ் இயங்குதளத்தில் C,D,E,F என வரிசையாக ட்ரைவ்கள் பிரிக்கப்பட்டு இருக்கும். இந்த ட்ரைவ் ஐகான்களை நமது விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். ட்ரைவ்களுக்கு எவ்வாறு பெயரினை மாற்றியமைத்து வைத்துக்கொள்கிறமோ அதே போல் ட்ரைவ் ஐகான்களையும் மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதற்கு இலவச மென்பொருள் ஒன்று வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை சுட்டியில் குறிபிட்ட தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பின் ஒப்பன் செய்யவும். ஒப்பன் ஆகும் விண்டோவில் குறிப்பிட்ட ட்ரைவினை தேர்வு செய்து பின் Install என்னும் பொத்தானை அழுத்தவும். பின் குறிபிட்ட ஐகானை தேர்வு செய்யவும். ட்ரைவ் ஐகான் மாற்றப்பட்டு விட்டது என்ற அறிவிப்பு செய்தி தோன்றும்.


இப்போது மைகம்ப்யூட்டரை திறந்து பார்த்தால் ட்ரைவ் ஐகான்கள் மாற்றப்பட்டு இருக்கும். சில நேரங்களில் நீங்கள் குறிப்பிட்டவாறு ஐகான்கள் மாற்றமடையவில்லையெனில் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து பின் திறக்கவும் அப்போது ட்ரைவ் ஐகான்கள் மாற்றப்பட்டு இருக்கும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் விண்டோஸ் 7,8 மற்றும் 8.1 ற்கும் பொருந்தும்.

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget