APOLLOPARTHIBAN: September 2011

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Friday, September 30, 2011

நமது தேவைக்கேற்ப பாடல்வரிகளை, இசையை நமது செல்போனில் ரிங்டோனாக வைத்துக் கொள்ள ?


சில பாடல்கள் கேட்க அருமையாக இருக்கும். நாம் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்களும் இருக்கும்.
சில பாடல்களில் இடையில் வரும் இசை நன்றாக இருக்கும்.
அதைப்போல சில பாடல்களில் இடையில் வரும் பாடல்வரிகள் அருமையாக இருக்கும். நாம் நமது தேவைக்கேற்ப பாடல்வரிகளை, இசையை நமது செல்போனில் ரிங்டோனாக வைத்துக் கொள்ளலாம்.

அவ்வாறு வைத்துக்கொள்ள நமக்கு ரிங்டோன் மேக்கர் தேவைப்படும். 2 எம்.பி கொள்ளளவு கொண்ட இந்த சின்ன மென்பொருளினை பதிவிறக்கம் செய்யஇங்கு கிளிக் செய்யவும். இதனை நிறுவியதும் உங்களுக்கு ஒரு விண்டோ ஒப்பன் ஆகும்.
தேவையான பாடலை நீங்கள் உங்கள் கணணியில் இருந்து தேர்வு செய்யவும். பாடலை ஒலிக்க விடுங்கள். தேவையான இடம் வந்ததும் இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி வையுங்கள். மீண்டும் ஒரு முறை பாடலை ஒலிக்க விடுங்கள். சரியாக வருகின்றதா என பாருங்கள். அடுத்துள்ள Next அழுத்துங்கள்.
Save Ringtone to My Computer கிளிக் செய்து பாடலை எங்கு சேமிக்க விரும்புகின்றீர்களோ அங்கு சேமியுங்கள்.
உங்களுக்கு Processing நடைபெறும். ரிங்டோன் தயாரானதும் அடுத்து நீங்கள் சேமித்து வைத்துள்ள இடத்தில் சென்று பாருங்கள். நீங்கள் உருவாக்கிய ரிங்டோன் அங்கு இருக்கும். அதிலிருந்து உங்கள் செல்போனுக்கு ரிங்டோனை மாற்றிக் கொள்ளுங்கள்.

Thursday, September 29, 2011

கூடுதலாகக் கிடைக்கும் ஜிமெயில் வசதிகள்



கூகுள் குழுமத்திலிருந்து வந்ததனால் மட்டுமே, ஜிமெயில் அதிக வசதிகளைக் கொண்டிருப் பதில்லை. ஜிமெயில் இயக்கத்திற்கு தனியாகச் செயல்படும் புரோகிராமர்கள் பலரும், பல வசதிகளைத் தரும் புரோகிராம்களைத் தந்துள்ளனர். இவற்றை எந்தக் கட்டணமும் இன்றி நாம் பெற முடியும். மெயில் செட்டிங்ஸ் பிரிவில் லேப்ஸ் தளத்தில் இவற்றை இயக்க செட் செய்திட முடியும். இதன் மூலம் நம் ஜிமெயில் பயன்பாட்டினை, நம் விருப்பப்படி அமைக்க முடியும். அத்தகைய சில வசதிகளை இங்கு காணலாம்.

1. ஆயத்த பதில்கள் (Canned Responses): இதனைப் படிக்கையில், ஏதோ நாம் விடுமுறையில் ஊருக்குச் செல்கையில், அல்லது மின்னஞ்சல் பார்க்க இயலாத நாட்களில், நமக்கு வரும் அஞ்சல் களுக்கான பதில்களைத் தானாக அனுப்பும் வசதி போல் தெரியும். இது அதுமட்டுமல்ல; வழக்கமாக நாம் அனுப்ப வேண்டிய பதில்களை அல்லது வாடிக்கையாளர்களுக்கான செய்திகளை ஆயத்தமாகத் தேவைப்படும்போது அனுப்ப தயாரித்து வைக்கலாம்.

2. நிகழ்வுகள் நாட்காட்டி(Google Calendar Widget): இது ஒரு டெம்ப்ளேட் இணைப்பது போல. நமக்கு நாமே எழுதி வைக்கும் நினைவூட்டல் கட்டம். இதில் நாம் மேற்கொள்ள வேண்டிய நிகழ்வுகளை எழுதி அமைக்கலாம். இதனை கூகுள் காலண்டர் வசதி என்றும் அழைக்கலாம். இது ஜிமெயில் தளத்தின் இடதுபக்கத்தில் ஒரு கட்டமாக அமைக்கப்படும்.

3. கூகுள் முன் நினைவூட்டி (Google Docs Widget): உங்கள் நண்பர்கள் அல்லது தலைமை நிர்வாகியிடமிருந்து, உங்கள் கவனத்திற்கு கூகுள் டாக்ஸ் அனுப்பப் பட்டால், உங்கள் ஜிமெயில் தளத்தில், அதன் முன் தோற்றக் காட்சி ஒன்று காட்டப்படும். இதனால், நீங்கள் நேரங்கடந்து இதனைக் காணும் சூழ்நிலை தவிர்க்கப்படும்.

4. அஞ்சலில் இடம் காட்டும் மேப் (Google Maps Preview): உங்கள் இமெயில் முகவரி ஏட்டில் உள்ள முகவரிகளுக்கான ஊர்கள் சார்ந்த சிறிய மேப் ஒன்று காட்டப்படும்.

5. படங்களை இணைக்க (Inserting Images): இந்த வசதி குறித்து சென்ற வாரம் கம்ப்யூட்டர் மலரில் ஒரு குறிப்பு தரப்பட்டது. அஞ்சல் செய்தியிலேயே போட்டோ மற்றும் படங்களை இடைச் செருகலாக அமைப்பது. இதன் மூலம் அந்த படங்களுக்கான குறிப்புகளையும் நாம் இணைக்கலாம். மற்றபடி நாம் படங்களை இணைப்பாகத்தான் அமைக்க முடியும்.

6. படித்ததாகக் குறித்துக் கொள் (Mark as Read Message): நமக்கு வரும் அஞ்சல் செய்திகள் அனைத்தையும் படித்துக் கொண்டிருக்க முடியாது. சிலவற்றைத் திறந்து படிக்கும் எண்ணமும் நமக்கு இருக்காது. திறக்காத அஞ்சல்கள், படிக் காதவையாகத் தோற்றமளிக்கும். எனவே, இவற்றைப் படிக்காமலேயே, படித்ததாகக் குறித்துக் கொள்ளும் வசதியை இது தருகிறது.

7. அஞ்சல் முன் தோற்றம் (Message Sneak Peek): இந்த வசதி குறித்தும் சென்ற வாரம் எழுதப்பட்டது. மின்னஞ்சல் செய்தி யினைத் திறக்காமலேயே, அதில் உள்ளதைக் காட்டும் வசதி இது. இதிலிருந்து என்ன செய்தி உள்ளது என்பதனை நாம் அதனைத் திறக்காமலேயே உணர முடியும்.

8. மவுஸ் வழி உலா (Mouse Gestures): மவுஸைப் பிடித்தவாறே, அதனை அசைத்து, மின்னஞ்சல் பட்டியலில் செல்லும் வசதி இது. ரைட் கிளிக் செய்தவாறே, இடது பக்கம் மவுஸை நகர்த்தினால், முந்தைய மின்னஞ்சலுக்குச் செல்வீர்கள். வலது பக்கம் நகர்த்தினால், அடுத்த அஞ்சலுக்குச் செல்லலாம். மேலே நகர்த்தினால், இன்பாக்ஸ் செல்லலாம். இப்படியே பல நகர்த்தல்களை மேற்கொள்ளலாம்.

9. அனுப்பியவரின் நேரங்காட்டி (Sender’s Time Zone): மின்னஞ்சல் மூலம் நாம் பன்னாட்டளவில் உள்ள நண்பர்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. அஞ்சலைப் பார்த்தவுடன் அவருடன் பேசலாம் என்று தோன்றுகிறதா? அந்த நேரத்தில், அவர் நாட்டில், அவர் ஊரில் என்ன நேரம்? தூங்கும் நேரமா? என்ற கேள்விகளுக்கு இந்த வசதி பதிலளிக்கிறது.

10. அனுப்பியதை நிறுத்து (Undo Send): அஞ்சல் ஒன்றை அனுப்பியவுடன், அடடா, அனுப்பியிருக்கக் கூடாதே என்று எண்ணுகிறீர்களா? சில நொடிகள் எனில், அது அனுப்பப் படுவதை நிறுத்த, இந்த வசதியைப் பயன் படுத்தலாம்.

பேஸ்புக்கில் உங்களை Unfriend செய்தவர்களை சுலபமாக கண்டறிய புதிய வசதி-Timeline Users

பேஸ்புக் தளம் Timeline எனப்படும் புதிய தோற்றத்தை அனைவருக்கும் தெரிவித்து உள்ளது. (இந்த புதிய தோற்றத்தை ஆக்டிவேட் செய்யாதவர்கள் இங்கு சென்று ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்). இந்த புதிய தோற்றத்தின் நோக்கம் பெச்புக்கின் அனைத்து தகவலும் ஒரே பக்கத்தில் எதற்க்காவும் உள்ளே செல்ல வேண்டிய அவசியமில்ல. மற்றும் இந்த புதிய தோற்றத்தில் சில வசதிகள் மறைந்தும் உள்ளது. அதில் ஒன்று தான் உங்களை நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கியவர்களை பார்க்கும் வசதி. அதன் படி உங்களை நீகியவர்களை எப்படி காண்பது என கீழே பார்ப்போம்.

முதலில் உங்கள் பேஸ்புக்கின் profile பகுதிக்கு செல்லுங்கள். அதில் உங்கள் ஸ்க்ரோல் பாரை நகர்த்தி கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளது போல இருக்கும் பகுதிக்கு செல்லுங்கள்.

  • அதில் Made friends என்று இருக்கும் லிங்கில் கிளிக் செய்யுங்கள்.
  • உங்களுக்கு இன்னொரு popup விண்டோ ஓபன் ஆகும்.
  • இந்த மாதத்தில் உங்களுக்கு நண்பர்களாக சேர்ந்தவர்கள் பட்டியல் இருக்கும் அதில் ஒவ்வொரு நபருக்கும் நேராக Friends என்ற ஒரு பட்டன் இருக்கும்.
  • ஆனால் உங்களை யாராவது பட்டியலில் இருந்து நீக்கி இருந்தால் அவர் பெயருக்கு நேராக Add Friend என்ற பட்டன் இருப்பதை பார்க்கலாம்.

இந்த பட்டன் இருந்தால் அவர் உங்களை அவரின் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளார் என அறிந்து கொள்ளலாம்.

Tuesday, September 27, 2011

pen Drive இல் இருந்து அழிந்த கோப்புக்களை மீட்டெடுக்கலாம் வாங்க..

நாம் நமக்கு தேவையான முக்கியமான சில கோப்புகளை நமது pen driveல் சேமித்து வைத்திருப்போம். திடீரென சில வேளைகளில் அந்த கோப்புகள் மறைந்து காணப்படும் அல்லது அதே கோப்புகளை கிளிக் செய்தால் அந்த கோப்புகள் திற படாமல் அடம்பிடிக்கும். நாம் அந்த கோப்புகள் அழிந்து விட்டதா என pen drive ன் properties பார்த்தால் ஏற்கனவே இருந்த கோப்புகளின் file size ஐ used space ஆக காட்டும்.

சரி நமது கோப்புகள் hiden ஆகியுள்ளது என முடி வெடுத்து Foler option சென்று show hidden files, folder and drives எனும் option ஐ கிளிக் செய்தால் அது வேலை செய்ய மறுக்கும். இதிலிருந்து நமது கோப்புக்களை மீட்டெடுக்க வழிதான் என்ன என திண்டாடுவோம்.

முதலில் இந்த பிரச்சினை ஏன் ஏற்படுகிறது என்று பார்த்தால் நமது கணணியில் சில மல்வேர்கள், ஸ்பைவேர்கள் நின்று கொண்டு செய்யும் அட்டகாசம் தான் இது.
இவ்வாறான மல்வேர்கள் நமது பைல்களின் தனித்தன்மையை மாற்றிவிடும் அதுமட்டுமன்றி நமது ஒரிஜினல் கோப்புகளை மறைத்து அதன் பெயரில் டுப்ளிகேட் மல்வேர் பைல்களை உருவாக்கி விடும்.. இதை அறியாமல் நாம் ஒரிஜினல் பைல் என்று நம்பி இந்த டுப்ளிகேட் மல்வேர் பைல்களையே கிளிக் செய்கிறோம்.. இதன்போது நமது கணணியில் மேலும் பல அட்டகாசங்களை இந்த மல்வேர்கள் செய்கின்றன..

இதிலிருந்து நமது மறைந்த பைல்களை மீட்க என்னதான் வழி…
command Prompt ல் சில வசனங்களை கொடுப்பதன் மூலம் நமது PenDriveல் இருந்து மறைந்த கோப்புகளை மீட்டெடுக்கலாம்…

இதனை மேலும் இலகுபடுத்த command prompt உபயோகித்து என்னால் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய மென்பொருள் PenDrive clean beta மூலம் இலகுவில் மீட்டெடுக்கலாம்..

PenDrive clean beta® தரவிறக்க சுட்டிக்கு இங்கே அழுத்தவும் (இது வெறும் 436 KB அளவையே உடை

  • தரவிறக்கிய மென்பொருளை உங்கள் pen drive ல் இட்டு பின் அதனை open செய்யவும்…
    (PenDrive clean beta ஐ உங்கள் pen Drive இல் இட்டு பின் pen Drive இல் இருந்தே Application ஐ open செய்யவும்)

  • PenDrive clean beta என்பதை open செய்தவுடன் cmd window திறக்கும் பின் cmd window இல் press any key to continue… என்று வந்ததும் என்டரை தட்டவும்…

  • பின் pen Drive scan செய்து முடித்ததும்

It is safe to double click your pen drive when you remove and attach again
It is advisable that run this program
before you remove the pen drive from computer.
Get More infore : http://farhacool.blogspot.com

என்று செய்தி வரும் …

ஆம் இப்பொழுது உங்கள் பென் ரைவில் இருந்த வைரஸ்கள் அழிந்து, மறைந்த கோப்புக்கள் மீண்டிருப்பதை காணலாம்..


PenDrive clean beta வின் தொழிற்பாடுகள்
This program stops exe virus process in memory and
1.unhides your files and folders
2. makes sure safe double click on pen drive
3. deletes exe files created by SillyFDC virus including fun.exe in pen drive
3. Deletes autorun.inf file in pen drive
4. creates hidden, read-only autorun.inf folder, for security purpose

Monday, September 26, 2011

Mobileக்கு அதிவேகமான UC Browser 7.9 புதிய வெர்சன்




Mobileக்கான ஆயிரம் browserகள் உள்ளன. ஆனால் நாம் browserரை பயன்படுத்துவதே வேகமாக browsing செய்ய தான். தற்போது புதிய UC Browser 7.9.0.102 வெளியிடப்பட்டுள்ளது. இந்த browser மற்ற browserகளை காட்டிலும் வேகமாக இயங்ககூடியது. Face book, twitter, orkut, gmail, yahoo mail, yahoo messenger, உங்களுக்கு என்ன வேண்டும் எல்லாமே இதன் உள்ளே இருக்கு


UC Browser (Java) screenshot 1
UC Browser (Java) screenshot 2
UC Browser (Java) screenshot 3
UC Browser (Java) screenshot 4
UC Browser (Java) screenshot 5
UC Browser (Java) screenshot 7

Saturday, September 24, 2011

பேஸ்புக்கில் Subscribe வசதியை பயன்படுத்துவது எப்படி?

பேஸ்புக் (Facebook) நிறுவனம் தனது உறுப்பினர்களைத் தக்க வைக்க புத்தம் புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. நாம் இப்போது பார்க்கப் போவது Subscribe வசதியைப் பற்றி. Subscribe என்றால் குறிப்பிட்ட நண்பர்கள் நமக்குப் பிடித்திருந்தால் நாம் அவர்களுக்கு நண்பராகச் சேரப்போவது இல்லை. அவர்களது பப்ளிக் (Public) செய்திகள்/அப்டேட்கள் மட்டும் நமக்குத் தெரிந்தால் போதும். இதனால் Friend Request கொடுத்து தொல்லை செய்யத் தேவையில்லை. சப்ஸ்கிரைப் செய்வதன் மூலம் அவர்களின் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.

பிரபலமானவர்கள், சினிமா நட்சத்திரங்கள் போன்ற உங்களுக்குத் தெரியாத நபர்களின் அப்டேட்களை நாமும் பெற இந்த வசதி உதவுகிறது. இதற்கு அவர்களின் புரோபைல் பக்கத்தில் சென்று Subscribe செய்தால் போதுமானது. இந்த வசதி Twitter இன் Followingவசதி மற்றும் கூகிள் பிளஸின் Add to circles வசதியை ஒத்ததாக எடுத்துக் கொள்ளலாம். இதில் அவர்கள் Public என்று வெளியிடுகிற செய்திகளை மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும். அந்தரங்க தகவல்களை அறிய வேண்டுமானால் சற்று முயற்சி செய்து நண்பரானால் தான் உண்டு. சரி இந்த வசதியை நமது புரொபைலுக்கு ஆக்டிவேட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

கீழுள்ள சுட்டியைக் கிளிக் செய்து பேஸ்புக்கின் சப்ஸ்கிரைப் பக்கத்திற்கு சென்று அதில் Allow Subscribers என்ற பட்டனைக் கிளிக் செய்யுங்கள்
http://www.facebook.com/about/subscriptions
அடுத்து Subscribe Settings பக்கம் வரும். இதில் மூன்று அமைப்புகள் உள்ளன.
1.யாரெல்லாம் உங்கள் செய்திக்கு கமெண்ட் போடலாம் என்பது. (who can comment)
2.யாருடைய ஆக்டிவிட்டிகள் எல்லாம் உங்களுக்குத் தெரிவிப்பது என்பது (Notification)
3.நண்பர்களுடைய நண்பர்கள் அதிகமாக நமக்கு Friend Request கொடுக்காமலிருக்க வழி செய்தல்

மேற்கண்ட அமைப்புகளை அமைத்து விட்டு ஒகே பட்டனைக் கிளிக் செய்தால் உங்களுக்கான Subscribe வசதி ஆக்டிவேட் செய்யப்படும். இதன் பின் உங்கள் செய்திகளைப் பின் தொடர நினைக்கும் நண்பர்கள் Subscribe பட்டனைக் கிளிக் செய்து கொண்டால் நீங்கள் பப்ளிக்காக வெளியிடும் செய்திகள் அவர்களுக்கு சென்று சேரும்.

அடுத்து நாம் அடுத்தவரின் Subscribe வசதியைக் கிளிக் செய்து சேரும் போதே எந்த மாதிரியான அப்டேட்கள் மட்டுமே வேண்டும் என முடிவு செய்து கொள்ளலாம்.
All Updates, Most Updates, Only Important போன்ற வகைகளில் எதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். அதே போல அப்டேட் செய்யப்படும் செய்திகளைப் பொறுத்து ஃபேஸ்புக் வகைப்படுத்தியிருக்கிறது. Status, Photos, Comments, Activites, Likes போன்றவற்றில் வேண்டாதவற்றைத் தவிர்க்கலாம். அல்லது உங்களுக்குப் பிடித்தமானவற்றை வைத்துக் கொள்ளலாம். இந்த மாதிரி Subscribe Option களை விரும்பியவாறு தேர்வு செய்து கொள்வதன் மூலம் அடுத்தவர்களின் அத்தனை செய்திகளும் வராமல் கட்டுப்படுத்தலாம். பிடிக்கவில்லை என்றால் Unsubscribe செய்து கொள்ளுங்கள். கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.

ஏற்கனவே நமது நண்பர்களாக இருந்தவர்கள் Friend Subscriber களாகவும் இப்போது புதிதாக நம்மைத் தொடர்பவர்கள் Public Subscriber களாகவும் பேஸ்புக் பிரித்திருக்கிறது. நம்மைப் பின் தொடரும் Public Subscriber களின் பட்டியல் இங்கே சென்று பார்க்கலாம்.

உங்கள் கணினியில் உள்ள கேமராவினை பாதுகாப்பு கேமராவாக மாற்றலாம்

உங்கள் கணினியில் உள்ள கேமராவினை பயன்படுத்தி நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ உரையாடலுக்கு பயன்படித்தியிருப்பீர்கள் . மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு பாயன்படுத்தியிருக்கலாம்.


உங்கள் கணினியில் உள்ள கேமராவினை பாதுகாப்பு (secruity) கமரவாக எந்த உபகரணமோ அல்லது மென்பொருளோ இன்றி இணைய இணைப்பின் மூலம் மாற்றியமைக்க முடியும்.



இந்த மாற்றத்தினை செய்ய CAMMSTER .COM என்ற இணையம் உதவுகிறது. இந்த தளத்துக்கு சென்று PROTECT என்பதை கிளிக் செய்தால் உங்கள் பதிவு கோரப்படும். அதிலே உங்கள் ஈமெயில் மற்றும் பாஸ்வோர்ட் கொடுத்து பதிவு செய்து கொண்டால் உங்களுக்கு உங்கள் ஈமெயில் கணக்கிற்கு செய்தி அனுப்பப்படும் அந்த சரிபார்ப்பு கோட்டின் மூலம் திறந்து கொண்டால் தற்போது தோன்றும் விண்டோவில் கீழே காட்டப்பட்ட பட்டன்களை முறையே கிளிக் செய்தல் வேண்டும்
1 .






2.



இப்போது உங்கள் வெப்கம் செயற்படுத்துவதற்கான அனுமதி கோரப்படும் அதை ALLOW செய்தால் உங்கள் கணினியில் உள்ள கேமரா பாதுகாப்பு கேமராவக செயற்பட்டும்.

எந்த வொரு அசைவு மாற்றங்களையும் படம் பிடித்து உங்கள் ஈமெயில் முகவரிக்கு படங்களாக அனுப்பி வைக்கும். அத்துடன் ஒலியினையும் ஏற்படுத்துவதுடன் பாதுகாப்பு வசதியினையும் கொண்டுள்ளது.

முக்கியமான விடயம் நீங்கள் இந்த பக்கத்தை மூடுதல் ஆகாது. இதன் மூலம் வித்தியாசமான அனுபவம் ஒன்றை பெறலாம்.
தள முகவரி COMMSTER .COM

இலவச லைசன்ஸ் கீயுடன் AVG Internet security 2012



இன்டர்நெட் செக்யூரிட்டி ஆண்டி வைரசை விட நமது கணிணிக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. இலவச ஆண்டி வைரஸ் வழங்கிவரும் AVG நிறுவனம் தற்போது பல்வேறு வசதிகளுடன், இன்டர்நெட் செக்யூரிட்டி 2012 ஐ வெளியிட்டு இருக்கிறார்கள். இது ஒரு கட்டண மென்பொருள், இதன் சந்தை மதிப்பு $70 ஆகும். இலவச லைசன்ஸ் கீயுடன் நமது கணினியை பாதுகாப்போம் வாங்க

முந்தைய பதிவில் எழுதிய கட்டண மென்பொருள் Avg Pc Tune Up இதில் இணைந்தே வருகிறது. மேலும் Anti Virus, Link Scanner, E-mail Security, Firewall, Anti Rootkit போன்ற வசதிகளும் இதில் காணப்படுகிறது.

Avg Internet Security 2012 டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் பண்ணவும்
விண்டோவில் கிழே உள்ள ஏதாவது ஒரு கீயை கொடுக்கவும்.

8MEH-RQPO6-7ZS98-HGY9A-F88ED-XEMBR-ACED
8MEH-RUT9Q-4FZ2R-PX2XA-TU7C9-LEMBR-ACED
8MEH-RCFXA-ZDCKS-8ROGA-G9FQN-7EMBR-ACED

Friday, September 23, 2011

Windows 7 ன் வேகத்தை அதிகரிப்பது எவ்வாறு?



Windows 7 ன் வேகத்தை அதிகரிப்பது எவ்வாறு? என்பது தொடர்பாக 10 மேற்பட்ட படிமுறைகளில் இசையுடன் இக்கானொளி சொல்லித்தருகிறது. தெளிவாகவும் உள்ளது.

கோப்புகளை டெலிட் செய்யும் முன் அனுமதி பெறுவதற்கு


நம் கணணியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை அழிக்கும் போது தவறுதலாக நமக்கு தேவையான கோப்புக்களையும் அழிக்க நேரிடலாம்.
இதனால் நாம் ஒவ்வொரு முறையும் டெலிட் செய்யும் போது நம்மிடம் அனுமதி பெற்று டெலிட் செய்தால் நன்றாக இருக்கும். வழக்கமாக இந்த செட்டிங் கணணியில் இருக்கும்.

தவறுதலாக இந்த செட்டிங் மாறிவிட்டால் நாம் கோப்புகளை டெலிட் செய்யும் சமயம் நம்மிடம் அனுமதி கேட்காமலேயே கோப்புகள் ரீ-சைக்கிள் பின்னுக்கு சென்றுவிடும்.

இதனை தவிர்க்க ஒவ்வொரு முறையும் நாம் டெலிட் செய்கையில் நம்மிடம் அனுமதி கேட்டு டெலிட் ஆவது போல் செட் செய்யலாம். அதற்கு நீங்கள் ரீ-சைக்கிள் பின்னை ரைட் கிளிக் செய்து ப்ராபர்டீஸ் தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் Global என்பதனை தேர்வு செய்யுங்கள். வரும் விண்டோவில் Display delete confirmation dialog என்பதின் எதிரில் உள்ள கட்டத்தில் டிக் செய்து பின்னர் Apply -Ok செய்யுங்கள்.

பின்னர் ஏதாவது ஒரு கோப்பை டெலிட் செய்யும் போது உங்களிடம் அனுமதி பெற்ற பின்னரே டெலிட் செய்யப்படும்

Thursday, September 22, 2011

VLC மூலம் வீடியோக்களின் வடிவத்தை மாற்ற ( CONVERTING VIDEOS)

VLC MEDIA PLAYER-ஐ பற்றி தெரியாதவர்கள் இருக்க இயலாது அந்த அளவுக்கு இந்த பிளேயர் புலமை பெற்றுவிட்டது. இதன் மூலம் நாம் எந்த வடிவமுள்ள கோப்பினையும் பார்வையிடலாம் இது தான் இதன் மிகப்பெரிய அனுகூலமாகும். இதனாலே இந்த மென்பொருளை அனைவரும் விரும்புகின்றனர். அதுமட்டுமல்ல இதில் ஏராளமான பயன்பாடுகளும் உள்ளது இதை பற்றி ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருந்தேன் அதை படிக்க இங்கே அழுத்துங்கள்.

நம்மில் பலர் வீடியோவின் வடிவத்தை மாற்றுவதை ஒரு வேலையாகவே செய்வோம். அதன் வடிவத்தை ஒவ்வொரு கைபேசிக்கும் ஏற்றவாறு அல்லது அதனை ஆடியோ கோப்பாகவோ மாற்றுவோம். இதற்காக பல வகையான கோப்புகளையும் நிறுவி வைத்திருப்போம். ஆனால் அந்த வேலைகளை VLC யின் மூலமாகவும் நாம் பார்க்கலாம் அது பற்றி பார்ப்போம்.

VLC யின் மூலம் வீடியோ கோப்பின் வடிவத்தை நாம் மிகவும் எளிதாக மாற்றலாம்.

அதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது :



  • முதலில் VLC-ஐ திறந்து கொள்ளுங்கள்.
  • பின்னர் அதில் MEDIA > CONVERT/SAVE என்பதை அழுத்துங்கள் அல்லது CTRL + Rஅழுத்துங்கள்



  • பின்னர் கோப்பினை ADD பொத்தானை அழுத்தி தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • பின்னர் கீழே உள்ள CONVERT/SAVE அருகில் உள்ள முக்கோண பொத்தானை அழுத்தி CONVERT என்பதை தேர்வு செய்யுங்கள்.



  • ஒரு புது விண்டா திறக்கும் அதில் DESTINATION FOLDER என்பதில் இடத்தை தேர்வு செய்யுங்கள்.
  • அதன் கீழே உள்ள PROFILE என்பதில் வடிவத்தை தேர்வு செய்து CONVERT ஐ அழுத்துங்கள்

இந்த மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் வீடியோவை ஆடியோவாக கூட மாற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget