APOLLOPARTHIBAN: ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து கணினியில் பதிவிறக்கம் செய்ய

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Monday, December 2, 2013

ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து கணினியில் பதிவிறக்கம் செய்ய


கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள அப்ளிகேஷன்களை நேரடியாக கணினியில் பதிவிறக்கம் செய்வது எவ்வாறு என்று ஏற்கனவே எழுதியிருந்தேன் . அது ஒரு மென்பொருள் உதவியுடன் பதிவிறம் செய்வது ஆகும். ஆனால் இந்த முறைமையானது ஆன்லைன் உதவியுடன் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்வது எவ்வாறு என பார்ப்போம். ஆன்ட்ராய்ட் பற்றியோ கூகுள் பிளே ஸ்டோர் பற்றியோ பெரிய முன்னுரை தேவையில்லை என்று நினைக்கிறேன்.

ஆன்ட்ராய்ட் என்பது கூகுள் நிறுவனத்தின் மொபைல்/டேப் களுக்கான இயங்குதளம் ஆகும். இந்த இயங்குதளத்தில் இயங்கும் அப்ளிகேஷன்களுக்கென ஒரு சந்தையினை உருவாக்கியது அதற்கு பெயர் தான் பிளேஸ்டோர் ஆகும். இச்சந்தையில் தற்போது கூகுள் நிறுவனத்தின் சோதனைக்குட்பட்ட மென்பொருள்கள் மட்டுமே உள்ளன.

கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் அப்ளிகேஷன்களை நாம் நேரிடையாக கணினியில் பதிவிறக்கம் செய்ய முடியாது. ஆன்ட்ராய்ட் இயங்குதளம் நிறுவப்பட்ட மொபைல் சாதனம் மற்றும் டேப்  லிருந்து மட்டுமே ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்ய முடியும்.

கூகுள்பிளேஸ்டோரில் இருக்கும் அப்ளிகேஷன்களை கணினியில் பதிவிறக்கம் செய்ய ஒரு தளம்  உதவி செய்கிறது.

தளத்திற்கான சுட்டி 

எந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டுமோ அதற்கு குறிப்பிட்ட அப்ளிகேஷனின் URL முகவரி கண்டிப்பாக வேண்டும். URL முகவரியினை பெற பிளேஸ்டோர் சென்று குறிப்பிட்ட அப்ளிகேஷனின் முகவரியினை பெற்றுவிட முடியும்.


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, குறிப்பிட்ட அப்ளிகேஷனின் முகவரியை (url) குறிப்பிட்டு பின் Generate Download Link என்னும் பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டி கிடைக்கும் அதை பயன்படுத்தி கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.



கணினியில் தரவிறக்கம் செய்யும் ஆன்ட்ராய்ட் மென்பொருள்களை வழக்கம்போல் ஆன்ட்ராய்ட் சாதனங்களில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
                              
 

1 comment:

  1. அருமையான மிகவும் பயனுள்ள பதிவு தோழரே

    ReplyDelete

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget