APOLLOPARTHIBAN: January 2012

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Sunday, January 29, 2012

BIOS இணை Reset செய்தல்


உங்களது கணினியின் Password மறந்து விட்டால் Mother Board இல் உள்ள Jumber Settings இணை மாற்றி அமைப்பதன் மூலம் அல்லது  BIOS இற்கான சிறிய Battery இணை 30 செக்கன்களுக்கு கழற்றி வைப்பதன் மூலம் BIOS இணை Reset செய்யலாம்.

30 செக்கங்களுக்குப் பிறகு Battery இணை அதற்குரிய இடத்தில் பொருத்தி விட்டு கணினியை Power On செய்யுங்கள். உங்கள் கணினி புதிதாக BIOS பொருத்தப்பட்டது போல் இயங்கத்தொடங்கும்.

அழித்த தரவிகளை 100% மீட்டெடுக்க இலவச மென்பொருள்!

இன்றைய இலவச மென்பொருளாக எங்கள் அனைவருக்கும் என்றோ ஒரு நாள் தேவைப்படக்கூடிய ஒரு மென்பொருளைப்பார்ப்போம்.
 
கணனியிலோ அல்லது வேரு வன் தட்டுக்களிலோ எமக்குத்தேவையான முக்கியமான கோப்புக்களை பதிந்துவைத்துக்கொள்வோம். ஒரு நாள் திடீரென தேடும் போது மாறி அழித்திருப்போம் அல்லது வைரஸ்பிரச்சனைகளால் ஃபோர்மேட் பண்ணியிருப்போம். அப்போது எப்படி அந்த கோப்பை மீட்பது?
 
அதற்கு உதவும் மென்பொருளே இது. பலவகை மென்பொருட்கள் இது போன்று இருந்தாலும், இந்த வொன்டர்ஷார் நிறுவனத்தின் வெளியீடுகள் என்றுமே முதன்மையானவைதான். நீங்களும் தரவிறக்கிக்கொள்ளுங்கள் என்றோ ஒரு நாள் தேவைப்படும். :)
 
மீட்க கூடிய வன் பொருட்கள் :
PC, USB drive, external hard drive, mobile phone, digital camera, iPod, MP3/ MP4 player அத்துடன் வேறு சேமிப்பகங்கள்.
 
அளவு : 25.2 Mb 
தரவிறக்க : http://uploaded.to/file/nyuqwe1o

Thursday, January 26, 2012

VLC மீடியா பிளேயரில் உள்ள வசதிகள் ?



கணணியில் வீடியோக்களை பார்ப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்பட்ட போதிலும் அதிகளவானர்களினால் பயன்படுத்தப்படும் மென்பொருள் VLC மீடியா பிளேயர் ஆகும்.
எனினும் இதில் பல்வேறு அம்சங்கள் வெளிப்படையாக இல்லாமல் மறைந்தே காணப்படுகின்றன. இதில் Add Watermarks, Video Converter, Free Online Radio போன்ற வசதிகள் இருப்பதை அறிந்திருப்பீர்கள்.
இருந்தும் இவற்றை விட Display On Desktop, Video Effects, Hotkeys ஆகியவையும் காணப்படுகின்றன.
1. Display On Desktop: இப்பயனுள்ள வசதி மூலம் நீங்கள் வீடியோவை பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் உங்களுடைய வேறு வேலைகளையும் செய்ய முடியும்.
உதாரணமாக MS Paint/ MS Office ல் வேலை செய்துகொண்டே வீடியோவையும் பார்த்து ரசிக்க முடியும். இதனை செயற்படுத்துதவற்கு மெனுபாரில் காணப்படும் Video என்பதில் உள்ள Display On Desktop என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
2. Video Effects: வீடியோக்களுக்கு விதம் விதமாக எபெக்ட் கொடுப்பதற்கு வீடியோ எடிட்டிங் மென்பொருட்களை பயன்படுத்துவார்கள். VLC மீடியா பிளேயரை ஆனால் பயன்படுத்தி வீடியோவை பார்த்துக்கொண்டிருக்கும்போதே சிலவகையான எபெக்ட்களை கொடுக்க முடியும். Tools மெனுவிலுள்ள Effects and Filter என்ற அம்சத்தை தெரிவு செய்வதன் மூலம் வீடியோக்களுக்கு எபெக்ட் கொடுக்க முடியும்.
3. Hotkeys: VLC மீடியா பிளேயரில் எந்தவொரு செயற்பாட்டை மேற்கொள்ளும் போதும் மவுசை பயன்படுத்துதல் அவசியமானது. ஆனால் இச்சிரமத்தை தவிர்ப்பதற்காக நீங்கள் விரும்பியவாறு Shortcut key அமைத்து பயன்படுத்த முடியும். Tools மெனுவில் Preferences , Hotkeys ஐ தெரிவு செய்து Shortcut keyகளை அமைத்துக்கொள்ள முடியும்.

Wednesday, January 25, 2012

உங்கள் கணினியில் மேம்பட்ட தகவல்கள் தரும் மென்பொருள்

Speccy மென்பொருள் உங்கள் கணினியில் ஒரு மேம்பட்ட கணினி தகவல்கள் தரும் கருவியாக உள்ளது. Speccy உங்கள் கணினி வன்பொருளின் ஒவ்வொரு பகுதியிலும் விரிவான புள்ளிவிவரங்களை கொடுக்கிறது. CPU, மதர்போர்டு, ராம், வரைகலை அட்டைகள், நிலைவட்டுகள், ஆப்டிக்கல் இயக்ககங்கள், ஆடியோ ஆதரவு உட்பட. கூடுதலாக Speccy உங்கள் வெவ்வேறு கூறுகளின் வெப்பநிலை சேர்க்கிறது, அதனால் உங்களின் கணிணி பிரச்சனை நீங்கள் எளிதாக பார்க்க முடியும்!


இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7 

                                 

-- 

Tuesday, January 24, 2012

Registry Editor-ஐ பயன்படுத்தி எவ்வாறு கடவுச்சொல்லை மாற்றுவது ?



கணிணியிலுள்ள தரவுகளின் பாதுகாப்பிற்காக கொடுக்கப்பட்டிருக்கும் இரகசிய கடவுச்சொல்லை அடிக்கடி மாற்றம் செய்யவேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஏற்கனவே உள்ள கடவுச்சொல்லை மறக்க வாய்ப்புக்கள் உள்ளது. அதேபோல் இச்செயற்பாட்டிற்காக புதிய முறைகளை பயன்படுத்த முயற்சிப்பவர்களும் இருக்கின்றனர்.

அவர்கள் வழமையான முறையை தவிர்த்து வேறு மூன்று முறைகளில் கடவுச்சொல்லை மாற்ற முடியும். அதாவது விண்டோஸ் 7 DVD -ஐ பயன்படுத்துதல், OfflineNT கடவுச்சொல் முறையை பயன்படுத்துதல், Registry Editor-ஐ பயன்படுத்துதல் ஆகும்.
இப்பொழுது Registry Editor-ஐ பயன்படுத்தி எவ்வாறு கடவுச்சொல்லை மாற்றுவது என்று பார்ப்போம்.

1. Control Panel க்கு சென்று Administrative Tools என்பதை தெரிவுசெய்க.
2.Computer Management என்பதை தெரிவு செய்க
3.System Tools-ஐ தெரிவு செய்க
4. Local Users and Groups என்பதை Double Click செய்து User-ஐ தெரிவு செய்க
5.இதில் Login செய்வதற்கான கணக்குகள் காணப்படும் அதில் கடவுச்சொல்லை மாற்றவேண்டிய கணக்கில் Right Click செய்து Set Password என்பதை Click செய்க
 
6.அப்பொழுது எச்சரிக்கை தகவல் ஒன்று தோன்றும் அதில் Proceed என்பதை தெரிவு செய்க
7.தொடர்ந்து கீழ்காட்டப்பட்டுள்ளவாறு சாளரம்(Window)ஒன்று தோன்றும் அதில் உங்களது புதிய கடவுச்சொல்லை உட்செலுத்தி என்பதை அழுத்துக.
இப்பொழுது உங்களது கடவுச்சொல் புதிப்பிக்கப்ட்டுவிடும்.

உங்கள் சலிப்பை போக்குவதற்காக Microsoft நிறுவனம் புதிய பல தீம்களை இலவசமாக தருகிறது ?



நீங்கள் பயன்படுத்தும் கணணியினை தீம்களை(Theme) பயன்படுத்தி விதவிதமான தோற்றத்தில் வடிவமைக்கலாம் என்பது யாவரும் அறிந்தவிடயம்.



இருந்தும் விண்டோஸ் 7 உடன் வரும் தீம்கள் குறிப்பிட்ட அளவே காணப்படுகின்றன. இதனால் அந்த தீம்களை அடிக்கடி மாற்றி உங்களுக்கு சலித்திருக்கும்.


உங்கள் சலிப்பை போக்குவதற்காக Microsoft நிறுவனம் புதிய பல தீம்களை இலவசமாக தரவிறக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.


கீழுள்ள இணைப்பில் அழுத்துவதன் மூலம் குறித்த தளத்திற்கு சென்று உங்களுக்கு விருப்பமான ஒன்றை தெரிவு செய்து Download என்ற இணைப்பை அழுத்துவதன் மூலம் கணணியில் சேமித்து பின் வழமையான முறையில் உங்கள் கணணியின் தோற்றத்தை மாற்றிக் கொள்ளலாம்.



இங்கே கிளிக் செய்யவும்.

Sunday, January 22, 2012

விண்டோஸ் இயங்கு தளத்திற்கான சிறந்த MUSIC PLAYERS


சிறந்த இசையை தரவல்லதும் விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்பட வல்ல சிறந்த MUSIC PLAYERS அவற்றின் தரவிறக்க சுட்டிகளுடன் இந்த பதிவில் பகிர்துள்ளேன் . 


WINAMPLITE 



XM PLAYER 


VUPLAYER 

JETAUDIO 


SONGBIRD


AIMP2


JAANGLE 


FOOBAR2000 


VLC PLAYER

-- 
    
                 
                   S.PARTHIBAN

                                                                                                      
 

Friday, January 20, 2012

கண்களின் உள்ள கருவளையத்தை எளிதில் நீக்க டிப்ஸ்!

 
முகத்திற்கு முத்தாய்ப்பாய் அழகை தருபவை கண்கள். அந்த கண்களில் ஏற்படும் சோர்வு முக அழகையே மாற்றிவிடும். கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் கண்களின் அழகை பாதித்துவிடும். எனவே கண்களை கவனமாக பாதுகாக்க வேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.



உடல் உஷ்ணம்


உடல் உஷ்ணம் நேரடியாக கண்களை பாதிக்கும். கண்களுக்கு எரிச்சலை தரும். கண்களை குளிர்விக்க ஐஸ் தண்ணீரில் நனைத்த பஞ்சு அல்லது கைக்குட்டையை கண்களை மூடி பத்து நிமிடங்கள் வைத்து எடுக்கவும். கண்கள் புத்துணர்ச்சி பெறும்.


ஓய்ந்து போய்க் காணப்படும் கண்களை பளீர் என்று பிரகாசிக்கச் செய்ய ஒரு பஞ்சு உருண்டையை பன்னீரில் நனைத்து மூடிய கண்களின் இமைகள் மீது 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.


புத்துணர்ச்சி தரும் தண்ணீர்


ஓய்ந்து போய்க் காணப்படும் கண்களை புத்துணர்வு பெறச்செய்ய, ஒரு கிண்ணத்தில் நீர் நிரப்பி அதை கண்ணோடு ஒட்டி வைத்து இந்தக் கரைசலுக்குள் விழியை முக்கி கண்களைத் திறந்து, கண் விழியை இடமும், வலமும், மேலும் கீழுமாக உருட்டவும், இது கண்களில் உள்ள அழுக்கு, தூசு போன்றவற்றை அகற்றிவிடும்.


அழகை பாதிக்கும் கருவளையம்


கண்களை சுற்றி ஏற்படும் கருவளையம் அழகை முற்றிலும் பாதிக்கும். தூக்கம் குறைவாக இருந்தாலே கருவளையம் ஏற்படும். அதிகமான கணினி பயன்பாடும் கருவளையம் தோன்ற காரணமாகும். எனவே 7 மணி நேரம் தூக்கம் அவசியம். உணவில் கீரை வகைகளை சேர்க்கவேண்டும். வைட்டமின் எண்ணெய் வைத்து கண்ணை சுற்றி மசாஜ் செய்வதும் கருவளையத்தைப் போக்கும்.


பளிச் பாதாம் பருப்பு 


கண்களுக்குக் கீழ் வரும் கருவளையத்தைக் குறைக்க, தினமும் உருளைக் கிழங்கைத் துருவி சாறு எடுத்துப் பூசிக் காயவிட்டவின் கழுவ வேண்டும். பாதாம் பருப்பை ஊறவைத்து பால் விட்டு அரைத்து அந்த விழுதை கண்களைச் சுற்றிப் பூசி வந்தால் கருவளையம் மறையும்.


வசீகரிக்கும் ஆரஞ்சு


கண் வசீகரத்திற்கும், உடல் அழகிற்கும் ஆரஞ்சுப் பழம் ஏற்றது. தூக்கமின்மையை போக்கி கண்களை புத்துணர்ச்சியாக்கும் தன்மை ஆரஞ்சுக்கு உண்டு. சிறிதளவு ஆரஞ்சு ஜூஸை ஃப்ரீசரில் வைத்து அது ஐஸ் கட்டி ஆன உடன் அதை மெல்லிய துணியில் கட்டி வைத்து, கண்ணுக்கு மேல் ஒற்றி எடுக்கவேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படி செய்து வர கண்கள் பளிச் ஆகிவிடும்.


வெள்ளரிக்காய்


வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களின் மீது வைத்து சிறிது நேரம் ரிலாக்ஸாக உறங்குவது கண்களின் கருவளையத்தைப் போக்கும்.  

-- 
    
                 
                   S.PARTHIBAN

                                                                                                      
 

MPEG வடிவ வீடியோக்களை AVIக்கு மாற்றும் மென்பொருள்

உங்களுக்கு MPEG வடிவ வீடியோக்களை AVIக்கு மாற்ற விரும்பினால் இந்த 100% இலவச பயன்பாடு உங்கள் தேவைகளை நிறை வேற்றிக் கொள்ள உங்களுக்கு உதவுகிறது. இந்த மென்பொருள் எளிதாகவும் விரைவாகவும் AVI வடிவத்திற்கு சில எளிய படிகளில் எம்பெக் இருந்து மாற்றமடைய செய்கின்றது.



இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7 
-- 

Thursday, January 19, 2012

கணனியில் Windows XP இயங்குதளத்தை நிறுவுதல்


சாதரணமாக ஒரு கணணி இயங்கும் வேளையில் அதன் BIOS இல் உள்ள BIOS SETUP இல் FIRST BOOT DEVICE ஆக Hard Diskஐ தெரிவு செய்திருத்தல் வேண்டும். ஏனெனில் சாதாரணமாக கணணி ஒன்று இயங்குகின்றவேளை கணணி இயங்குவதற்குத் தேவையான இயங்குதளமானது(Operating System) அதன் வன்தட்டில் (Hard Disk)இருந்தே தொழிற்படுகின்றது.
இயங்குதளமானது(Operating System)கணனியில் பதியப்படும் போது பொதுவாக அது CD / DVD இல் இருந்தே பதியப்படுகின்றது. எனவே நாம் முதலில் BIOS இல் உள்ள BIOS SETUP இற்குச் சென்று அங்கு FIRST BOOT DEVICE ஆக CD/DVD ROM ஐத் தெரிவுசெய்ய வேண்டும்.

இதற்காக நீங்கள் செய்யவேண்டியது இதுதான்..... முதலில் உங்கள் கணணியைRestart செய்ய வேண்டும். இப்போது கணணி Open பண்ணும்போது குறுகிய கணத்தினுள் சில செய்திகள் வந்து செல்லும். அப்போது உன்னிப்பாக அவதானியுங்கள்,,,   “<BIOS SETUP> DEL “  என்ற செய்தி அல்லது அதற்கு ஒப்பான செய்தி தோன்றும்.(இதில் “DEL”  Key இற்குப் பதிலாக F2, ESC,F10போன்றவையும் காணப்படலாம். Mother Board இற்கு ஏற்ப இவை மாறுபடும்) இவ்வாறு செய்தி தோன்றும் அக் கணத்தில் குறிப்பிட்ட அக் கீயை ஓரிரு முறை அழுத்துதல் வேண்டும். இப்போது இக் கட்டளையானது BIOS SETUPஇற்குள் அழைத்துச் செல்லும். சிலவேளைகளில் கீயை அழுத்த தாமதமாகின் ஏற்கனவே முதலில் உள்ள Operating System ஆனது இயங்க ஆரம்பித்துவிடும். எனவே அப்படி ஏற்படின் மீண்டும் கணணியை Restart செய்து மீண்டும் தொடர வேண்டும்.


BIOS SETUP இற்குள் சென்று அங்கு BOOT இனுள் BOOTABLE DEVICES சென்றுFIRST BOOT DEVICE ஆக CD/DVD ROM ஐத் தெரிவுசெய்ய வேண்டும். அதன் பின் செய்த மாற்றத்தை SAVE பண்ணவேண்டும். இதற்காக F10 கீயை அழுத்தத் வேண்டும். இப்போது நீங்கள் செய்த மாற்றம் சரியா என்ற வினா கேக்கப்படும். அதற்கு  ’Y’ என்பதை அழுத்தி ENTER பண்ணினால் போதும் செய்த மாற்றங்கள் பதிவாகிடும்.( BIOS SETUP இனுள் செல்வதற்கு பயப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அதில் நீங்கள் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதை அதன் கீழே அம்புக் குறிகள் மற்றும் கீகள் கொண்டு எளிமையாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.)

 இப்போது உங்களிடம் விண்டோஸ் பதிவதற்கான குறுந்தகடு(CD/DVD) மற்றும் தேவையான டிரைவர்ஸ்(Drivers) எல்லாமே உங்கள் கைவசம் இருக்கிறது இனி உங்கள் விண்டோஸ் சிடியின் சீரியல் எண்ணை(Serial Number) குறித்து வைத்துக்கொண்டு Windows CD ஐ கணினியின் குறுந்தகடு தட்டில்( DVD ROM)இட்டு ரீஸ்டார்ட் Restart செய்யுங்கள் இனி தானகவே CD ஆனது BOOT ஆக தொடங்கி சிறிது நேரத்தில் “Press any key to boot from Cd…_“ என வந்துவிடும்.
 அக்கணம் விசைப் பலகையில் (Key Board) உள்ள எதுமொரு கீயை அழுத்தவும். இப்போது வரும் விண்டோவில் நீங்கள் ஒன்றுமே செய்யவேண்டியதில்லை.

இந்த விண்டோவில் மூன்றாம் நபர் மென்பொருள்கள் நிறுவ விரும்பினால் F6அழுத்த சொல்லும் நீங்கள் அதெயெல்லாம் ஒன்றும் செய்யவேண்டாம் விண்டோவை நிறுவியதும் பின்னர் நிறுவிக்கொள்ளலாம்.

கீழே உள்ள படத்தில் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை அவ் விண்டோவின் கீழே காட்டப்பட்டுள்ளது.( Enter= Continue, R=Repair, F3= Quit)  கணினியின் இயங்குதளத்தை ரிப்பயர் REPAIR செய்ய நினைத்தால் என அழுத்தவும். ஆனால் புதியதாக நிறுவதுதான் நல்லது ஒருவேளை விண்டோஸ் நிறுவுவதில் இருந்து வெளியேற நினைத்தால் F3 அழுத்தி இன்ஸ்டாலை(Install) விட்டு வெளியே வந்துவிடலாம் ஆனால் நம் தேவை இயங்குதளம் நிறுவுவது. எனவே ENTER கொடுத்து அடுத்த படிக்குச் செல்லவேண்டியதுதான்..

அடுத்து விண்டோஸ் உரிமையாளர்கள் நம்மிடம் அக்ரிமெண்ட் Agreement கேட்பார்கள். நீங்கள் படித்து பார்த்தாலும் படித்து பார்க்கவிட்டாலும் இதிலிருந்து அடுத்த கட்டம் செல்ல அவசியம் F8 கீயை அழுத்தவேண்டும்.

 இப்போ கீழிருக்கும் படத்தை அவதானிக்கவும். Un partitioned Space என்பதாக இருக்கிறது. இது புதிய கணினிக்கு மட்டுமே பொருந்தும் நம்முடைய கணினி நாம் ஏற்கனவே உபயோகித்து கொண்டிருப்பது என்றால் கணினியில் ஏற்கனவே எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்ததோ அத்தனை பகுதிகளையும் காண்பிக்கும். உங்கள் கணினியில் ஏற்கனவே மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தால் ஒவ்வொரு டிரைவின்(Drive) பெயரோடு அதன் அளவையும் காண்பிக்கும் இதில் ஒரு டிரைவை(Drive) அழிப்பதற்கு புதிதாக ஒரு டிரைவை(Drive) உருவாக்குவதற்கு என்கிற கீயை பயன்படுத்தவேண்டும்இப்போது உங்கள் கணினியில் டிரைவ் 40000MB, D டிரைவ் 40000MB என இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். (அளவுகள் எம்பியில்(MB) தான் கொடுக்கவேண்டும்) இப்போது இரண்டு டிரைவ்களாக இருப்பதை மூன்றாக அல்லது நான்காக எப்படி வேண்டுமானாலும் பிரித்து வைக்க நினைக்கிறீர்கள்நீங்கள் செய்யவேண்டியது முதலில் டிரைவ் செலக்ட் செய்து D (D என்பது DELETE) என்பதை அழுத்தவும் இப்போது டிரைவ் காணாமல் போயிருக்கும் அதே நேரத்தில் Un partitioned Space 40000 என வந்திருக்கும்அடுத்து டிரைவ் செலக்ட் செய்து D (D என்பது DELETE) என்பதை அழுத்தவும் இப்போது ஏற்கனவே Un partitioned Space 40000 என இருந்தது டிரைவும் மறைந்ததும் அதன் மொத்த அளவு 80000MB என மாறியிருக்கும்.

இனி மீண்டும் Un partitioned Space 80000 MB என இருப்பதை உங்கள் விருப்பம் போல பிரித்துக்கொள்ள C (C என்பது CREATE) என்பதை அழுத்தவும் அருகில் அதற்கான அளவை கொடுக்கவும் அதாவது டிரைவ் 20000 MB எனக் கொடுத்தால் Un partitioned Space 60000 MB ஆகிவிடும் இவ்வாறாக நீங்கள் எத்தனை பார்ட்டிசியன்(Partitions) செய்ய விரும்புகிறீர்களோ அத்தனையும் செய்துகொள்ளுங்கள் இனி ஏதாவது ஒரு டிரைவை செலக்ட் செய்து ஒருENTER கொடுத்தல் போதும் நீங்கள் Select செய்த டிரைவில் விண்டோஸ் நிறுவலாம்.(பொதுவாக முதலாவதாக உருவாக்கிய C Drive வில் விண்டோஸை நிறுவுவதே வழமையானது.)

அடுத்ததாக கீழே உள்ளது போல ஒரு விண்டொ வரும். அதில் நான்கு விதமான அழிப்பு (Format) செய்வதற்கான முறைகள் இருக்கும். அதில் நீங்கள்  Format the partition using NTFS file system என்பதயே தேர்ந்தெடுங்கள் அல்லது அதற்கு பதிலாக Format the partition using NTFS file system (Quick) என்பதையும் தேர்ந்தெடுக்கலாம். இரண்டுமே ஒன்றுதான்,ஒன்று வேகமாக நிறுவல்,மற்றொன்று சாதாரணமான Format வகை என்பதாகும்மேலிருந்து கீழாக அல்லது கீழிருந்து மேலாக செல்ல அம்புக்குறி பொத்தானை பயன்படுத்தவும். இதில் ஏதாவது ஒன்றை தெரிவுசெய்து ஒரு ENTER பண்ணினால் பழைய தகவல்களை அழித்துவிட்டு புதிதாக இயங்குதளம் நிறுவ தயாராகிவிடும்.

அடுத்ததாக கீழே உள்ளது போல இரண்டு விண்டோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றும் முதல்படம் நாம் ஏற்கனவே பிரித்த பார்ட்டிசியன் டிரைவை(Partition Drive) சரிபார்த்து Windows CD இன் இயங்குதள பைல்களை  COPY செய்யத்தொடங்கும்இரண்டாவது படம் COPY ஆகி கொண்டிருப்பதை காண்பிப்பதாகும். இதையெல்லாம் நீங்கள் ஒன்றுமே செய்யவேண்டியதில்லை.


அதன் பின்னர் மேலே காட்டப்பட்ட Copy Setup முடிந்ததும் கணினி ரீஸ்டார்ட் (Restart) ஆக தொடங்கும். கணினி ரீஸ்டார்ட் (Restart) ஆகும்இப்போது இயங்குதள நிறுவலில் முக்கியமான கட்டத்தை கடந்துவிட்டீர்கள். இனி வரும் விஷங்கள் எல்லாமே எளிமையாக இருக்கும்.

இப்போது உங்கள் கணினியில் புதிய விண்டோஸ் Install ஆவதை உணர்த்தும் வகையில் கீழிருக்கும் படம் போல விண்டோ வந்திருக்கும்.குறிப்பிட்ட சில நிமிடங்கள் வரை இச் செயற்பாடானது நீளும்.
 இச் செயற்பாட்டின் இடையில் மேல் உள்ளதைப் போன்று ஒரு விண்டோ தோன்றும். இதில் நீங்கள் சில மாற்றங்களை செய்யவேண்டிவரும் இதில் கஷ்டமைஸ் (Customize) இல் Click பண்ணுங்கள்.. 

இப்போது உங்களுக்கு கீழிருக்கும் படம் போல மேலும் ஒரு POP UP விண்டோ திறக்கும் அதில் Language டேப் திறந்து அதில் Supplemental Language support என்பதன் கீழாக இருக்கும் இரண்டு தேர்வுகளில் முதலாவதாக இருக்கும் Install files for computer script and right to left left language (including Thai) என்பதில் ஒரு டிக் மார்க் குறி ஏற்படுத்தவும் உடனேயே மேலும் ஒரு சிறிய பாப் அப் விண்டோ தோன்றும் அதில் ஓக்கே கொடுத்து விடுங்கள் சந்தேகத்திற்கு படத்தையும் பாருங்கள் இது செய்யவில்லையென்றாலும் பிரச்சினை இல்லை இப்படி செய்தால் தமிழ் யூனிகோட் படிக்க சிரமம் இருக்காது ஒர்வேளை செய்ய விட்டுப்போனால் பின்னாளில் NHM Writer இன்ஸ்டால் செய்யும் போது சரியாகிவிடும். 

மேலே கூறிய சிறிய POP UP விண்டோவை OK கொடுத்த்தும் கீழே உள்ள படத்தில் இருப்பது போல Apply கொடுக்கவும்.

இப்போது கீழிருக்கும் படத்தில் காண்பிப்பது போல ஒரு சிறிய POP UP இல் உங்கள் மொழிகளை இன்ஸ்டால்(Install) செய்வதாக சொல்லும் முடிந்தவுடன்OK கொடுத்து விடுங்கள்.

 அடுத்து இப்படியாக ஒரு விண்டோவில் உங்களின் பெயரையும் உங்களின் நிறுவனப்பெயரையும் கேட்கும். நீங்கள் விரும்புகிற ஏதாவது ஒரு பெயரை இரண்டுக்கும் கொடுத்துவிடுங்கள்.

அடுத்து கீழுள்ள விண்டோவில் உங்கள் விண்டோஸ் சிடியின் சீரியல் எண்ணை(Serial Number) கவனமாக குறித்தபின் ENTER பண்ணிவிடவும்.

அடுத்து கீழிருக்கும் ஒரு விண்டோ வரும் இனி இதில் Computer Nameஎன்பதில் ஏதாவது உங்களுக்கு பிடித்த பெயரை கொடுங்கள். கீழே இருக்கும் பாஸ்வேர்ட்(PassWord) கட்டத்தில் வேண்டுமானால் மட்டும் கடவுச்சொல் கொடுங்கள்.

அடுத்துவரும் விண்டோவில் நேரம் திகதி என்பவை கொடுக்க கேட்கும். அவற்றை கொடுத்தபின்  Next ஐ Click பண்ணவும்.

இனி இப்படியாக ஒரு விண்டோ வந்திருக்கும். இதில் இரண்டு விதமானSettings இருக்கிறது. இதில் நீங்கள் Typical Settings என்பதையே தேர்ந்தெடுங்கள். எல்லாவற்றையும் தானக செய்துவிடும். பின்னர் Next ஐ Clickபண்ணவும்.

இனி இப்படியாக ஒரு விண்டோ வந்திருக்கும். இதில் முதலாவதாக உள்ள No this computer is not NetWork………என்பதை  Tick பண்ணி பின்னர் Next ஐ Clickபண்ணவும்.

இனி இப்படியாக ஒரு விண்டோ திறக்கும் சிறிது நேரத்தில் உங்கள் புதிய விண்டோஸ் முழுமையாக நிறுவிக் கொண்டிருக்கும். இதற்காக சிறிது நேரம் காத்திருக்க வேண்டியதுதான்.

அடுத்து கீழ் உள்ளதைப் போன்று இரண்டு விண்டோக்கள் தோன்றும். அவை இரண்டிற்கும் OK என்பதை கொடுத்துவிடவும். அதன்பின் பொறுத்திருக்க வேண்டியதுதான்...


இனி உங்கள் விண்டோ தொடங்குவதற்கான ஸ்கீரின் வரும் சிறிது நேரம் காத்திருக்க சொல்லும் பார்த்துக்கொண்டிருந்தாலே போதும்.



அதன்பின் வரும் விண்டோவில் Next ஐ Click பண்ணிச் செல்லவேண்டியதுதான்..


இப்படியாக ஒரு விண்டோ வரும் போது நீங்கள் இன்ஸ்டால் செய்த்து ஒரிஜினல்(Orignal) பதிப்பு என்றால் அவசியம் இணைய இணைப்பு கொடுத்து ரிஜிஸ்டர் Register செய்து விடுங்கள். கிராக் Crack செய்யப்பட்டது என்றால் No not this time என்பதை Select செய்து Next ஐ Click பண்ணவும்.(பொதுவாக நாங்கள் கிராக் Crack செய்யப்பட்ட CD ஐயே பயன்படுத்துவதுண்டு.)


நிறுவல்கள் முடிவடைந்தபின் Thank You என்ற விண்டோ தோன்றும். அதில் கீழே காணப்படும் என்ற FINISHED ஐ Enter பண்ணவும். இப்போ விண்டோஸ் நிறுவுகை நிறைவு பெற்றுள்ளது. இனி கணணியுடன் பெற்ற Driver CD ஐ போட்டு Drivers களை Install பண்ணினால் போதும்..

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget