APOLLOPARTHIBAN: March 2012

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Friday, March 30, 2012

மிகச் சிறந்த Video Converter இலவசமாக.........................


சில மென்பொருட்கள் பணம் கொடுத்து வாங்கும் படி நிலைமை இருக்கும், ஆனால் நாம் எதிர்பார்க்கும் வசதிகள் எல்லாம் அதில் இருக்காது. ஆனால் இலவசமாக கிடைக்கும் சிலவற்றில் போதும் போதும் என்கிற அளவுக்கு வசதிகள் கிடைக்கும். அப்படி பட்ட ஒன்றும் தான் Free Make Video Converter. Converter என்ற ஒன்றைத் தவிர நிறைய பலன்களை கொண்டிருப்பது இதன் சிறப்பு. 


இதன் சிறப்பம்சங்களை காண்போம்.


1. 200 க்கு அதிகமான ஆடியோ, வீடியோ வகைகளை ஏற்றுக் கொள்கிறது.
2. ஆன்லைனில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் வசதி. Youtube, Facebook, Vimeo, Dailymotion என 50 தளங்களில் இருந்து செய்ய முடியும். என்ன Output Format வேண்டும் என்றாலும் நீங்கள் தெரிவு செய்ய ம்டுயும்.

3. மிக சிறந்த Output Format களை தருவது இதன் மிகப் பெரிய சிறப்பு. இப்போது வந்துள்ள HTML 5 வரை Update செய்து உள்ளார்கள்.

4.Android, iPhone போன்ற Smartphone-களை பயன்படுத்தும் நபரா நீங்கள்? அதற்கென்றே தனி Output வசதிகள் இதில் உள்ளது.அத்தோடு Sony PSP, PS2, PS3, BlackBerry, Samsung, Nokia, Xbox, Apple TV, என பல வகையும் இதில் அடக்கம்.

5. வசதிகள் எல்லாம் சரி, இதன் வேகம் எப்படி என்று கேக்குறீங்களா? மிகக் குறைந்த நேரமே எடுத்துக் கொள்கிறது.

6. சாதாரண வீடியோ வை BluRay வீடியோ ஆக மாற்றும் வசதியும் உள்ளது இதில். வீடியோ கொடுத்து Bluray DVD-யை போட்டு விட்டு Convert கொடுத்தால் வேலை முடிந்தது. 

7.சாதாரண DVD-க்கும் அதிக பட்சம் 40 மணி நேரம் வரை ஓடும் Video-களை Write செய்ய இயலும்.

8. ஒரு வீடியோவில் தேவை இல்லாத பகுதிகளை நீக்க வேண்டும் அல்லது ஒரு பாடலில் சில பகுதி மட்டும் வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அதற்கும் Editor Tool இதில் உள்ளது. உங்கள் வீடியோவை இதில் Add செய்த பின் அதன் வலது புறத்தில் தோன்றும் Play/கத்தரிக்கோல் போன்றதை கிளிக் செய்தால் கீழே உள்ள புதிய பகுதி வரும்.


முதலில் வீடியோவை Play செய்து Starting Point, பின்னர் End Point தெரிவு செய்து கொண்டு Cut Button கொடுத்தால் நீங்கள் தெரிவு செய்த பகுதி நீக்கப்பட்டு விடும்.(எது வேண்டாமோ அதை நீக்க இதை பயன்படுத்தவும்.) இப்போது Ok கொடுத்தால் வேலை முடிந்தது. பின்னர் Convert செய்து விடுங்கள்.

9. உங்கள் படங்கள், பாடல்கள், போன்றவற்றை Youtube க்கு Upload செய்யும் வசதியும் இதில் உள்ளது. எத்தனை படங்கள் வேண்டுமோ அத்தனையும் போட்டு பின்னர் மேலே வீடியோவுக்கு சொன்னது போல வலது புறம் உள்ள  Play பட்டனை கிளிக் செய்தல் வரும் Editor Window-வில் உங்களுக்கு தேவையான மாற்றம் செய்யலாம், பின்னணியில் ஏதேனும் பாடலை சேர்க்க விரும்பினால் Editor பகுதியில் Audio Track None என்பதை கிளிக் செய்து பின்னர் கணினியில் Browse செய்து பாடலை சேர்க்கவும்.

10. Audio இருக்கு அதை வீடியோ ஆக்க வேண்டுமா? பாடலை Add செய்யும் Play செய்யுங்கள், கொடுத்துள்ள பல Visualization-களில் ஒன்றை தெரிவு செய்யுங்கள் அல்லது ஏதேனும் ஒரு படத்தை கூட சேர்க்கலாம்.

11. மேலும் வீடியோ தலைகீழாக இருந்தால் அதை Rotate செய்யும் வசதி, உங்களுக்கு ஏற்ற Output Presets, Aspect Ratio மாற்றும் வசதி என பல அருமையான வசதிகளை கொண்டுள்ளது இந்த Freemake Video Converter.

12. இன்னொரு மிகப் பெரிய வசதி நீங்கள் Windows XP பயனர் என்றால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை திறக்க நிறைய மென்பொருட்கள் அனுமதிப்பது இல்லை. ஆனால் Freemake அதை தந்து உள்ளது.

அதனால் தான் இது வெறும் Converter மட்டும் இல்லை என்று சொன்னேன். இலவசம் என்றாலும் போதும் போதும் என்கிற மட்டும் தரும் மிக அருமையான ஒரு மென்பொருள் இது.

தரவிறக்க வேண்டும் என்றால் இங்கே சொடுக்கவும். Free Make Video Converter

Wednesday, March 28, 2012

ஒரே சொடுக்கில் பல்வேறு சமூக தளங்களுக்கு செல்ல..

 



இன்றைய தேதியில் இணையத்தில் நூற்றுகணக்கான சமூக வலைத்தளங்கள் உள்ளன. இதில் நாம் ஒவ்வொருவரும் ஒன்றிற்கு மேற்பட்ட தளங்களில் உறுப்பினர் ஆகி இருப்போம்.சில நேரங்களில் பல்வேறு சமூக தளங்களில் பதிவு செய்துவிட்டு மறந்தும் விட்டிருப்போம்.இப்படி இருக்கையில் நம்முடைய பயனர் கணக்கின் மூலம் எந்தெந்த தளங்களில் நாம் உறுபினராக இருக்கிறோம் என்று நம்முடைய பயனர் கணக்கின் பெயரை உள்ளீடு செய்வதன் மூலம் ஒரு நொடியில் தெரிந்து கொள்ளலாம்.

இங்கே 159 சமூக வலைத்தளங்களை பட்டியலிட்டு வைத்துள்ளார்கள்.அதில் நாம் பதிவு செய்யாத தளங்களுக்கு செல்ல, தேவைப்படும் தளத்தினை சொடுக்கி அந்த தளத்தினில் சென்று நமக்கான நமக்கான புதிய கணக்கினை தொடங்கலாம்.மேலும் இந்த வலைப்பக்கத்தை புக் மார்க்கா சேமித்து வைத்து ஒரே சொடுக்கில் தேவைப்படும் சமூக தளங்களுக்கு செல்லலாம்.


இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்
                       http://namechk.com/

Monday, March 26, 2012

உங்கள் புகைப்படத்துடன் கூடிய கூடிய அழகான குரோம் தீம் நீங்களே உருவாக்க

கூகுளின் படைப்பான கூகுள் குரோம் உலவி யை பெரும்பாலானவர்கள் விரும்பி உபயோகிக்க காரணம் எளிமை, வேகம், வசதிகள். சாதரணமாக ஒரே தோற்றத்தை பல முறை பார்த்து கொண்டு இருந்தால் அது நன்றாக இருந்தாலும் பிடிக்காமல் போவது தான் மனித இயல்பு. கூகுள் குரோம் தோற்றத்தை அழகாக மாற்ற பல எண்ணற்ற தீம்கள் இருந்தாலும் உங்கள் போட்டோவுடன் கூடிய அழகான கூகுள் குரோம் தீம் இருந்தால் எப்படி இருக்கும். நெனச்சி பார்க்கவே சூப்பரா இருக்குல்ல!! உங்கள் போட்டோவுடன் கூடிய கூகுள் குரோம் தீம் உருவாக்குவது எப்படி என இங்கு காணலாம்.


வழிமுறை: 


  • முதலில் இந்த லிங்கில் சென்று நீட்சியை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். 
  • அடுத்து New Tab க்ளிக் செய்தால் My Chrome Theme என்ற புதிய வசதி வந்திருக்கும் அதை க்ளிக் செய்யவும். 
  • அடுத்து ஓபன் ஆகும் விண்டோவில் START MAKING THEME என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
  • அடுத்து UPLOAD IMAGE என்பதை க்ளிக் செய்து கணினியில் சேமித்து வைத்திருக்கும் உங்கள் புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • அடுத்து ADJUST POSITION என்பதை க்ளிக் செய்து உங்களுக்கு வேண்டிய மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.

  • அடுத்து Continue Step2 என்பதை க்ளிக் செய்யவும். இந்த பகுதியில் உலவியின் நிறங்களை உங்களின் விருப்பம் போல தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • நிறங்களை தேர்வு செய்தவுடன் மேலே உள்ள Continue to Step 3 என்பதை க்ளிக் செய்யவும்.
  • இதில் கீழே உள்ள PREVIEW MODE க்ளிக் செய்தால் உங்களுடைய தீம் எப்படி இருக்கு என பார்த்து கொள்ளலாம். 
  • முடிவில் உங்கள் தீமுக்கு ஏதாவது ஒரு பெயர் கொடுத்து MAKE MY THEME என்ற பட்டனை அழுத்தவும்.
  • உங்கள் குரோம் தீம் உருவாகிவிடும். INSTALL MY THEME என்ற பட்டனை அழுத்தி உங்களுடைய சொந்த கைவண்ணத்தில் உருவான அழகான தீமை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். 
இப்படி உங்களுக்கு தேவையான தீம்களை உருவாக்கி மகிழுங்கள்.

Saturday, March 24, 2012

உங்களது படங்களை எழுத்துகளாக மாற்றுவதற்கு

குறிப்பிட்ட பக்கத்தை நீங்கள் இணையத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில் அதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் type செய்தாக வேண்டும் அல்லது அந்த நூலை ஓர் படமாக scan செய்து வெளியிடலாம். ஆனால் OCR என்னும் தொழில்நுட்பம் மூலம் நீங்கள் எந்த ஒரு கோப்பை / படத்தை எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க முடியும். இதனை image to text converter என்றும் கூறுவர். OCR மென்பொருள் கீழ்க்கண்ட வசதிகளை உங்களுக்கு வழங்குகிறது
1. நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பல்வேறு விதமான கோப்புகளை (தாள், PDF கோப்புகள், டிஜிட்டல் புகைப்படங்கள்) எளிதாக கையாள மற்றும் திருத்த முடியும், மேலும் திருத்தப்பட ஆவணங்களை எளிதாக மாற்றவும் அனுமதிக்கிறது.
2. மீண்டும் மீண்டும் தட்டச்சு செய்ய பல மணி நேரம் ஆகும் ஆவணங்களை ஒரு நொடியில் உருமாற்றி விடும் வல்லமை படைத்தது.

3. எந்த நிலையில் இருக்கும் ஆவணங்களையும் 23% முதல் 99% வரை தரத்தை உயர்த்தும் வசதிகள் உள்ளது.
4. 200% தொடக்க வேகம்.
5. ஐபோன், 2 மெகாபிக்சல் தொலைபேசி கேமராக்கள் போன்றவற்றுடனும் எளிதாக வேலை செய்யக் கூடியது மற்றும் அமேசான் கின்டெல் ஆதரவு.
6. OCR Scanner பெரும் நன்மைகளை தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு மென்பொருள். நீங்கள் எந்த விதமான scanner மூலமும் இந்த மென்பொருளை எளிதாக உபயோகிக்கலாம். Download செய்ய முகவரி

http://hotfile.com/dl/131223855/3f10024/ocr.rar.html

Thursday, March 22, 2012

செல்போன் உபயோகிப்பவர்கள் தெரிந்திருக்க வேண்டிய 4 முக்கிய குறிப்புகள்


செல்போன் உபயோகிக்காதவர்கள் உலகில் எவருமில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. . செல் போன் உபயோகப்படுத்தும் போது  அவசரத்திற்கு உதவக்கூடிய  4 தொழில் நுட்ப துணுக்குகளை உங்களுக்கு தருகிறேன். தேவைப்பட்டால் மனதில் நிறுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.


112    - Network signal  இல்லாத போது இந்த எண்ணை டயல்  
               செய்தால் வேறொரு நெட்வொர்க் சிக்னலை பயன்படுத்தி
               எமர்ஜென்சி அழைப்புகளை நாம் கொடுக்க முடியும்.            
               செல்போன் லாக் செய்யப்பட்டிருந்தாலும் இந்த  
               எண்ணுக்கு   அழைப்பு கொடுக்க முடியும் 
      .


*3370௦# - செல்போனில் பேட்டரி சார்ஜ் மிக குறைவாக உள்ள
                     போது இந்த எண்ணை அழுத்தினால் பேட்டரி தனக்குத்    
                     தானே தன்னுடைய சேமிப்பில் இருந்து சார்ஜ் செய்து
                     கொள்ளும். பின் நாம் பேட்டரி சார்ஜ் செய்யும் போது
                     தன் சேமிப்பையும் நிரப்பி கொள்ளும். இந்த வசதி
                    நோக்கியா செல்போனில் மட்டுமே உண்டு.


*#06#  -   இந்த எண்ணை அழுத்தி நம் செல்போனின் IMEI     
                    எண்ணை தெரிந்து கொள்ளலாம். செல்போன்
                    தொலைந்து போனால் காவல் துறையில் புகார்
                    அளிக்கும்போது இந்த எண் மிகவும் அவசியம். போனை
                    எடுத்தவர்கள் எந்த நெட்வொர்க் சிம் கார்டை
                    பயன்படுத்தினாலும் காவல் துறையினர் எளிதில் கண்டு
                    பிடித்து விடுவார்கள். மேலும் நெட்வொர்க் அளிக்கும்
                    நிறுவனத்திற்கு தொலைந்து போன  செல்போனின் IMEI   
                    எண்ணை அளித்தால் நம் செல்போனை பிறர் 
                     பயன்படுத்த முடியாத வகையில் லாக் செய்து
                     விடுவார்கள்.

*#92702689# -   இந்த எண்ணை அழுத்தி நம் செல்போனின் IMEI  
                                    எண்ணையும் ,  செல்போன் தயாரிக்கப்பட்ட
                                    நாளினையும் தெரிந்து கொள்ளலாம்

Tuesday, March 20, 2012

அதிக வேகத்துடன் தரவிறக்கம் செய்ய - IDM ஐ வேக மாக்குவோம்


Inline images 1


இன்று உங்களுடன் பகிரவிருப்பது IDMஐ வேகமாக்ககூடிய வழிமுறை ஒன்றை பற்றியே. இதற்கு பயன்படுத்த போவது IDM Optimizerஎனும் சிறிய மென்பொருள் ஒன்றாகும். இதன் மூலம் Registry Entries சில மாற்றியமைக்கப்படுகின்றது. இதன் மூலம்  IDM இன் வேகம் அதிகரிக்கப்படுகின்றது. இதனால் குறைவான நேரத்தில் அதிகமான கோப்புகளை  களை அல்லது Data களை தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும். 

IDM  இனை மேலும் வேகமாக்க முடியுமா (எனும் வாசகர்களின் கேள்வி)? ஆம், நம்Internet Connection Speed மற்றும் Max Number Of Connection ஆகியவற்றை அதிகரிப்பதனால் இதனை வேகமாக்கிக் கொள்ள முடியம். இதனை செயற்படுத்துவது எவ்வாறு என்பதை பார்ப்போம்.

முதலில்  IDM Optimizer ரை தரப்பட்டுள்ள தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளுங்கள். 

பின் IDM Optimizer நிறுவுவதற்கு முன் IDMஇனை Exit செய்யுங்கள். (System Trayஇல் உள்ள  IDMஇல் Right Click கிளிக் செய்து Exit செய்து கொள்ளலாம்.)

பின்னர் Download செய்த IDM Optimize.exe ஐ D/Click செய்யுங்கள். கீழ் காட்டப்பட்டுள்ளதை போன்று தோன்றும். 

அதில் Maximize Now பொத்தானை அழுத்தி பின் OK பொத்தானை அழுத்துங்கள்.

மேலும் அதில் Restore Default பொத்தான் காணப்படும். Maximize Now பொத்தானை கிளிக் செய்து மாற்றிய Registry Entries களை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற வேண்டுமாயின் Restore Default பொத்தானை கிளிக் செய்யலாம்.

IDM Optimizer யை நிறுவி Download செய்து பாருங்கள். 

தலைகீழாக எடுக்கப்பட்ட வீடியோக்களை Rotate செய்வது எப்படி?

How to Rotate and Flip Videosமொபைல் கேமரா வசதியால் எளிதாக பலரும் வீடியோக்களை எடுப்பதுண்டு. வீடியோ எடுக்கும் போது அதன் கோணத்தை(Angle) நேராக வைக்காமல் மாற்றி வைத்து எடுத்து விடுவார்கள். இப்படி மாற்றி எடுக்கப்பட்ட வீடியோவை மொபைலில் வேண்டுமானால் அப்படியும் இப்படியும் திருப்பி வைத்து பார்க்கலாம். அதனையே கணிணியில் பார்க்கும் போது கணிணியின் திரையைத் திருப்ப முடியுமா? VLC பிளேயரில் அந்த நேரத்திற்கு Rotate செய்து பார்க்க வசதியிருக்கிறது. சரி இந்த வீடியோக்களை நாம் விரும்பும் கோணத்திற்கு நிரந்தரமாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.

இணையத்தில் வீடியோக்களை Rotate செய்வதற்கு இலவசமான இரண்டு மென்பொருள்கள் கிடைக்கின்றன. இவை வீடியோக்களை இடமிருந்து வலமாக, மேலிருந்து கீழாக மற்றும் கீழ்க்கண்ட வகைகளிலும் சுழற்றச்செய்து கன்வர்ட் செய்து தருகின்றன.

- rotate video 90 CW
- rotate video 180
- rotate video 90 CCW
- flip video horizontal
- flip video vertical
- flip video vertical and rotate 90 CW
- flip video vertical and rotate 90 CCW.

1.X2X Free Video Flip and Rotate

How to Rotate and Flip Videosஇந்த மென்பொருளில் வீடியோ வேண்டுமளவுக்கு வெட்டிக் கொள்ளவும் முடியும். AVI, MPG, MPEG, MP4, WMV, ASF, MOV, QT, 3GP, 3G2, AMV, FLV போன்ற அனைத்து வகை வீடியோக்களையும் ஆதரிக்கிறது. மாற்றப்பட்ட வீடியோவை MP4 வகையில் கொடுக்கும்.
தரவிறக்கச்சுட்டி: http://www.x2xsoft.com/productlist/fliprotate.html

2.Free Video Flip and Rotate (DvdVideoSoft)

How to Rotate and Flip Videosஇந்த மென்பொருளும் சிறப்பான வகையிலும் வேகமாகவும் வீடியோவை சுழற்றச் செய்து தருகின்றது. இது நாம் கொடுக்கும் வீடியோ பார்மேட்டிலேயே மாற்றித் தருகின்றது.
தரவிறக்கச்சுட்டி: http://www.dvdvideosoft.com/products/dvd/Free-Video-Flip-and-Rotate.htm

வன் தட்டுகளை நம்பிராமல் அனைவரும் இணைய இணைப்பை நம்பும் காலம்


Convert Files - free online file converterநண்பர்களே சில குறுகிய காலத்திற்குள் அனைவரும் லோக்கல் வன் தட்டுகளை HARDDISKநம்பிராமல் அனைவரும் இணைய இணைப்பை நம்பும் காலம் வரபோகிறது. ஆம் எந்த மென்பொருளும் நிறுவாமல் வெறும் பிரவுஸர் வைத்துக் கொண்டே அனைத்தும் நடைபெறுகிறது.


நீங்கள் வைத்திருக்கும் எந்த வகை கோப்பானாலும் இந்த தளத்தில் தரவேற்றினால் போதும் உங்களுக்க் எந்த பார்மெட்டில் வேண்டுமானலும் பெற்றுக் கொள்ளலாம்.

சுட்டி http://www.convertfiles.com/

இது மட்டுமில்லை யூட்யுபில் இருந்து கோப்புகளின் URL மட்டும் காப்பி செய்து பேஸ்ட் செய்தால் போதும் உங்களுக்கு தேவையான கோப்புகளாக தரவிறக்கி கொள்ளலாம்.
மற்ற தளங்களில் தரவேற்றினால் கோப்புகள் வெறும் 24 மணி நேரங்கள் மட்டும் வைத்து இருப்பர் இந்த தளத்தில் 7 நாட்கள் வைத்திருந்து நமக்கு கொடுக்கின்றனர்.
இந்த தளம் மூலம் எந்தெந்த வகை கோப்புகளை தரவேற்றி நமக்கு தேவையான கோப்புகளாக பெற முடியும் என்று ஆங்கிலத்தில் பார்ப்போம்.


ARCHIVE


RAR to TAR, ZIP, TGZ, TAR.GZ
TAR to RAR, ZIP, TGZ, TAR.GZ
TGZ to TAR, RAR, ZIP
TAR.GZ to TAR, RAR, ZIP
ZIP to TAR, RAR, TGZ, TAR.GZ


DOCUMENT



DOCX to DOC, ODT, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
DOC to ODT, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
ODT to DOC, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
RTF to ODT, DOC, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
SXW to ODT, RTF, DOC, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
TXT to ODT, RTF, SWX, DOC, HTML, XHTML, PDF, PDB, ZIP
ODS to xls, CSV, RTF, PDF, HTML, ZIP
XLS to ODS, CSV, PDF, HTML, ZIP
XLSX to XLS, ODS, CSV, PDF, HTML, ZIP



PRESENTATION


ODP to PPT, PDF, SWF
PPT to ODP, PDF, SWF


IMAGE


BMP to GIF, JPG, PNG, TIF, ZIP, PDF
GIF to BMP, JPG, PNG, TIF, PDF
JPG to GIF, BMP, PNG, TIF, PDF
PNG to GIF, JPG, BMP, TIF, PDF
TIF to GIF, JPG, PNG, BMP, ZIP, PDF


AUDIO


AAC to WAV, MP3, OGG, M4A, FLAC, AU, WMA, AMR
AMR to WAV, MP3, OGG, WMA, AAC, FLAC, AU, M4A
AU to WAV, MP3, OGG, WMA, AAC, FLAC, AMR, M4A
FLAC to WAV, MP3, OGG, M4A, AAC, AU, WMA, AMR
M4A to WAV, MP3, OGG, WMA, AAC, FLAC, AU, AMR
MP3 to WAV, OGG, AAC, M4A, FLAC, AU, WMA, AMR
OGG to WAV, MP3, AAC, M4A, FLAC, AU, WMA, AMR
WAV to MP3, OGG, AAC, M4A, FLAC, AU, WMA, AMR
WMA to WAV, MP3, OGG, M4A, AAC, FLAC, AU, AMR
MKA to WAV, MP3, OGG, M4A, AAC, FLAC, AU, AMR, WMA


VIDEO


3GP to AVI, MOV, WMV, M4V
ASF to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, WMV, MOV, AVI, M4V
AVI to 3GP, FLV, MP4, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4V
FLV to 3GP, AVI, MP4, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4V
MKV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, WMV, MOV, ASF, M4V
MOV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, WMV, MKV, ASF, M4V
M4V to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, WMV
MP4 to FLV, 3GP, AVI, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4V
MPEG to AVI, 3GP, MP4, FLV, VOB, WMV, MOV, MKV, ASF, M4V
MPG to AVI, 3GP, MP4, FLV, VOB, WMV, MOV, MKV, ASF, M4V
VOB to 3GP, FLV, MP4, MPEG, AVI, WMV, MOV, MKV, ASF, M4V
WMV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, M4V


OTHER


EPS to GIF, JPG, PNG
PSD to GIF, JPG, PNG


CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget