APOLLOPARTHIBAN: கம்ப்யூட்டருக்குள்(COMPUTER) இருப்பதெல்லாம் சரியா இருக்கா?

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Monday, March 12, 2012

கம்ப்யூட்டருக்குள்(COMPUTER) இருப்பதெல்லாம் சரியா இருக்கா?


கம்ப்யூட்டரில் பல வகையான ஹார்ட்வேர் சாதனங்கள் உள்ளன. ஹார்ட் டிஸ்க் மட்டும் நாம் அறிவோம். மதர் போர்டு என ஒன்று இருப்பதைப் பொதுவாகத் தெரிந்து கொண்டிருப்போம். இதனுடன் பல துணை சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கீ போர்டு, மவுஸ் போன்றவை பொதுவாக உள்ளவை. இவை எல்லாம் சரியாக உள்ளனவா? அல்லது பிரச்னையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றனவா ? திடீரென நம் காலை வாரிவிடுமா? என்பதை எப்படி அறிந்து கொள்வது? அல்லது அவை இயங்க வேண்டிய வேகத்தில் அதற்கான தன்மையுடன் இயங்குகின்றனவா? என்று எப்படித் தெரிந்து கொள்வது? இதற்கு இணையம் ஒரு புரோகிராமினைத் தருகிறது. 

PC Wizard என்ற இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து இயக்கினால் இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும். இதனைhttp://www.cpuid.com/pcwizard.php என்ற முகவரியில் இருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். உங்களுடைய கம்ப்யூட்டரின் பாகங்கள் மற்றும் அவற்றின் செயல் திறனை சிறிது ஆழமாகத் தெரிந்துகொள்ள இந்த புரோகிராம் பயன்படுகிறது. அவற்றின் செயல் திறன் பொதுவான இவற்றின் செயல் திறனுடன் ஒப்பிடுகையில் சரியாக உள்ளதா? என்பதனையும் அறியலாம். இதனை இன்ஸ்டால் செய்து இயக்கியவுடன் இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரை முழுமையாக ஸ்கேன் செய்திடும். பின் ஒவ்வொரு சாதனமும் எந்நிலையில் இயங்குகின்றன என்று தொழில் நுட்ப ரீதியில் தகவல் தரப்படும். எந்த சாதனங்கள் சரியில்லை என்று கண்டறிந்து இவற்றை எல்லாம் மாற்றிவிடுங்கள் என்று அட்வைஸ் தரும். அப்படியா சேதி! என்று இவற்றை எல்லாம் பார்த்த பிறகு அங்குள்ள Benchmarks என்ற பட்டனை அழுத்தவும். இது கீழாக இடது புறம் கொடுக்கப்பட்டுள்ளது. இது சாதனங்களுக்கான செயல்திறன் சோதனையை மேற்கொண்டு அதன் பொதுவான தன்மையுடன் ஒப்பிட்டு காட்டும். இவை மட்டுமல்லாது உங்கள் கம்ப்யூட்டர் குறித்த இன்னும் பல தகவல்களையும் சோதனைகளையும் மேற்கொள்ளலாம். பிசி விஸார்ட் புரோகிராமினை இயக்கிப் பார்த்து ரசித்துப் பாருங்கள்.


-- 
    
                 
                   S.PARTHIBAN

                                                                                                      
 

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget