APOLLOPARTHIBAN: நமது தேவைக்கேற்ப பாடல்வரிகளை, இசையை நமது செல்போனில் ரிங்டோனாக வைத்துக் கொள்ள ?

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Friday, September 30, 2011

நமது தேவைக்கேற்ப பாடல்வரிகளை, இசையை நமது செல்போனில் ரிங்டோனாக வைத்துக் கொள்ள ?


சில பாடல்கள் கேட்க அருமையாக இருக்கும். நாம் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்களும் இருக்கும்.
சில பாடல்களில் இடையில் வரும் இசை நன்றாக இருக்கும்.
அதைப்போல சில பாடல்களில் இடையில் வரும் பாடல்வரிகள் அருமையாக இருக்கும். நாம் நமது தேவைக்கேற்ப பாடல்வரிகளை, இசையை நமது செல்போனில் ரிங்டோனாக வைத்துக் கொள்ளலாம்.

அவ்வாறு வைத்துக்கொள்ள நமக்கு ரிங்டோன் மேக்கர் தேவைப்படும். 2 எம்.பி கொள்ளளவு கொண்ட இந்த சின்ன மென்பொருளினை பதிவிறக்கம் செய்யஇங்கு கிளிக் செய்யவும். இதனை நிறுவியதும் உங்களுக்கு ஒரு விண்டோ ஒப்பன் ஆகும்.
தேவையான பாடலை நீங்கள் உங்கள் கணணியில் இருந்து தேர்வு செய்யவும். பாடலை ஒலிக்க விடுங்கள். தேவையான இடம் வந்ததும் இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி வையுங்கள். மீண்டும் ஒரு முறை பாடலை ஒலிக்க விடுங்கள். சரியாக வருகின்றதா என பாருங்கள். அடுத்துள்ள Next அழுத்துங்கள்.
Save Ringtone to My Computer கிளிக் செய்து பாடலை எங்கு சேமிக்க விரும்புகின்றீர்களோ அங்கு சேமியுங்கள்.
உங்களுக்கு Processing நடைபெறும். ரிங்டோன் தயாரானதும் அடுத்து நீங்கள் சேமித்து வைத்துள்ள இடத்தில் சென்று பாருங்கள். நீங்கள் உருவாக்கிய ரிங்டோன் அங்கு இருக்கும். அதிலிருந்து உங்கள் செல்போனுக்கு ரிங்டோனை மாற்றிக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget