APOLLOPARTHIBAN: October 2011

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Monday, October 31, 2011

டாஸ்க் மேனேஜர் : பயனுள்ள ஒரு பார்வை

விண்டோஸ் புரோகிராம் தரும் டாஸ்க் மேனேஜர் நமக்கு நல்ல சமயத்தில் உதவிடும் நண்பனாகும். புரோகிராம்களை இயக்குவதற்கும் நிறுத்து வதற்கும் இதில் வழி உண்டு. கம்ப்யூட்டரின் செயல்பாடு குறித்த புள்ளி விபரங்களையும் தகவல்களையும் சரியாக இதிலிருந்து பெறலாம். இதனை எப்படிப் பயன்படுத்துவது என இங்கு பார்க்கலாம்.

டாஸ்க் மேனேஜரை இயக்க, அதனைத் திறக்கக் கீழே கொடுத்துள்ள வழிகளில் ஒன்றைப் பயன்படுத்துங்கள்.

1. Ctrl Shift Esc கீகளை அழுத்துங்கள்.

2. டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், Task Manager என்பதில் கிளிக் செய்திடுக.

3. Ctrl Alt Delete கீகளை அழுத்தி பெறுக.
டாஸ்க் மேனேஜர் விண்டோவில் ஐந்து டேப்கள் இருப்பதைக் காணலாம். இவற்றின் பயன்பாட்டினை இங்கு காணலாம்.

1. அப்ளிகேஷன்கள் (Applications): இதன் கீழ் உங்கள் கம்ப்யூட்டரில் அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்கள் (பணிகள்) காட்டப்படும். இதில் சிஸ்டம் ட்ரேயில் மினிமைஸ் செய்யப்பட்டிருக்கும், ஆண்ட்டி வைரஸ் போன்ற புரோகிராம்கள் காட்டப்பட மாட்டாது. இந்த டேப்பினைப் பயன்படுத்தி, இயங்கிக் கொண்டிருக்கும் இடைப் பொழுதில், உறைந்து செயலற்று நின்று போன, புரோகிராம்களை மூடலாம். அந்த புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து, End Task பட்டனை அழுத்தினால் போதும். நம் கட்டளைகளுக்கு எந்தவித செயல்பாடும் காட்டாமல் அப்படியே நின்று போன புரோகிராம்களை மூட இது மிகவும் உதவும். ஆனால், அந்த புரோகிராம் மூலம் சேவ் செய்யப்படாத டேட்டா, பின்னர் நமக்குக் கிடைக்காது. எடுத்துக்காட்டாக, வேர்ட் புரோகிராமில் டெக்ஸ்ட் டாகுமெண்ட் பைல் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கையில், வேர்ட் இயங்காமல் போனால், அதன் இயக்கத்தினை டாஸ்க் மேனேஜர் மூலமாக முடிவிற்குக் கொண்டு வந்தால், இறுதியாக எப்போது சேவ் செய்தோமோ, அல்லது வேர்ட் செட் செய்தபடி எப்போது சேவ் செய்ததோ, அதுவரை மட்டுமே பைல் கிடைக்கும்.

1 a. இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம் ஒன்றினை முன்னுக்குக் கொண்டு வர, அதனைத் தேர்ந்தெடுத்துவிட்டு, பின்னர், Switch To என்பதில் கிளிக் செய்திடவும்.

1 b. புதிய புரோகிராம் ஒன்றை இயக்க, முதலில் New Task. என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து புரோகிராமிற்கான கட்டளை வரியைத் தரவும். அல்லது Browse பட்டனில் கிளிக் செய்து, புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து இயக்கவும். இது ஸ்டார்ட் மெனுவில் ரன் (Run) கட்டம் மூலம் இயக்குவதற்கு இணையானது.

2. ப்ராசெஸ்ஸஸ் (Processes): இங்கு இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து இயக்க பைல்களையும் காணலாம். ஏதேனும் ஒன்றை மூடினால், சேவ் செய்யப்படாத டேட்டா தொலையலாம். உறைந்து போன புரோகிராமின் செயல்பாட்டினையும் இதன் வழியாகவும் நிறுத்தலாம். ஆனால், நாம் எதனை நிறுத்த முயற்சிக்கிறோம் என்பதனைச் சரியாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கான கோப்பு எது என்று உணர்ந்திருக்க வேண்டும். சில வேளைகளில், இதனைச் சரியாக அறியாதோர், சிஸ்டம் பைல்களில் ஏதேனும் ஒன்றை நிறுத்தி விடுவார்கள். இதனால் சிஸ்டம் இயங்கு வதில் பிரச்னை ஏற்படலாம். எனவே, இதனைச் சரியாக அணுகுவது எப்படி எனப் பார்க்கலாம்.

2 a. அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமின் இயக்கத்தினை நிறுத்த, அப்ளிகேஷன்ஸ் டேப் கிளிக் செய்து, அதில் அந்த புரோகிராமின் மீது ரைட் கிளிக் செய்திடவும். பின்னர், கிடைக்கும் மெனுவில், Go ToProcess என்பதில் கிளிக் செய்திடவும். உடனே Process டேப் திறக்கப்பட்டு, அந்த புரோகிராமிற்கான இயக்க பைல் ஹைலைட் செய்து காட்டப்படும். இதன் இயக்கத்தினை நிறுத்த, End Process என்பதில் கிளிக் செய்திடவும். அப்ளிகேஷன்ஸ் டேப் அழுத்தி, ஒரு புரோகிராமின் இயக்கத்தினை நிறுத்த முடியாத போது, இந்த வழியைப் பின்பற்றலாம். Process ஒன்றில் ரைட் கிளிக் செய்து, பின்னர் End Process Tree என்பதில் கிளிக் செய்தால், அந்த இயக்கம் சார்ந்த அனைத்து பைல் இயக்கங்களும் முடிவிற்குக் கொண்டு வரப்படும்.

3. சர்வீசஸ் (Services): சர்வீசஸ் என்பவை, பின்னணியில் இயங்கும் சப்போர்ட் புரோகிராம்களாகும். இதில் பெரும் பாலானவை, கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும்போதே, இயங்கி பின்னணியில் செயல்படும்.

3 a.ஒரு சர்வீஸ் புரோகிராமினை இயக்க, நிறுத்தப்பட்ட சர்வீஸ் மீது ரைட் கிளிக் செய்து, பின்னர், Start Service என்பதில் கிளிக் செய்திடவும்.

3 b. ஒரு சர்வீஸை நிறுத்திட, இயங்கிக் கொண்டிருக்கும் சர்வீஸில் ரைட் கிளிக் செய்து, Stop Service என்பதில் கிளிக் செய்திடவும்.

3 c. சர்வீஸ் ஒன்றுடன் சார்ந்த இயக்கங்களைக் காண, அதன் மீது ரைட் கிளிக் செய்து, Go To Process என்பதில் கிளிக் செய்திடவும். இதன் மூலம், ஒரு சர்வீஸ், கம்ப்யூட்டரின் பிற திறன் செயல்களை இயங்கவிடாமல் அழுத்திக் கொண்டுள்ளதா எனத் தெரியவரும்.

4. பெர்பார்மன்ஸ் (Performance): இந்த டேப் சிஸ்டம் இயக்கத்தின் பல்வேறு பிரிவுகளைக் காட்டும்.

4 a. மேலாக, சிபியு பயன்பாட்டினைக் காட்டும் மீட்டர் ஒன்று இயங்கியவாறு இருக்கும். அருகிலேயே CPU usage history line கிராப் ஒன்று காட்டப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வரைபட வரிகள் இருப்பின், அது சிபியுவின் பல செயல்பாடுகளைக் காட்டும்.

4 b. சிபியு பயன்பாடு மீட்டர் மற்றும் சிபியு பயன்பாடு லைன் கிராப் கீழாக, அதே போன்ற மெமரி பயன்பாட்டிற்கான அளவீடுகள் காட்டப்படும்.

4 c. இன்னும் கீழாகப் பார்த்தால், கம்ப்யூட்டர் இயக்கிக் கொண்டிருக்கும் பைல்கள் மற்றும் மெமரி பயன்பாடு ஆகியவை காட்டப்படும்.

5. நெட்வொர்க்கிங் (Networking): நெட்வொர்க் இயக்கத்திற்கான லைன் கிராப் இதில் காட்டப்படும். வரை வரிகள் கீழாக கூடுதல் புள்ளி விபரங்கள் காட்டப்படும்.

6. யூசர்ஸ் (Users): இந்த டேப்பில், கம்ப்யூட்டர் சிஸ்டத்தினைப் பயன்படுத்துவோர் அனைவரின் பட்டியல் காட்டப்படும்.

6 a . இதில் ஒரு யூசரை ஹைலைட் செய்து, Log off என்பதில் கிளிக் செய்தால், அந்த யூசரின் பயன்பாட்டு காலம் முடிக்கப்படும்.

6 b. ஏதேனும் ஒரு யூசரை கிளிக் செய்து, Disconnect என்பதில் கிளிக் செய்தால், பயனாளரின் பணிக்காலம் முடிக்கப் படும். ஆனால் அது மெமரியில் காத்து வைக்கப்படும். இதனால், பின்னர், அந்த பயனாளர், மீண்டும் லாக் ஆன் செய்து, தான் விட்ட பணியினைத் தொடரலாம்.

7. டாஸ்க் மேனேஜர் டிப்ஸ்: ப்ராசசஸ், சிபியு பயன்பாடு, மெமரி அளவு ஆகிய அனைத்தும் டாஸ்க் மேனேஜரின் கீழாகக் காட்டப்படும் தகவல்களாகும். இந்த மிக அடிப்படையான தகவல்கள், உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் எவ்வளவு கடினமாகப் பணியாற்றிக் கொண்டிருக் கிறது அல்லது பணியே ஆற்றாமல் இருக்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம். இதில் செயல்திறன் சார்ந்த எண்கள் அதிகமாக இருந்தால், பிரச்னைகளை அறியும் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.

7 a. கட்டளைக்குச் செயல்படாத அப்ளிகேஷன்களைக் கண்டறிய அப்ளிகேஷன்ஸ் டேப்பினைக் கிளிக் செய்திட வேண்டும்.

7 b. கம்ப்யூட்டரின் திறனை அதிகம் எடுத்துக் கொள்கிறதா என்பதனை அறிய ப்ராசசஸ் டேப்பினை செக் செய்திடலாம். ப்ராசஸ் ஒன்றினை முடிவிற்குக் கொண்டு வரும் முன், அது குறித்துத் தீவிரமாக அறியவும். இந்த வகையில் மெனு பாரில் உள்ள வியூ மெனு மூலமும் தகவல்களை அறியலாம். மேலதிகத் தகவல்களுக்கு அல்லது டாஸ்க் மானேஜர் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்றால், டாஸ்க் மேனேஜரைத் திறந்து மெனு பாரில் Help என்பதில் கிளிக் செய்து, பின்னர் கிடைக்கும் விண்டோவில் Task Manager Help Topics என்பதில் கிளிக் செய்து, கிடைக்கும் தகவல்களைப் பிரித்தறிந்து படிக்கவும்.

Friday, October 28, 2011

backup எடுக்கவில்லையா கவலைவேண்டாம்.

நாம் பயன்படுத்தும் கணினி பலவேளைகளில் நாம் நம் அறிவை மேம்படுத்தி கொள்ள நோண்டிக் கொண்டிருக்கும் போதோ அல்லது வைரசின் பதிப்பாலோ operating system corrupt ஆகலாம்.

அப்படி ஆகும் போது நாம் backup எடுத்துவைத்திருந்தால் கவலை வேண்டாம்.
இல்லையென்றால் யோசித்துப்பாருங்கள்.OS install செய்தபின்பு நமக்கு பிடித்த மென்பொருட்களை தேடிப்பிடித்து தரவிரக்குவது எவ்வளவு கடினம்.ஆனால் இவை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்தால் எப்படி இருக்கும்.

ஆமாம் உண்மையில் கிடக்கிறது இந்த தளத்தில்.http://ninite.com/




இதில் எது வேண்டுமோ அதை select செய்து get started என்பதை கிளிக் செய்தால் போதும் அனைத்தும் கணினியில் நிறுவப்படும்.

உங்கள் பிறந்த தேதியை கொடுத்தால், 700 கோடி மக்களில் நீங்கள் எத்தனையாவது சிறந்த நபர் என்பதை அறிந்து கொள்ளலாம் ?

உங்கள் பிறந்த தேதியை கொடுத்தால், 700 கோடி மக்களில் நீங்கள் எத்தனையாவது சிறந்த நபர் என்பதை அறிந்து கொள்ளலாம் ?

உலக மக்கள்தொகையானது 700 கோடியை நெருங்குகிறது. இந்நிலையில் 700 கோடியில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிவதற்காக பிபிசி இணையத்தளம் இணைப்பொன்றை உருவாக்கியுள்ளது.

பிறந்த திகதி, மாதம் மற்றும் வருடத்தை கொடுத்ததும் உங்களுக்கான நம்பரை தருகிறது அந்த இணைப்பு.
ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் தரவுகளை வைத்து இவற்றை கணிப்பதாக சொல்கிறார்கள்.

மேலும் Global Footprint Network, International Telecommunications Union போன்றவற்றின் தரவுகளும் இதில் பயன்படுத்தப்பட்டதாம்.

Thursday, October 27, 2011

Group policy இல் சில வித்தைகள்


Windows இல் பல தனிப்பயனர்க்குரிய (Customize) நிலைகள Group policy மூலமாக ஏற்படுத்தலாம்.Start Menu வில் Run எனும் கட்டளையைத் தெரிவு செய்து தோன்றும் Dialog Box இல் gpedit.msc என Type செய்து Enter Key ஐ press பன்னுவதன் மூலம் Group policy எனும் தலைப்பிலமைந்த Window தோன்றும்.

இதில் பல மாற்றங்களை நாம் செய்யலாம்.

01.Desktopல் உள்ள Recycle Bin ஐ மறைப்பது.
02.Folder Option ஐ Tools Menu வில் இருந்து மறைத்து வைப்பது.
03.Task Managerஐ Open செய்யாமல் தடுப்பது.
04.Add or Remove Programs ஐ Open செய்யாமல் தடுப்பது.

இப்படி எத்தனையோ விடயங்களை Group policy மூலம் நாம் மாற்றியமைக்கலாம்.நான் மேலே குறிப்பிட்ட 4 விடயங்களைப் பற்றி விளக்குகின்றேன்.


01. Desktopல் உள்ள Recycle Bin ஐ மறைப்பது.
Group policy ஐ Open செய்து User Configuration >Administrative Templates > Desktop என்ற தெரிவை ஏற்படுத்தி அதில் Remove Recycle Bin icon from desktop என்பதனை Double Click செய்யத் தோன்றும் Dialog Box இல் Setting என்ற Tab இல் Enable எனும் தெரிவை ஏற்படுத்தி Ok Button ஐ கிளிக் செய்தால் Desktop இல் Recycle Bin மறைந்து இருப்பதை காணலாம்.



02.User Configuration >Administrative Templates > Windows Components > Windows Explorer > Removes the Folder Options menu item from the Tools menu

03.User Configuration >Administrative Templates > System > Ctrl+Alt+Del Options > Remove Task Manager

04.User Configuration >Administrative Templates > Control Panel > Add or Remove Programs > Remove Add or Remove Programs

இங்கு சென்று நீங்கள் Enable செய்தால் போதும்.மீண்டும் கொண்டுவர Enable க்கு பதிலாக Not configured தெரிவு செய்தால் சரி.

Saturday, October 22, 2011

தேவையில்லாத குப்புகளை நீக்கி, வேகத்தை அதிகப்படுத்தும் இலவச மென்பொருள் ?


நமது கணணியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை நீக்கி வேகம் குறையாமல் செயல்பட CCleaner என்ற மென்பொருள் உதவி புரிகிறது.
மேலும் கணணியின் Registry கிளீன்(Clean) செய்யவும் உதவுகிறது. CCleaner உள்ள வசதிகளையும் மேலும் பல வசதிகளையும் கொண்ட மென்பொருள் JetClean. CCleaner போலவே பயன்படுத்த எளிதாகவும், செயலில் அருமையாகவும் உள்ளது.
மேலும் இதில் மென்பொருள்களை நீக்கும்(Uninstall) வசதியும் உள்ளது. அதிக நினைவகத்தை(Memory) பிடித்துள்ள மென்பொருள்களை தனியே காணும் வசதியும் நீக்கும்(Uninstall) வசதியோடு உள்ளது.
மேலும் தேவையில்லாத டூல்பார்(Tool Bar) இருந்தால் அவற்றை நீக்க எளிதாக டூல்பார்களை மட்டும் தனியே காணும் வசதி உள்ளது.
இணையவேகத்தை கூட்ட Internet Booster என்ற வசதியும், உங்கள் RAM வேகத்தை கூட்ட RAMClean என்ற வசதியும் உள்ளது. செயல்படும் போது குறைந்த நினைவகத்தில் வேகமாக செயல்படுகிறது.

விண்டோ எக்ஸ்பி - தமிழ் மென்நூல்




விண்டோக்ஸ் என்பது எவரும் எளிதாக பயன்படுத்துவதற்காக வடிவமைக்கபட்ட ஓர் இயக்க முறைமை ஆகும். இதை பற்றிய தகவலுடன் 135 இடுகைகளை கொண்ட தமிழ் மென்நூல் இங்கு இணைக்க பட்டுள்ளது. இவ் மேன்நூளை படித்து முடிக்கும் பொது நீங்க விண்டோஸ் எக்ஸ்பியில் தேர்ச்சி பெற்றுல்லிற என்பதை உறுதிப்படுத்த சில கேள்விகளும் இணைக்கப்பட்டுள்ளது.

இதனை தரவிறக்கம் செய்து நீங்களும் ஓர் விண்டோஸ் எக்ஸ்பியில் கட்டமைப்புகளை அறிந்து கொள்ளுங்கள்.


தரவிறக்கம் செய்ய download என்னும் button ஐ சொடுக்கவும்.



Friday, October 21, 2011

டிரையல் காஸ்பர்ஸ்க்கி ஆன்டிவைரஸை ஒரிஜினலாக மாற்ற..



முதலில் இதன் TRIAL மென்பொருளை தரவிறக்கி கணினியில் பதித்துக்கொள்ளுங்கள்.

TRIAL வெர்சன் தரவிறக்க கீழே சொடுக்கவும்


Downloads:

பின்னர் KASPERSKY TRIAL VERSION யை தங்களின் கணினியில் இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். காஸ்பர்ஸ்க்கி மென்பொருளுக்கான சிரியல் கீ பைல்களையும் தரவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்.

சீரியல் கீ தரவிறக்க கீழே சொடுக்கவும்


Downloads:


இப்போது தங்களின் கணினியில் இண்டர்நெட் இணைப்பினை துண்டித்து விட்டு விடுங்கள். பின்னர்KASPERSKY ஆன்டிவைரஸ் தொகுப்பினை இயக்குங்கள், அதில் ACTIVATION PRODUCT என்பதினை கிளிக் செய்யவும். தற்போது ஓர் விண்டோ தோன்றும். அதில் NEXT என்பதனை கிளிக் செய்யவும்.

தற்போது தோன்றும் விண்டோவில் கீ பைலினை தேடவும் என குறிப்பிடப்படும்.BROWSE என்பதனை கிளிக் செய்து நீங்கள் தரவிறக்கம் செய்த சீரியல் கீ பைல்களை தேர்வு செய்யவும்.

பின்னர் NEXT என்பதினை கிளிக் செய்யவும். அவ்வளவு தான் முடிந்தது. KASPERSKY ஆன்டிவைரஸினை தொகுப்பினை இலவசமாக பயன்படுத்தலாம்.....
--

Thursday, October 20, 2011

Adobe Photoshop CS3 (Portable) இலவசமாக Download செய்ய


போட்டோக்களை எடிட் செய்வதற்கு நாம் பொதுவாக பயன்படுத்தும் ஒரு மென்பொருள்தான் இந்த Adobe Photoshop. இந்த மென்பொருளை அறியாதவர்கள் மிக மிக குறைவு என்றுதான் சொல்ல முடியும்.அதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியுமா?அதான் உங்களுக்கு ஏற்கனவே தெரியுமே....சரி விஷயத்திற்கு வருகிறேன்....
Adobe Photoshop CS3 Portable ஐ பற்றி
  • இது வெறும் 56MB மட்டும்தான்.
  • கணினியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை...Download செய்த பிறகு நேரடியாக இயக்கலாம்.
  • பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை (கீ கேட்காது)
  • இதனை நான் Media fire இல் Upload செய்ய வில்லை...
  • Google மூலம் தேடி Download செய்து கொண்டேன்...அதன் இணைப்பு மட்டுமே இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...அவ்வளவுதான்....
Download செய்வதற்கு இங்கே

adobe photoshop cs 4

Download செய்வதற்கு இங்கே

பேஸ்புக்கில் Timeline ஐ Remove செய்வது எப்படி?

பேஸ்புக் அன்மையில் Timeline எனப்படும் புதிய தோற்றத்தை அறிமுகப்படுத்தி இருந்தது, இந்த தோற்றம் ஒரு சில பேருக்கு பிடித்து இருந்தாலும் எனக்கு .இந்த தோற்றம் பிடிக்கவில்லை....இதனைActivate செய்து விட்டு எப்படி Remove செய்வது என்று தெரியாமல் இருக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.


இங்கு சென்று கீழ் உள்ள படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்.








சரி.இப்பொழுது உங்களுடைய profile இற்கு போய் பாருங்கள்.... பழைய தோற்றம் தெரியும்.

Wednesday, October 19, 2011

கணினியில் வைரஸ்

ணினி உபயோகிப்பவர்களுக்கு வைரஸ் எனும் பெயர் கேட்டால் கொஞ்சம் அலர்ஜியாகத்தான் இருக்கும் அதிலும் புதியவர்களுக்கு கணினியில் ஏதாவது தகராறு என்றால் உடனே அவர்கள் சர்வீஸ் செய்யத்தான் நினைப்பார்கள் பார்மட் செய்யாமல் வைரஸ் நீக்கினாலும் அவர்களுக்கு அந்த பயம் விலகாது சரி இந்த வைரஸ் எப்படித்தான் நம் கணினியின் உள்ளே நுழைகிறது அந்த நுழைவாயிலை கொஞ்சம் அடைத்தால் இந்த பிரச்சினைக்கு கொஞ்சம் தீர்வு கிடைக்கும்.

வைரஸ் இணைய வழியிலும் மற்றும் பென் டிரைவிலும்,பிளாப்பி வழியிலும் தான் ஒரு கணினிக்குள்ளாக வைரஸ் வருகிறது அதிலும் இப்போதெல்லாம் பிளாப்பி என்பது இல்லாமல் போய்விட்டது அது ஏன் தகவல் பரிமாற்றத்துக்காக நாம் பயன்படுத்தும் சிடியின் வழியாக வைரஸ் வருவதில்லை ஏனென்றால் அது எழுதுவதற்கு அனுமதிப்பதில்லை ஆனால் பென் டிரைவ் அப்படியில்லை எத்தனை முறை வேண்டுமானாலும் அழித்து பதிந்து கொள்ளலாம் இந்த இடம் தான் வைரஸ்க்கு துணை செல்கிறது

இப்படி பென் டிரைவில் வரும் வைரஸ் தடுக்க சின்ன வழிமுறையை பின்பற்றலாம் இது சின்ன வழிமுறை ஆனாலும் இதனால் கணினிக்கு அதிக பாதுகாப்பு நிச்சியம், உங்கள் பென் டிரைவில் ஒரு புதிய போல்டர் உருவாக்கி அதற்கு பெயர் autorun.inf என கொடுத்து படத்தில் காண்பித்துள்ளது போல Read Only , Hidden இரண்டையும் தேர்வு செய்து ஓக்கே கொடுத்து விடவும் இனி இந்த போல்டர் உங்கள் பென் டிரைவில் இருந்து மறைந்து விடும்



எதற்காக இந்த போல்டரை உருவாக்கினோம் பெரும்பான்மையான வைரஸ்கள் இந்த Autorun.inf வழியாகதான் வருகிறது அப்படி வரும் வைரஸ்கள் நமது பென் டிரைவில் ஏற்கனவே ஒரு autorun.inf இருப்பதாலும் அது Read Only , Hidden ஆக இருப்பதாலும் அதனால் இந்த பெயரில் autorun.inf உருவாக்கி உள்ளே வரமுடியாது.

ஒரு autorun.inf உருவாக்கி விட்டால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடுமா? நீங்கள் உபயோகி்க்கும் பென் டிரைவ் என்றால் அதில் பாதுக்கப்பு ஏற்படுத்தியிருப்பீர்கள் வேறு ஒரு நண்பரின் பென் டிரைவ் தங்கள் கணினியில் உபயோகிக்க வேண்டிய கட்டாயம் அப்பொழுது என்ன செய்வீர்கள் இங்கும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்

கணினியில் பென் டிரைவ் இனைக்கும் முன்பு ஷிப்ட் கீயை அழுத்தி பிடித்துக்கொள்ளவும் இவ்வாறு செய்வதால் ஒரு வேளை அந்த பென் டிரைவில் வைரஸ் இருந்தால் அது autorun வழியாக தானியங்கியாக திறக்க விடாது இனி கீழே டாஸ்க்பாரில் வலது மூலையில் பென் டிரைவ் கணினியில் இணைந்ததற்கு அறிகுறியாக பச்சை நிற ஆரோ வந்திருக்கும் இனி Windows Key + E உபயோகித்து திறக்கும் விண்டோவில் பென் டிரைவ் தேர்ந்தெடுத்து இருமுறை கிளிக்கி திறக்காமல் வலது கிளிக் வழியாக open என்பதை தேர்ந்தெடுக்கவும் வேண்டுமானால் திறக்கும் முன்பே உங்கள் வைரஸ் காப்பான் கொண்டு சோதித்து விடுங்கள்.

ஒரு வேளை வைரஸ் இருந்தால்
1)Start- 2)Run Type 3) Type cmd

டிரைவின் பெயர் 4) G: (உங்கள் டிரைவின் எழுத்தை பார்த்துக்கொள்ளவும்)

அடுத்தபடியாக 5) ATTRIB -H -R -S AUTORUN.INF

மீண்டும் 6) EDIT AUTORUN.INF

இனி புதிதாக ஒரு ஊதா நிற விண்டோ திறக்கும் அதில் 7)File என்பதில் கிளிக்கி 8)Save as கொடுக்கவும் பின்னர் 9) Exit என கொடுக்கவும்(வெளியேறவும்)

மீண்டும் 10)Start- 11)Run Type 12) Type cmd

13) ATTRIB +H +R +S AUTORUN.INF

அடுத்து 14) EXIT
அவ்வளவுதான் இனி பென் டிரைவ் எடுத்து மீண்டும் கணினியில் இணைத்துக்கொள்ளுங்கள் இப்போது சோதித்து பாருங்கள் வைரஸ் இருக்காது.

உங்கள் வைரஸ் கொல்லி எந்தளவிற்க்கு சிறந்தது என சோதித்து பார்க்க கீழே இருக்கும் கோடிங்கை காப்பி செய்து நோட்பேட் திறந்து பேஸ்ட் செய்து சேமித்து பாருங்கள் உங்கள் ஆன்டிவைரஸ் மென்பொருள் சிறப்பாக செயல்பட்டால் இதை சேமிக்க விடாது அப்படி சேமிக்க அனுமதித்தால் ஆண்டிவைரஸ் மென்பொருளை மாற்றிவிட்டு வேறு நல்ல மென்பொருளை நிறுவுங்கள்

=================================================================================
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
=================================================================================

சில நேரங்களில் வைரஸ் கன்ட்ரோல் பேனல் மற்றும் ரிஜிஸ்டர்யையும் முடக்கி விடும் அதை சரி செய்ய என் முந்தயை பதிவான காணமல் போன கன்ட்ரோல் பேனல் பாருங்கள்

காணாமல் போன கண்ட்ரோல் பேனல்

நண்பர்களே சமீபத்தில் நண்பர் ஒருவர் அவரது கணினியில் வைரஸ் பிரச்சினை காரணமாக கண்ட்ரோல் பேனலை திறக்க முடியவில்லை என கேட்டிருந்தார் (உங்களுக்கு இப்போது தேவையில்லை என்றாலும் காப்பி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் பின்னர் எப்போதாவது உபயோகப்படலாம்) சரி இதையும் ஒரு பதிவாக எழுதிவிடலாமே என்கிற முடிவு தான் இந்த பதிவின் நோக்கம்

சில கணினிகளில் அட்மின் மட்டுமே கண்ட்ரோல் பேனல் திறக்கமுடியும் சில நேரங்களில் வைரஸ் தொல்லையினாலும் கண்ட்ரோல் பேனல் முடங்கி விடக்கூடும் அந்த நேரத்தில் ரிஜிஸ்டரியையும் சேர்த்து முடக்கிவிடும் ரிஜிஸ்டரி திறக்க முடிந்த்தென்றால் சில மாற்றங்கள் மேற்கொண்டு சரி செய்துவிடலாம் சரி ரிஜிஸ்ட்ரியை திறக்க முடியவில்லை அப்போது என்ன செய்யலாம்
-----------------------------------------------------------------------------------

Option Explicit

'Declare variables
Dim WSHShell, n, MyBox, p, t, mustboot, errnum, vers
Dim enab, disab, jobfunc, itemtype

Set WSHShell = WScript.CreateObject("WScript.Shell")
p = "HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System\"
p = p & "DisableRegistryTools"
itemtype = "REG_DWORD"
mustboot = "Log off and back on, or restart your pc to" & vbCR & "effect the changes"
enab = "ENABLED"
disab = "DISABLED"
jobfunc = "Registry Editing Tools are now "

'This section tries to read the registry key value. If not present an
'error is generated. Normal error return should be 0 if value is
'present
t = "Confirmation"
Err.Clear
On Error Resume Next
n = WSHShell.RegRead (p)
On Error Goto 0
errnum = Err.Number

if errnum <> 0 then
'Create the registry key value for DisableRegistryTools with value 0
WSHShell.RegWrite p, 0, itemtype
End If

'If the key is present, or was created, it is toggled
'Confirmations can be disabled by commenting out
'the two MyBox lines below

If n = 0 Then
n = 1
WSHShell.RegWrite p, n, itemtype
Mybox = MsgBox(jobfunc & disab & vbCR & mustboot, 4096, t)
ElseIf n = 1 then
n = 0
WSHShell.RegWrite p, n, itemtype
Mybox = MsgBox(jobfunc & enab & vbCR & mustboot, 4096, t)
End If

-----------------------------------------------------------------------------------

மேலை உள்ள கோடிங்கை அப்படியே காப்பி எடுத்து ஒரு நோட்பேட் திறந்து (windows key + R then type notepad) பேஸ்ட் செய்து அதை சேமிக்கும் போது regenb.vbs என சேமிக்கவும் இதில் regenb எனபது பெயர் .vbs என்பது அதன் எக்ஸ்டென்சன் உங்களுக்கு புரியும் வகையில் பெயர் கொடுத்து.vbs சேமித்துகொள்ளவும்

regenb.vbs என்கிற பைலை இருமுறை கிளிக்கவும் உடனே உங்கள் கணினி ரீபூட் ( Restart) செய்ய சொல்லும் அதன்படியே செய்யவும் இனி தங்கள் கணினியில் ரிஜிஸ்டரி Enable ஆகி இருக்கும் இது வைரஸ் காரணமாக முடங்கி இருந்தாலும் அல்லது அட்மின் முடக்கி இருந்தாலும் இரண்டையும் சரி செய்து விடும் (இதையே ரிஜிஸ்டரி Disable ஆக மாற்றவும் பயன்படுத்தலாம்)

இனி இரண்டாவது கட்டமாக என்ன செய்யவேண்டும் ரிஜிஸ்டரியில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் அதற்கு இந்த வழிமுறையை பின்பற்றலாம்

----------------------------------------------------------------------------------

[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer]
"NoControlPanel"=dword:00000000

[HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer]
"NoControlPanel"=dword:00000000

-----------------------------------------------------------------------------------

நான் முன்பு சொன்னது போலவே ஒரு நோட்பேட் திறந்து (windows key + R then typenotepad) பேஸ்ட் செய்து அதை சேமிக்கும் போது cpenb.reg என சேமிக்கவும் இதில் cpenb எனபது பெயர் .reg என்பது அதன் எக்ஸ்டென்சன் உங்களுக்கு புரியும் வகையில் பெயர் கொடுத்து.reg சேமித்துகொள்ளவும், வழக்கம் போல இருமுறை கிளிக்கினால் இதுவே ரிஜிஸ்டரியில் கண்ட்ரோல் பேனலை Enable செய்து விடும்.

சரி இத்தனை செய்த பின்பும் கண்ட்ரோல் பேனல் திறக்கவில்லை அதற்கு என்னதான் செய்வது அடுத்த வழிமுறையையும் பார்த்துவிடுவோம்

Start – Run and Type gpedit.msc ஓக்கே கொடுக்கவும் இனி திறக்கும் விண்டோவில் User Configuration எனபதன் கீழே உள்ள Administrative Templates என்பதை இருமுறை கிளிக்கி வலது பக்கம் திறக்கும் விண்டோவில் Control Panel என்பதை இருமுறை கிளிக்கவும்



கீழே இருக்கும் படத்தை பாருங்கள் இப்படியாக ஒரு விண்டோ திறக்கும் அதில் Prohibit access to the Control Panel என்பதை இருமுறை கிளிக்கவும்



இனி கீழே இருக்கும் படத்தை போல ஒரு புதிய விண்டோ திறந்திருக்கும் அதில் படத்தில் உள்ளது போல Enable என்பதை தெரிவு செய்து அப்ளை கொடுத்து ஓக்கே கொடுத்து கணினியை Restart செய்து விடுங்கள் இனி கண்ட்ரோல் பேனல் திறக்கும்



சரி நண்பர்களே இனியும் கண்ட்ரோல் பேனல் திறக்கவில்லையா என்ன சரி கவலையை விடுங்கள் இன்னும் ஒரு வழிமுறையையும் பார்த்துவிடுவோம்
Start –Run – Type regedit

இந்த இடத்தை கண்டுபிடியுங்கள் ஒன்றும் சிரமம் இருக்காது
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System

என்ன நண்பர்களே System என்பதை கண்டுபிடித்துவிட்டீர்கள் அப்படியே வலது பக்கம் பாருங்கள் NoDispCPL என இருக்கிறதா அதை இருமுறை கிளிக்கி திறக்கும் விண்டோவில் ஜீரோ (0) என மாற்றிவிடுங்கள் இனி நிச்சியாமாக கண்ட்ரோல் பேனல் திறக்கும்




(Startup Drive Checkup) ஸ்டார்ட் அப் டிரைவ் செக்கப் நிறுத்த வழி

சில நேரங்களில் கணினி இயக்கம் ஆரம்பிக்கும் போதே நீல நிற விண்டோவில் உங்கள் கணினியின் வன்தட்டுகளை சோதிக்கிறேன் ஏதாவது ஒரு விசையை அழுத்தசொல்லி வரும் நீங்கள் இதை தவிர்க்க நினைத்தாலும் விண்டோ மாறாமல் முழு வன்தட்டையும் சோதித்த பின் தான் விண்டோ திறக்கும் நாம் பார்க்க போவது இதை தவிர்ப்பதற்கான மாற்றுவழிகளைத்தான் இப்போது பார்க்கபோகிறோம்.



முதல் வழி

கணினியை இயக்கி F8 கீயை விட்டு விட்டு அழுத்துங்கள் உங்களுக்கு ஒரு கருப்பு விண்டோ திறக்கும் இனி அதில் Last Know Good Configuration என்பதை தெரிவு செய்து எண்டர் கொடுத்து போய் பாருங்கள் ஒரு வேளை பிரச்சினை சரியாகலாம்.

இரண்டாவது வழி

இல்லை இன்னும் சரியாகவில்லை என்றால் அடுத்ததாக மீண்டும் கணினியை இயக்கி Start ->Run->Programs->Accessories->System Tools->Restore என்பதை செலக்ட் செய்து புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் Restore My Computer to an Earlier Time என்பதை தேர்வு செய்து ஓக்கே கொடுங்கள் இனி அடுத்த பக்கத்தில் புதிய விண்டோவில் ஒரு பக்கம் தேதியும் மறுபக்கம் நீங்கள் கணினியில் ஏற்படுத்திய மாற்றங்களும் காணப்படும் இனி நீங்கள் உங்கள் கணினியில் எந்த நாளில் உங்கள் கணினி நல்ல நிலையில் இயங்கியது என்பதை ஒவ்வொரு தேதியாக கிளிக்கும் போதும் வலது பக்கம் தெரியும் உங்களுக்கு சரியானதாக தெரியும் ஒரு தேதியை தெரிவு செய்து ஓக்கே கொடுக்கவும் இனி உங்கள் கணினி ரீஸ்டோர் செய்ய தொடங்கிவும் சிறிது நேரத்திற்க்கு பிறகு உங்கள் கணினி அனைந்து மீண்டும் ரீஸ்டார்ட் ஆகி ஒரு பாப் அப் விண்டோ போல திறக்கும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் உங்கள் கணினி நல்ல நிலைக்கு வந்துவிட்டாதாவென ஒரு வேளை சரியாக பட்சத்தில் மீண்டும் வேறு ஒரு தேதியை முயற்சி செய்து பார்க்கலாம் பொருமை இல்லாதவர்கள் அடுத்த முயற்சிக்கு செல்லலாம்.



மூன்றாவது வழி

Start ->Run & Type msconfig என டைப் செய்து ஓக்கே கொடுக்கவும் இப்போது ஒரு சிறிய விண்டோ திறக்கும் அதில் Startup என்கிற டேப்பில் CHKDISK என்பது மாதிரியான பெயரில் ஏதாவது டிக் மார்க் செய்யப்பட்டுள்ளதா என பார்க்கவும் இருந்தால் மட்டும் அந்த டிக் மார்க் எடுத்துவிடுவதன் மூலம் அதை டிசாபிள் செய்யலாம் இனி கணினி ரீஸ்டோர் கேட்கும் ஓக்கே கொடுத்து விடுங்கள் இனி பிரச்சினை சரியாகும். ஒரு வேளை அப்படி இல்லையென்றால் ஒன்றும் பிரச்சினையில்லை அப்படியே மூடிவிடவும்.



நான்காவது வழி

விண்டோஸ் இயக்கம் தொடங்கும் முன் எந்த டிரைவில் பிரச்சினை இருப்பதாக சொல்லி டிரைவ் செக்கிங் செய்கிறதோ அந்த டிரைவின் பிராப்பர்ட்டிஸ் திறங்கள் உதாரணமாக D டிரைவில் பிரச்சினை என்றால் D டிரைவின் வலது பக்கம் கிளிக்கி Properties என்பதை தெரிவு செய்து திறக்கும் சிறிய விண்டோவில் Tool டேப்பை கிளிக்குங்கள் அதில் Check Now என்பதை கிளிக்கி அதில் டிக் மார்க் இருந்தால் எடுத்துவிட்டு ஓக்கே கொடுத்து விடுங்கள் இனி உங்கள் கணினியில் இந்த பிரச்சினை இருக்காது சரி இப்பவும் சரியாகவில்லை நண்பா நான் என்ன பண்றது அப்படினு கேக்கிற நண்பர்களுக்காக அடுத்த வழிமுறையும் பார்த்துவிடலாம்.



ஐந்தாவது வழி

இந்த முறையில் நிச்சியம் சரியாகிவிடும் நம்பிக்கையோடு செயல்படுங்கள் இனி நீங்கள் செய்ய வேண்டியது Start –> Run & Type cmd இப்போது உங்களுக்கு கமாண்ட் பிராம்ட் வந்திருக்கும் அதில் உங்களுக்கு D டிரைவ் பிரச்சினைக்குரியதாக இருக்கிறதோ அதற்கு தீர்வாக chkntfs /X D: என கமாண்ட் கொடுஙகள் இனி சரியாகிவிடும் ஒரு வேளை உங்களுடைய கணினியில் நான்கு டிரைவ்கள் அதாவது C, D, E, F என்பதாக இருக்கிறது இந்த நான்கு டிரைவிலும் பிரச்சினை இருக்கிறது அதற்கு Chkntfs /X C: D: E: F: என கொடுத்து பாருங்கள் இபோது உங்கள் கணினி இயங்கும் போது டிரைவ் செக்கிங் இருக்காது இனி இந்த கமாண்ட் கொடுப்பதிலும் பிரச்சினை இருக்கிறது ஒன்றும் கவலைப்படவேண்டாம் அடுத்து ரிஜிஸ்டரியில் மாற்றம் ஏற்படுத்தி முயற்சி செய்துபார்ப்போம்.

ஆறாவது வழி

உங்கள் கணினியில் Start –> Run & Type regedit என டைப் செய்து ஓக்கே கொடுங்கள் உங்களுக்கு கணினியின் இதயபகுதியான ரிஜிஸ்டரி பகுதி திறக்கும் இனி நீங்கள் செய்யவேண்டியது முதலில் ரிஜிஸ்டரி பேக்கப் எடுத்துவைத்துக் கொள்வதுதான் அடுத்து HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CURRENTCONTROLSET\CONTROL\Session Manager இதில் இந்த Session Manager கண்டுபிடித்ததும் அதை இருமுறை கிளிக்கி வலது பான் பக்கம் பார்க்கவும் அங்கு BootExecute என்கிற பெயரில் ஒரு ரெஜ் இருக்கும் இனி அதை டபுள் கிளிக் அல்லது Modify என்பதை தெரிவு செய்யுங்கள் ஏற்கனவே அங்கு autocheck autochk * என்பதாக இருக்கும் இனி நீங்கள் செய்யவேண்டியது D டிரைவில் பிரச்சினை என்றால் autocheck autochk /k:D * இப்படி மாற்றிவிடவும் இல்லை முறையாக மூன்று டிரைவ்களிலும் பிரச்சினை என்றால் autocheck autochk /k:C /k:D /k:E * என மாற்றிவிடுங்கள் இனி ஓக்கே கொடுத்து வெளியேறி விடுங்கள் ஒரு முறை கணினியை ரீஸ்டார்ட் செய்துவிடுங்கள் இப்போது எல்லாம் சரியாகி இருக்கும் இனியும் பிரச்சினை இருந்தால் மூன்றாம் நபர் மென்பொருள் உபயோகித்து பார்க்கலாம் இல்லையென்றால் உங்கள் விண்டோஸ் குறுந்தகடு இருந்தால் அதன் மூலமாக ரிப்பேர் செய்யலாம்.



என்ன நண்பர்களே உங்களுக்கு இது உபயோகமில்லை என்று ஒதுக்கி விடாதீர்கள் ஏதாவது ஒரு நேரத்தில் பயன்படும் ஒரு வேளை உங்களுக்கு இது உபயோகமானது என்றால் மற்றவர்களும் பயனடைய உதவுங்கள்.

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget