APOLLOPARTHIBAN: பெரிய பைல்களை இமெயிலில் அனுப்ப எளிய வழி..!

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Saturday, July 23, 2011

பெரிய பைல்களை இமெயிலில் அனுப்ப எளிய வழி..!

இது பலருக்கும் ஏற்கனவே தெரிந்த விடயம் தான் எனினும் தெரியாதவர்களுக்காக இத்தகவல் . நம் மின் அஞ்சலில் ( யாஹூ , ஜிமெயில் , yahoo , gmail ) 25 mb அளவுக்கு மேல் உள்ள வீடியோ போன்ற கோப்புகளை அனுப்பவது மிகவும் கடினம் , மேலும் நீங்கள் மென்பொருட்கள் , மற்றும் system 32 போன்ற கோப்புகளை மின் அஞ்சலில் அனுப்ப முடியாது . பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வகையான கோப்புகளை மின் அஞ்சல் நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன.


எனவே நாம் அனுப்ப வேண்டிய கோப்பை ஏதாவது ஒரு இலவச சர்வர் (server) இல் ஏற்றி விட்டு அதன் பின்பு அந்த செர்வெர் / அல்லது தளத்தின் நேரடி லிங்கை அனுப்புவதின் மூலம் நம் இவ்வகையான கோப்புகளை எளிதாக பரிமாறிக் கொள்ளலாம் .

இதன் மூலம் 1 mb முதல் 250 mb வரையான எவ்வகையான கோப்புகளையும் இலவசமாக அனுப்பலாம் . இது போன்ற தளங்களில் நீங்கள் கோப்புகளை ஏற்றுவது மிகவும் சுலபம் .ஒரு முறை உங்கள் பயனர் கணக்கை உருவாக்கி அதன் பின் upload என்ற option ஐ சொடுக்கி உங்களுக்குத் தேவையான கோப்புகளை ஏற்றிகொள்ளுங்கள் .இத்துடன் இன்னொரு வசதியும் இதில் உண்டு நீங்கள் அனுப்பும் கோப்பை உங்கள் நண்பர்கள் ஒவ்வொருமுறை தரவிறக்கம் செய்யும் போதும் உங்கள் கணக்கில் தானாக பணம் சேரத் தொடங்கி விடும். ஆம் இன்று முதல் உங்கள் பெரிய கோப்புகளை இந்த தளங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதன் மூலம் பணமும் வந்த மாதிரி இருக்கும் , அப்படியே உங்கள் கோப்பை அனுப்பிய மாதிரியும் இருக்கும்.



No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget