APOLLOPARTHIBAN: யு.எஸ்.பி.சேப்லி ரிமூவ் ( USB Safely Remove )

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Tuesday, July 19, 2011

யு.எஸ்.பி.சேப்லி ரிமூவ் ( USB Safely Remove )



விண்டோஸ் சிஸ்டத்திலேயே யு.எஸ்.பி. போர்ட்களில் இணைக்கப்படும் சாதனங்களை எடுத்திட சேப்லி ரிமூவ் வசதி தரப்பட்டுள்ளது. இருப்பினும் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள்இதற்கென வடிவமைக்கப்பட்டு நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன.USB Safely Remove என்ற அந்த புரோகிராமின் புதிய பதிப்பு 4.3.2 தற்போது வெளியாகியுள்ளது.

இதில் என்ன புதிதாய் இருக்கிறது என்று பார்க்கலாமா!

1. இந்த புரோகிராமில் இருந்த ஆட்டோ ரன் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. எந்த சாதனத்தை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்தாலும் அதில் உள்ள தேர்ட் பார்ட்டி புரோகிராம் ஒன்றினை இயக்கும் வகையில் செட் செய்திடலாம். இதனைப் பயன்படுத்தி எக்ஸ்புளோரர் புரோகிராமினை இயக்கலாம். அல்லது பைல் மேனேஜரை இயக்கி என்ன என்ன பைல்கள் இருக்கின்றன எனப்பார்க்கலாம்.

2. யு.எஸ்.பி.யில் ணைக்கப்பட்டுள்ள சாதனத்தை நீக்கும் முன் அதில் உள்ள பைல்களை ஆட்டோ பேக் அப் எடுக்கும் வகையில் செட் செய்திடலாம்.

3. எக்ஸ்டெர்னல் டிரைவ் என்றால் அதனை இணைக்கும்போதே ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சோதனை செய்திடும் படி அமைக்கலாம். இதே போல பல செயல்பாடுகளை செட் செய்திடலாம்.

யு.எஸ்.பி.யில் இணைத்த சாதனம் எந்நிலையில் உள்ளது என்று அறிய பல்வேறு ஐகான்கள் காட்டப்படுகின்றன. இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் அனைத்தும் இயக்கத்தில் உள்ளனவா என்று காட்டப்படும். போர்ட்டில் சாதனங்களே இல்லை என்றாலும் ஐகான் மூலம் தெரிந்து கொள்ளலாம். இணைக்கப்பட்ட ஒரு சாதனத்தின் இயக்கம் நிறுத்தப்பட்ட பின்னர் அது நீக்கப்படவில்லை என்றால் காட்டப்படும். இதன் பயன்பாடுகள் குறித்து மேலும் அறிய மேலே தரப்பட்டுள்ள இணைய தளத்தினையே காணவும்.

தரவிறக்கம் செய்ய : [ இங்கே கிளிக் செய்யவும் ]

யு.எஸ்.பி ட்ரைவ் Safely Remove Hardware செய்தியை நீக்க....

யு.எஸ்.பி. போர்ட்டில், பல சாதனங்களை இணைத்துப் பயன்படுத்துகிறோம். பிளாஷ் ட்ரைவ், டேட்டா கார்ட், கேமரா போன்ற அனைத்தும் யு.எஸ்.பி. போர்ட்டில் இணைக்கும் வகையில் இன்று வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கின்றன. இவற்றை போர்ட்டிலிருந்து, மீள விலக்கும்போது அதற்கான Safely Remove Hardware ஐகானைக் கிளிக் செய்து மெசேஜ் கிடைத்த பின்னரே எடுக்க வேண்டியுள்ளது. பொறுமை இன்றி, எடுக்கும்போது, சிஸ்டம் அந்த சாதனத்தின் ட்ரைவில் ஏதேனும் எழுதிக் கொண்டிருந்தால், பிரச்னை ஏற்படுகிறது.

இந்த பிரச்னையைத் தீர்க்க, விரைவில் ட்ரைவ் மற்றும் பிற சாதனங்களை விலக்க ஒரு தீர்வு உள்ளது. இதற்கான செட்டிங்ஸில் சிறிய மாற்றம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும்.

1.விண்டோஸ் எக்ஸ்புளோரரில் மெமரி கார்டிற்கான ட்ரைவில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், ப்ராப்பர்ட்டீஸ் (Properties) ) தேர்ந்தெடுக்கவும்.

2.இப்போது காட்டப்படும் விண்டோவில் ஹார்ட்வேர் (Hardware) என்னும் டேப்பில் கிளிக் செய்து இங்கு மெமரி கார்ட் ரீடரைத் தேர்ந்தெடுக்கவும். இங்கும் உள்ள மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் (Properties)தேர்ந்தெடுக்கவும்.

3.கிடைக்கும் விண்டோவில் பாலிசீஸ் (Policies)டேப்பில் கிளிக் செய்திடவும். பாலிசீஸ் காட்டப்படும் முன் சேஞ்ச் செட்டிங்ஸ் Change Settings) பட்டனைக் கிளிக் செய்திட வேண்டி இருக்கலாம்.

4.இனி உள்ள விண்டோவில் Download updates but let me choose whether to install themஎன்பதைத் தேர்ந்தெடுத்துப் பின் கிளிக் செய்து வெளியேறவும்.

இனி Safely Remove Hardware உங்களுக்குத் தேவை இருக்காது.

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget