APOLLOPARTHIBAN: பெரிய பைலை Copy செய்யும்போது சிறிய சிறிய அளவாக பிரித்து, பின் இணைக்கவேண்டுமா..??

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Saturday, December 3, 2011

பெரிய பைலை Copy செய்யும்போது சிறிய சிறிய அளவாக பிரித்து, பின் இணைக்கவேண்டுமா..??

Image

file ஒன்றை, இன்னொரு இடத்திற்கு அல்லது வேறு ஒருcomputer-க்குக் கொண்டு செல்ல திட்டமிடுகிறீர்கள். ஆனால் அது அளவில் மிகவும் பெரியதாக இருப்பதால், பிளாஷ் ட்ரைவ் அல்லது வேறு மெமரி சாதனங்களில் பதிய இயலவில்லை.
அந்த வேளையில், பைலைப் பிரித்துப் பின் அவற்றை இன்னொரு கம்ப்யூட்டருக்கு ஒவ்வொன்றாகக் கொண்டு சென்று பதியலாம்.

அனைத்து பிரிவுகளும் பதியப்பட்ட பின்,மீண்டும் அதனை ஒரு பைலாக இணைக்கலாம். இதற்கு உதவிடும் புரோகிராமின் பெயர் HJSplit. இந்த புரோகிராம் இணையத்தில் இலவசமாக டவுண்லோட் செய்திடக் கிடைக்கிறது.

இந்த புரோகிராம் பைலின் அளவு 100 ஜிபி க்கும் மேலாக இருந்தால் கூட அதனைப் பிரித்துப் பின் இணைக்கிறது. இதனை நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவை இல்லை.

இணையத்தில் கிடைக்கும் இதன் ஸிப் பைலை டவுண்லோட் செய்து, HJSplit.exe என்ற இந்த பைலை, கம்ப்யூட்டரில் உள்ள ட்ரைவில் பதிந்திடவும். இந்த எக்ஸிகியூடிவ் பைலின் மீது டபுள் கிளிக் செய்து இயக்குங்கள்.

இப்போது கிடைக்கும் Split பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்து கிடைக்கும் Input File என்ற பட்டனில் கிளிக் செய்திட வும். பின்னர், நாம் பிரிக்க விரும்பும் பைலைத் தேர்ந்தெடுக்க வசதி கிடைக்கும்.

பைலைத் தேர்ந்தெடுத்த பின்னர், Output என்ற பட்டனில் அழுத்தவும். அதன் பின்னர், எந்த ட்ரைவ் அல்லது போல்டரில், பிரிக்கப்படும் பைல்கள் சென்றடைய வேண்டும் என்பதைக் குறிப்பிடவும். பின்னர், இவை எந்த அளவில் பிரிக்கப்பட வேண்டும் அல்லது எத்தனை பைல்களாகப் பிரிக்கப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம்.

அடுத்து Start பட்டனை அழுத்தவும். உடன் பைல் பிரிக்கும் வேலை மேற்கொள்ளப் படும். பைல் பிரிக்கப் படுவதனை, ஒரு பார் சட்டம் கீழாகக் காட்டும்.

நீங்கள் பிரிக்கும் பைலின் அளவைப் பொறுத்து இந்த பணி மேற்கொள்ளப்படும் காலம் அமையும். முடிவில், ஒரு சிறிய அறிவிப்பு தரப்படும். இதனை அடுத்து, நீங்கள் குறிப்பிட்ட ட்ரைவ் அல்லது போல்டரில், பிரிக்கப் பட்ட பைல் துண்டுகள் இருப்பதனைக் காணலாம்.

இந்த பைல்களுக்கான பெயரில் 001, 002 என இவை துணைப் பெயர்களைக் கொண்டிருப்பதனைக் காணலாம்.

பிரித்த பைல்களை இணைத்தல்: பிரித்த பைல்களை இணைப்பதுவும் எளிது. அவற்றை நீங்கள் கொண்டு செல்ல விரும்பும் கம்ப்யூட்டருக்குக் கொண்டு செல்லவும். மீண்டும் இதே HJSplit.exe பைலை இயக்கவும்.

File Join டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இப்போது Input File என்ற பட்டனில் அழுத்தவும். டயலாக் பாக்ஸில் 001 என்ற துணைப் பெயர் கொண்ட பைல் மட்டுமே காட்டப்படும்.

அந்த பைலைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ச்சியான மற்ற பைல்கள் தானாகத் தேர்ந்தெடுக்கப்படும். எனவே பிரிக்கப்பட்ட பைல்கள் அனைத்தும் ஒரே போல்டரில் இருக்கு மாறு வைத்திடவும்.

அடுத்து Output பட்டனை அழுத்தி இணைக்கப்படும் பெரிய பைல் எங்கு பதியப்பட வேண்டும் என்பதனைக் குறிப்பிடவும். இவற்றை எல்லாம் முடித்த பின்னர், Start பட்டனை அழுத்தவும். இப்போது இணைக்கும் வேலை தொடங்கும்.

மீண்டும் ஒரு ஸ்டேட்டஸ் பார் ஒன்று கீழாகக் காட்டப்பட்டு எந்த அளவில் பிரிக்கப்பட்ட பைல்கள் இணைக்கப்பட்டுள்ளன என்று காட்டப்படும்.

பைல் துண்டுகள் இணைக்கப்பட்டவுடன், வேலை முடிந்துவிட்டதற்கான அறிவிப்பு செய்தி காட்டப்படும்.

இதற்கான HJSplit என்ற அப்ளிகேஷன் பைலைப் பெற http://www.hjsplit.org/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்

--

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget