APOLLOPARTHIBAN: 2012

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Tuesday, December 25, 2012

computer 200% faster

 Go to start then click run and then type regedit
 Select HKEY_CURRENT_USER and then select control panel folder and then select desktop folder. Do it correctly
 You will see registry setting at your right hand side, after that select menu show delay and then right click and select modify.
 you will find edit string option -----> default value data is 400 , you have to change the value Data to 000
 Restart your computer. You will notice that your computer has become much more faster

Friday, December 21, 2012

அனைத்து பாடல்களையும் கேட்க

ஒரு சிலர் படம் பார்க்கிறார்களோ இல்லையோ பாடலை மட்டும் தனியே ரசிப்பார்கள் . இதுப்போன்றவர்கள் இணையத்தை நாடுவதே பாடலை கேட்கத்தான். இணையத்தில் பாடல்களை கேட்க வேண்டுமெனில் நாம் தனியாக ஒரு தளத்திற்கு சென்று அந்த குறிப்பிட்ட பாடலை தேடிபிடித்து கேட்க வேண்டும் .இல்லையெனில் பதிவிறக்கம் செய்து பாடலை கேட்க வேண்டும் .ஒரு சில பாடல்களை இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது.

என்ன செய்வது என்று கடைசியில் கூகுளை தேடி பார்த்தாலும் நாம் தேடிய பாடல் மட்டும் கிடைக்காது. என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறிர்களா இதோ அதற்க்கான ஒரு மென்பொருள்.

                                 



                                 இதை பதிவிறக்க : வின்க்ரூவெஸ்



                       


இந்த மென்பொருளை பதிவிறக்கி நிறுவிக் கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொண்டு , இந்த மென் ஒருங்கினை திறக்கவும் .
வேண்டுமெனில் ஒரு பயனர் கணக்கை உருவாக்கி கொள்ளவும் .பின் SEARCH FOR MUSIC என்ற செக்பாக்சில் வேண்டிய குறிச்சொல்லை இட்டு பாடலை தேடிப்பெறலாம்
.


Thursday, December 13, 2012

போன்சாய் மென்பொருள்கள்




கண்டுபிடிக்கப்பட்ட மென்பொருள்கள் அனைத்துமே நமக்கு பயன்படும் என்பது இல்லை, எல்லோருக்கும் ஏதாவது ஒரு சில மென்பொருள்களோடு வேலை முடிந்துவிடும், ஒரு சிலருக்கோ வேறு வேறு ‌‌‌ரூபங்களில் புதிய புதிய மென்பொருள்க‌ளின் தேவை இருந்துகொண்டே இருக்கும், என்றாவது ஒருநாள் பயன்படுத்தப்படும் மென்பொருள்களை தேடிப்பிடித்து வாங்கி கணினிக்குள் அடைத்துவைப்பது என்பது கணினிக்கு பளு, அதுவே தேவைக்கு உபயோ‌கிக்கும் வகையில் ஒரு கிளிக்கில் ஓப்பனாகக்கூடிய, இடத்தை அதிகம் பிடிக்காததாக இருந்தால் நல்லதுதானே.
இன்று மிகப்பெரிய மென்பொருள்கள் பலவும் போன்சாய் மரங்களைப்போல சுருங்கி போர்ட்டபிள் மென்பொருள்களாக உலா வந்து கொண்டிருக்கின்றன.இவை யுஎஸ்பி டிரைவுகளில் பதிந்து ‌வைத்து எளிதில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை, தேவை கருதி கணினியிலும் பதிந்து பயன்படுத்தலாம்,
இதன் மூலம் இரண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும், முதலாவது ஒரு நிறுவனத்தின் பழைய அல்லது புதிய பதிப்பு மென்பொருளை விரும்பி பயன்படுத்துபவர்கள் அதே நிறுவனத்தின் முந்தைய அல்லது புதிய பதிப்பின் போர்ட்டபிளை வைத்துக்கொள்ளலாம், (எதற்காக என்றால் விண்டோஸ் ஆபிஸ் 97.2003. எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் புதிய விண்டோஸ் 2007 ல் உருவாக்கப்பட்ட கோப்புகளை படிக்க முடியாது, அ‌ச்சமயத்தில் உங்களிடம் ஓப்பன் ஆபிஸ் மென்பொருளின் போர்ட்டபிள் இருந்தால் அதில் எளிதாக ஓப்பன் செய்து சேவ்ஏஸ் செய்து ஆபிஸ் 97.2003 க்கு ஏற்றதாக மாற்றிக்கொள்ளமுடியும்)
அடுத்தது தினம் ஒரு இடத்திற்கு பயணிப்பவர்களுக்கு லேப்டாப் இல்லாத சூழலில் போர்ட்டபிள் மென்பொருள்கள் பதிந்த யுஎஸ்பி டிரைவ்களை பயன்படுத்தி எந்த ஒரு பிரௌசிங் சென்டரிலும் அல்லது நண்பர்க‌ளின் கணினிகளிலும் இன்ஸ்டால் செய்யாமல் சிறிது நேரம் பயன்படுத்தி நம்முடைய வேலையை எளிதாக முடித்துக்கொள்ளமுடியும். அந்த வகையில் தற்போது முன்னணியில் உள்ள மென்பொருள்கள் பலவும் அனுமதி பெற்றும். பெறாமலும் என்று இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன, இவை உங்களுக்கும் பயன்படக்கூடும் என்பதற்காகவே இந்த பதிவு,
(எச்சரிக்கை அனு‌மதியில்லாத மென்பொருள்களை வைரஸ் சோதனை செய்து பயன்படுத்தவும், மால்வேர். ஆட்வேர். ட்ரோஜான் ‌‌ஹார்ஸ் போன்ற வைரஸ்கள் இருக்கக்கூடும்)
அப்படிப்பட்ட போர்ட்டபிள் மென்பொருகள் கி்டைக்கக்கூடிய தளங்களின் பட்டியல்
Open Source Portable Software's:
http://www.portablefreeware.com
http://portable-applications.blog.com/
http://www.lupopensuite.com
http://en.wikipedia.org/wiki/List_of_portable_software

தேவையான மென்பொருள்களை தேர்ந்தெடுத்து ஒரே கோப்பாக யுஎஸ்பியில் /கணினியில் இன்ஸ்டால் செய்ய
www.liberkey.com

Portable Games:
http://en.wikipedia.org/wiki/List_of_portable_computer_games
http://noportable.blogspot.com
http://portableappz.blogspot.com/

Wednesday, December 5, 2012

ஆயிரகணக்கான ருபாய் மதிப்புள்ள மென்பொருள்கள் இலவசமாக ...





நாம்நமது கணினியில் பல மென்பொருகள் வைத்திருப்போம் . அவை அனைத்தும் இலவச பதிப்பாகத்தான் இருக்கும் . நல்ல மென்பொருள்கள் அதிக விலை இருப்பதால் நாம் வாங்குவதில்லை . ஆனால் கட்டன மென்பொருள்களில் உள்ள வசதிகள் இலவச மென்பொருள்களில் இருப்பதில்லை .  சில மென்பொருள்கள் குறிபிட்ட காலம் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும் . இதில் வைரஸ் இருக்கும் அபாயம் அதிகம் .

இது போன்ற நிலையில் எந்த மென்பொருள் நல்ல மென்பொருள் அது எப்படி இலவசமாக கிடைக்கும் என தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் , அந்தக்க மென்பொருள்களை இலவசமாக தரவிறக்க விரும்பும் என்னை போன்ற நண்பர்களுக்காக தான் இந்த பதிவு .

இன்று நாம் பதிவில் பார்க்கும் தளத்தில் இணைத்தால் போதும் . தினமும் ஒரு கட்டண மென்பொருளை நமக்கு அனுப்புவார்கள் . நாம் விரும்பினால் அதை தரவிறக்கி பயன்படுத்தலாம் . வேண்டாம் என்றால் பயன்படுத்தாமல் விட்டுவிடலாம் . இதில் நாம் அறியாத , பயன்படுத்த விரும்பும் , விலை மதிப்பற்ற நிறைய மென்பொருள்கள் கிடைக்கும் .

அந்த தளத்தின் லிங்க் :  http://www.giveawayoftheday.com



பலன்கள் :

  • பல கட்டண மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கும் .
  • நிங்கள்  அறியாத மென்பொருளை கூட தெரிந்து கொள்ளலாம் .
  • வைரஸ் தொல்லை இல்லை .

நிபந்தனைகள் ;

1. உங்களுக்கு வரும் மெயிலில் உள்ள மென்பொருளை மட்டுமே தரவிறக்க
    முடியும் .

2. தரவிறக்கிய மென்பொருளை அன்றே INSTALL செய்ய வேண்டும . மறுநாள்
     INSTALL செய்ய முடியாது .

3. தரவிறக்கிய மென்பொருளை யாருக்கும் அனுப்ப முடியாது .


டிஸ்கி : இன்றைய ஸ்பெஷல்   :  CLICK HERE 

மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி?



கணினியில் நாம் பல மென்பொருட்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகிறோம். சில நேரம் குறிப்பிட்ட மென்பொருளின் Licence Key - ஐ நாம் மறந்து விடுவோம். அதை இன்னொரு கணினியில் இன்ஸ்டால் செய்யும் போது முழித்துக் கொண்டிருப்போம். அதை தவிர்க்க எளிதாக Licence Key - ஐ எப்படி கண்டுபிடிப்பது என்று பார்ப்போம். 

இதை ஒரு மென்பொருள் பயன்படுத்தி செய்ய வேண்டும். இதன் மூலம் Windows  license Key, Software and Games license Key போன்றவற்றை அறியலாம். 

1. முதலில் Weeny Free Key Recovery software என்ற மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள். 

2. இதை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யும் போது Babylon போல ஏதேனும் வந்தால் அதை தவிர்த்து விட்டு இன்ஸ்டால் செய்யவும். 

3. Install செய்து முடிந்தவுடன் அதை ஓபன் செய்தால், கீழே உள்ளது போல வரும். அதில் Windows License Key,  MS Office Key மற்றும் சில முக்கிய மென்பொருட்களின் Key  - ஐ காமிக்கும். 


4. எல்லா மென்பொருட்களின் Key - ஐயும் கான Scan Plus என்பதை கிளிக் செய்யுங்கள். 


5. தகவல்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வேண்டும் போது பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

Sunday, November 18, 2012

Microsoft Office Professional Plus 2013 இலவசமாக டவுன்லோட் செய்ய




Office 2013 இந்த வருடத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உண்டாக்கி இருக்கும்  மென்பொருள். இதன் Professional Plus Version 2 மாதங்களுக்கு இலவசமாக டவுன்லோட் செய்யும் வண்ணம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் Word, PowerPoint, Excel, Outlook, OneNote, Access, Publisher, and Lync போன்றவை உள்ளடக்கம். 

இதை பயன்படுத்த Windows 7 அல்லது Windows 8 பயனராக இருக்கவேண்டும். அதே போல குறைந்த பட்சம் 1GB RAM பயன்படுத்த வேண்டும். கட்டாயம் தேவையான மற்ற விஷயங்கள் கீழே.

Requirements :


  • Processor :  1 Ghz or faster x86- or x64-bit processor with SSE2 instruction set
  • Memory (RAM) :  1GB RAM (32 bit); 2GB RAM (64 bit)
  • Hard Disk :  3GB Space
  • Display :  Graphics hardware acceleration requires a DirectX10 graphics card and 1024 x 576 resolution
  • Operating System : Windows 7, Windows 8, Windows Server 2008 R2, or Windows Server 2012
  • Browser : Microsoft Internet Explorer 8, 9, or 10; Mozilla Firefox 10.x or a later version; Apple Safari 5; or Google Chrome 17.x.
  • .NET version : 3.5, 4.0, or 4.5
இதை டவுன்லோட் செய்ய உங்களுக்கு ஒரு Hotmail அக்கௌன்ட் தேவை. Register செய்த பின் Activation Key அனுப்பப்படும். இது 32-bit மற்றும் 64-bit ஆகிய இரண்டிலும் இயங்கும். 

-- 
    
                 
                   S.PARTHIBAN

                                                                                                      
 

Sunday, November 11, 2012

கூகுள் குரோம் உலாவியின் உதவியுடன் தொலைவிலுள்​ள கணனிகளை கட்டுப்படு​த்துவதற்கு



ஒரு கணனியிலிருந்து பிறிதொரு கணனியின் Desktop - இன் செயற்பாடுகளை அவதானிப்பதற்கோ அல்லது பிறிதொரு கணனியை தொலைவிலிருந்து கட்டுப்படுத்துவதற்கு Teamviewer போன்ற பிரபலமான மென்பொருட்கள் காணப்படுகின்றன.இவற்றிற்கு மத்தியில் கூகுள் நிறுவனமானது தனது குரோம் உலாவியின் மூலமாக இச்செயற்பாடுகளை மேற்கொள்ளவதற்காக Chrome Remote Desktop எனும் Application ஒன்றினை Google Webstore - இல் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த Application ஆனது புதிதாக அறிமுகமான குரோம் பதிப்புக்களில் மட்டுமே செயற்படக்கூடியதாகக் காணப்படுவதுடன் Windows, Mac, Linux இயங்குதளங்களைக் கொண்ட கணனிகளிலும் இது செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்றது.

அத்துடன் இந்த Application கட்டுப்படுத்துவதற்காக எதிர்பார்க்கும் அனைத்து கணனிகளிலும் நிறுவியிருக்க வேண்டியது அவசியமாகும்.

இதனை கணனியில் நிறுவி முதன் முறையாக செயற்படுத்தும் போது மின்னஞ்சல் முகவரியினூடான ஒப்புதலை வழங்குமாறு கேட்கும்.

அதன் பின்னர் Start பொத்தானை அழுத்தி இணைப்பினை Enable செய்யவும். தொடர்ந்து மின்னஞ்சல் முகவரி மூலம் பெறப்பட்ட PIN இலக்கத்தினை 2 தடவைகள் உட்செலுத்தி OK பொத்தானை அழுத்தவும்.

பின்னர் YES பொத்தானை அழுத்துவதன் மூலம் Chrome Remote Host Service - இனை நிறுவிக் கொள்ளவும். தொடர்ந்து கூகுள் கணக்கு மற்றும் PIN இலக்கத்தினை பயன்படுத்தி மீண்டும் இணைப்பினை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

இப்போது நீங்கள் கட்டுப்படுத்த வேண்டிய அல்லது இணைப்பிலுள்ள கணனியினை My Computers பகுதியில் காணலாம்.

Tuesday, November 6, 2012

விரைவாக FILE-களை காப்பி செய்ய உதவும் SOFTWARE



மென்பொருள் FILE-களை நாம் ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றால் பென்டிரைவில் காப்பி செய்து மாற்றுவோம்.


இந்த வேலையை செய்வதற்காக Nice Copier என்ற மென்பொருள் உதவி புரிகிறது. இந்த மென்பொருளானது குறைந்த அளவுடையது. இந்த மென்பொருளை பதிவிறக்கி உங்கள் கணணியில் நிறுவியதும் நீங்கள் செய்யும் வேலையை இந்த மென்பொருளானது விரைவாக செய்து முடிக்கின்றது. இதில் கூடுதல் வசதி என்னவென்றால் நாம் இதுவரை காப்பி செய்துள்ள கோப்புகளை இதன் மூலம் எளிதில் அறிந்து கொள்ளலாம். இந்த மென்பொருள் முற்றிலும் இலவச பதிப்பாகும். DOWNLOAD Nice CopierSource
கோப்புகளை அதிவேகமாக செய்ய Extreme Copy மென்பொருள் நமக்கு பெரிதும் உதவுகிறது. இது 32 Bit மற்றும் 64 Bit வகையில் இங்குள்ளது.ஒரு முற்றிலும் ஒரிஜினல் மென்பொருள் ஆகும் இதை பதிவிறக்கம் செய்து பயன்படுதிக் கொள்ளுங்கள்.
ExtremeCopy 2.2.1 PRO | 8.91 Mb


Tuesday, October 30, 2012

CCleaner Portable


சி கிளீனர் இலவச மென்பொருள் உங்கள் கணினியில் இருந்து பயன்படுத்தப்படாத கோப்புகளை நீக்குகிறது - விண்டோஸ் வேகமாக இயங்க அனுமதிக்கிறது மற்றும் மதிப்புமிக்க வன் வட்டு இடத்தையும் திரும்ப பெறலாம். இது உங்கள் இணைய வரலாறு , இணைய நடவடிக்கைகளின் தடயங்களை

அழிக்கிறது. 

பின்வருவனவற்றை சுத்தமாக்குகிறது:


இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்: தற்காலிக கோப்புகள், URL , வரலாறு, குக்கீகள், தானியங்குநிறைவை படிவத்தை வரலாறு, index.dat.

பயர்பாக்ஸ்: தற்காலிக கோப்புகள், URL, aவரலாறு, குக்கீகள், பதிவிறக்க வரலாறு.

ஓபரா: தற்காலிக கோப்புகள், URL, வரலாறு, குக்கீகளை.

விண்டோஸ்: சுழற்சி தொட்டி, சமீபத்திய ஆவணங்கள், தற்காலிக கோப்புகள் மற்றும் புகுபதிகை கோப்புகள்.

பதிவு தூய்மை: கோப்பு நீட்டிப்புகள், ActiveX கட்டுப்பாடுகள், ClassIDs, ProgIDs, Uninstallers, பகிரப்பட்ட DLLs, எழுத்துருக்கள், உதவி கோப்புகள், விண்ணப்ப பாதைகள், சின்னங்கள், செல்லுபடியாகாத குறுக்குவழி மேலும் உட்பட பயன்படுத்தாத பழைய உள்ளீடுகள், நீக்க மேம்பட்ட அம்சங்கள் ... மேலும் ஒரு விரிவான காப்பு அம்சம் வருகிறது.

மூன்றாம் நபர் பயன்பாடுகளில்: temp கோப்புகள் மற்றும் மீடியா பிளேயர், eMuleKazaa, கூகிள் கருவிப்பலகை, நெட்ஸ்கேப், MS Office, நீரோ, அடோப் அக்ரோபேட், WinRAR, WinAce, WinZip மற்றும் பல உள்ளிட்ட பல பயன்பாடுகள் சமீபத்திய கோப்பு பட்டியலை (MRUs) நீக்குகிறது ...

100% ஸ்பைவேர் இலவசமானது: இந்த மென்பொருள் எந்த வேவுபொருள், விளம்பரப்பொருள் அல்லது வைரஸ்கள் கொண்டிருப்பதாக இல்லை.



CCleaner.exe என்ற portable.exe பதிலாக இருமுறை கிளிக் செய்வதன் மூலம் CCleanerதொடங்கலாம்

அறியப்பட்ட வரையறைகள்:

CCleaner போர்டபிள் இயக்க நிர்வாகி அல்லது அதிகார பயனர் உரிமைகள் தேவைப்படுகிறது. இந்த உரிமைகள் தேவையான CCleaner கூறுகளின் பதிவு தேவைப்படும்.

CCleaner போர்டபிள் அமைப்புகள்:
  • நீங்கள் கைமுறையாக [கையடக்க] பிரிவின் கீழ் portable.ini உள்ள மதிப்புகள் திருத்த வேண்டும் CCleaner போர்டபிள் அமைப்புகள் மாற்ற வேண்டும்.
  • CCleaner பிழைத்திருத்தம் முறைமை காட்டும்
  • கையடக்க பிழைத்திருத்த சாளரம் உள்ளது.
  1.  முடக்கப்பட்டன (முன்னிருப்பு)
  2.  இயக்கப்பட்டது
  • CCommandLine - CCleaner கட்டளை வரியில் அளவுருக்களை சேர்க்கவும்.
  • CCleanerPath - CCleaner கோப்புகளை கோப்புறையில் முழுமையாக அல்லது தொடர்புடைய பாதையில் சேர்க்கவும்.
  • IfInstalled - மாற்றங்கள் CCleaner கணினியில் நிறுவப்பட்ட போது நடத்தை மாற்றத்தை சேர்க்கவும்.
  1.  பின்சேமிப்பு நிறுவப்பட்ட CCleaner (முன்னிருப்பு)
  2.  நிறுவப்பட்ட CCleaner இயக்கவும்
  3.  பிழை செய்தி
CCleaner போர்டபிள் கட்டளை வரி விருப்பங்கள்:
  • / Debug - CCleaner கட்டளை வரியில் / debug சேர்க்கிறது.
  • / தானியங்கி - CCleaner கட்டளை வரியில் / தானியங்கி சேர்க்கிறது.
  • / Reg - CCleaner கூறு தான் பதிவு மற்றும் பதிவேட்டில் அமைப்புகள் எழுதுகிறார்.
  • / UNREG - CCleaner கூறு தான் Unregisters மற்றும் CCleaner பதிவக உள்ளீடுகளாக நீக்குகிறது. *
  • / NOIC - தவிர் CCleaner நிறுவல் சரிபார்க்கவும்.
  • / DBG - CCleaner போர்டபிள் பிழைத்திருத்த சாளரம் காட்டுகிறது.
  • / போர்ஸ் - மரண தவறுகள் இருக்கும் போது கூட CCleaner துவக்குகிறது.



                                                                 DOWNLOAD
-- 
    

Monday, October 29, 2012

கணினியில் உள்ள எல்லா அப்ளிகேஷனுக்கும் இலவச UPDATE



Windows சிஸ்டம் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் செய்ய வேண்டியது, MICROSOFT நிறுவனம் அளிக்கும் பேட்ச் பைல்களைக் கொண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்வதுதான்.அது மட்டுமின்றி இப்போது நாம் பயன்படுத்தும் பிரவுசர்கள் மற்றும் பிற அப்ளிகேஷன் புரோகிராம் களும் அவ்வப்போது பேட்ச் பைல் மூலம் அப்டேட் செய்திட வேண்டியுள்ளது. அப்படியானால் நாம் எத்தனை பைல்களுக்கான அப்டேட் பைல்களைக் கண்காணிக்க முடியும்.

                                            

எம்பி3, வீடியோ, தொலைபேசி, டிவி ட்யூனர், கேமரா மற்றும் மொபைல் இணைப்பிற்கான அப்ளிகேஷன் கள் என அனைத்தையும் நாம் கண்காணித்து அப்டேட் செய்வது எளிதா என்ன? சில வேளைகளில் இது போன்ற புரோகிராம்களுக்கு அப்டேட் இருப்பதாகச் சொல்லி, நம்மை ஒரு குறிப்பிட்ட தளத்திற்கு அழைத்துச் சென்று வைரஸ்களை நம் கம்ப்யூட்டருக்குள் தள்ளிவிடும் போலி புரோகிராம்களும் நிறைய உண்டு. 


இதற்கெல்லாம் விடிவாக நமக்கு ஒரு புரோகிராம் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இதன் பெயர் Secunia PSI (PSI Personal Software Inspector) இதனை என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். 


இந்த புரோகிராம் நம் கம்ப்யூட்டரில் உள்ள பழைய புரோகிராம்களுக்கு அவற்றின் நிறுவனங்கள் அப்டேட் தந்தாலும் தரவிட்டாலும், செகுனியா அனைத்தையும் ஸ்கேன் செய்கிறது. ஸ்கேன் செய்த பின் பாதுகாப்பற்ற அப்ளிகேஷன் புரோகிராம்கள் என ஒரு பட்டியலை நமக்கு அளிக்கிறது. 


எந்த புரோகிராம்களுக்கெல்லாம் அப்டேட்டட் பைல்கள் உள்ளனவோ அவற்றின் லிங்க்குகளைப் பட்டியலிட்டு தருகிறது. இந்த லிங்க்குகளில் கிளிக் செய்து நம் கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்களை அப்டேட் செய்து கொள்ளலாம். இவற்றுடன் எந்த புரோகிராம்களுக்கு அப்டேட் பைல்களை அவற்றைத் தயாரித்து அளித்த நிறுவனங்கள் தரவில்லையோ அவற்றையும் சுட்டிக் காட்டுகிறது. 


செகுனியா சிஸ்டம் தொடங்கும்போதே இயங்கி, கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து புரோகிராம்களையும் ஸ்கேன் செய்கிறது. புதிய புரோகிராம்கள் இருந்தால் அவற்றிற்கான அப்டேட் பைல்களை ஆய்வு செய்கிறது. புரோகிராம்களில் ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையில் கோட் இருந்தால் அதனையும் சுட்டிக் காட்டுகிறது. 


செகுனியா பி.எஸ்.ஐ. கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் அல்லது பயர்வால் புரோகிராம்களுக்குப் பதிலியாகக் கொள்ள முடியாது. ஆனால் இவை மேற்கொள்ளாத ஒரு முக்கிய வேலையை மேற்கொண்டு நம் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கிறது. 


இந்த அருமையான பாதுகாப்பு புரோகிராமினை http://secunia.com/vulnerability_scanning/personal/  என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம். சென்ற ஆகஸ்ட் மாதம் இதன் அண்மைக் காலத்திய பதிப்பு வெளியானது. 


பதிப்பு எண் 3.0.0.4001 இதன் பைல் சைஸ் 3.281.592 byte ஆகும். 58 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு நாளில் சராசரியாக இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 3,480.

-- 
    
                 
                   S.PARTHIBAN

                                                                                                      
 

Saturday, October 27, 2012

MS Office - இல் Auto Save வசதியை Enable செய்வது எப்படி? [Word, PPT, Excel]




MS Office - இல் வேலை செய்து கொண்டிருக்கும் போது கணினி Shutdown அல்லது Not Responding போன்றவற்றால் திடீர் என்று கணினி இயங்க மறுக்கலாம். ஒரு பெரிய டாகுமென்ட் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தால்  , அது Save செய்யப்படாமல் இருந்தால் அவ்வளவு தான். நமக்கு தலைவலியே வந்து விடும். 

இதை தவிர்த்து அதில் Auto - Save என்னும் ஒரு வசதி மூலம் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை தானாகவே டாகுமென்ட் Save ஆகும் படி செய்தால், மேற்சொன்ன பிரச்சினையின் போது நமக்கு கொஞ்சம் தலைவலி குறையும். அதை எப்படி செய்வது என்று பார்ப்போம். 

முதலில் எந்த ஒரு டாகுமென்ட் வேலையை ஆரம்பித்தாலும் முதலிலேயே ஒரு பெயர் கொடுத்து Save செய்து கொள்ளுங்கள். 

இப்போது உங்கள் டாகுமென்ட்டில்  File என்பதை கிளிக் செய்ய வேண்டும். (2007, 2010 என்றால் ஒரு Icon இருக்கும்.) அதில் Word Options என்பதை தெரிவு செய்யுங்கள். 


இப்போது வரும் பகுதியில் Save என்பதை கிளிக் செய்யுங்கள். 


இப்போது "Save AutoRecover information every" என்பதில் ஏற்கனவே 10 நிமிடங்கள் என்று இருக்கும், அதை 1 நிமிடம் என்று மாற்றிக் கொள்ளுங்கள். இப்போது ஓகே கொடுத்து விடுங்கள். 



அவ்வளவு தான் உங்கள் டாகுமென்ட் இனி ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒரு முறை தானாகவே Save ஆகி விடும். 
-- 
    
                 
                   S.PARTHIBAN

                                                                                                      
 

ஜிமெயிலில் Undo Time Limit- ஐ அதிகரிப்பது எப்படி?



ஜிமெயிலில் உள்ள பல முக்கிய வசதிகளில் ஒன்று Undo. ஒரு மின்னஞ்சலில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது எதையேனும் சேர்க்காமல் விட்டு இருந்தாலோ உடனடியாக அது செல்வதை நிறுத்தி மறுபடி எடிட் செய்ய இது பயன்படுகிறது. அதே போல ஒரு மின்னஞ்சலை தவறுதலாக நீக்கி விட்டாலும் இதன் மூலம் மீட்க முடியும். இதன் Time limit - ஐ எப்படி அதிகரிப்பது என்று பார்ப்போம். 

ஜிமெயில் Default ஆக 10 நொடிகளுக்கு இந்த Undo வசதியை காண்பிக்கும். இது போதவில்லை என்று நினைப்பவர்களும் இதை செய்யலாம். 

1. முதலில் உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்குள் நுழைந்து கொள்ளுங்கள். 

2. இப்போது Settings என்பதன் மீது கிளிக் செய்யுங்கள்.



3. இப்போது General Tab - இல் “Undo Send” என்ற பகுதிக்கு வரவும். அதில் Undo வசதி Enable ஆகி இருக்கவில்லை என்றால் செய்யவும். ஏற்கனவே Enable ஆகி இருந்தால் அதில் உங்களுக்கு எவ்வளவு நொடிகள் காட்டுகிறதோ அதை நீங்கள் அதிகரிக்க விரும்பினால் அதிகரிக்கலாம். 

அதிகபட்சமாக 30 நொடிகள் இருக்கும். அதையே வைத்துக் கொள்ள விரும்பினால் 30 என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.


4. இப்போது "Save Settings" கொடுத்து Save செய்து விடுங்கள். 

5. இப்போது நீங்கள் அனுப்பிய மெயில், நீக்கிய மெயில், Type செய்து பாதியில் Discard செய்த மெயில் என அனைத்துக்கும் Undo வசதி 30 நொடிகள் வரை இருக்கும். மூன்றும் கீழே படத்தில் உள்ளது. 




-- 
    
                 
                   S.PARTHIBAN

                                                                                                      
 

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget