கண்டுபிடிக்கப்பட்ட மென்பொருள்கள் அனைத்துமே நமக்கு பயன்படும் என்பது இல்லை, எல்லோருக்கும் ஏதாவது ஒரு சில மென்பொருள்களோடு வேலை முடிந்துவிடும், ஒரு சிலருக்கோ வேறு வேறு ரூபங்களில் புதிய புதிய மென்பொருள்களின் தேவை இருந்துகொண்டே இருக்கும், என்றாவது ஒருநாள் பயன்படுத்தப்படும் மென்பொருள்களை தேடிப்பிடித்து வாங்கி கணினிக்குள் அடைத்துவைப்பது என்பது கணினிக்கு பளு, அதுவே தேவைக்கு உபயோகிக்கும் வகையில் ஒரு கிளிக்கில் ஓப்பனாகக்கூடிய, இடத்தை அதிகம் பிடிக்காததாக இருந்தால் நல்லதுதானே.
இன்று மிகப்பெரிய மென்பொருள்கள் பலவும் போன்சாய் மரங்களைப்போல சுருங்கி போர்ட்டபிள் மென்பொருள்களாக உலா வந்து கொண்டிருக்கின்றன.இவை யுஎஸ்பி டிரைவுகளில் பதிந்து வைத்து எளிதில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை, தேவை கருதி கணினியிலும் பதிந்து பயன்படுத்தலாம்,
இதன் மூலம் இரண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும், முதலாவது ஒரு நிறுவனத்தின் பழைய அல்லது புதிய பதிப்பு மென்பொருளை விரும்பி பயன்படுத்துபவர்கள் அதே நிறுவனத்தின் முந்தைய அல்லது புதிய பதிப்பின் போர்ட்டபிளை வைத்துக்கொள்ளலாம், (எதற்காக என்றால் விண்டோஸ் ஆபிஸ் 97.2003. எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் புதிய விண்டோஸ் 2007 ல் உருவாக்கப்பட்ட கோப்புகளை படிக்க முடியாது, அச்சமயத்தில் உங்களிடம் ஓப்பன் ஆபிஸ் மென்பொருளின் போர்ட்டபிள் இருந்தால் அதில் எளிதாக ஓப்பன் செய்து சேவ்ஏஸ் செய்து ஆபிஸ் 97.2003 க்கு ஏற்றதாக மாற்றிக்கொள்ளமுடியும்)
அடுத்தது தினம் ஒரு இடத்திற்கு பயணிப்பவர்களுக்கு லேப்டாப் இல்லாத சூழலில் போர்ட்டபிள் மென்பொருள்கள் பதிந்த யுஎஸ்பி டிரைவ்களை பயன்படுத்தி எந்த ஒரு பிரௌசிங் சென்டரிலும் அல்லது நண்பர்களின் கணினிகளிலும் இன்ஸ்டால் செய்யாமல் சிறிது நேரம் பயன்படுத்தி நம்முடைய வேலையை எளிதாக முடித்துக்கொள்ளமுடியும். அந்த வகையில் தற்போது முன்னணியில் உள்ள மென்பொருள்கள் பலவும் அனுமதி பெற்றும். பெறாமலும் என்று இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன, இவை உங்களுக்கும் பயன்படக்கூடும் என்பதற்காகவே இந்த பதிவு,
(எச்சரிக்கை அனுமதியில்லாத மென்பொருள்களை வைரஸ் சோதனை செய்து பயன்படுத்தவும், மால்வேர். ஆட்வேர். ட்ரோஜான் ஹார்ஸ் போன்ற வைரஸ்கள் இருக்கக்கூடும்)
அப்படிப்பட்ட போர்ட்டபிள் மென்பொருகள் கி்டைக்கக்கூடிய தளங்களின் பட்டியல்
Open Source Portable Software's:
http://www.portablefreeware.com
http://portable-applications.blog.com/
http://www.lupopensuite.com
http://en.wikipedia.org/wiki/List_of_portable_software
தேவையான மென்பொருள்களை தேர்ந்தெடுத்து ஒரே கோப்பாக யுஎஸ்பியில் /கணினியில் இன்ஸ்டால் செய்ய
www.liberkey.com
Portable Games:
http://en.wikipedia.org/wiki/List_of_portable_computer_games
http://noportable.blogspot.com
http://portableappz.blogspot.com/
No comments:
Post a Comment