APOLLOPARTHIBAN: September 2012

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Wednesday, September 26, 2012

உங்களது கணனி திரை Automatic Screen Refresh ஆகும்படி செய்வதற்கு



உங்களது கணனியில் ஏதாவதொரு மாற்றத்தை செய்த பின்னர், கணனி திரை தானாகவே Refresh(Automatic Screen Refresh) ஆகும் படி செய்து கொள்ளலாம்.இதற்கு முதலில் Start Menu-வில் சென்று RUN என்பதில் regedit என்று கொடுக்க வேண்டும்.
 
தற்போது உங்களுக்கு Registry Editor என்ற விண்டோ ஓபன் ஆகியிருக்கும்.
 
இதில் கீழே உள்ளது போன்று Update வரை செல்லவும்.
 
HKEY_LOCAL_MACHINESystemCurrentControlSetControlUpdateMode
 
சென்ற பின் வலது பக்கத்தில் உள்ள DWORD என்பதை கிளிக் செய்து, அதில் உள்ள Data Value என்பதில் 1 இற்கும் 5 இற்கும் இடையில் விரும்பிய இலக்கத்தை கொடுத்து கணனியை ஒருமுறை Restart செய்யவும்.
 
இனிமேல் கணனியில் ஏதேனும் மாற்றம் செய்தால் தன்னிச்சையாகவே கணனி திரையானது Refresh ஆகும்.
-- 
    
                 
                   S.PARTHIBAN

                                                                                                      
 

Sunday, September 23, 2012

பாஸ்வேர்ட் கொடுக்காமல் உங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்த Access கொடுப்பது எப்படி?


ஜிமெயில் ஆனது ஒரு வெறும் மெயில் அனுப்புதல், பெறுதல் என்ற வசதிகளை தாண்டியும் நிறைய வசதிகளை தருகிறது. சில நேரங்களில் ஒரு நிறுவனம், அமைப்பு போன்றவற்றுக்கு ஜிமெயில் மூலம் மின்னஞ்சல் கணக்கு வைத்திருக்கும் போது அதை ஒருவர் மட்டும் கண்காணிக்க முடியாத நிலை வரலாம். அப்போது இன்னும் பலருக்கு கணக்கின்  பாஸ்வேர்ட் போன்றவற்றை தந்தால் தான் அவர்கள் பயன்படுத்த முடியும். ஆனால்  அது பாதுகாப்பு இல்லை என்று சிலர் நினைப்பது உண்டு. இதுவே  பாஸ்வேர்ட் எதுவும் கொடுக்காமல் குறிப்பிட்ட சிலர் உங்கள் கணக்கை Access செய்ய அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும் அல்லவா? 

இதை ஜிமெயில் மூலம் செய்ய முடியும். இதன் மிகப் பெரிய பலன் நீங்கள் Access கொடுக்கும் நபருக்கு உங்கள் கணக்கின் பாஸ்வேர்ட் தெரியாது. செட்டிங்க்ஸ் எதையும் மாற்ற இயலாது, சாட் செய்ய இயலாது. மாறாக அந்த கணக்கிற்கு வரும் மின்னஞ்சல்களை படிக்க முடியும், படித்ததை நீக்க முடியும். உங்கள் கணக்கில் இருந்து மின்னஞ்சல் அனுப்ப முடியும். இதை செய்வது எப்படி என்று பார்ப்போம். 

1. முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். Settings பகுதிக்கு வரவும். 


2. வரும் பகுதியில் "Accounts and Import" என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் "Grant access to your account" என்பதற்கு வரவும். அதில் "Add another account" என்பதை கிளிக் செய்யுங்கள். 


3. இப்போது ஒரு புதிய விண்டோ ஓபன் ஆகி மின்னஞ்சல் முகவரி கேட்கும். யாருக்கு Access தருகிறீர்களோ அவர் மின்னஞ்சல் முகவரி தந்து விடவும். அடுத்த பக்கத்தில் "Send Email to Grand Access" என்பதை கொடுத்து விடவும்.

இப்போது உங்கள் நண்பரிடம் சொல்லி அவருக்கு வந்துள்ள மின்னஞ்சலை Accept செய்ய சொல்ல வேண்டும். மின்னஞ்சல் கீழே உள்ளது போல இருக்கும்.


இதை கிளிக் செய்த அரை மணி நேரத்தில் Access வசதி கிடைத்து விடும். Access பெற்ற நபர், அவர் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து வலது மேல் மூலையில் அவர் பெயர் மீது கிளிக் செய்தால் அதற்கு கீழே Access பெற்ற மின்னஞ்சல் கணக்குக்கு செல்வதற்கான வழி இருக்கும். 



இதில் இரண்டாவதாக மின்னஞ்சல் முகவரி உடன் Delegated என்று உள்ளது தான் Access கிடைத்துள்ள மின்னஞ்சல் முகவரி. இதை கிளிக் செய்தால் அவர் உங்கள் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து விடலாம். பாஸ்வேர்ட் தேவை இல்லை.

4. உங்கள் கணக்கில் இருந்து அவர் மின்னஞ்சல் அனுப்பும் போது, அதை பெறுபவருக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி உடன், அவரது மின்னஞ்சல் முவரியும் சேர்ந்து செல்லும்.


மேலே படத்தில் From, Sent By என்று இரு பகுதிகள் இருப்பதை காணலாம். இதன் மூலம் அவர் மின்னஞ்சல் கணக்கை தவறாக கையாள முடியாது.

இதில் ஜிமெயில் கணக்கு உள்ள இன்னொரு நண்பரை மட்டுமே சேர்க்க முடியும். யாஹூ, ஹாட்மெயில் மற்றும் இதர எதையும் பயன்படுத்தும் நண்பர்களையும் சேர்க்க முடியாது.

இப்போது உங்கள் மின்னஞ்சல் கணக்கில் "You have granted access to your account toxxxxxxx @gmail.com. This notice will end in 7 days." என்று இருக்கும். இதைப் பற்றிய கவலை வேண்டாம்.  

Friday, September 14, 2012

புக்மார்க் செய்திட சுருக்க வழி


இணையத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் தளத்திற்கு அடிக்கடி செல்ல வேண்டி அதனை புக்மார்க் செய்திட விரும்புகிறீர்கள். என்ன செய்கிறீர்கள்?

கர்சரை புக்மார்க் (Bookmark) என்பதில் கொண்டு சென்று கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், புக்மார்க் திஸ் பேஜ் (Bookmark this page) என்பதனைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். பின்னர், கிடைக்கும் சிறிய கட்டத்தில் அதற்கான பெயரை அமைத்து என்டர் தட்டி வெளியேறுகிறீர்கள்.

இதற்குப் பதிலாக கண்ட்ரோல் + டி (Ctrl+D)அழுத்துங்கள். உடன் உங்களுக்கு புக்மார்க்கிற்கான பெயர் அமைக்கும் கட்டம் கிடைக்கும்.

ஒவ்வொரு பிரவுசரிலும் என்ன ஷார்ட் கட் கீ எனக் கேட்கிறீர்களா? பயர்பாக்ஸ், குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஆப்பரா மற்றும் சபாரி பிரவுசர் என அனைத்திலும் இதே ஷார்ட் கட் கீ தொகுப்புதான் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு சிலர் கேட்கலாம்? எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் Ctrl+B இருக்கலாமே என்று. ஆனால் இந்த ஷார்ட் கட் கீ Bold அமைக்க அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களில் பயன்படுத்த என ஒதுக்கப்பட்டுவிட்டதால், இங்கு Ctrl+D பயன்படுத்தப்படுகிறது.

குரோம் பிரவுசரில் Ctrl+Shift+D என ஷார்ட்கட் கீ கொடுத்தால், புக்மார்க் அமைப்பதில் இன்னும் சில நகாசு வேலைகளை மேற்கொள்ளலாம்.

தளத்தினை புக்மார்க் செய்து, தகவல்களை எடிட் செய்திடலாம்.

பயர்பாக்ஸ் பிரவுசரில், இந்த கீகளை அழுத்தினால், திறந்திருக்கும் அனைத்து டேப்களில் உள்ள தளங்களும் புக்மார்க் செய்யப்படும்.

RECYCLER வைரஸ் அழிக்க முடிவில்லையா



கணினியில் செருகியதும் RECYCLER\S-5-3-42-2819952290 என்று எச்சரிக்கை வருகிறது. தட்டகமும் ஒழுங்காக வேலை செய்யவில்லை.
இதற்கு காரணம் Trojan எனும் அழிவியாகும். இதற்கு காரணம் Trojanஎனும் அழிவியாகும். இந்த அழிவியின் பெயர் WORM_DOWNAD. நீங்கள் என்ன செய்தாலும் அதை அழிக்க முடியாது. USB குறுந்தட்டகங்கள் மூலமாகப் பரவுகிறது. ஒன்றை அழித்தால் இன்னொன்று பிறக்கும். அதை அழித்தால் இன்னும் ஒன்று வரும். கடைசி வரை அழிக்கவே முடியாது. வேரோடு அழித்தால்தான் முடியும். வழி இருக்கிறது.
அதற்கு இங்கு கிளிக் நிரலியைப் பெற்றுக் கொள்ளுங்கள். கட்டணம் தர வேண்டியது இல்லைLow Speed Download என்பதைச் சொடுக்கிப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். உங்கள் பிரச்னை தீரும்.
-- 
    
                 
                   S.PARTHIBAN

                                                                                                      
 

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget