APOLLOPARTHIBAN: விண்டோஸ் XP/விஸ்டா/7 : Error Reporting ஐ தவிர்க்க....

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Wednesday, May 16, 2012

விண்டோஸ் XP/விஸ்டா/7 : Error Reporting ஐ தவிர்க்க....



விண்டோஸ் XP/விஸ்டா/7 இயங்குதளங்களை பயன்படுத்தி வரும்பொழுது, ஒரு சில சமயங்களில், Error Reporting அறிவிப்பு உங்களுக்கு அலுப்பை தரலாம். Windows (app name) has stopped working திரையும், விண்டோஸ் XP யில் Send , Don't send திரையும் வந்து உங்களை டென்ஷன் ஆக்கலாம்.


மற்றும்


இந்த பிழைச்செய்தியை விண்டோஸ் XP யில் எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம். My Computer - ஐ வலது கிளிக் செய்து properties செல்லவும். அங்கு Advanced tab -ஐ கிளிக் செய்து அதில் உள்ள  error reporting பொத்தானை அழுத்தி, திறக்கும் Error Reporting வசனப் பெட்டியில்  ' Disable error reporting ஐ தேர்வு செய்து OK கொடுக்கவும்.
விண்டோஸ்  விஸ்டாவில், Control Panel சென்று, முதலில் Classic View விற்கு மாற்றிக் கொள்ளுங்கள். பிறகு, Problem Reports and Solutions  ஐ  க்ளிக் செய்யுங்கள். 

அடுத்து திறக்கும் Problem Reports and Solutions திரையில், இடது புற பேனில் உள்ள Change Settings link ஐ க்ளிக் செய்து, 
அடுத்த திரையில், Advanced settings லிங்கை க்ளிக் செய்து  Advanced settings for problem reporting என்பதற்கு கீழாக உள்ள Off ரேடியோ பட்டனை க்ளிக் செய்து, OK கொடுங்கள்.  
 
இந்த பிழைச் செய்தியை விண்டோஸ் ஏழு இயங்குதளத்தில் நீக்க, Start menu வில் சர்ச் பாக்ஸில் problem reporting settings என டைப் செய்து, மேலே தோன்றும் Choose how to report problems லிங்கை  க்ளிக் செய்து கொள்ளுங்கள். 

அடுத்து திறக்கும் விண்டோவில்,
Never check for solutions ஐ தேர்வு செய்து, OK பட்டனை க்ளிக் செய்து கொள்ளுங்கள். 

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget