APOLLOPARTHIBAN: June 2012

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Saturday, June 30, 2012

MS Office 2010 Save செய்த File ஐ MS Office2003 இல் Open செய்வது எப்படி?


கடந்தவொரு அலசல்கள்1000 இன் பதிப்பிலேMS Word இல் தயாரித்த ஆவணமொன்றுக்கு எவ்வாறு கடவுச்சொல் இட்டு பாதுகாத்தல்என்பது பற்றி அலசியிருந்தோம். இப்பதிப்பினூடாக MS Office 2007 / 2010போன்றவற்றில் சேமித்த File ஒன்றினை எவ்வாறு MS Office 2003 இல் Open செய்வது என்பது பற்றிப் பார்ப்போம்.

இதற்கு நீங்கள் முதலிலே My Computer ஐ Open செய்து அங்கு Tools ஐ கிளிக் செய்து Folder Options ஐத் திறந்து அதிலே VIEW என்ற Tap ஐ கிளிக் செய்யவும்.



இப்போ இதிலே “Hide Extensions for Known File Types” என்றதில் தெரிவு செய்யப்பட்டிருந்தால் அதனை நீக்கவும் [Un-checked].


இப்போ Open செய்யவேண்டிய File இனுடைய File Name ஐ  “ .Docx ”என்பதிலிருந்து “ .Doc “ என்றவாறாக மாற்றியபின் File ஐ MS Office2003 இல் திறந்துகொள்ளுங்கள்.

இப்போ MS Office 2007 / 2010 இல் சேமித்த File ஆனது MS Office2003 இல் திறக்கக்கூடியதாய் இருக்கும். மீண்டும் இதே பிரச்சனை ஏற்படாதிருக்க இப்போ திறந்து வைத்துள்ள File ஐ Save As என்பதைக் கொடுத்து Save Type Asஎன்பதில் “ Word 97-2003 Document “ ஐத் தெரிவுசெய்தபின் சேமித்துக் கொள்ளவும்.


சுலபமாக அப்டேட் செய்வது எப்படி கூகுள் குரோமின் புதிய வெர்சன்



chrome logo

கூகுளின் இணைய உலவியான கூகுள் குரோம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து குறைந்த கால கட்டத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று உள்ளது. உலகம் முழுவதும் சுமார் 360 மில்லியன் பயணிகள் குரோம் உலவியை பயன்படுத்துகின்றனர். இந்த அபார வளர்ச்சிக்கு எளிமையும், பிரவுசிங் வேகமும் தான் முக்கிய காரணம். மேலும் கூகுள் குரோமில் இருந்த மேலும் சில பிழைகளை நீக்கி புதிய குரோம் வெர்சனை வெளியிட்டு உள்ளது கூகுள் நிறுவனம்.

சாதரணமாக கூகுள் குரோம் வெளியிட்ட இரண்டு நாட்களுக்குள் அனைவருக்கும் தானாக அப்டேட் ஆகிவிடும். அப்படி டவுன்லோட் ஆகவில்லை என்றாலும் கவலை இல்லை சுலபமாக குரோம் உலவியை டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதற்க்காக எங்கும் செல்ல வேண்டியதில்லை எதையும் டவுன்லோட் செய்ய தேவையில்லை ஒரு சுலபமான வழி உள்ளது.

குரோம் உலவியில் ஓபன் செய்து வலது ஓரத்தில் உள்ள ஸ்பேனர் போன்ற ஐகானை கிளிக் செய்யவும். உங்களுக்கு ஒரு மெனு ஓபன் ஆகும் அதில் உள்ள About Google Chrome என்பதை கிளிக் செய்யவும்.


About Google Chrome என்பதை கிளிக் செய்தவுடன் ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகி குரோமின் புதிய வெர்சன் தானாகவே இன்ஸ்டால் ஆக தொடங்கும். ஒரு சில நிமிடங்களில் உங்கள் குரோம் உலவி அப்டேட் ஆகி கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உள்ள Relaunch என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களின் குரோம் உலவி reload புதிய வெர்சன் அப்டேட் ஆகிவிடும். இதை உறுதி செய்ய மறுபடியும் About Google Chrome பகுதிக்கு சென்றால் கீழே இருப்பதை போல விண்டோ வரும். 


இது போன்று சுலபமாக உங்களின் குரோம் இணைய உலவியை அப்டேட் செய்து கொள்ளலாம். 

இந்த முறை பல பேருக்கு தெரிந்திருக்கும் தெரியாத சில நண்பர்களுக்காக இந்த பதிவு.
-- 
    
                 
                   S.PARTHIBAN

                                                                                                      
 

Friday, June 22, 2012

Computer Start செய்யும் போது பிரச்சனையா ?


உங்கள் கம்ப்யூட்டர்  இயங்க  தொடங்குகையில் ஏதேனும் புதிய பிரச்னை ஏற்படுகிறதா? வழக்கத்தைக் காட்டிலும் தாமதாகத் தயாராகிறதா? இது உங்கள் கம்ப்யூட்டர் தொடங்குகையில் ஸ்டார்ட் அப் மூலம் தயார் நிலையில் வைக்கும் புரோகிராம்களினால் ஏற்படுவது. உங்களை அறியாமல் இன்ஸ்டால் செய்திடும் புரோகிராம்கள் பல தொடக்கத்திலேயே தயாராகும்படி அமைக்கப்பட்டிருக்கலாம். அத்தகைய புரோகிராம்கள் இப்போது உங்களுக்கு தேவையில்லாமல் இருக்கலாம்.


எனவே உங்களுக்கு எந்த புரோகிராம்கள் தேவை என்று பார்த்து அவற்றை மட்டும் இயங்கும்படி செலக்டிவ் ஸ்டார்ட் அப் தயார் செய்திடலாம். அதற்கான வழியினை விண்டோஸ் தருகிறது. அதனை இங்கு காண்போம்

start up slow for your pc

1.ஸ்டார்ட் பட்டன் அழுத்தி ரன் விண்டோவினைப் பெறவும்.

2.இந்த விண்டோவில் “msconfig” என டைப் செய்திடவும்.

3.கிடைக்கும் விண்டோவில் General” என்ற டேபில் கிளிக் செய்திடவும்.

4.இதில் “Selective Startup” என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

5.இதில் பல பிரிவுகள் சிறிய கட்டங்களுடன் இருக்கும். இந்த டிக் அடையாளங்களை எடுத்துவிடவும்.

6.முதல் கட்டத்தில் மட்டும் டிக் அடையாளத்தை ஏற்படுத்தி ரீ பூட் செய்திடவும்.

7.பின் மீண்டும் அடுத்ததில் மட்டும் டிக் அடையாளம் ஏற்படுத்தி இதே போல் ரீ பூட் செய்திடவும்.

வரிசையாக இவ்வாறு செயல்படுகையில் பிரச்னை இருக்கும் புரோகிராம் உங்களுக்குத் தெரியவரும். அது உங்களுக்கு வேண்டுமா என்று பார்க்கவும். இப்படியே தேவயற்ற புரோகிராம்களுக்கு எதிரே உள்ள டிக் அடையாளங்களை எடுத்துவிட்டு தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்து பூட் செய்திடவும்.

இனி எந்த சிரமமுமின்றி விண்டோஸ் இயங்கத் தொடங்கும். தேவையில்லாமல் உங்கள் ராம் மெமரியும் வீணாகாது.இதை ஒவ்வொன்றாக செய்வது நேரம் எடுக்கும் செயல் என்று நீங்கள் நினைத்தால் பாதி பாதியாக தேர்ந்தெடுத்து ரீபூட் செய்திடலாம். பின் எந்த பாதியில் பிரச்னை உள்ளது என்று பார்த்து அதில் ஒவ்வொன்றாக இறங்கலாம். இது போல ஸ்டார்ட் அப் புரோகிராம்களை சுத்தம் செய்வது ஷட் டவுண் செய்வதில் உள்ள பிரச்னைகளையும் தீர்த்துவிடும்.


-- 

Sunday, June 17, 2012

போட்டோஷாப் டூல்களை கையாள...

புகைப்படங்களை வைத்து பல வேலைகள் செய்யும் நமக்கு போட்டோஷாப் மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும் இப்படி பயனுள்ளதாக இருக்கும் போட்டோஷாப் மென்பொருளில் உள்ள ஒவ்வொரு டூலையும் ( Photoshop Tool) எப்படி வேலை செய்கிறது என்பதை சொல்ல ஒரு தளம் உள்ளது
புகைப்படங்களை எடிட் செய்வதில் போட்டோஷாப் மென்பொருளுக்கு நிகர் போட்டோஷாப் மென்பொருள் தான் என்று சொல்லும் அளவிற்கு புகைப்படங்களை வைத்து எல்லாவிதமான வேலைகளும் எளிதாக செய்யலாம்.போட்டோஷாப்-ல் இருக்கும் ஒவ்வொரு டூலும் என்ன வேலை செய்கிறது என்பதை கூற ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://simplephotoshop.com/photoshop_tools/

இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும் போட்டோஷாப்-ல் எந்த டூலைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை சொடுக்கினால் போதும் அந்த டூலின் பயன் என்ன என்பது முதல் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் அதற்கான Short Cut key என்ன என்பது வரை அத்தனையும் விரிவாக எடுத்துக் கூறுகிறது.போட்டோஷாப் மென்பொருளை கற்றுக்கொள்வது கடினம்
என்றும் சில மாதங்கள் வரை ஆகலாம் என்று நினைக்கும் அனைவரும் ஒவ்வொரு டூலையும் சொடுக்கி அதைப்பற்றி தெரிந்து கொண்டு போட்டோஷாப் பயன்படுத்தினாலே அனைவரும் போட்டோஷாப்-ல் திறமையுள்ளவர்களாக மாறலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு போட்டோஷாப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Thursday, June 14, 2012

கணினியில் பைல்களை(FILE) தானாகவே சேமிக்கும் மென்பொருள்




உங்கள்  கணினியில் நீங்கள் ஏதாவது முக்கியமான பணிகள்  செய்து கொண்டிருக்கும்  போது திடிரென  மின்தடை அல்லது  வேறுகாரணங்களால் உங்களால் அந்த பைல்களை  சேமிக்க முடியாமல் போகலாம் அவ்வாறு நடக்கும் சந்தர்ப்பத்தில்  பயன்படும் SOFTWARE ஒன்றை பற்றி இந்த பதிவில்   பார்க்கப் போகிறோம். பலர் என்னிடம் கேட்ட இந்த சாப்ட்வேரை அனைவரும் அறிந்து கொள்ள இங்கே பதிவிடுகின்றேன்.பைல்களை இசை,புகைப்படம்,டாக்குமெண்ட் என இதில் மூன்றாக பிரித்துள்ளார்கள்.நாம் செய்யும் வேலையில் எதனை சேமிக்க வேண்டுமோ அதனை சேமித்துக்கொள்ளலாம்.



 மேலும் சேமிப்பதை பென்டிரைவ்,நமது கம்யூட்டரிலேயே வேறு டிரைவ்,எக்ஸ்டர்னல் ஹார்ட் டிரைவ் என சேமிக்கலாம். மாதிரி தொகுப்பாவும்(TRAIL SOFTWARE) 9 எம.பி. கெர்ள்ளளவும் கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய     இங்கு கிளிக்       செய்யவும். இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

AUTO SAVE YOUR FILES
இதில நீங்கள் எந்த பைலை சேமிக்க விரும்புகின்றீர்களோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

AUTO SAVE YOUR FILES
சேமிக்க விரும்பும் இடத்தையும் தேர்வு செய்யுங்கள். நான் டி -டிரைவை தேர்வு செய்துள்ளேன்.



நீங்கள் சேமிக்க விரும்பும் நாட்களை தேர்வு செய்யலாம். அதைப்போல உங்களுக்கு தொடர்ந்து சேமிக்க வேண்டுமா - தினந்தோறும் - வாரம் ஒரு முறை - மாதம் ஒரு முறை - கம்யூட்டர் தொடங்கும் போது - ஒவவோரு பணி முடிக்கும் போது என எவ்வாறு வேண்டுமோ அவ்வாறு செட் செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
AUTO SAVE YOUR FILES
தேவைப்படும் சமயம் பயன் படுத்தவும் - நிறுத்தி வைக்கவும் - டெலிட் செய்யவும் இதில வசதி உள்ளது.

-- 

Tuesday, June 12, 2012

பாதுகாப்பாக உலவ Private Browsing...

private browsing

இணையத்தில் உலவும்போது பாதுகாப்பில்லை எனில் அவ்வளவுதான். எளிதாக நமது தகவல்களைத் திருடி, மற்றவர்கள் தவறாக பயன்படுத்த முயற்சிக்க கூடும்.

உங்களுடைய சொந்தக் கணினி அல்லாது, மற்றவர்கள் கணினி அல்லது இன்டர்நெட் பிரவுசிங் சென்டர்களில் நீங்கள் Browsing செய்யும்போது எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. இதற்குத்தான் முன்னணி பிரௌசர்களாக Internet Explorer, Google Chrome, Fire Fox போன்ற வலைஉலவிகளில் ஓர் அற்புதமான வசதியைக் கொடுத்திருக்கின்றனர்.
இந்த வசதியின் பெயர்தான் Private Browsing

இந்த வசதியைப் பயன்படுத்தி இணையத்தில் உலவும்போது உங்களுடைய தகவல்கள், உலவியிலோ அல்லது உங்கள் கணினியிலோ சேமிக்கப்படாது.இதனால் மற்றவர்கள் உங்கள் தகவல்களை எளிதாக திருடி எடுத்துப் பயன்படுத்த முடியாது.

இந்த வசதியை ஒவ்வொரு வலைஉலவியிலும் பெறுவது எப்படி எனப் பார்ப்போம்.

நீங்கள் IE (Internet Explorer) உபயோகிப்பாளரென்றால்..

உங்கள் பிரௌசரின் Tools மெனுவில் சென்று In Private Browsing என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது ctrl+Shift+P என்பதை சொடுக்கிச் செல்லவும்.

அவ்வாறு செல்லும்போது உங்களுடைய பிரௌசரின் விண்டோ இவ்வாறு மாறிவிடும். இனி நீங்கள் வழக்கம்போல் வலையில் பாதுகாப்பாக உலவலாம்.


நீங்கள் Mozila Firefox-உபயோகிப்பாளரென்றால்..

உங்கள் Firefox Browser-ல் Tools மெனுவில் Private Browsing என்பதை கிளிக் செய்யுங்கள். அல்லது Ctrl+shift+P என்பதைச் சொடுக்குங்கள்.

Private Browsing in Firefox

பிறகு தோன்றும் விண்டோவில் பாதுகாப்பாக உலவுங்கள்..

நீங்கள் Google Chrome உபயோகிப்பாளரென்றால்..
வலது மேல்மூளையில் Spanner போன்ற Settings பட்டனைக் கிளிக் செய்து அதில்
New incognito window என்பதை கிளிக் செய்து பயன்படுத்தலாம். அல்லது இதற்கான Short cut key யான Ctrl+Shift+N என்பதை அழுத்தியும் பயன்படுத்தலாம். 
Private Browsing in Google chrome
இவ்வாறு தற்போது புதியதாக வெளிந்துள்ள Safari, Opera போன்ற பல இணைய உலவிகளிலும் Private Browsing வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனர். நன்றி நண்பர்களே..!!!

-- 

Thursday, June 7, 2012

Mail.com - எளிய பெயரில் ஈமெயில் ஐடி உருவாக்க...

மின்னஞ்சல் முகவரி என்பது நமக்கு எப்போதும் இன்றியமையாத ஒன்றாகும். ஜிமெயில் மூலம் இப்போது புதியதாக மின்னஞ்சல் கணக்கு தொடங்க நினைக்கும் ஒருவரால், எண்களை பயன்படுத்தாமல் மின்னஞ்சல் முகவரி உருவாக்க இயலாது(ஆங்கில வார்த்தை கொண்டு). எளிய வகையில் ஈமெயில் முகவரி உருவாக்க உதவும் mail.com பற்றி இன்றைய பதிவில் காண்போம். 

Mail.com ஆனது ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் போன்றவற்றுக்கு அடுத்து மிக அதிகம் பேர் பயன்படுத்தும் ஒரு மின்னஞ்சல் கணக்கு. இதன் மிகப் பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், வழக்கமாக மின்னஞ்சல் முகவரி உருவாக்கும் போது gmail.com, yahoo.com, ymail.com என்று குறிப்பிட்ட சிலவற்றை மட்டுமே டொமைன் ஆக தரும், ஆனால் mail.com 200 டொமைன்களை தருகின்றது. இதன் மூலம் உங்களுக்கு தேவையான ஒன்றை, மிகக் குறைந்த எழுத்துக்களை பயன்படுத்தி உருவாக்கி விடலாம். உதராணம் 


இது போல மொத்தம் 200 வகையான டொமைன்களில் உங்கள் மின்னஞ்சல் கணக்கை நீங்கள் உருவாக்கலாம். இதன் மூலம் புதியதாக தொடர்பு கொள்ள விரும்பும் நண்பர்களுக்கு நீங்கள் எளிதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை சொல்லி விடலாம்.

இதில் நான் உருவாக்கிய இரண்டு மின்னஞ்சல் முகவரிகள்:


  • prabu[at]playful.com
  • prabu[at]iname.com

இதன் மற்ற சில சிறப்பம்சங்கள்: 

1. Unlimited ஈமெயில் Storage
2. Spam Filter மற்றும் வைரஸ் மின்னஞ்சல்களில் இருந்து பாதுகாப்பு
3. பயன்படுத்த எளிய அமைப்பு 
4.எளிதில் நினைவில் கொள்ளும் வண்ணம் மின்னஞ்சல் முகவரி உருவாக்கும் வசதி. 
5. அலுவலக பயன்பாடுகளுக்கு உகந்த ஒன்று. 


இதன் குறைபாடு: 

1. ஈமெயில் Forwarding என்ற ஒரு வசதி இலவசமாக இல்லை. 


-- 
    
                 
                   S.PARTHIBAN

                                                                                                      
 

Monday, June 4, 2012

கணினியில் CD Drive காட்டப்படாமல் இருந்தால். இதனை எப்படி சரி செய்வது?

கணினியில் நாம் தேவையான கோப்புகளை நகலெடுக்க, படம் பார்க்க போன்ற வேலைகளை செய்ய உதவியாக இருப்பது CD/DVD டிரைவ் ஆகும்.  சில நேரங்களில் CD டிரைவில் CDயை போட்டு பார்த்தால் கணினியின் my computerல் CD டிரைவ் காணாமல் போயிருக்கும். நமது CD டிரைவ் நல்ல நிலையில் இருந்தும் நன்றாக வெளியில் வந்து உள்ளே செல்கிற நிலை இருப்பினும் அதற்குரிய டிரைவ் கணினியில் காட்டப்படாமல் இருக்கலாம். இதனை எப்படி சரி செய்வது?

1.  முதலில் Device Managerல் CD டிரைவ் இயல்பு நிலையில் இருக்கிறதா என்று பாருங்கள். Devise Manager செல்ல desktopல்  உள்ள my computer ஐகானை வலது கிளிக் செய்து manage மெனுவை கிளிக் செய்யவும். அதில் இடதுபக்கமுள்ள பகுதியில் Devise Manager என்பதை கிளிக் செய்தால் வலது பக்கம் நமது கணினியில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளின் பட்டியல் தெரியும். அதில் CD/DVD Rom devices என்பது enable ஆக உள்ளதா என பார்க்க வேண்டும்.
2.  உங்கள் கணினியின் CPUவில் CD/DVD டிரைவை இணைக்கும் cable சரியாக உள்ளதா என சரிபார்க்கவும்.
3.  மேற்கண்டவை சரியாக இருந்தும் கணினியில் CD டிரைவ் தெரியவில்லை என்றால் Registerல் ஒரு மாற்றம் செய்வதன் மூலம் காணாமல் போன CD டிரைவை மீட்கலாம்.
Start->Run சென்று regedit என்று type செய்து எண்டர் செய்யவும். இப்போது கணினியின் Registry Editor திறக்கப்படும். பின்னர் கீழ் உள்ள keyஐ கண்டுபிடிக்கவும். நீங்கள் தேர்வு செய்த Key சரியானது தானா என்பதை உறுதி செய்ய அதன் வலதுபக்கம் CD/DVD டிரைவ் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Class\{4D36E965-E325-11CE-BFC1-08002BE10318}
இந்த keyஐ கிளிக் செய்து வலது பக்கம் உள்ள பட்டியலில் UpperFilters, LowerFilters ஆகிய Subkeyகள் இருந்தால் இரண்டையும் அழித்துவிடவும். அழிப்பதற்கு வலது கிளிக் செய்து Delete கொடுக்கவும். ஒரு முறை கணினியை  Restart செய்து விட்டு பார்க்கவும்.

Saturday, June 2, 2012

How to increase Internet Speed?

hi friends if you are internet very slow,can u increase internet speed please follow the simple step
follow the step:-
go to desktop->My computer-(right click on)->properties->then go HARDWARE tab->Device manager-> now u see a window of Device manager
then go to Ports->Communication Port(double click on it and Open).
after open u can see a Communication Port properties.
go the Port Setting:----
and now increase ur "Bits per second" to 128000.
and "Flow control" change 2 Hardware.
apply and see the result

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget