APOLLOPARTHIBAN: சுலபமாக அப்டேட் செய்வது எப்படி கூகுள் குரோமின் புதிய வெர்சன்

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Saturday, June 30, 2012

சுலபமாக அப்டேட் செய்வது எப்படி கூகுள் குரோமின் புதிய வெர்சன்



chrome logo

கூகுளின் இணைய உலவியான கூகுள் குரோம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து குறைந்த கால கட்டத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று உள்ளது. உலகம் முழுவதும் சுமார் 360 மில்லியன் பயணிகள் குரோம் உலவியை பயன்படுத்துகின்றனர். இந்த அபார வளர்ச்சிக்கு எளிமையும், பிரவுசிங் வேகமும் தான் முக்கிய காரணம். மேலும் கூகுள் குரோமில் இருந்த மேலும் சில பிழைகளை நீக்கி புதிய குரோம் வெர்சனை வெளியிட்டு உள்ளது கூகுள் நிறுவனம்.

சாதரணமாக கூகுள் குரோம் வெளியிட்ட இரண்டு நாட்களுக்குள் அனைவருக்கும் தானாக அப்டேட் ஆகிவிடும். அப்படி டவுன்லோட் ஆகவில்லை என்றாலும் கவலை இல்லை சுலபமாக குரோம் உலவியை டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதற்க்காக எங்கும் செல்ல வேண்டியதில்லை எதையும் டவுன்லோட் செய்ய தேவையில்லை ஒரு சுலபமான வழி உள்ளது.

குரோம் உலவியில் ஓபன் செய்து வலது ஓரத்தில் உள்ள ஸ்பேனர் போன்ற ஐகானை கிளிக் செய்யவும். உங்களுக்கு ஒரு மெனு ஓபன் ஆகும் அதில் உள்ள About Google Chrome என்பதை கிளிக் செய்யவும்.


About Google Chrome என்பதை கிளிக் செய்தவுடன் ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகி குரோமின் புதிய வெர்சன் தானாகவே இன்ஸ்டால் ஆக தொடங்கும். ஒரு சில நிமிடங்களில் உங்கள் குரோம் உலவி அப்டேட் ஆகி கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உள்ள Relaunch என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களின் குரோம் உலவி reload புதிய வெர்சன் அப்டேட் ஆகிவிடும். இதை உறுதி செய்ய மறுபடியும் About Google Chrome பகுதிக்கு சென்றால் கீழே இருப்பதை போல விண்டோ வரும். 


இது போன்று சுலபமாக உங்களின் குரோம் இணைய உலவியை அப்டேட் செய்து கொள்ளலாம். 

இந்த முறை பல பேருக்கு தெரிந்திருக்கும் தெரியாத சில நண்பர்களுக்காக இந்த பதிவு.
-- 
    
                 
                   S.PARTHIBAN

                                                                                                      
 

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget