APOLLOPARTHIBAN: Computer Start செய்யும் போது பிரச்சனையா ?

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Friday, June 22, 2012

Computer Start செய்யும் போது பிரச்சனையா ?


உங்கள் கம்ப்யூட்டர்  இயங்க  தொடங்குகையில் ஏதேனும் புதிய பிரச்னை ஏற்படுகிறதா? வழக்கத்தைக் காட்டிலும் தாமதாகத் தயாராகிறதா? இது உங்கள் கம்ப்யூட்டர் தொடங்குகையில் ஸ்டார்ட் அப் மூலம் தயார் நிலையில் வைக்கும் புரோகிராம்களினால் ஏற்படுவது. உங்களை அறியாமல் இன்ஸ்டால் செய்திடும் புரோகிராம்கள் பல தொடக்கத்திலேயே தயாராகும்படி அமைக்கப்பட்டிருக்கலாம். அத்தகைய புரோகிராம்கள் இப்போது உங்களுக்கு தேவையில்லாமல் இருக்கலாம்.


எனவே உங்களுக்கு எந்த புரோகிராம்கள் தேவை என்று பார்த்து அவற்றை மட்டும் இயங்கும்படி செலக்டிவ் ஸ்டார்ட் அப் தயார் செய்திடலாம். அதற்கான வழியினை விண்டோஸ் தருகிறது. அதனை இங்கு காண்போம்

start up slow for your pc

1.ஸ்டார்ட் பட்டன் அழுத்தி ரன் விண்டோவினைப் பெறவும்.

2.இந்த விண்டோவில் “msconfig” என டைப் செய்திடவும்.

3.கிடைக்கும் விண்டோவில் General” என்ற டேபில் கிளிக் செய்திடவும்.

4.இதில் “Selective Startup” என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

5.இதில் பல பிரிவுகள் சிறிய கட்டங்களுடன் இருக்கும். இந்த டிக் அடையாளங்களை எடுத்துவிடவும்.

6.முதல் கட்டத்தில் மட்டும் டிக் அடையாளத்தை ஏற்படுத்தி ரீ பூட் செய்திடவும்.

7.பின் மீண்டும் அடுத்ததில் மட்டும் டிக் அடையாளம் ஏற்படுத்தி இதே போல் ரீ பூட் செய்திடவும்.

வரிசையாக இவ்வாறு செயல்படுகையில் பிரச்னை இருக்கும் புரோகிராம் உங்களுக்குத் தெரியவரும். அது உங்களுக்கு வேண்டுமா என்று பார்க்கவும். இப்படியே தேவயற்ற புரோகிராம்களுக்கு எதிரே உள்ள டிக் அடையாளங்களை எடுத்துவிட்டு தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்து பூட் செய்திடவும்.

இனி எந்த சிரமமுமின்றி விண்டோஸ் இயங்கத் தொடங்கும். தேவையில்லாமல் உங்கள் ராம் மெமரியும் வீணாகாது.இதை ஒவ்வொன்றாக செய்வது நேரம் எடுக்கும் செயல் என்று நீங்கள் நினைத்தால் பாதி பாதியாக தேர்ந்தெடுத்து ரீபூட் செய்திடலாம். பின் எந்த பாதியில் பிரச்னை உள்ளது என்று பார்த்து அதில் ஒவ்வொன்றாக இறங்கலாம். இது போல ஸ்டார்ட் அப் புரோகிராம்களை சுத்தம் செய்வது ஷட் டவுண் செய்வதில் உள்ள பிரச்னைகளையும் தீர்த்துவிடும்.


-- 

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget