APOLLOPARTHIBAN: ரீ சைக்கிள் பின் அளவை மாற்ற

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Monday, July 2, 2012

ரீ சைக்கிள் பின் அளவை மாற்ற

விண்டோஸ் சிஸ்டத்துடன் வரும் ரீ சைக்கிள் பின் செட் செய்த அளவிலேயே கிடைக்கிறது. சிஸ்டத்தில் அது ஹார்ட் டிஸ்க் அளவில் ஏறத்தாழ 10 சதவீதமாக உள்ளது இந்த இடம் அதற்கென்று ஒதுக்கப்படுகிறது. நீங்கள் விரும்பினால் இதனை குறைக்கலாம். அல்லது அதிகப்படுத்தலாம். ஆனால் சற்று கூடுதலாக இருப்பது நல்லதுதான். ஏனென்றால் நம்மை அறியாமலேயே பெரிய பைல் ஒன்றை அழித்துவிட்டால் ரீ சைக்கிள் பின்னில் அதிக இடம் இருந்தால் தானே அது அங்கு சென்று அமரும். பின்னால் நாம் மீண்டும் எடுத்துப்பயன்படுத்த உதவும்.
இதனை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். ரீசைக்கிள் பின் ஐகானில் முதலில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் ப்ராபர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். திரையின் நடுவில் உள்ள ஸ்லைடர் பாரினை அட்ஐஸ்ட் செய்தால் ரீ சைக்கிள்ம பின்னின் அளவு உயரும் அல்லது குறையும். இதனை முடிவு செய்த பின் ஒ.கே கிளிக் செய்து வெளியேறினால் நீங்கள் அமைத்தப்படி அளவில் ரீசைக்கிள் பின் அமையும். இந்த புதிய அளவு மீண்டும் கம்ப்யூட்டரை பூட் செய்திடும் போது மட்டுமே அமலுக்கு வரும்.

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget