APOLLOPARTHIBAN: பெல் நிறுவனத்தில் தொழில் பயிற்சி- உதவித்தொகையும் உண்டு

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Monday, July 11, 2011

பெல் நிறுவனத்தில் தொழில் பயிற்சி- உதவித்தொகையும் உண்டு

Image

சென்னை : ராணிப்பேட்டை ‘பெல்’ நிறுவனத்தில், உதவித் தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமான பாரத மிகுமின் நிறுவனத்தின் (பெல்) ராணிப்பேட்டை தொழிலகத்தில் ஐடிஐ, தொழிற்கல்வி (வொகேஷனல்) பட்டயப் படிப்பு (டிப்ளமோ இன்ஜினியரிங்) மற்றும் பொறியியல் பட்டப் படிப்பு (பி.இ., பி.டெக்.,) கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு தகுதியானவர்களிடம் இருந்து கணினி வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையோர் கணினி ஆன்லைன் மூலம் லீttஜீ://ணீஜீஜீ.தீலீமீறீக்ஷீஜீt.நீஷீ.வீஸீ என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் விண்ணப்பித்த பதிவுச் சான்றுடன் உரிய ஆவணங்களை இணைத்து, வரும் 25ம் தேதிக்குள் சேருமாறு அனுப்ப வேண்டும். சாதாரண தபால் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
மேலும், பாடப்பிரிவு, தொழில் பிரிவு, காலி இடங்கள், உதவித்தொகை மற்றும் இதர விவரங்களையும் மேற்கண்ட வலைதளத்தில் காணலாம்.

பிற விளக்கங்களை பெற 04172&284325/ 284626 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். ஐடிஐயில் 249 இடமும், தொழிற்கல்வி பிரிவில் 65 இடமும், டிப்பள்மோ இன்ஜினியரிங் பிரிவில் 125 இடமும், பொறியியல் படிப்பில் 62 இடங்களும் என்று மொத்தம் 501 இடங்கள் உள்ளன.

பயிற்சி காலத்தில் ஒராண்டுக்கு மாதம் ஒன்றுக்கு உதவித்தொகை ஐடிஐ, தொழில்கல்வி பிரிவினருக்கு ஸி 3 ஆயிரமும், டிப்ளமோ இன்ஜினியரிங் பிரிவுக்கு ஸி 4 ஆயிரமும், பொறியியல் படிப்புக்கு ஸி 6 ஆயிரமும் வழங்கப்படும். சலுகை கட்டணத்தில் உணவு கிடைக்கும். தங்கும் விடுதி வசதி இல்லை. தொழில்படிப்பு மதிப்பெண் அடிப்படையில் 1:3 அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர்

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget