APOLLOPARTHIBAN: நம்மிடம் இருக்கும் புகைப்படங்களைக் கொண்டு எப்படி கேலரி உருவாக்குவது ?

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Tuesday, July 5, 2011

நம்மிடம் இருக்கும் புகைப்படங்களைக் கொண்டு எப்படி கேலரி உருவாக்குவது ?

இணையதளங்களில் ஒளிப்படங்களை அட்டவணை போல காட்சியளிப்பதை Image Gallery
என்று சொல்வார்கள். இதனை Flash மென்பொருள் கொண்டு உருவாக்குவார்கள்.


இதில் செய்யப்படும் படங்கள் அழகாகவும் பலவித 3டி எபெக்ட்களுடனும் உருவாக்குவதால் இணையதளங்களில் பிளாஷ் கேலரி கண்ணைக் கவரும் வகைகளில் இருக்கும்.
நாம் பிளாஷ் மென்பொருளை அறியாமல் இருப்பின் நம்மிடம் இருக்கும் ஒளிப்படங்களைக் கொண்டு எப்படி கேலரி உருவாக்குவது? இந்த சிக்கல்களைப் போக்கும் எளிமையான மென்பொருள் தான் CU3OX ஆகும்.
இந்த மென்பொருள் மூலம் நம்மிடம் இருக்கும் ஒளிப்படங்களைக் கொண்டு எளிமையான முறையில் விரைவாக ஒளிப்பட கேலரிகளை உருவாக்கலாம். இதனை வைத்து நமது இணையதளங்களில் படங்களை பேனர் விளம்பரமாகவும் ஸ்லைட் ஷோ போன்று பொதிந்து வைத்துக் காட்டலாம்.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இணையத் தொழில்நுட்பங்களான FLASH, HTML,CSS, JavaScript போன்றவற்றின் அறிவு இல்லாமலேயே 3D வகையிலான கேலரிகளை உருவாக்குவது தான்.
இந்த மென்பொருளில் படங்கள் நகர்வது, எபெக்டுகள், ஒவ்வொரு படத்திற்கான நேரம் போன்றவற்றை எளிதாக அமைக்கலாம். இதில் நமக்கு வேண்டிய ஒளிப்படங்களை இந்த மென்பொருளுக்கு இழுத்து விட்டுக் கொள்ள முடியும். கேலரி உருவாக்கி முடிந்தவுடன் இணையதளத்தில் இதற்கான கோடிங்கை கொப்பி செய்து பதிவேற்றிக் கொள்ளலாம்.
இந்த மென்பொருளை நிறுவியதும் இதில் Add பட்டனைக் கொடுத்து நமக்கு வேண்டிய புகைப்படங்களை சேர்க்க வேண்டும். பின்னர் படங்களுக்கு எபெக்ட் கொடுக்க Effects என்பதில் தேர்வு செய்யவும். பின்னர் ஒவ்வொரு படத்திற்கான தலைப்பும் குறிப்பும் கொடுக்க Headline மற்றும் Description என்பதில் தட்டச்சிட்டு Publish என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
இதன் பின்னர் கேலரிக்கான அமைப்புகள் தோன்றும். இதில் General என்ற டேபில் கேலரிக்கான தலைப்பு, வாட்டர்மார்க், லோகோ, எதாவது ஆடியோ இணைக்க போன்ற அமைப்புகளைக் கொடுக்கலாம்.
அடுத்த Images டேபில் ஒவ்வொரு படங்களின் அளவு, சுழற்றும் எபெக்ட் மற்றும் ஒவ்வொரு படம் வருவதற்கான இடைவெளி நேரங்கள் போன்றவற்றைக் கொடுக்கலாம்.
கடைசியில் Publish டேபில் கேலரி எங்கே சேமிக்கப்பட வேண்டும் என்பதைத் தேர்வு செய்யவும். இல்லை இணையதளத்திற்கு பதிவேற்ற வேண்டும் எனில் FTP சர்வர் முகவரியை அளித்து விட்டு Publish பட்டனைக் கிளிக் செய்தால் போதும்.
சில விநாடிகளில் இமேஜ் கேலரி உருவாக்கப்படும். எந்தவொரு இணையத் தொழில்நுட்பமும் அறியாமல் எளிதாக ஃபிளாஷ் இமேஜ் கேலரிகளை உருவாக்க இந்த மென்பொருள் உதவியாக இருக்கும்.
இமேஜ் கேலரியை உருவாக்க இங்கே கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget