பைல்களைச் சுருக்கி அனுப்ப நாம் பல்வேறு வகையான ஸிப் புரோகிராம்களை கையாள்கிறோம். ஆனால் இவை எல்லாமே ஏதாவது ஒரு வகையில் சில நேரங்களில் கரப்ட் ஆகிவிடுகின்றன. நாம் நம்பி எடுத்துச் செல்லும் ஸிப் பைல்கள் சரியாகத் திறக்கப்படாவிட்டால் நமக்கு எரிச்சல் ஏற்படுகிறது. ஸிப் பைல்கள் கரப்ட் ஆவதற்குப் பல காரணங்கள் உள்ளன. பைல்களை படிப்பதில் எர்ரர்கள் ஏற்படலாம்; சி.டி.யில் ஸ்கிராட்ச் இருப்பதால் பைல் படிக்கப்படாமல் இருக்க-லாம்; அல்லது சிஸ்டம் கிராஷ் ஆகி இருந்தாலும் இது போல ஏற்படலாம்.
இப்படிப்பட்ட வேளைகளில் தான் சிக்கல்-களைத் தீர்ப்பதற்கென்றுObject Fix Zip என்னும் புரோகிராம் வந்துள்ளது. இந்த இலவச புரோகிராம் ஸிப் பைல்களில் ஏற்படும் பிரச்னைகளில் 90% வரை சரி செய்து தருகிறது. ஸிப் ஆர்கிவ் எனப்படும் சுருக்கப்பட்ட பைல்கள் இருக்கும் விஷயத்தில் சி.ஆர்.சி. எர்ரர்கள் இருந்தாலும் சரி செய்கிறது.
கரப்ட் ஆன ஸிப் பைல்களை சரி செய்திடுகயில் அவற்றிற்கு புதிய ஆர்கிவ் ஒன்றை உருவாக்கிக் கொள்கிறது. இதனைப் பயன்படுத்துவதும் எளிது. நீங்கள் எந்த ஸிப் ஆர்கிவ் பைலைச் சரி செய்திட வேண்டுமோ அதனை இதன் ஆர்கிவ்வில் இணைத்துவிட வேண்டியதுதான். அதன் பின் அந்த பைலை டேட்டா சரியாக உள்ளதா என்று சோதிக்க தேர்ந்தெடுக்கலாம்; தவறுகளைச் சரி செய்து புதிய ஆர்கிவ் கொண்டு சென்று அங்கிருந்து பைல்களை விரிக்கலாம்.
விரிக்கப்படும் புதிய பைல்கள் குறிப்பிடும் ஹார்ட் டிரைவ் பார்ட்டிஷனில் பதியப்படும். இலவசமாகக் கிடைக்கும் இந்த பைலின் அளவு 1178 கே பி தான்.
கிடைக்கும் இணைய தள முகவரி :http://www.objectrescue.com/products/objectfixzip/
No comments:
Post a Comment