APOLLOPARTHIBAN: August 2012

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Friday, August 24, 2012

My Computer -ல் காணாமல் போன USB Drive ஐ மீட்டெடுக்க


Windows XP -ல் மை கம்ப்யூட்டரில் USB ட்ரைவை காணவில்லையா? My Computer -ல் USB Drive அல்லது External Drive, Memory Card ஐ காண்பிக்க வில்லை எனில், உங்கள் இயங்குதளம் உங்கள் ட்ரைவ் லெட்டரை, ஏற்கனவே உபயோகத்தில் உள்ள ட்ரைவ் லெட்டரை கொண்டு மாற்றியிருந்தால் இப்படி நிகழ வாய்ப்பு இருக்கிறது.
மறுபடியும் தேவையான ட்ரைவ் லெட்டரைக் கொண்டு ரீ நேம் செய்வதன் மூலமாக இதனை சரி செய்யலாம்.
My Computer -ல் வலது கிளிக் செய்து Manage என்பதை கிளிக் செய்யுங்கள். 

Computer Management திரையில் Disk Mangement என்பதை தேர்வு செய்யுங்கள்.

இப்பொழுது திரையில் உங்கள் கணினியில் உள்ள அனைத்து ட்ரைவ்களையும் அதனுடைய Healthy status ஐயும் காணலாம்.
இதில் உள்ள SONY என்ற USB Drive இன் ட்ரைவ் லெட்டரை மாற்ற, அந்த லிஸ்டில் உள்ள அந்த குறிப்பிட்ட ட்ரைவில் வலது கிளிக் செய்து Context Menu வில் “Change Drive Letters and Paths…” என்பதை கிளிக் செய்யுங்கள்.
இனி திறக்கும் டயலாக் பாக்ஸில் Change பட்டனை கிளிக் செய்யுங்கள்.

இனி ட்ராப் டவுன் லிஸ்டில் இருந்து தேவையான ட்ரைவ் லெட்டரை தேர்வு செய்யுங்கள்.

பிறகு வரும் கன்பர்மேஷன் திரையில் Yes கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவுதான்.
-- 
    
                 
                   S.PARTHIBAN

                                                                                                      
 

Wednesday, August 22, 2012

Nokia Phone இன் மறந்து போன Security Code இனை கண்டுபிடிக்க..



Nokia Phone இல் நாம் ஏற்கனவே கொடுத்த Security Code, ஒரு சில வேலைகளில் நமக்கு மறந்து போய் இருக்கலாம்.அதை எப்படி கண்டுபிடிப்பது என்று, இன்று பார்ப்போம்.



தேவையானது


01.உங்களுடைய phone இன் Data Cable


02.NSS என்ற மென்பொருள் - இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


03.Nokia PC Suite - உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.இல்லாதவர்கள் இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


Nokia PC Suite இனை Exit பன்னிவிட்டு , NSS என்ற மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.


உங்களுடைய Phone இனை, Data Cable மூலம் இணைக்கும் போது வரும் தெரிவுகளில் PC Suite எனபதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.


அடுத்து படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்









உங்களுடைய Phone பற்றிய விபரங்களை கணினியில் ஒரு இடத்தில் சேமித்து வைத்து இருக்கும் (C:\Program Files\NSS\Backup\pm) அங்கு சென்று





Notepad இனை Open செய்து கொள்ளுங்கள். (Start > Run > Type Notepad)

பிறகு, PM File இனை Notepad இல் Drag and Drop செய்து விடுங்கள்




.

Notepad இல் ஆக கடைசி பகுதிக்கு வாருங்கள். 





அங்கு இருக்கும் 20 இலக்கங்களில் , எது கடைசியில் பத்து Zero களில் முடிகிறது என்று தேடி பாருங்கள் (31323334350000000000)



5=31323334350000000000






அதற்கு பக்கத்தில் இருக்கும் இலக்கங்களை பாருங்கள்.ஒவ்வொரு இலக்கத்துடனனும் 3 என்ற இலக்கம் சேர்ந்தே இருக்கும்.அதை அழித்து விட்டு பாருங்கள்.உங்களுடைய Phone இன் Security Code தெரிய வரும்.

5=31323334350000000000
5=123450000000000



என்னுடைய Phone இன் Security Code 12345 ஆகும்.










NSS என்ற மென்பொருள் (Nokia Phone இன் Life Timer இனை Zero ஆக்கிய மற்றும் Security Code இனை Reset செய்த Software ) Nokia வின் BB5 model இற்கு மாத்திரமே வேலை செய்யும்.ஆகவே உங்களுடைய Phone , இந்த BB5 model list இல் இருக்கிறதா என்று பாருங்கள்


Nokia 3109 Classic
Nokia 3110 Classic
Nokia 3250 
Nokia 3500 Classic
Nokia 5200
Nokia 5300 XpressMusic 
Nokia 5500 Sport
Nokia 5700 XpressMusic
Nokia 6110 Navigator
Nokia 6120 Classic
Nokia 6121 Classic
Nokia 6125 
Nokia 6126
Nokia 6131 
Nokia 6131 NFC
Nokia 6133
Nokia 6133
Nokia 6151 
Nokia 6233 
Nokia 6234 
Nokia 6270
Nokia 6280
Nokia 6288 
Nokia 6290 
Nokia 6300
Nokia 6500 Slide
Nokia 6555 
Nokia 6630 
Nokia 6631 (NM850iG)
Nokia 6680 
Nokia 6681 
Nokia 6682 
Nokia 7370 
Nokia 7373
Nokia 7390
Nokia 7500 Prism 
Nokia 7900 Prism
Nokia 8600 Luna
Nokia E50 
Nokia E51
Nokia E60
Nokia E61 
Nokia E61i
Nokia E62 
Nokia E65 
Nokia E70
Nokia E90 Communicator
Nokia N70
Nokia N71 
Nokia N72
Nokia N73 
Nokia N75 
Nokia N76 
Nokia N77 
Nokia N80 
Nokia N81 
Nokia N82
Nokia N90 
Nokia N91 
Nokia N92 
Nokia N93 
Nokia N93i 
Nokia N95 
Nokia N95 8GB
Nokia N95 NAM 
Nokia N95
Nokia NM705i

உங்கள் கணனியின் வேகத்தை இரட்டிப்பாக்கலாம்!




உங்கள் கணனியின் இயக்க வேகத்தை அதிகரிக்க பல மென்பொருட்கள் இருக்கின்றன. இவை பெரும்பாலும் கணனியின் தேவையற்ற கோப்புக்களை நீக்குவனவாகவே இருக்கின்றன.
ஆனால், இந்த மென்பொருள் அவற்றில் இருந்து வேறுபட்டு. கணனியின் வேகத்தை வேறுவிதமாக அதிகரிக்கிறது. அதாவது நீங்கள் ஒரு மென்பொருளை இயக்குகுறீர்கள் என்றால். இவ் மென்பொருள் உடனே அந்த மென்பொருள் ஆரம்பிக்கத்தேவையான உட் கோப்புக்களை மட்டும் விரைவாக இயக்கி உடனடியாக மென்பொருளை இயக்கப்பார்வைக்கு கொண்டுவருகிறது. ( நீங்கள் மென்பொருளை இயக்க ஆரம்பிக்கும் நேரத்தில் ஏனைய உட் கோபுக்களையும் இயக்கி விடுகிறது இந்த மென்பொருள்.) எனவே, மிகக்குறைந்த நேரத்தில் உங்கள் மென்பொருட்களையோ, விளையாட்டுக்களையோ இயக்கிக்கொள்ள முடியும்.
ஒரு முறை தரவிறக்கி பயன்படுத்திப்பாருங்களேன்.
அளவு : 6.2 Mb
தரவிறக்க :  : Download now! 

                                                                                                      
 

Monday, August 20, 2012

GMail மின்னஞ்சல்களை வன் தட்டில் Backup எடுக்க

Gmail கணக்கை வைத்திருப்பவர்களில் பலரும் விரும்புவது, தங்களது மின்னஞ்சல்களை வன் தட்டில் ஏதாவது ஒரு ஃபோல்டரில் Backup எடுத்து வைத்து கொள்வது. இப்படி பேக்கப் எடுத்து வைத்துக் கொள்வதன் மூலமாக, எப்பொழுதாவது நமது மின்னஞ்சல் கணக்கு ஹேக் செய்யப்படும் பொழுது, பழைய மின்னஞ்சல்களும், தொடர்புகளையாவது இழக்காமல் இருக்க முடியும.



இந்த பணியை நமக்கு எளிமையாக்குகிறது GMail Backup எனும் இலவச மென்பொருள் கருவி! (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) இந்த கருவியை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொண்ட பிறகு, இதனை திறந்து கொண்டு, உங்கள் ஜிமெயில் பயனர் பெயர், கடவு சொல் மற்றும் உங்கள் வன் தட்டில் பேக்கப் எடுத்து வைக்க வேண்டிய ஃபோல்டர் விவரம், எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை பேக்கப் எடுக்க வேண்டும் என்ற விவரம் ஆகியவற்றை கொடுத்து,கீழே உள்ள Backup பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.


                            



இப்பொழுது அந்த குறிப்பிட்ட ஜிமெயில் கணக்கில் உள்ள மின்னஞ்சல்கள் தரவிறக்கம் செய்யப்படுவதை கவனிக்கலாம்.அனைத்தும் முடிந்த பிறகு, நீங்கள் குறிப்பிட்டிருந்த ஃபோல்டரில் அனைத்து மின்னஞ்சல்களும் பேக்கப் ஆகியிருப்பதை பார்க்கலாம்.இனி இவற்றை இரட்டை க்ளிக் செய்து திறக்கையில், எம்.எஸ் அவுட்லுக்கில் திறக்கும்.அட்டாச்மெண்டுகளும் பேக்கப் எடுக்கப்படுகிறது. மேலும், ஒரு வேளை இப்படி பேக்கப் எடுத்த மின்னஞ்சல்களை உங்கள் ஜிமெயில் கணக்கில் டெலிட் செய்திருந்தால், இந்த பேக்கப்பிலிருந்து இதே கருவியைக் கொண்டு ரீஸ்டோர் செய்து கொள்ளமுடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.


                                                     GMail Backup தரவிறக்க


ooVoo - முகம் பார்த்து பேச உதவும் மென்பொருள்



இணையத்தில் இன்று புத்தம் புதிய டிஜிட்டல் மென்பொருள் வந்துகொண்டே இருக்கின்றன. இதில் வீடியோ சாட்டிங் என்பது தற்போது பிரபலம் ஆகிக் கொண்டிருக்கிறது. கணினியிலிருந்து மொபைல் வரைக்கும் நேரடியாகவே பார்த்து பேசுவது அனைவருக்கும் புடித்த விசயமாகும். இதில் தொட்டுப் பார்ப்பது மட்டும் தான் முடியாது.  ஆனால் மற்ற முக பாவங்களை நாம் கவனித்து உரையாடலாம். அத்தகைய வாய்ப்பை இந்த சாப்ட்வேர் ஏற்படுத்தி தருகிறது. இந்த இலவச மென்பொருளின் பெயர்
 ஓ..வூ... ! ஆங்கிலத்தில் OOVOO..! பெயரே வித்தியாசமாக இருக்கிறது. இதன் பயன்பாடும் அப்படித்தான்..!!

இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:1.56MB
-- 
    


                                                                                                      
 

Sunday, August 19, 2012

பேஸ்புக்கி​ற்குரிய அல்பங்களை தரவிறக்கம் செய்ய உதவும் குரோம் நீட்சி

Download FB album: பேஸ்புக்கி​ற்குரிய

பிரபல சமூக இணையத்தளமான பேஸ்புக் தளத்தில் பயன்படுத்துவதற்கு தேவையான வெவ்வேறு அல்பங்களையும், படங்களையும் தரவிறக்கம் செய்வற்கு கூகுள் குரோம் நீட்சி ஒன்று பயன்படுகின்றது.
குறித்த நீட்சியை நிறுவிய பின்னர் சில கிளிக் மூலம் ஒன்றிற்கு மேற்பட்ட அல்பங்கள் அல்லது படக்கோப்புக்களை ஒரே நேரத்தில் தரவிறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்வரும் படிமுறைகளை செயற்படுத்துவதன் மூலம் படங்களை தரவிறக்கம் செய்ய முடியும்.
1. குறித்த குரோம் நீட்சியின் உதவியுடன் பேஸ்புக் அல்பம் காணப்படும் இணையப்பக்கத்திற்கு சென்று அங்கு காணப்படும் "Download FB photos" எனும் ஐகானை கிளிக் செய்யவும்.
2. தொடர்ந்து தென்படும் படங்களினைத் தெரிவு செய்து "Ctrl+S" கீக்களை பிரயோகித்து கணனியில் சேமிக்கும் போது, குறித்த படங்கள் அடங்கிய போல்டர் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கும்.

Friday, August 17, 2012

1000 வகையான இலவச antivirus மென்பொருட்கள் ஒரே இடத்தில் !!!



scan_with_virus_software_shopsஉங்கள் கணினிப் பாதுகாப்பிற்கான தேவையான மென்பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கொட்டிக் கிடக்கிறது..!!

உண்மைதாங்க. நமது software shops வலைப்பூவில் கிட்டதட்ட அனைத்து வகை இலவச மென்பொருட்களைப்பற்றியும் எழுதி வருகிறோம்..

இன்னும் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் வந்துக்கொண்டே இருக்கும்.


இதில் இருக்கும் ஒவ்வொரு anti virus software-ம் பயனுள்ளதாக இருக்கிறது.

anti virus software  மட்டுமல்ல.. கணினிக்குத் தேவையான அனைத்து மென்பொருட்களும் இங்கு கிடைக்கிறது.

எனவேதான் இத்தளத்தைப் பற்றிய உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். ஒவ்வொரு சாப்ட்வேரைப் பற்றியும், தலைப்பின் கீழே எளிய முறையில் விளக்கியிருக்கிறார்கள்.

இப்போது பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைத்தாலும், தரத்திற்கேற்றவாறு, தரவரிசைப்படுத்தி, வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இம் மென்பொருட்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.  .. தளத்திற்கு சென்று பாருங்கள் உங்களுக்குத் தேவாயனதை (free software) அள்ளிக்கொள்ளுங்கள்... அதுவும் இலவசமாக..!!

தளத்திற்கான சுட்டி. http://www.scanwith.com/

Monday, August 13, 2012

வீடியோ பைல்களுக்கு பாஸ்வேர்ட் கொடுக்க



பெரும்பாலும் நாம் டாக்குமெண்ட்டுகளைதான் பாஸ்வேர்ட்கொடுத்து பாதுகாப்போம். ஆனால இந்த சின்ன சாப்ட்வேரில நாம் வீடியோ பைல்களையும் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கலாம். 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.

தேவையான வீடியோவினை தேர்வு செய்யுங்கள்.



இதில் உள்ள DRM  டேபினை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் எந்த வீடியோவினை பாஸ்வேர்ட் கொடுக்க விரும்புகின்றீர்களோ அந்த வீடியோவினையும் அதனை சேமிக்கும் இடத்தினையும் தேர்வு செய்யுங்கள். கீழே உள்ள Password கட்டத்தில் பாஸ்வேர்டினை தட்டச்சு செய்யுங்கள்.சேவ் செய்து வெளியேறுங்கள். 

இப்போது நீங்கள் வீடியோ பைலினை திறக்க உங்களுக்கு பாஸ்வேரட் கேட்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.சரியான பாஸ்வேர்டினை தட்டச்சு செய்து ஓ.கே.தாருங்கள்.
இனி இந்த ப்ளேயரில் பாடல்கள் கேட்டு மகிழுங்கள்முக்கியமான வீடியோ பைல்களை மற்றவர்கள் பார்க்கவேண்டாம் எனவிரும்புபவர்கள் இந்த சாப்ட்வேரினை உபயோகிக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
-- 
    
                 
                   S.PARTHIBAN

                                                                                                      
 

Thursday, August 9, 2012

சென்னை மாநகர பஸ் ரூட்டை காட்டும் புதிய மொபைல் அப்ளிக்கேஷன்


A Mobile Application For MTC Information
எந்த ஒரு தொழில் நுட்பமும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெறுவது என்பது அதன் பயன்பாடுகளை பொருத்து தான் இருக்கிறது.

\அத்தகைய பயன்பாட்டுடன் இங்கே ஒரு புதிய தொழில் நுட்பம். சென்னை எம்டிசி இன்ஃபோ என்ற புதிய மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி இருக்கிறார் டி.ஸ்கந்தா என்பவர்.

இந்த புதிய அப்ளிக்கேஷனில், சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ் செல்லும் வழி தடங்கள் விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. பெங்களூர் வாசியான டி.ஸ்கந்தா என்பவர் சென்னை வந்திருந்த போது சரியான பஸ் ரூட் பற்றிய விவரங்கள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டதால் இந்த எம்டிசி பஸ் ரூட் மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி இருக்கிறார்.

இந்த அப்ளிக்கேஷனில் சென்னை மாநகர பஸ்கள் செல்லும் வழியில் இருந்து அதன் டிக்கெட் விலை முதல்கொண்டு தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ஸ்கந்தா சென்னை வந்தபோது மொழியும் தெரியாமல், சரியான பஸ் விவரமும் தெரியாமல் மிக அவதிப்பட்டதால் இப்படி ஒரு மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி இருக்கிறார். 

 இந்த சென்னை எம்டிசி இன்ஃபோ அப்ளிக்கேஷனில் பயணம் செய்ய எடுத்து கொள்ளும் நேரம் கூட கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்கந்தாவின் இந்த உபயோகமான படைப்பை ஆன்ட்ராய்டு மார்க்கெட்டில் இருந்து எளிதாக ஃப்ரீ டவுன்லோட் செய்து கொள்ள முடியும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்ட்ராய்டு புதிய மொபைல் அப்ளிக்கேஷன்களை உருவாக்கியது.

உதாரணத்திற்கு சென்னை ட்ரெய்ன்டிராய்டு மற்றும் சென்னை ட்ரெய்ன் டைம் டேபிள் மூலம் ரயில் புறப்படும் நேரத்தில் இருந்து மற்ற அனைத்து விவரங்களையும் எளிதாக பெறலாம். இது போல் பஸ் பற்றிய தகவல்களை எளிதாக பெற பெங்களூரை சேர்ந்த டி.ஸ்கந்தா என்பவர் இந்த எம்டிசி இன்ஃபோ என்ற புதிய மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி இருக்கிறார்.

Download MTC INFO for Android

Download Chennai TRAIN Application

NovaPDF Lite கட்டண மென்பொருள்

PDF File-களை உருவாக்க நிறைய மென்பொருட்கள் கிடைக்கின்றன. பெரும்பாலான இலவச மென்பொருட்கள PDF File ஒன்றை உருவாக்கும் போது நமக்கு திருப்தி தராது. இதற்கான சிறந்த மென்பொருள் தான் NovaPDF. 50$ மதிப்புள்ள இது இப்போது இலவசமாக கிடைக்கிறது. 



இதன் சிறப்பம்சங்கள் : 

  • எந்த வகையான டாக்குமென்ட்டில் இருந்தும் PDF ஆக Convert செய்ய இயலும். (i.e. DOC, XLS, PPT, PUB, DOCX, XLSX, PPTX, PUBX, HTML, TXT,...),
  • உருவாக்கும் PDF File - க்கு Password கொடுக்கலாம். 
  • ஏற்கனவே உள்ள PDF File-களை Combine செய்யலாம். 
  • டாக்குமென்ட்டில் லிங்க் ஏதேனும் இருப்பின் PDF ஆக மாற்றிய பின் அவை வேலை செய்யும். 
  • பெரும்பாலான Font-களை சப்போர்ட் செய்கிறது. 
  • Microsoft® Office - இல் Add-on ஆக வேலை செய்யும். 
  • இமேஜ்/டெக்ஸ்ட் வாட்டர்மார்க் தரலாம். 
  • File Size ஏற்ற/இறக்கம் செய்யலாம். 
இதை தரவிறக்க, 

இங்கே - Download novaPDF

இலவச novaPDF Lite Registration Key பெற - Get novaPDF Lite v.7.6 for FREE!

இது செப்டெம்பர் 1 - 2012 வரை மட்டுமே. 

Wednesday, August 8, 2012

Browser Cookies என்றால் என்ன? அவை எப்படி செயல்படுகின்றன ?




Cookies என்ற வார்த்தையை நாம் அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். தொழில்நுட்பத்தோடு தொடர்பில்லாமல் உள்ள இந்த வார்த்தை நாம் பயன்படுத்தும் ப்ரௌசெர்களில் முக்கிய இடம் வகிக்கிறது. நம் பெர்சனல் கணினிகளில் Cookies இல்லாமல் நம்மால் வேலையே செய்ய முடியாது என்ற அளவுக்கு அது நமக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அதை பற்றிய விரிவான அலசல் தான் இந்தப் பதிவு. 

Cookies என்றால் என்ன? 

பொதுவாக Cookies என்பது குறிப்பிட்ட தளத்தில் இருந்து நீங்கள் பயன்படுத்தும் ப்ரௌசெர்க்கு ஒரு சிறிய டெக்ஸ்ட் பைலை அனுப்பும். அது தான் Cookie.  

என்ன இருக்கும் அதில்? 




தினமும் இணையத்தில் இயங்கும் நாம் நிறைய தளங்களை பார்ப்போம், படிப்போம். அதில் நம் தகவல்களை தருவோம்.  சில செட்டிங்க்ஸ் மாற்றுவோம், குறிப்பாக மொழி, ஒரு வீடியோ எப்படி தெரிய வேண்டும்? என்பது போன்றவை. ஒரு தளத்தில் நமக்கு விருப்பமான ஒன்றை தேடி இருப்போம், அடுத்த முறை மீண்டும் அந்த தளத்துக்கு செல்லும் போது நம்முடைய முந்தைய வருகையை நினைவில் வைத்து அது தொடர்பான செய்திகளை அடுத்த முறை நமக்கு காட்டும். இதன் மூலம் நம் வேலை எளிதாகும்.

எப்படி செயல்படுகிறது? 

இதற்கு உதாரணம் Youtube. தொடர்ந்து நீங்கள் குறிப்பிட்ட வகையான வீடியோவை பார்த்தால் அது தொடர்பான வீடியோக்களை தான் அடுத்த முறை நீங்கள் செல்லும் போதும் காட்டும். 

ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்யும் போதும் இதே நினைவூட்டல்களை நீங்கள் பார்த்திருக்கலாம். 

எந்த வெப்சைட்க்கு நீங்கள் சென்றாலும் அதில் வைரஸ் போன்ற உங்கள் கணினிக்கு பாதிப்பு தரும் எந்த ஒரு விசயத்தையும் இது சேமிக்காது, நினைவூட்டாது. இது தான் இதன் மிகப்பெரிய நன்மை.

அத்தோடு இணையத்தில் காட்டப்படும் விளம்பரங்கள் கூட இதன் அடிப்படையில் தான் இயங்குகின்றன. முக்கியமாக Google Adsense. நீங்கள் இணையத்தில் எதை தேடுகிறீர்கள் என்பதை பொறுத்தே இந்த விளம்பரங்கள் அமையும். இது ஒரு வகையில் உங்களுக்கு நன்மைதான். 

இப்போது இதன் அவசியம் தெரிந்து இருக்கும் உங்களுக்கு. இதை Allow செய்யாமல் விட்டால் ஒவ்வொரு முறையும் நீங்கள் புதிய கணினியில் இணையத்தை பயன்படுத்துவது போல இருக்கும். இதனால் முக்கியமாக உங்கள் நேரம் விரயம் ஆகும். 

பல வகையான Cookies கள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று Third-party cookie. இதை மிக எளிதாக சொல்லி விடுகிறேன். நீங்கள் இப்போது கற்போம் தளத்தை படிக்கிறீர்கள் பதிவின் மேலே ஒரு விளம்பரம் தெரிகிறது அது ad.123ad.com என்று சேமிக்கப்படும். அடுத்து பிளாக்கர் நண்பன் தளத்துக்கு செல்லும் போது ஒரு விளம்பரம் வரலாம். இப்போது அதுவும்  ad.123ad.com என்று சேமிக்கப்படும். இது தொடர் சங்கிலி போல தொடரும். இதை தான் நாம் Third-party cookie என்று நாம் சொல்கிறோம். 

மற்ற சில Cookies 

  • Session cookie - குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும். 
  • Persistent cookie - பல நாட்களுக்கு. கிட்டத்தட்ட எப்போதும். 
  • Secure cookie - பாதுகாப்பானது என்று சொல்லலாம்.[https என்று உள்ள URL களில் இது Save ஆகும்]  
  • HttpOnly cookie - இப்போதைய ப்ரௌசெர்களில் இருப்பது.
  • Supercookie -  Suffix டொமைன்கள் உடைய Cookie உதாரணம் - .co.uk, co.in
  • Zombie cookie - விடாக்கண்டன். Delete செய்தாலும் அழியாது. ஆனால் இதனால் தீமை எதுவும் இல்லை. 
இதன் நன்மைகள் மேலே சொன்னதிலேயே உங்களுக்கு தெரிந்து இருக்கும். இதனால் சில தீமைகளும் உள்ளன. 

  • குறிப்பிட்ட தளங்களுக்குள் நுழைய நீங்கள் ஜிமெயில், பேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்தும் போது செக்யூரிட்டி ரிஸ்க் அதிகம். 
  • சொந்தக் கணினி அல்லாத இடங்களில் பயன்படுத்தும் போது Cookies save ஆனால், உங்கள் தரவுகள் சேமிக்கப்படுகிறது என்று அர்த்தம். இதிலும்  செக்யூரிட்டி ரிஸ்க் அதிகம். 
  • நீங்கள் அல்லாது வேறு யாரேனும் உங்கள் கணினியை பயன்படுத்தினால் உங்கள் தரவுகளை அவரும் அறிவார். 
  • அவசியமற்ற தளங்களில் Cookies Save ஆனால் உங்கள் தகவல்கள் திருடப்படலாம். 
இது போன்ற தீமைகளை நீங்கள் தவிர்க்கும் வாய்ப்பு உங்கள் கைகளில் தான் உள்ளது. Cookies என்பது உங்கள் ப்ரௌசெரில் நீங்கள் தரும் தகவல்கள் தான். நீங்கள் கொடுக்காமல் குறிப்பிட்ட தளத்தால் எதையும் செய்ய இயலாது. எனவே இவற்றில் பாதுகாப்பாக இருப்பது நம் கைகளில் தான் உள்ளது. 

Cookies களை கையாளுவது எப்படி? 

நாம் பயன்படுத்தும் ப்ரௌசெர்களில் தான் Cookies உள்ளது என்றேன். அதை கட்டுப்படுத்தும், கையாளும் செயல்கள் நமக்கு எட்டும்படி தான் உள்ளன.  கையாளுவது என்றால் குறிப்பிட்ட தளத்தின் Cookies Save ஆவதை தடுக்கலாம், Third Party Cookies களை தடுக்கலாம். இதை செய்ய Opt-out என்ற ஒரு முறையும் உள்ளது. 

Chrome - Settings >> Show advanced settings... >> Content Settings >> Cookies 

Firefox - Tools >> Options >> Privacy >> Remove Individual Cookies 

Internet Explorer - Tools >> Internet Option >> Privacy 

Opera - Settings > Preferences > Advanced > Cookies

இவைகளில் சென்று Cookies-களை நீக்குவது, சேர்ப்பது, மாற்றம் செய்வது போன்றவற்றை செய்யலாம். இது குறித்து இன்னொரு பதிவில் விரிவாக காண்போம்.

Cookies நம் வேலையை எப்படி எளிதாக்குகிறது என வீடியோ ஆக காண :


CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget