பெரும்பாலும் நாம் டாக்குமெண்ட்டுகளைதான் பாஸ்வேர்ட்கொடுத்து பாதுகாப்போம். ஆனால இந்த சின்ன சாப்ட்வேரில நாம் வீடியோ பைல்களையும் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கலாம். 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான வீடியோவினை தேர்வு செய்யுங்கள்.
இதில் உள்ள DRM டேபினை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் எந்த வீடியோவினை பாஸ்வேர்ட் கொடுக்க விரும்புகின்றீர்களோ அந்த வீடியோவினையும் அதனை சேமிக்கும் இடத்தினையும் தேர்வு செய்யுங்கள். கீழே உள்ள Password கட்டத்தில் பாஸ்வேர்டினை தட்டச்சு செய்யுங்கள்.சேவ் செய்து வெளியேறுங்கள்.
இப்போது நீங்கள் வீடியோ பைலினை திறக்க உங்களுக்கு பாஸ்வேரட் கேட்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.சரியான பாஸ்வேர்டினை தட்டச்சு செய்து ஓ.கே.தாருங்கள்.
இனி இந்த ப்ளேயரில் பாடல்கள் கேட்டு மகிழுங்கள்முக்கியமான வீடியோ பைல்களை மற்றவர்கள் பார்க்கவேண்டாம் எனவிரும்புபவர்கள் இந்த சாப்ட்வேரினை உபயோகிக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
No comments:
Post a Comment