APOLLOPARTHIBAN: My Computer -ல் காணாமல் போன USB Drive ஐ மீட்டெடுக்க

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Friday, August 24, 2012

My Computer -ல் காணாமல் போன USB Drive ஐ மீட்டெடுக்க


Windows XP -ல் மை கம்ப்யூட்டரில் USB ட்ரைவை காணவில்லையா? My Computer -ல் USB Drive அல்லது External Drive, Memory Card ஐ காண்பிக்க வில்லை எனில், உங்கள் இயங்குதளம் உங்கள் ட்ரைவ் லெட்டரை, ஏற்கனவே உபயோகத்தில் உள்ள ட்ரைவ் லெட்டரை கொண்டு மாற்றியிருந்தால் இப்படி நிகழ வாய்ப்பு இருக்கிறது.
மறுபடியும் தேவையான ட்ரைவ் லெட்டரைக் கொண்டு ரீ நேம் செய்வதன் மூலமாக இதனை சரி செய்யலாம்.
My Computer -ல் வலது கிளிக் செய்து Manage என்பதை கிளிக் செய்யுங்கள். 

Computer Management திரையில் Disk Mangement என்பதை தேர்வு செய்யுங்கள்.

இப்பொழுது திரையில் உங்கள் கணினியில் உள்ள அனைத்து ட்ரைவ்களையும் அதனுடைய Healthy status ஐயும் காணலாம்.
இதில் உள்ள SONY என்ற USB Drive இன் ட்ரைவ் லெட்டரை மாற்ற, அந்த லிஸ்டில் உள்ள அந்த குறிப்பிட்ட ட்ரைவில் வலது கிளிக் செய்து Context Menu வில் “Change Drive Letters and Paths…” என்பதை கிளிக் செய்யுங்கள்.
இனி திறக்கும் டயலாக் பாக்ஸில் Change பட்டனை கிளிக் செய்யுங்கள்.

இனி ட்ராப் டவுன் லிஸ்டில் இருந்து தேவையான ட்ரைவ் லெட்டரை தேர்வு செய்யுங்கள்.

பிறகு வரும் கன்பர்மேஷன் திரையில் Yes கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவுதான்.
-- 
    
                 
                   S.PARTHIBAN

                                                                                                      
 

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget