சமூகவலையமைப்பான ‘பேஸ்புக்’ இன்று புதன்கிழமை வீடியோ செட்டிங் வசதியை அறிமுகம் செய்யப்படவிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்துள்ளன. ஸ்கைப் நிறுவனத்துடன் இணைந்தே பேஸ்புக் இச்சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷூக்கர் பேர்க் அண்மையில் தனது சமூகவலையமைப்பு அற்புதமான சேவை ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தார். அவரது கருத்து அச்சேவை தொடர்பில் பாரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே இத்தகவல் கசிந்துள்ளது.
‘பேஸ்புக்’ தற்போது சுமார் 750 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதுடன், ‘ஸ்கைப் ‘ 170 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளது. ’ஸ்கைப்’பை மைக்ரோசொப்ட் நிறுவனம் 8.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேமாதம் கொள்வனவு செய்திருந்தது. இதேவேளை கூகுள் நிறுவனம் அண்மையில் ‘கூகுள் +’ என்ற சமூகவலையமைப்பு ஒன்றினை அறிமுகப்படுத்தியது. இதில் வீடியோ செட்டிங் வசதி உள்ளடக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே பேஸ்புக் இவ்வசதியை தனது பாவனையாளர்களுக்கும் வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். எது எப்படியோ உலகெங்கும் இணைந்திருக்கும் முகப்புத்தக பாவனையாளர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
About Me
- apolloparthiban
- tirunelveli, tamilnadu, India
- இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.
Wednesday, July 6, 2011
‘பேஸ்புக்’ இன் வீடியோ சாட்டிங் இன்று அறிமுகம் செய்யப்படுமா..?
Subscribe to:
Post Comments (Atom)





No comments:
Post a Comment