ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் இப்ராகிம் (46) இவர் தனது வீட்டின் மாடியில் ஏராளமான புறாக்களை வளர்க்கிறார். கடந்த ஆண்டு இவரது மகன் சிறுவன் அப்துல் ரஹ்மான் ஒரு கோழி முட்டையை, புறாக்களின் முட்டைகளுடன் சேர்த்து வைத்தான். அந்த முட்டையை ஒரு புறா அடைகாத்து குஞ்சு பொறித்தது. அந்த கோழிக்குஞ்சை புறா கண்ணும், கருத்துமாக பார்த்துக்கொண்டது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த கோழிக்குஞ்சு தனியாக பிரித்து வளர்க்கப்படுகிறது. இதையடுத்து புறாக்களின் முட்டைகளுடன், கோழி முட்டைகளை வைத்து குஞ்சு பொறிக்கும் வித்தியாசமான நடைமுறை அந்த வீட்டில் தொடர்கிறது. தற்போது 2 புறாக்கள் இதுபோல் கோழி குஞ்சுகளை பொறித்து பாதுகாக்கின்றன.இப்ராகிம் கூறுகையில், “வீட்டு மாடியில் நூற்றுக்கணக்கான புறாக்களை வளர்க்கிறேன். கோழி முட்டையை புறா அடைகாப்பது வித்தியாசமாக இருந்தாலும், அதுவே எங்களது வீட்டில் நடைமுறையாக மாறிவிட்டது. அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களும் கோழி முட்டைகளை புறா மூலம் குஞ்சு பொறிப்பதற்கு தருகின்றனர். இதில் அவர்களுக்கும் ஒரு மகிழ்ச்சி’’ என்றார்
No comments:
Post a Comment