APOLLOPARTHIBAN: எடையை குறைக்கும் தயிர், எடையை கூட்டும் உருளைக்கிழங்கு ?

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Thursday, June 30, 2011

எடையை குறைக்கும் தயிர், எடையை கூட்டும் உருளைக்கிழங்கு ?


தானியங்கள், பழங்கள், சாலட்கள் உண்பவர்களை விட, "பாஸ்ட் புட்' வகைகள், பொறித்த உணவு,
இறைச்சி வகைகளை உண்போர், சற்று பருமனாக இருப்பர் என்பது தெரியும். இங்கிலாந்தில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம், பருமனாக இருப்பவர்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதன் முடிவில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. கொட்டை வகைகளால் ஏற்படும் நன்மைகளை, அவித்த உருளைக் கிழங்கு கெடுக்கிறது என்றும், தயிரை தினமும் உண்டால் உடம்பை மெலிதாக வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.


ஆய்வு: இப்பல்கலைக்கழகம், 20 ஆண்டிற்கும் மேலாக, 30 முதல் 50 வயதிற்குட்பட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆண், பெண்களிடம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டது. அவர்களது உடற்பயிற்சி, உணவு, தூக்கம் ஆகியவையும் ஆய்வில் கவனத்தில் கொள்ளப்பட்டன.



குறைவான உணவு, அதிக உடற்பயிற்சி: உடலில் கலோரி வெளியேறுவது மற்றும் வெளியிலிருந்து கலோரி உள்ளே வருவதை பொறுத்து உடலில் வளர்ச்சி மாற்றம் ஏற்படும். "குறைவான உணவு; அதிகமான உடற்பயிற்சி' என்பதை தாரக மந்திரமாக கொள்ள வேண்டும். கலோரி, உடலுக்கு முக்கியமான ஒன்று. சில உணவுகளில் அதிக அளவு கலோரி உள்ளது. அவற்றை உண்ணும்போது, உடலில் நடக்கும் வேதியல் மாற்றத்தை பொறுத்து சிலர் பருமனாகின்றனர். ""மிதமான உணவுகளை உண்ண வேண்டும். இது கலோரியின் அளவை குறைக்கும். நாம் உண்ணும் உணவில் எவ்வளவு கலோரி உள்ளது என்பதை அறியாமல் உண்பதே பருமனுக்கு காரணம்,'' என பல்கலைக்கழக ஆய்வாளர் டரியூஸ் தெரிவித்தார்.

இன்சுலினை இம்சிக்கும் உருளை: பொதுவாக, காய்கறிகள் தொடர்பான ஆய்வுகளில், உருளைக்கிழங்கு ஒத்தி இருந்தது. அன்றாடம் உணவில், உருளைக்கிழங்கை சேர்ப்பவர்கள், நான்கு ஆண்டுகளில் குறிப்பிட்ட அளவு பருமனை அடைகின்றனர். எண்ணெய்யில் பொறித்த உருளைகிழங்கு கொழுப்பை அதிகரிக்கும் என்பது ஏற்கனவே தெரிந்தது. ஆனால், அவித்த மற்றும் கூழ்ம நிலையில் உள்ள உருளைக்கிழங்கு, உடலை குண்டாக்குவதாகவும், இதற்கு காரணம் இன்சுலின் ஹார்மோனை உருளை பாதிப்பது தான் எனவும் கண்டுபிடித்துள்ளனர்.



எடையை குறைக்கும் தயிர்: தினமும் உணவில் பழங்கள், காய்கறிகள், கொட்டை வகைகளை உண்பவர்களின் உடல் எடை, காலாண்டில் அரை பவுண்ட் (0.22 கிலோ) குறையும். தவிர, உணவில் தயிர் சேர்த்துக் கொள்பவர்களின் உடல் எடை, நான்கு ஆண்டுகளில் 1 பவுண்ட் வரை குறைகிறது என்ற ஆச்சர்ய தகவலும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆகவே உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் எண்ணெய் பலகாரங்கள், உருளைகிழங்கு போன்றவற்றை தவிர்த்து, கலோரி குறைவாக உள்ள உணவுப் பொருட்களை உண்ணுங்கள். பலன் பெறுங்கள்.

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget