APOLLOPARTHIBAN: 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்யும் பெண்களின் ஆயுள் குறைய வாய்ப்பு ?

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Thursday, June 30, 2011

6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்யும் பெண்களின் ஆயுள் குறைய வாய்ப்பு ?


தினசரி 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்யும் பெண்களின் ஆயுள்
குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதர்களின் பெரும்பான்மையான வேலைகள் உட்கார்ந்த இடத்திலே செய்யும் அளவிற்கு முடங்கிவிட்டது. இவ்வாறாக வேலை செய்பவர்கள் எண்ணிக்கை உலக அளவில் பெருகி வருகிறது.



இது குறித்து, 1.23 லட்சம் பேரை கடந்த 14 ஆண்டுகளாக அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி விஞ் ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அவர்களின் உடல் ஆரோக்கிய நிலைகளையும் கண்காணித்தனர். அதில், உட்கார்ந்த நிலையில் தொடர்ந்து 6 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்பவர்கள் மற்றும் எந்தவொரு உடற்பயிற்சியும் செய்யாதவர்களுக்கு இதய நோய், நீரிழிவு, நரம்பு தளர்ச்சி, உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அவ்வாறாக தினசரி 3 மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் பெண்களைவிட, 6 மணி நேரத்துக்கு மேல் உட்காந்து இருக்கும் 40 சதவீதம் பெண்களின் ஆயுள் குறைய வாய்ப்புள்ளது. அதில் ஆண்களுக்கு 20 சதவீதம் வாய்ப்புள்ளது. உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்வதால் இளம் வயதில் இறப்பதற்கான சூழல்கூட ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget