APOLLOPARTHIBAN: தவறுதலாக அழித்து விட்டீர்களா ? (கவலை வேண்டாம்)

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Wednesday, June 29, 2011

தவறுதலாக அழித்து விட்டீர்களா ? (கவலை வேண்டாம்)



ஹாட் டிஸ்கில் அல்லது யு.எஸ்.பியில், செல்போன் மெமரி கார்டில் சேமித்து வைத்திருந்த முக்கியமான
ஒரு பைலை தவறுதலாக அழித்து விட்டீர்களா?கவலை வேண்டாம். அழித்த பைல்களை மீட்டுக் கொள்ளலாம்.

அது எப்படி சாத்தியம்? இதற்காக இரண்டு மென்பொருட்களை கீழே தருகிறேன். ஒன்று டிஸ்க் டிக்கர்(Disk Digger) இன்னொன்று ரெகுவா(Recuva) . இவை இரண்டினுடைய தொழிற்பாட்டையும் பார்ப்போம்.


1.டிஸ்க் டிக்கர் (Disk Digger)கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் மட்டுமின்றி பிளாஷ் டிரைவ், செல்போன் மெமரி, டிஜிட்டல் கேமரா மெமரி மற்றும் பிற மெமரி மீடியாக்களில் அழித்த பைல்களையும் மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.மீண்டும் பார்மட் செய்யப்பட்ட அல்லது சரியாக பார்மட் செய்யப்படாத டிஸ்க்குகளில் இருந்தும் பைல்களை மீட்டுத் தரும் என்பது கூடுதல் சிறப்பு. Disk Digger ஒரு இலவச புரோகிராம்.

டிஸ்க் டிக்கர் (Disk Digger) தரவிறக்கம் செய்ய : Download கிளிக் செய்யவும்.

2.ரெகுவா(Recuva)இந்த புரோகிராம் பயன்படுத்த எளிதானது. இது உங்களுக்கு அழிந்த பைல் குறித்து என்ன மாதிரி உதவி தேவை என இந்த புரோகிராமே கேட்டு வழி நடத்துகிறது. எடுத்துக் காட்டாக ரீசைக்கிள் பின்னிலிருந்தும் அழித்த பைல்கள் எனக்கு மீண்டும் வேண்டும் எனத் தந்த போது ஆச்சரியப்படத் தக்க வகையில் அனைத்து பைல்களும் திரும்பக் கிடைத்தன. இழந்த பைல்களை மீட்பதில் இந்த புரோகிராம் அனைத்து வகை உதவிகளையும் தருகிறது என்பதில் சந்தேகமில்லை.




No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget