APOLLOPARTHIBAN: குரோம் உலாவியில் பிளாஷ் விளம்பரங்களை தடுக்க புதிய வழி

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Thursday, June 30, 2011

குரோம் உலாவியில் பிளாஷ் விளம்பரங்களை தடுக்க புதிய வழி


கூகிள் குரோம் உலாவியில் பிளாஷ் விளம்பரங்கள் சில நேரங்களில் நமக்கு சலிப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் வண்ணம் இருக்கும் இது போன்ற பிளாஷ் விளம்பரங்களை கட்டுபடுத்த குரோம்-ல் புதிதாக வந்திருக்கும் நீட்சி உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

மிகப்பெரிய இணையதளத்திற்கு சென்றால் கூட நம்மை விடாமல் தொடரும் ஒன்று தான் பிளாஷ் விளம்பரங்கள், எதற்காக பிளாஷ் விளம்பரங்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர் என்றால் விரும்பும் வகையில் அனிமேசன் உருவாக்கி அதை சிறிய அளவிலான கோப்பாக மாற்றி விளம்பரதாரர்கள் மக்களை ஈர்க்கின்றனர் பல நேரங்களில் ஒரு சில தளங்களில் தேவையில்லாத பிளாஷ் விளம்பரங்கள் நமக்கு வெறுப்பை உண்டு பண்ணுகிறது , இனி இது போன்ற பிளாஷ் தொல்லைகளை நீக்குவதற்காக குரோம் உலாவியில் ஒரு நீட்சி உள்ளது.

முகவரி :https://chrome.google.com/webstore/detail/gofhjkjmkpinhpoiabjplobcaignabnl?hl=en

குரோம் உலாவியில் மேலே கொடுத்திருக்கும் தளத்திற்கு சென்று Install என்ற பொத்தானை சொடுக்கி இந்த நீட்சியை நிறுவிக்கொள்ளவும் அடுத்து படம் 1-ல் காட்டியபடி Flash ஐகானை சொடுக்கி Block Flash on this Site என்பதை சொடுக்கி
பிளாஷ் விளம்பரங்கள் ஏதும் இல்லாமல் பார்க்கலாம். Option என்பதை சொடுக்கி ஏற்கனவே நாம் பிளாஷ் கோப்புகள் பார்க்க வேண்டாம் என்று Block செய்த தளங்களை நமக்கு வேண்டும் போது Unblock செய்யும் ஆப்சனும் இருக்கிறது. பிளாஷ் விளம்பரங்களின் தொந்தரவை நீக்க விரும்பும் அனைவருக்கும் இணையதளத்தை வேகமாக பார்க்க நினைப்பவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget