APOLLOPARTHIBAN: HEALTH THIPS

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Wednesday, July 11, 2012

இளநரையை போக்குவதற்கான சில டிப்ஸ்.........


உடம்பில் அதிக அளவில் பித்தம் கூடினால் தலை நரைக்கும் என்று முன்னோர்கள் கூறுவார்கள். இன்றைக்கு மாறி வரும் சூழ்நிலையால் 15 வயது முதலே தலை நரைக்கத் தொடங்கி விடுகிறது.
சமச்சீரற்ற உணவு முறை, எண்ணெய் வைக்காமல் தலை சீவுவது, ரசாயனப் பொருட்கள் அடங்கிய ஷாம்பு, சோப்பு உபயோகிப்பது போன்றவைகளினாலும் தலைமுடி வெள்ளையாகிறது.
இன்றைக்கு 15 வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள்.
அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களும்தான். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தும் அன்றாடம் தலைக்கு எண்ணெய் வைப்பதும் வாடிக்கையாக இருந்தது. ஆனால் இன்றைக்கு யாரும் இதனை பின்பற்றுவதில்லை.
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். அதை சுத்தமான தேனுடன் சேர்த்து ஊறவைத்து தினசரி காலையில் அதை சாப்பிட்டு வர பித்தம் தணியும் இளநரை தானாகவே மாறும்.
தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு கலந்து மசாஜ் செய்யவும். இதனால் இளநரை தானாகவே மாறும். கூந்தல் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாறும்.
பசு மோர் இளநரையை போக்கும் அருமருந்து. வாரம் இருமுறை மோர் தலைக்கு தேய்த்து குளிக்கலாம் உஷ்ணம் நீங்கும்.
தேங்காய் எண்ணெயை காய்ச்சி அதில் கறிவேப்பிலை போட்டு வேகவைக்கவும். இந்த எண்ணெயை தினசரி தலைக்கு தேய்த்து வரை கூந்தல் இயற்கை நிறத்திற்கு மாறும். முடி உதிர்வது கட்டுப்படும்.
உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும் இது பித்தத்தை குறைக்கும்.
2 ஸ்பூன் ஹென்னா பவுடர், 1 ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் வெந்தையப் பொடி, 3 ஸ்பூன் காபி, 2 ஸ்பூன் துளசி இலை சாறு, 3 ஸ்பூன் புதினா இலைச் சாறு கலந்து பேஸ்ட் போல கலக்கவும். அதை தலையில் அப்ளை செய்து மூன்று மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் மைல்டு ஷாம்பு போட்டு அலசவும். இதனால் இளநரை படிப்படியாக நிறம் மாறும். தலையும் குளிர்ச்சியடையும்.
ஒரு ஸ்பூன் உப்பு, ஒரு கப் ப்ளாக் டீ கலந்து தலைக்கு தேய்த்து மசாஜ் செய்யவும். ஒரு மணிநேரம் ஊறவைத்து பின்னர் தலைக்கு குளிக்கவும். இதனால் இளநரை மாறி தலைமுடி படிப்படியாக கருமையாகும்.
இளநரையை போக்குவதில் வெங்காயம் சிறந்த மருந்தாகும். இது உதிர்ந்த இடங்களில் கூந்தலை நன்கு வளரச்செய்யும்.
ஒரு கிராம் கருப்பு மிளகு அரைக் கப் தயிர், சிறிதளவு லெமன் சாறு கலந்து தலைக்கு அப்ளை செய்யவும். இது இளநரையை மறையச்செய்யும்.
நெல்லிக்காய் பேஸ்ட், நெல்லிக்காய் எண்ணெயை தலைக்கு பூசி வர இளநரை மறைவதோடு கூந்தல் திக்காக வளரும். மருதாணி இலையை நன்கு காயவைத்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தலைக்கு பூசிவர கூந்தல் கருமையாகும்.
எலுமிச்சையானது கூந்தலை இயற்கை நிறத்திற்கு மாற்றும் சக்தி படைத்தது. எனவே எலுமிச்சை சாற்றை கூந்தலில் ஊறவைத்து பின்னர் நன்கு அலசினால் கூந்தல் படிப்படியாக கருமையாகும்.
நெல்லிக்காய் சாறு, பாதம் எண்ணெய், எலுமிச்சை சாறு மூன்றையும் நன்றாக கலந்து தலைக்கு பூசி ஊறவைத்து குளிக்க கூந்தல் கருமையாவதோடு பளபளப்பாகவும், அழகாகவும் மாறும்.
-- 

Wednesday, April 4, 2012

வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார்கோட் மூலம் அறியலாம்............

பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது,சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி ),சரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது……இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்,பார் கோடு
என்பது machine readble format யில் இருக்கும்.அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.போலி மருந்துகள் மாதிரி expiry date யை,இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது.இனிமேல் பார்கோடை பார்த்து வாங்குங்க .

மற்ற நாடுகளின் முதல் எண்கள்

00-13: USA & Canada
20-29: In-Store Functions
30-37: France
40-44: Germany
45: Japan (also 49)
46: Russian Federation
471: Taiwan
474: Estonia
475: Latvia
477: Lithuania
479: Sri Lanka
480: Philippines
482: Ukraine
484: Moldova
485: Armenia
486: Georgia
487: Kazakhstan
489: Hong Kong
49: Japan (JAN-13)
50: United Kingdom
520: Greece
528: Lebanon
529: Cyprus
531: Macedonia
535: Malta
539: Ireland
54: Belgium & Luxembourg
560: Portugal
569: Iceland
57: Denmark
590: Poland
594: Romania
599: Hungary
600 & 601: South Africa
609: Mauritius
611: Morocco
613: Algeria
619: Tunisia
622: Egypt
625: Jordan
626: Iran
64: Finland
690-692: China
70: Norway
729: Israel
73: Sweden
740: Guatemala
741: El Salvador
742: Honduras
743: Nicaragua
744: Costa Rica
746: Dominican Republic
750: Mexico
759: Venezuela
76: Switzerland
770: Colombia
773: Uruguay
775: Peru
777: Bolivia
779: Argentina
780: Chile
784: Paraguay
785: Peru
786: Ecuador
789: Brazil
80 – 83: Italy
84: Spain
850: Cuba
858: Slovakia
859: Czech Republic
860: Yugoslavia
869: Turkey
87: Netherlands
880: South Korea
885: Thailand
888: Singapore
890: India
893: Vietnam
899: Indonesia
90 & 91: Austria
93: Australia
94: New Zealand
955: Malaysia
977: International Standard Serial Number for Periodicals (ISSN)
978: International Standard Book Numbering (ISBN)
979: International Standard Music Number (ISMN)
980: Refund receipts
981 & 982: Common Currency Coupons
99: Coupons

Friday, January 20, 2012

கண்களின் உள்ள கருவளையத்தை எளிதில் நீக்க டிப்ஸ்!

 
முகத்திற்கு முத்தாய்ப்பாய் அழகை தருபவை கண்கள். அந்த கண்களில் ஏற்படும் சோர்வு முக அழகையே மாற்றிவிடும். கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் கண்களின் அழகை பாதித்துவிடும். எனவே கண்களை கவனமாக பாதுகாக்க வேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.



உடல் உஷ்ணம்


உடல் உஷ்ணம் நேரடியாக கண்களை பாதிக்கும். கண்களுக்கு எரிச்சலை தரும். கண்களை குளிர்விக்க ஐஸ் தண்ணீரில் நனைத்த பஞ்சு அல்லது கைக்குட்டையை கண்களை மூடி பத்து நிமிடங்கள் வைத்து எடுக்கவும். கண்கள் புத்துணர்ச்சி பெறும்.


ஓய்ந்து போய்க் காணப்படும் கண்களை பளீர் என்று பிரகாசிக்கச் செய்ய ஒரு பஞ்சு உருண்டையை பன்னீரில் நனைத்து மூடிய கண்களின் இமைகள் மீது 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.


புத்துணர்ச்சி தரும் தண்ணீர்


ஓய்ந்து போய்க் காணப்படும் கண்களை புத்துணர்வு பெறச்செய்ய, ஒரு கிண்ணத்தில் நீர் நிரப்பி அதை கண்ணோடு ஒட்டி வைத்து இந்தக் கரைசலுக்குள் விழியை முக்கி கண்களைத் திறந்து, கண் விழியை இடமும், வலமும், மேலும் கீழுமாக உருட்டவும், இது கண்களில் உள்ள அழுக்கு, தூசு போன்றவற்றை அகற்றிவிடும்.


அழகை பாதிக்கும் கருவளையம்


கண்களை சுற்றி ஏற்படும் கருவளையம் அழகை முற்றிலும் பாதிக்கும். தூக்கம் குறைவாக இருந்தாலே கருவளையம் ஏற்படும். அதிகமான கணினி பயன்பாடும் கருவளையம் தோன்ற காரணமாகும். எனவே 7 மணி நேரம் தூக்கம் அவசியம். உணவில் கீரை வகைகளை சேர்க்கவேண்டும். வைட்டமின் எண்ணெய் வைத்து கண்ணை சுற்றி மசாஜ் செய்வதும் கருவளையத்தைப் போக்கும்.


பளிச் பாதாம் பருப்பு 


கண்களுக்குக் கீழ் வரும் கருவளையத்தைக் குறைக்க, தினமும் உருளைக் கிழங்கைத் துருவி சாறு எடுத்துப் பூசிக் காயவிட்டவின் கழுவ வேண்டும். பாதாம் பருப்பை ஊறவைத்து பால் விட்டு அரைத்து அந்த விழுதை கண்களைச் சுற்றிப் பூசி வந்தால் கருவளையம் மறையும்.


வசீகரிக்கும் ஆரஞ்சு


கண் வசீகரத்திற்கும், உடல் அழகிற்கும் ஆரஞ்சுப் பழம் ஏற்றது. தூக்கமின்மையை போக்கி கண்களை புத்துணர்ச்சியாக்கும் தன்மை ஆரஞ்சுக்கு உண்டு. சிறிதளவு ஆரஞ்சு ஜூஸை ஃப்ரீசரில் வைத்து அது ஐஸ் கட்டி ஆன உடன் அதை மெல்லிய துணியில் கட்டி வைத்து, கண்ணுக்கு மேல் ஒற்றி எடுக்கவேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படி செய்து வர கண்கள் பளிச் ஆகிவிடும்.


வெள்ளரிக்காய்


வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களின் மீது வைத்து சிறிது நேரம் ரிலாக்ஸாக உறங்குவது கண்களின் கருவளையத்தைப் போக்கும்.  

-- 
    
                 
                   S.PARTHIBAN

                                                                                                      
 

Wednesday, December 14, 2011

ரொம்ப நேரம் கம்ப்யூட்டரிலே உட்கார்ந்து இருக்கிறிர்களா, உங்களுக்காக ?


கணணி இல்லாத வீடே இல்லை என்று சொல்லுகிற அளவுக்கு இன்றைய உலகம் முன்னேறி வருகிறது.
கணணி உபயோகிக்காத மனிதர்கள் குறைவென்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு மனிதனோடு சேர்ந்த ஒரு பொருளாக கணணி மாறிவிட்டது. இந்த கணணி உபயோகம், கண்ணை எப்படிப் பாதிக்கிறது என்று தெரியாமலே பல பேர் கணணியோடு படுத்து உறங்குகிறார்கள்.
கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்(சி.வி.எஸ்) என்று சொல்லக்கூடிய ஒரு பாதிப்பு கணணியில் அதிக நேரம் இருப்பவர்களுக்கு ஏற்படுகிறது.
கண்ணில் எரிச்சல், கண்ணில் அரிப்பு, கண் காய்ந்து போய்விடுவது, கண்ணில் நீர் வடிவது, கண் இறுக்கமாக இருப்பது, கண்ணைச் சுற்றி லேசான வீக்கம் இவையெல்லாம் இந்த கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமின் அறிகுறிகளாகும்.
இதற்கு முதல் காரணமும், முக்கிய காரணமும் என்னவென்று பார்த்தால் கணணியில் உட்கார்ந்து நாம் வேலை செய்யும் போது கண்களை சிமிட்டுவது மிக மிகக் குறைந்து விடுவது தான் என்று தெரியவருகிறது.
ஒரு மனிதன் ஒரு நிமிடத்துக்கு சராசரியாக 12 முறை கண் சிமிட்ட வேண்டும். அதாவது தூங்கும் பத்து மணி நேரம் போக ஒரு நாளைக்கு சுமார் 10080 முறை(14 மணி நேரத்திற்கு) கண் சிமிட்ட வேண்டும்.
கணணியில் உட்கார்ந்து வேலை செய்யும் போது கண் சிமிட்டுவது குறைந்து விடுவதால் கண்ணீர் சுரப்பது குறைந்து விடுகிறது. இதனால் கண்ணை ஈரமாக்கும் வேலை தடைபடுகிறது.
மேலும் கண் திறந்தே இருப்பதால் சுரக்கும் கண்ணீரும் வேக வேகமாக காற்றில் ஆவியாகி விடுகிறது. இதனால் கண் அங்கும் இங்கும் நகருவதும் கஷ்டமாகி விடுகிறது.

இதை சரி பண்ண நாம் என்ன பண்ண வேண்டும்?
1. கணணி மொனிட்டர் மீது வேறு வெளிச்சம் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வேறு வெளிச்சம் மொனிட்டர் மீது படுவதாக இருந்தால் மொனிட்டரை அந்தப் பக்கம், இந்தப் பக்கம் திருப்பி, அட்ஜஸ்ட் செய்து வெளி வெளிச்சமோ, வேறு வெளிச்சமோ படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த வெளிச்சம் மற்றும் அதிக வெளிச்சத்தை குறைப்பதற்கென்றே ஒரு ஸ்பெஷல் கண்ணாடி ஸ்கிரீன் விற்கிறது. இதை வாங்கி உங்கள் கணணி மொனிட்டருக்கு முன்னால் மாட்டிக் கொள்ளுங்கள்.
2. கணணியும், நீங்கள் உட்காரும் நாற்காலியும் சரியான உயரத்தில் இருக்க வேண்டும். நாற்காலியில் சவுகரியமாக திருப்தியாக உட்கார்ந்தால் தான் கணணியில் அதிக கவனம் செலுத்த முடியும்.
நாற்காலி சரியாக இல்லாவிட்டால் கவனம் குறைந்து விடும். வேகமாக வேலையை பார்க்க முடியாது. முதுகுவலி, கழுத்துவலி வந்து விடும், கவனமாக இருங்கள்.
உங்கள் கண்களில் இருந்து சுமார் 35 செ.மீ முதல் சுமார் 50 செ.மீ தூரம் தள்ளி கணணியின் மொனிட்டர் இருக்க வேண்டும். அதாவது உங்களுக்கும், மொனிட்டருக்கும் இடையில் சுமார் ஒன்றரை அடி இடைவெளி இருக்க வேண்டும்.
3. தொடர்ந்து மொனிட்டரைப் பார்த்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் தலைவலி, மங்கலான பார்வை இவைகள் வராமலிருக்க ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடம் கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்து விட்டு பின் கண்ணை நன்றாக கழுவிவிட்டு மறுபடியும் வேலையைத் தொடருங்கள் அல்லது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடம், உங்கள் நாற்காலியிலிருந்து எழுந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்து மறுபடியும் உட்காருங்கள்.
4. தொடர்ந்து கணணியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இடை இடையில் மொனிட்டரிலிருந்து அருகிலுள்ள ஜன்னல் வழியாக வெளியே ஒரு முறை பார்த்துவிட்டு மறுபடியும் மொனிட்டரைப் பார்க்க ஆரம்பியுங்கள்.
5. ஏற்கனவே கண்ணாடி அணிந்திருப்பவர்கள், மொனிட்டரிலிருந்து சுமார் 70-லிருந்து சுமார் 80 செ.மீ. தூரத்தில் உட்காரலாம்.
6. கணணியில் உள்ள எழுத்துகளின் அளவை முடிந்தவரை பெரிதாக்கிப் பாருங்கள். கண்ணுக்கு அதிக அசதி இருக்காது.

Monday, November 21, 2011

100 மருத்துவக் குறிப்புகள்


1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.

6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.

பெண்களுக்காக…

10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.

12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.

கர்ப்பக் கால கவனிப்பு!

14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே!

15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.

16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.

20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.

21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.

26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.

27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.

28. தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில்
புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.

30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.

31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.

உணவே மருந்து!

32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!

33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,
கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.

42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.

மருந்தே வேண்டாம்!

49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.

50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.

51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.

52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும்தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனைத் தராது.

லப்… டப்..!

53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.

54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.

55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.

56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.

57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

கிட்னியைக் கவனியுங்கள்

58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.

59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்… உஷார்!

60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.

61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை.


பல்லுக்கு உறுதி!

62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.

63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.

65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.

66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.

67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.

68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி… இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.

69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.

70. முகப்பரு இருந்தால்… உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.

71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.

72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.

74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்

75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

ஜெனரல் வார்டு!

76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.

77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்… உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.

78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.

79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.

80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்… வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.

81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.

82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.

83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.

84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.

85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.

நில்… கவனி… செல்!

86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது… தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே – வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.

87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.

88. ‘போஸ்ட்மார்ட்டம்’ என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்… பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.

89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்… அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.

90. ‘போரடிக்கிறது’ என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்… தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.

91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.

92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்… கறுப்பே சிறப்பு.

93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.

94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது… அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.

எச்சரிக்கை

95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.

97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.

98. அலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.

99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.

100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும்.

Thursday, July 28, 2011

வேலை தளங்களில் வேலையில் மட்டுமே குறியாக உள்ளீர்களா

பொருளாதார நெருக்கடிகளால் பல நிறுவங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் ஓய்வு வழங்கி விட்டு , மிகுதியாக உள்ள ஊழியர்களை கசக்கி புழி கிறார்கள் .இதனால் சில ஊழியர்கள் பல நாட்களுக்கு தினமும் 12 மணித் தியாலங்களுக்கு மேல் அலுவலகங்களில் வேலை செய்ய நேரிடுகிறது . இவ்வாறு அதிக நேரம் வேலை செய்கையில் குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் அவர்களால் effective ஆக வேலை செய்ய முடியாது போகிறது



இவ்வாறு அதிக நேரம் வேலை செய்வதால் ஏற்படக்கூடிய சில விளைவு களையும் , இந்த விளைவுகளில் இருந்து எவ்வாறு தப்பித்து கொள்வது என்பதை பார்க்கலாம் .


தொடர்ச்சியாக வேலை செய்வதால் ஊழியருக்கு ஏற்படக் கூடிய விளைவுகள்

*உடற்பயிற்சி இல்லாமையால் உடல் நிலை மோசமடைதல்

*Heart attack , heart disease , Stroke
*வயிற்று வலி
*மனைவியை பிரிந்து வாழ வேண்டிய நிலை [ Divorce ]
*பிள்ளைகளின் நலத்தில் கவனம் கொள்ளாமை
*சமூக வாழ்க்கை பாதிக்கப் படுத்தல்

வேலை வழங்குவோருக்கு [ Employer ]ஏற்படக் கூடிய பாதிப்பு



*ஊழியர்கள் தங்களால் செய்யகூடிய வேலைகளை விட அதிக வேலைகளை செய்ய ஒத்து கொள்கிறார்கள்

*இவ்வாறான ஊழியர்கள் மற்றைய ஊழியர்களுடன் சேர்ந்து வேலை செய்ய விரும்புவது இல்லை .


எப்படி இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவது


*முதலில் எந்த வேலைகளை நாங்கள் நிறுத்த வேண்டும் என்பதை குறித்து கொள்ள வேண்டும் . சிறிய வெற்றிகளை தரக்கூடிய வேளைகளில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும் .

*சில வரையறைகளை [ Boundaries ] நிர்ணயித்து கொள்ள வேண்டும் .எல்லா வேலைகளயும் செய்து கொடுக்காது எங்களுக்கு என்ன பகுதி கொடுக்கப் பட்டுள்ளதோ அதை மட்டுமே செய்ய வேண்டும் . மற்றயவைக்கு :" NO " கூறி விடுங்கள்.ஆனால் இதை நடைமுறையில் செய்வது கடினம் .


*சில விடயங்களை குறிப்பிட்ட காலத்திலே செய்து முடிக்க முடியாது . இதனால் முதலில் எவற்றை குறிப்பிட்ட காலத்திலே செய்து முடிக்கலாமோ அவற்றை செய்வதே நல்லது .


*செய்ய வேண்டிய வேலைகளை தனியாக செய்யாது ஒரு 5 அல்லது 6 பேருடன் பகிர்ந்து ,சேர்ந்து செய்ய பழகி கொள்ள வேண்டும் .


*நீங்கள் நினைக்கும் எதையும் அடையக்கூடிய வாய்ப்பு இருப்பதால் அவசரப் படாது , நிதானத்துடன் ,செல்லும் பாதையை மாற்றாது உங்களின் இலக்கை வெற்றியுடன் சென்று அடையுங்கள் .


*தினமும் நீங்கள் செய்ய வேண்டிய விடயங்களை ஆரம்பித்திலேயே plan பண்ணி விட்டு , அதனை செயல்படுத்த கூடியவாறு நடைமுறை வடிவத் திற்கு மாற்றி அமையுங்கள் .


*சில வேலைகளை ஒரே நேரத்தில் ஒன்றாக செய்யகூடியதாக இருக்கும் எனவே இவற்றை தனித்தனியே செய்வதை விட , இவ்வாறான விடயங் களை முதலிலே கண்டறிந்து ஒன்றாக செய்ய பழகிக் கொள்ளவேண்டும்


*சிலர் வேலைத்தளத்தில் இருந்து வீடுக்கு வந்தாலோ அல்லது விடுமுறை காலங்களிலோ , அப்போதும் கூட அலுவலகத்தையே நினைத்து கொண்டு இருக்காமல் குடும்பத்துடன் நேரத்தை செலவிட பழகி கொள்ள வேண்டும்


*சில வேலைகளை செய்வதில் எங்களுக்கு ஆர்வம் இருப்பது இல்லை. எனவே எந்த வேலையை செய்யும் போது எங்களுக்கு பூரண திருப்தி வருகிறதோ அவற்றை செய்வதே நல்லது .


இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு குணமடைந்து வருபவர்களுக்கு

*எங்களின் உயர் அதிகாரியுடனோ ,அல்லது மேற்பார்வையாளருடனோ பிரச்சனைகளை கலந்துரையாடி தனியாக நேரம் செலவிடவேண்டி உள்ளதை குறிப்பிடலாம் .

*குறுகிய கால இலக்குகளில் அதிக கவனத்தை செலுத்தாது ,நீண்ட கால இலக்குகளில் கவனத்தை செலுத்துவதே நல்லது . எது முக்கியமான விடயம் என்பதை மீண்டும் , மீண்டும் பரிசீலிக்க வேண்டும் .

*வீட்டில் உள்ள போது இயலுமான அளவு தேவையற்ற அலுவலக தொலை பேசி அழைப்புகளை தவிர்த்து கொள்வதே நல்லது. சில வேலைகளுக்கு இது சரி வராது

*உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் ஏனோ தானோ என்றில்லாமல் , அதிக அளவு நேரத்தை செலவிட வேண்டும்

*வேலை செய்யாத நேரங்களில் படுத்து நித்திரை கொள்ளாமல் , சமூக இணைய தளங்களிலோ அல்லது வேறு எதாவது பொழுது போக்கு நடவடிக் கைகளில் ஈடுபடுவதே நல்லதாகும் .

*எவ்வளவு வேலை பளு இருந்தாலும் காலையிலும் , மாலையிலும் உடற் பயிற்சி செய்வதை மறந்துவிட கூடாது .

*தேவையான அளவு நித்திரையை கொள்ள வேண்டும் , காலை உணவை உண்ணாது விடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும் .

*உங்களுக்கு தரப்படும் இடைவேளை நேரங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் .மதிய இடைவேளையின் போது சிறிதளவு தூரம் நடப்பது மிகவும் சிறந்தது


வருடத்திற்கு அதிக அளவு நேரம் வேலை செய்யும் ஊழியர்களை கொண்டுள்ள சில நாடுகள்

Monday, July 25, 2011

கண்களை பாதுகாக்க ?


கண்கள் மிகவும் மென்மையானவை. கண்களை சுற்றி 12 தசைகள் இயங்குகின்றன.
இவற்றில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டால் கூட கண்நோய் வருகிறது.

இக்காரணத்தினால் கண்கள் கனமாக தோன்றுவதுடன் விரைவில் சோர்வடையும். பார்வை மங்குவதற்கும் வாய்ப்புள்ளது.
ஓவியம், எம்பிராய்டரி போன்ற நுட்பமான வேலை செய்பவர்களுக்கு அஸ்தனோபியா என்ற தொந்தரவு வரும். தொடர்ந்து தொலைக்காட்சி, சினிமா பார்த்தால் கண்கள் சோர்வடையும். கண்களில் வலி இருக்கும். இமைகள் கனமாக இருக்கும். தலைவலியும் வரும்.
மேலும் தொடர்ந்து படிக்கும் போது கண் மங்கலாக தோன்றும். நீண்ட நேரம் இரவில் விழித்து தொலைக்காட்சி பார்ப்பதாலும் கண் பாதிப்பு ஏற்படும். இதனால் கண்ணின் கருவிழி மற்றும் ஜவ்வு, கண் இமைகளின் உட்பகுதி விளிம்பு ஆகியவற்றில் சிலநோய் அறிகுறிகள் தென்படும்.
கண் சிவத்தல், கண்ணில் தூசு விழுந்தது போன்ற உறுத்தல், இமைகள் வீங்குதல், கண் கூசுதல், கண்களில் நீர் வடிதல் போன்றவை ஏற்படலாம். சிலருக்கு கண்கள் எப்போதுமே சிவப்பாக காணப்படும். மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு பொதுவாக ரத்தக் குழாய்கள் விரிவடையும்.
அதே போன்று கண்ணின் வெண்விழி ஜவ்விலும் உள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து சிவப்பாக தோன்றும். ரத்தத்தில் ஆல்கஹால் அளவு குறைந்தால் கண்கள் வெண்மை நிறத்துக்கு மாறிவிடும்.

மதுப்பழக்கம் இல்லாத சிலருக்கும் ரத்தக்குழாய் தடிமனால் கண்கள் சிவப்பாக தோன்றலாம். இதனை குளிர்க்கண்ணாடி அணிந்து சமாளிக்கலாம். கண் சிவந்து வலியும் இருந்தால் கண்ணில் புண் அல்லது கண் நீர் அழுத்தம் காரணமாக இருக்கலாம். இது போன்ற பிரச்னை உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும்.
வெண்விழியில் உள்ள ஜவ்வில் வைரஸ், பாக்டீரியா தொற்று, அலர்ஜி மற்றும் கண்கள் உலர்ந்து போதல், ரசாயன பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமை, தூசு விழுதல் ஆகிய காரணங்களாலும் கண்கள் வீங்கி சிவப்பாக மாற வாய்ப்புள்ளது.
எனவே கண்ணில் சிறிய பிரச்னை இருந்தாலும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். சுயமருத்துவம் செய்வது தவறாகும். இருசக்கர வாகனத்தில் கண்ணாடி இல்லாமல் செல்லுதல், கணணி திரையை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருத்தல், கண்நோய் மற்றும் டென்ஷன் காரணமாகவும் கண்ணில் நீர்வடியும்.
இதில் இரண்டு வகை உண்டு. கண் உறுத்தல், புண், அடிபடுதல், மனச்சோர்வு ஆகியவற்றால் ஏற்படுவது ஒருவகை. இன்னொரு காரணம் எபிபோரா. கண்ணீர் வெளியேறும் பாதைகளில் உள்ள அடைப்புகளினால் கண்ணில் நீர்வடியும்.
இது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் கண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். உடனடி சிகிச்சையின் மூலம் பார்வை இழத்தல் உள்ளிட்ட பிரச்னைகளை தவிர்க்கலாம் என்கின்றனர் கண் மருத்துவ நிபுணர்கள்.

பாதுகாப்பு முறை: குறிப்பிட்ட இடைவெளியில் கண் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் பிரச்னைகளை துவக்கத்தில் கண்டறிந்து சரி செய்யலாம். நாள்பட்ட சர்க்கரை மற்றும் மிகை ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் நோயை கட்டுக்குள் வைப்பது அவசியம்.
கண்ணில் ஏற்படும் நோய் தொற்று அறிகுறிகளை உடனே அறிவதும் முக்கியம். திடீர் பார்வையிழப்பு, தெளிவற்ற பார்வை, கண்களில் ஒளி வீசுதல், கறுப்புப் புள்ளிகளின் தோற்றம் போன்றவை கண் அழுத்த நோய் அல்லது மூளை பாதிப்பின் விளைவாக இருக்க வாய்ப்புள்ளது.
சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்களில் இருந்து கண்களை பாதுகாக்க கண்ணாடி அணியலாம். வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.

சரியான கண்ணாடியை அணிவதன் மூலம் பார்வை திறனை சரி செய்து கொள்ளலாம். குறைந்த வெளிச்சத்தில் படிப்பதை தவிர்க்கவும். கண்ணில் நீர் வடிந்தால், கண்களை கசக்கக் கூடாது. கண்களை மூடிய நிலையில் 10 நிமிடத்துக்கு சூடான ஒத்தடம் கொடுக்கலாம்.
சிவந்த கண்கள் பிரச்னை உள்ளவர்கள் வெந்நீரில் துணியை நனைத்து பிழிந்து ஒத்தடம் கொடுக்கலாம். கண் நோய் ஏற்பட்டால் கைகளை அடிக்கடி கழுவவும். வீட்டில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி உபயோகிக்கவும்.
கண் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். தலையணை உறையை தினமும் மாற்றவும். இது போன்ற நடைமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் கண் நோயால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கலாம்.

Thursday, July 21, 2011

நீங்கள் அழகாகவும் இளமையாகவும் தோன்ற ஆசையா

முடிகொட்டாமல் இருக்கவும், பொடுகில் இருந்து தலையைப் பாதுகாக்கவும்:-

புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சிகைக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் காட்சியளிக்கும்.

கண்ணில் கருவளையம் மறைய...

சில பெண்களுக்கு கண்களைச் சுற்றிகருப்பு வளையம் இருக்கும். இதை நீக்க வெள்ளரி, உருளைக் கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு துணியை பன்னீரில் நனைத்து கண்ணின் மீது வைத்து படுத்து தூங்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

முகத்தை பாதுகாக்கும் முறை:-

ஒவ்வொருவருக்கும் 2 வகையான சருமம் உள்ளது. ஒன்று உலர்ந்த சருமம். எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதே போல் எண்ணை வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசிக் கொள்ளலாம். இதன் மூலம் முகம் புத்தொளிபெறும்.
உதடு உலர்ந்து விட்டதா?

உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு சிலருக்கு இரத்தம் கசியும். உதடு கறுத்து விடும் இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான். இதைப் போக்க வெந்தயத்தை 1 ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்து விடவேண்டும். இரவில் வெண்ணையை சிறிதளவும் உதட்டில் தடவவும். சிறு உருண்டையை விழுங்கிவிடவும். இப்படிச் செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்து விடும்.

கழுத்தில் உள்ள கருவளையம் மறைய:-

சிலருக்கு நகைகள் அணிவதால் கழுத்தில் கருவளையம் ஏற்படலாம். இதைப் போக்க. கோதுமை மாவில் வெண்ணையைக் கலந்து கழுத்தைச் சுற்றி பூசவும் 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இப்படி தினசரி செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் அகன்றுவிடும்.

இடுப்பில் காய்ப்புத் தழும்பு அகல:-

இடுப்பில் இறுக்கமான ஆடை அணிந்து வருவதால் சிலருக்கு இடுப்பைச் சுற்றி கருப்புத்தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இரவில் இறுக்கமான ஆடையைத் தவிர்த்து லூசான ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணையை இடுப்பைச் சுற்றி தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால் போதும். மெதுவாக கறுப்புத் தழும்பு மறைந்து விடும்.

காது அழகை பராமரிப்பது எப்படி?

பெண்களின் அழகை ஜொலிக்க வைப்பதில் காதுகளுக்கும் பங்கு உண்டு. ஆனால் நம்மில் பலர் முகத்தைத்தான் அடிக்கடி கழுவி பராமரிக்கிறோமே தவிர காதுகளை கண்டு கொள்வதே கிடையாது. இதனால் முகம் பளபளப்பாக இருந்தாலும்... காதுகள் இரண்டும் முக அழகுக்கு வேட்டு வைத்து விடும். காதுகள் அழுக்கடைந்து பார்ப்பதற்கு அகோரமாக காட்சி அளிக்கும்.

ஆகவே பெண்மணிகளே காதை மிளிர வைப்பது எப்படி? என்பது பற்றிய யோசனையைகேளுங்க.

உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும், 15 நிமிடம் கழித்து காதுகளை அழுத்தமாக துடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் மாயமாகிவிடும். முகத்திற்கு பூசும் பேஸ்- பேக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரியாது.

சிறிது சூடாக்கப்பட்ட நல்ல எண்ணையினால் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்தால் கழுத்தும் பளபளவென பளிச்சிடும்

Wednesday, July 20, 2011

தயிரின் மருத்துவ குணம்

Image

சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.

பழச்சாறு உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் `சி’யை அளிக்கிறது. த‌யிரு‌ம் பழ‌‌ச்சாறு‌க்கு இணையான ச‌த்து‌க்களை‌க் கொ‌ண்டு‌ள்ளது.

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து.

அ‌ப்ர‌ண்டீ‌‌ஸ் மற்றும் வயிற்றுப் போக்கு‌க்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும்.

மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.

மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். த‌யி‌ர் ம‌ற்று‌ம் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.

சில தோல் வியாதிகளுக்கு மோ‌ரி‌ல் நனை‌ந்த து‌ணியை‌ பா‌தி‌த்த இட‌த்‌தில க‌ட்டி வருவது ‌சிற‌ந்த மரு‌ந்தாகு‌ம். தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.

Thursday, July 14, 2011

கண்களை பாதுகாக்க சாப்ட்வேர் ?


நம்முடைய கணணியை காப்பாற்ற antivirus, firewall போன்ற பலவற்றை பயன்படுத்துகிறோம். ஆனால் நம் உடல் நலனை பாதுகாப்பதை பலர் மறந்துவிடுகிறோம்.
அதிக நேரம் கணணி முன் வேலை செய்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் இது மிகவும் பயன்படும். இரவு நேரங்களில் அதிகம் கணணியில் பணிபுரிபவர்கள் எனில் உங்கள் கண்கள் சோர்வடைவதை உணர்ந்திருப்பீர்கள்.
பகல் நேரங்களில் உங்கள் மொனிட்டர் திரை நன்கு பிரகாசமாக தெரியும். அவை பகல் வெளிச்சத்திற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இரவில் அதிக வெளிச்சம் நம் கண்களுக்கு எரிச்சலூட்டும்.
நம் மொனிட்டரின் வெளிச்சத்தை பகலிலும், இரவிலும் அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்க முடியாது. எனவே இந்த மென்பொருள் உங்களுக்கு உதவும்.
இது தானாகவே பகலிலும், இரவிலும் உங்கள் இடத்தின் வெளிச்சத்திற்கும், நேரத்திற்கும் ஏற்றவாறு உங்கள் மொனிட்டரின் வெளிச்சத்தை மாற்றும்.
இதனை தரவிறக்கியதுடன் உங்கள் கணணியில் நிறுவி கொள்ளுங்கள். பிறகு Change Settings சென்று
1. ADJUST YOUR LIGHTING FOR DAY AND NIGHT: உங்களுக்கு வேண்டியவாறு பகலிலும், இரவிலும் எவ்வளவு வெளிச்சம் வேண்டும் என்பதை தேர்வு செய்யுங்கள்.
2. SET YOUR LOCATION: இதில் சென்று Change அழுத்தினால் where am i? என்று தோன்றும். windowல் locate என்பதை கிளிக் செய்து வரும் mapல் உங்கள் இருப்பிடத்தினை தேடி latitude and longitudeனை copy செய்து அதில் தரவும்.
3. TRANSITION SPEED: திடீர் என்று மொனிட்டரின் வெளிச்சம் அதிகரிப்பதே, குறைவதே நம் கண்களுக்கு ஒவ்வாது. ஆகவே வெளிச்சம் மாறும் வேகத்தை உங்களுக்கு ஏற்றவாறு தேர்வு செய்யுங்கள்.
இது முற்றிலும் இலவசமானது. linux மற்றும் mac பதிப்புகளும் உள்ளன.

தரவிறக்க சுட்டி

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget