APOLLOPARTHIBAN: windows

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Saturday, June 14, 2014

விண்டோஸ் 8 முகப்புப் பக்கத்தை விண்டோஸ் 7 போல் மாற்ற

விண்டோஸ் 8 இல் உள்ள Metro-Style user Interface ஆனது tablet PC பாவனையாளர்களுக்கே மிகவும் பொருத்தமானது. நீங்கள் ஒரு வீட்டுக்கணணி பாவனையாளர் எனின் இது உங்களுக்கு பாவனைக்கு கடினமானதாக இருக்கலாம். எனவே நன்றாகப் பழகிய விண்டோஸ் 7 Start Menu தோற்றம் போல் எவ்வாறு மாற்றலாம் என்பது பற்றியதே இப்பதிவாகும்.


இதற்கு முதலில் விண்டோஸ் 8 இல் “Search Apps” இற்குச் சென்று அங்கு “regedit” என்று type செய்யவும். இப்போ இடப்பக்கத்தில் தேடல் முடிவாக Registry Editor Icon ஆனது தோன்றும். இதனை Double-Click செய்து திறந்துகொள்ளவும். இப்போ Winows Registry Editor ஆனது திறந்துகொள்ளும்.


இதிலே கீழ் உள்ள ஒழுங்கில் சென்று “Explorer” என்பதை அடையவும்.
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer 


இப்போ வலப்பக்கத்தில் உள்ள “RPEnabled” என்பதை Double-Click செய்து திறந்துகொள்ளவும்.


இப்போ தோன்றும் விண்டோவில் Value dataஎன்பதற்கு 0 என்று கொடுத்து OK செய்யவும்.

இப்போ உங்கள் விண்டோஸ் 8 இல் உள்ள Metro-Style user Interface ஆனது விண்டோஸ் 7 Start Menu தோற்றம் போல் மாற்றமடைந்திருக்கும்.

Thursday, September 26, 2013

Boot Windows Xp very Fast

follow the following steps.

1. Open notepad.exe, type "del c:\windows\prefetch\ntosboot-*.* /q" ( only blues ) & save as "ntosboot.bat" in c:\

2. From the Start menu, select "Run..." & type "gpedit.msc".

3. Double click "Windows Settings" under "Computer Configuration" and double click again on "Shutdown" in the right window.

4. In the new window, click "add", "Browse", locate your "ntosboot.bat" file & click "Open".

5. Click "OK", "Apply" & "OK" once again to exit.

6. From the Start menu, select "Run..." & type "devmgmt.msc".

7. Double click on "IDE ATA/ATAPI controllers"

8. Right click on "Primary IDE Channel" and select "Properties".

9. Select the "Advanced Settings" tab then on the device or 1 that doesn't have 'device type' greyed out select 'none' instead of 'autodetect' & click "OK".

10. Right click on "Secondary IDE channel", select "Properties" and repeat step 9.

11. Reboot your computer.

enjoy.....

Sunday, October 14, 2012

Windows XP யில் 20க்கும் மேற்பட்ட பிரச்னைகளை தீர்க்க...

விண்டோஸ் எக்பியில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு தரும் மென்பொருளைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம். இந்த மென்பொருள் Windows XP யில் ஏற்படும் 20 க்கும் மேற்பட்ட பிரச்னைகளை சரி செய்கிறது.
xp quick fix resolve 25 problems

உங்கள் Windows XP கணினியில் வைரஸ் தாக்கம் ஏற்படும்போது Registry editor, Run dilog Box , Task Manager ஆகியவைற்றை செயலிழக்க வைத்துவிடும். இதனால் பல சிரமங்களை நாம் எதிர்கொள்ள நேரிடும்.

இதுபோன்று வைரசினால் பாதிக்கப்பட்ட கணினியில் மேற்சொன்ன Registry editor, Run dilog Box , Task Manager போன்றவற்றை திறக்கும்போது பிழைச் செய்தி தோன்றும். உதாரணமாக Task manager has been disabled by your administrator என்ற பிழைச்செய்தி கிடைக்கும்.

இவ்வாறு வைரஸ்தாக்கத்தால் விண்டோஸ் எக்ஸ்பியில் ஏற்படும் 20 க்கும் மேற்பட்ட பிரச்னைகளுக்கான தீர்வு அளிக்கிறது XP Quick Fix.

இச்சிறிய கொள்ளவு கொண்ட மென்பொருளானது கீழ்க்கண்ட பிரச்சனைகளுக்கான தீர்வை நமக்கு வழங்குகிறது.



  1.  Enable Task Manager
  2.  Enable Registry Editor
  3.  Stop My Documents open at startup
  4.  Enable Folder Options
  5.  Restore missing Run dialog box
  6.  Enable Command Prompt
  7.  Restore My Computer (Computer) properties
  8.  Enable Recovery Console
  9.  Error when trying to access Add or Remove/ Program and Features program
  10.  Fix CD autoplay
  11.  Fix CD/DVD drive is missing or not recognized
  12.  Fix delay in opening Explorer
  13.  Fix error 1606 couldn’t access network location
  14.  Fix right-click error
  15.  Fix slow hotkeys
  16.  Fix slow network file/shared/remote
  17.  Remove OEM splash and wallpaper
  18.  Restore "Send To" context menu item
  19.  Restore Device Manager
  20.  Restore grayed Explorer and Taskbar toolbars
  21.  Restore grayed file associations
  22.  Restore My Documents properties
  23.  Restore My Network Places to Desktop
  24.  Restore Network icon to system tray
  25.  Restore the native ZIP file integration

மேற்சொன்ன பிரச்னைகள் உங்கள் கணினியில் இருந்தால் அவற்றிற்கான பட்டனை கிளிக் செய்து, குறிப்பிட்ட பிரச்னையை சரிசெய்துவிடலாம். 


பயனுள்ள இம்மென்பொருளைத் தரவிறக்க: 



Wednesday, February 22, 2012

விண்டோஸ் 7 பேக் அப் (Backup and Restore)

நாம் கம்ப்யூட்டரில் அமைத்திடும் டேட்டா பைல்களை பாதுகாத்து பதிப்பது அவற்றைக் காப்பாற்றும் சிறந்த வேலை ஆகும். இதற்கெனவே, விண்டோஸ் 7 சிஸ்டம் ஒரு தனி வசதியினை அளித்துள்ளது. இதனை Backup and Restore என அழைக்கின்றனர். இந்த வசதியினைப் பயன்படுத்துவது குறித்துக் காணலாம்.

முதலில் சிஸ்டத்தில் உள்ள இந்த Backup and Restore வசதியினை இயக்க வேண்டும். இதனை Control Panel பகுதியில் System and Security என்பதைக் கிளிக் செய்து பெறலாம். Backup and Restore என இந்த வசதி தரப்பட்டிருக்கும்.

இந்த வசதியினை இதற்கு முன்னர் நீங்கள் பயன்படுத்த வில்லை எனில், ‘Backup’ என்பதன் கீழாக ‘Windows Backup has not been set up’ என்ற ஒரு செய்தி தரப்படும். இந்த செய்தியின் வலது புறமாக உள்ள Set up backup என்ற லிங்க்கின் மீது கிளிக் செய்திட வேண்டும்.

இந்த புரோகிராம் தொடங்கியவுடன், உங்கள் பேக் அப் பைல்களை எந்த இடத்தில் சேவ் செய்திட வேண்டும் என்ற ஆப்ஷன் கேட்கப்படும். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள முதன்மை ஹார்ட் ட்ரைவினை பேக் அப் ட்ரைவாக தேர்ந்தெடுக்க, விண்டோஸ் சிஸ்டம் இடம் தராது. எக்ஸ்டர்னல் ட்ரைவ் ஒன்றினை கம்ப்யூட்டரில் இணைத்து Refresh என்பதில் கிளிக் செய்திடவும்.

இந்த வகையில் பேக் அப் பைல்கள் பதியப்பட வேண்டிய ட்ரைவினைத் தேர்ந்தெடுத்து செட் செய்த பின்னர், எந்த பைல்களை பேக் அப் செய்திட வேண்டும் என கம்ப்யூட்டர் உங்களைக் கேட்கும். நீங்கள் எதனையும் குறிப்பிட்டுச் சொல்ல வில்லை எனில், விண்டோஸ் தானாக, ஹார்ட் ட்ரைவின் இமேஜ் பைல் ஒன்றை பேக் அப் பைலாக உருவாக்கும். அல்லது, இதற்குப் பதிலாக, Let me choose என்ற பட்டனில் கிளிக் செய்து, நீங்கள் பேக் அப் செய்திட விரும்பும் பைல்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

எந்த ட்ரைவில் பதிய வேண்டும் என்பதனையும், எந்த வகை பைல்களை பேக் அப் செய்திட வேண்டும் என்பதனை யும் தேர்ந்தெடுத்த பின்னர், சிஸ்டம் உங்களுக்கு பேக் அப் ஆக இருக்கும் பைல்களின் தொகுப்பு திரை ஒன்றைக் காட்டி உறுதி செய்திட கேட்கும். பேக் அப் செயல்பாடு தொடங்கும் முன்னர், விண்டோஸ் இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள தான் அமைத்துள்ள கால நேரத்தினைக் காட்டும்.

அந்த நேரத்தில் கம்ப்யூட்டர் இயக்க நிலையில் இருப்பதனை உறுதி செய்திட இந்த கேள்வி கேட்கப்படும். இதில் மாற்றம் தேவை என நீங்கள் கருதினால், Change schedule என்பதில் கிளிக் செய்து, உங்களுக்கு வசதியான நேரத்தினை அமைக்கவும். இறுதியாக Save settings கிளிக் செய்து பேக் அப் செயல்பாட்டினை இயக்கவும்.

முதல்முதலாக பேக் அப் எடுக்கையில், சிறிது கூடுதலாகவே நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதனை அடுத்து எடுக்கப்படும் பேக் அப் செயல்பாட்டிற்குக் குறைந்த அளவிலேயே நேரம் எடுத்துக் கொள்ளப்படும். ஏனென்றால், அடுத்தடுத்து பேக் அப் எடுக்கப்படுகையில், மாற்றம் செய்யப்பட்ட பைல்களில் மட்டுமே பேக் அப் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு ஏற்கனவே பேக் அப் எடுக்கப்பட்ட பைல்களுடன் வைக்கப்படும்.


பேக் அப்பிலிருந்து பைல்களை மீட்டல்:

பேக் அப் செய்யப்பட்ட கோப்பிலிருந்து, நம் பைல்களை விரித்து எடுப்பது மிக மிக எளிதான ஒன்றாகும். முதலில், ஏற்கனவே கூறியபடி, Backup and Restore என்ற செயல்பாட்டினை இயக்கவும். இப்போது அனைத்து பைல்களையும் மீட்க வேண்டுமா, அல்லது அழிக்கப்பட்ட, கெட்டுப் போன பைல்கள் மட்டும் மீட்கப்பட வேண்டுமா என்பதனை முடிவு செய்திட வேண்டும்.

அனைத்து பைல்களையும் மீட்க, Restore my files என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின்னர் Browse for folders என கிளிக் செய்திடவும். அடுத்து இடது பக்கம், உங்கள் பேக் அப் பைலுக்குக் கொடுத்த பெயருடன் உள்ள போல்டரைக் காணவும். அதில் கிளிக் செய்து, பின்னர் Add folder என்பதில் கிளிக் செய்திடவும்.

இந்த போல்டர் இணைக்கப்பட்ட பின்னர், Next என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு, நீங்கள் மீட்கும் பைல்கள், அவை முன்பு இருந்த இடத்தில் பதியப்பட வேண்டுமா அல்லது புதிய இடத்தில் பதியப்பட வேண்டுமா என்பதனைக் கம்ப்யூட்டருக்குச் சொல்ல வேண்டும். இதன் பின்னர், Restore என்பதில் கிளிக் செய்தால், நீங்கள் தேர்ந்தெடுத்தபடி பைல்கள் மீட்கப்படும்.

குறிப்பிட்ட பைல்களை மட்டும் மீட்க வேண்டும் எனில், Restore my files என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், Browse for files என்பதனைக் கிளிக் செய்திடவும். இப்போது உங்களின் பேக் அப் பைல் போல்டருக்குச் சென்று, நீங்கள் மீட்க விரும்பும் பைலைக் கிளிக் செய்திடவும். இங்கேயும், இந்த பைல்களை, அவை இருந்த பழைய இடத்தில் வைத்திடவா, அல்லது புதிய இடத்தில் வைத்திடவா என்ற கேள்வியினை உங்களிடம் கம்ப்யூட்டர் கேட்கும். இதனை முடிவு செய்து காட்டிய பின்னர், Restore என்பதில் கிளிக் செய்திட, பைல்கள் மீட்கப்படும்.


நீங்கள் மீட்க விரும்பும் பைலின் பெயர் உங்கள் நினைவில் இல்லை எனில், Restore my files கிளிக் செய்த பின்னர்,சர்ச் பட்டனைப் பயன்படுத்தி பைல்களைக் கண்டறியவும். சர்ச் முடிவுகளின் பட்டியலைப் பயன்படுத்தி, நீங்கள் மீட்க விரும்பும் பைல்களைத் தேர்ந்தெடுத்துக் காட்டவும். இவற்றை நீங்கள் மீட்க விரும்பும் பைல்களின் பட்டியலில் இணைக்கவும். பின் மீண்டும் Restore கிளிக் செய்து மீட்கவும்.


Wednesday, December 21, 2011

டெக்ஸ்டாப்பில் விதவிதமான பேக்ரவுண்டுடன் கெடிகாரங்கள்


டெக்ஸ்டாப்பில் விதவிதமான புகைப்படங்கள் வைத்திருப்போம். அதுபோல் விதவிதமான கடிகாரங்கள் வைத்திருப்போம். இந்த சின்ன சாப்ட்வேரில் விதவிதமான கெடிகாரங்களுடன் விதவிதமான புகைப்படங்களும் அளித்துள்ளார்கள்.10 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். 


வரும் கெடிகாரத்தில் வைத்து கர்சரை ரைட் கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில்  கெடிகாரத்தின் அடர்த்தியை தேர்வு செய்யலாம். இதில் உள்ள Choose Skin கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் 40 வகையான கெடிகாரங்கள் கொடுத்துள்ளார்கள்.
தேவையானதை கிளிக் செய்ய டெக்ஸ்டாப்பின் பேக்கிரவுண்ட் உடன் உங்களுக்கு கெடிகாரம் கிடைக்கும்..
அதில் கொடுத்துள்ள டெக்ஸ்டாப் படம் பிடிக்கவில்லையென்றால் ;நீங்கள் கெடிகாரத்தை மட்டும் வைத்துக்கொள்ளலாம்.

-- 
    

                                                                                                      
 

விண்டோஸின் வேகமான இமேஜ் வியூவர் மென்பொருள்




இர்பான் வியூ மென்பொருளானது விண்டோஸின் வேகமான இலவச இமேஜ் வியூவர் மற்றும் கன்வெர்ட்டராக உள்ளது.
அம்சங்கள்:
  • முன்னோட்ட தேர்வு
  • இழுத்து & விடுவித்தல் ஆதரவு 
  • கோப்பகத்தை வேகமாக பார்வையிடலாம் (வேகமாக டைரக்டரி வழியாக நகரும்)
  • திரைப்படங்கள் மற்றும் ஒலி விளையாட்டு
  • ஸ்லைடுஷோ
  • திரள் மாற்றம்
  • அச்சு தேர்வு
  • ஆழ்ந்த நிற மாற்றவும்
  • ஸ்கேனிங்க் ஆதரவு 
  • கிழ் கண்ட கோப்பு வடிவங்களுக்கு ஆதரவு:
JPG / JPEG, GIF, (மற்றும் பன்முக அனிமேஷன் GIF), BMP, DIB, RLE, PCX, PNG, TIFF (Multipage TIFF ஆதரவு), TGA, RAS / Sun, ICO, AVI, WAV, மிட், RMI, WMF, EMF, PBM , PGM, BBm, IFF / LBM, PSD, CPT, MPG / MPEG, MOV,ICO ஆதரவு, மற்றும் புகைப்பட-குறுவட்டு (மேற்பார்வை புகைப்பட-குறுவட்டு ஆதரவு).
இயங்குதளம்: வின் 9x/ME/NT/2K / எக்ஸ்பி / 2K3 / விஸ்டா / 7
Size:1.46MB
-- 

Tuesday, November 15, 2011

Word 2007பைல்களை Word 2003 இல் Open செய்வது எப்படி? என தெரியாமல் தவிக்கும் அனைவருக்கும் இதோ இந்த பதிவு.



Word 2007பைல்களை Word 2003 இல் Open செய்ய முதலாவதாக Microsoft compatibility pack நம் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

இணையத்தினூடாக இந்த File இனை தறவிறக்கம் (Download) செய்து Install செய்துகொள்ள வேண்டும்.
செய்யும் முறை பின்வருமாறு....
File இனை Double Click செய்தவுடன் இவ்வாறான வின்டோ தோன்றும். அவ்வின்டோவில் Download கிலிக் செய்துவிடவும்


பின்னர் தோன்றும் இவ்வாறான வின்டோவில் கிலிக் செய்துவிடவும்.






அதன் பின்னர் இவ்வாறான விண்டோ தோன்றும். அதில் கிலிக் செய்துவிட்டால் அதன் பின்னர். Word 2007பைல்களை Word 2003 இல் Open செய்வதால் பயன் பெறலாம்.


--

Thursday, October 27, 2011

Group policy இல் சில வித்தைகள்


Windows இல் பல தனிப்பயனர்க்குரிய (Customize) நிலைகள Group policy மூலமாக ஏற்படுத்தலாம்.Start Menu வில் Run எனும் கட்டளையைத் தெரிவு செய்து தோன்றும் Dialog Box இல் gpedit.msc என Type செய்து Enter Key ஐ press பன்னுவதன் மூலம் Group policy எனும் தலைப்பிலமைந்த Window தோன்றும்.

இதில் பல மாற்றங்களை நாம் செய்யலாம்.

01.Desktopல் உள்ள Recycle Bin ஐ மறைப்பது.
02.Folder Option ஐ Tools Menu வில் இருந்து மறைத்து வைப்பது.
03.Task Managerஐ Open செய்யாமல் தடுப்பது.
04.Add or Remove Programs ஐ Open செய்யாமல் தடுப்பது.

இப்படி எத்தனையோ விடயங்களை Group policy மூலம் நாம் மாற்றியமைக்கலாம்.நான் மேலே குறிப்பிட்ட 4 விடயங்களைப் பற்றி விளக்குகின்றேன்.


01. Desktopல் உள்ள Recycle Bin ஐ மறைப்பது.
Group policy ஐ Open செய்து User Configuration >Administrative Templates > Desktop என்ற தெரிவை ஏற்படுத்தி அதில் Remove Recycle Bin icon from desktop என்பதனை Double Click செய்யத் தோன்றும் Dialog Box இல் Setting என்ற Tab இல் Enable எனும் தெரிவை ஏற்படுத்தி Ok Button ஐ கிளிக் செய்தால் Desktop இல் Recycle Bin மறைந்து இருப்பதை காணலாம்.



02.User Configuration >Administrative Templates > Windows Components > Windows Explorer > Removes the Folder Options menu item from the Tools menu

03.User Configuration >Administrative Templates > System > Ctrl+Alt+Del Options > Remove Task Manager

04.User Configuration >Administrative Templates > Control Panel > Add or Remove Programs > Remove Add or Remove Programs

இங்கு சென்று நீங்கள் Enable செய்தால் போதும்.மீண்டும் கொண்டுவர Enable க்கு பதிலாக Not configured தெரிவு செய்தால் சரி.

Saturday, October 22, 2011

விண்டோ எக்ஸ்பி - தமிழ் மென்நூல்




விண்டோக்ஸ் என்பது எவரும் எளிதாக பயன்படுத்துவதற்காக வடிவமைக்கபட்ட ஓர் இயக்க முறைமை ஆகும். இதை பற்றிய தகவலுடன் 135 இடுகைகளை கொண்ட தமிழ் மென்நூல் இங்கு இணைக்க பட்டுள்ளது. இவ் மேன்நூளை படித்து முடிக்கும் பொது நீங்க விண்டோஸ் எக்ஸ்பியில் தேர்ச்சி பெற்றுல்லிற என்பதை உறுதிப்படுத்த சில கேள்விகளும் இணைக்கப்பட்டுள்ளது.

இதனை தரவிறக்கம் செய்து நீங்களும் ஓர் விண்டோஸ் எக்ஸ்பியில் கட்டமைப்புகளை அறிந்து கொள்ளுங்கள்.


தரவிறக்கம் செய்ய download என்னும் button ஐ சொடுக்கவும்.



Wednesday, October 5, 2011

விண்டோஸில் லாகின் ஸ்கிரீன் பேக்ரவுண்டை மாற்ற.!!


விண்டோஸ் பயன்படுத்தும் அனைவரும் பார்த்திருப்போம் அதில் லாகான் செய்யும்போது தோன்றும் நீல நிற புகைப்படத்தை மாற்ற முடியாது. எப்பொழுதும் ஒரே மாதிரி படம் இருப்பதால் அலுப்பு தட்டுகிறது இல்லையா? எனவே இன்று விண்டோஸ் லாகான் ஸ்கிரீன் பின்புலத்தில் உள்ள புகைப்படத்தை நம் இஷ்டத்திற்கு மாற்றி அமைப்பதை பற்றி பார்க்கப்போகிறோம்,இதற்கு மூன்று வழிகள் இருக்கின்றன.

1)Logon Studio
இந்த மென்பொருளானது இலவச மென்பொருள்தான் இதில் முதலிலேயே நிறைய பேக்ரவுண்டு படங்களுடனே வருகிறது, நாம் நமக்கு பிடித்த படங்களையும் இதில் இணைத்துக்கொள்ளலாம்.

நீங்கள் இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவிய பின்னர் இதனை திறந்து உங்களுக்கு தேவையான படத்தை தேர்ந்தெடுத்து அப்ளை என்பதை க்ளிக் செய்யவும்.உங்களின் லாகான் ஸ்கிரீன் மாறிவிடும்.


2)Windows 7 Logon Screen Rotator
இந்த மென்பொருளில் நீங்கள் ஒவ்வொரு முறை லாகின் செய்யும்போதும் தானாகவே படங்கள் மாறும்படி செய்யலாம்.இதனை நீங்கள் உங்கள் கணினியில் நிறுவத் தேவையில்லை... இந்த மென்பொருளை தரவிறக்கி அந்த பேக்கேஜை Unzip செய்து அதில் உள்ள .exe கோப்பின் மீது க்ளிக் செய்யுங்கள்.




தோன்றும் விண்டோவில் உங்களுக்கு பிடித்த படங்களை தேர்வு செய்த பிறகு
Enable And Exit என்பதை க்ளிக் செய்யுங்கள். நீங்கள் அடுத்தமுறை லாகின் செய்யும்போது உங்களுக்கு வேறு பேக்ரவுண்டுகள் கிடைக்கும்.

3) Windows 7 Logon Screen Change
இதுவும் மேலே உள்ளதை போன்ற லாகின் ஸ்கிரீன் மாற்றும் மற்றொரு மென்பொருள், இதனை தரவிறக்கி உங்களுக்கு தேவையான படத்தை செலக்ட் செய்து லாகான் ஸ்கிரீனாக பயன்படுத்துங்கள்...


Tuesday, October 4, 2011

20 நிமிடத்தில் Windows 7 இன்ஸ்டால் செய்வது எப்படி

Windows 7 என்பது இப்போது பரவலாக பயன்படுத்தபடும் OS . இதை நாம் இன்ஸ்டால் செய்யும் போது குறைந்தது ஒரு மணி நேரம் ஆகலாம். ஆனால் இதை இருபதே நிமிடத்தில் இன்ஸ்டால் செய்ய முடிந்தால்? முடியும் என்று நான் சொல்கிறேன். நான் செய்து பார்த்த ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.



நான் XP இன்ஸ்டால் பண்ண வேண்டுமே என்று கேட்பவர்கள் இந்த பதிவை படிக்கலாம். பத்து நிமிடத்தில் Windows XP install பண்ணலாம் வாங்க.


  • DVd ஐ உள்ளே போட்டு Install Now, License Terms போன்றவற்றை முடித்து விடுங்கள்.
  • இப்போது கீழே உள்ளது போல வரும்.




  • அடுத்து Drive Selection,Format ஸ்டெப் முடிக்கவும்.


  • இப்போது Shift F10 ஐ பிரஸ் செய்வதன் மூலம் command Prompt க்கு வரலாம்.






  • இங்கு மேலே உள்ளது போல "taskmgr" என டைப் செய்வதன் மூலம் "task Manager" க்கு வரலாம்.




  • இப்போது "Install Windows" மீது Right Click செய்து "Go To Process" கிளிக் செய்யவும். இப்போது "Set Up" என்பது தெரிவு ஆகி இருக்கும்.
  • இப்போது "Setup" மீது Right Click செய்து"Set Priority" என்பதில் "Real Time" என்பதை தெரிவு செய்யவும்.
  • இப்போது Task Manager And Command Prompt இரண்டையும் close செய்து விடவும்.

அவ்வளவுதான் நண்பர்களே 20 நிமிடத்தில் உங்கள் வேலை முடிந்து விடும்.

Saturday, September 3, 2011

windows 8 எப்படி இருக்கும் ?

நாம்அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் விண்டோஸ் 8 இன்னும் ஒரு சில மாதங்களில் வெளிவர இருக்கிறது . இதில் பல புதிய வசதிகள் இருக்கின்றன என்று மைக்ரோ சாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது . PRIVIEW OPTION வேகமாக செயல் படுகிறது . விண்டோஸ் எட்டு இயங்குதளமானது பார்ப்பதற்கு முக அழகிய தோற்றத்துடன் காணப்படும் .
இதில் முக்கிய அம்சம் என்ன வென்றால்
COPY & PASTE வேகமாகவும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கோப்புகளை COPY & PASTE செய்ய முடியும் . ஒரு கோப்பை COPY செய்யும் போது PAUSE,STOP,CANCEL,ஆகிய மூன்று செயல்களையும் மேற்கொள்ளலாம் . COPY செய்து கொண்டிருக்கும் பொழுது DETAILS என்ற பட்டனை அழுத்தி எவ்வளவு வேகம் என்பதை ஒளி அமைப்பில்(visual assessment.) காணலாம் . கீழ் காணும் படம் மற்றும் வீடியோவை பார்த்து புரிந்து கொள்ளுங்கள் .






ஒரு FOLDER-ல் இன்னொரு FOLDER ருக்கு COPY செய்யும் போது ஏற்கனவே
அந்த கோப்பு அதில் இருந்தால் அதற்கு வேறொரு பெயர் கொடுத்து சேமித்து விடலாம் .இந்த வசதி விண்டோஸ் எட்டில் தான் உள்ளது .

இந்த விடியோ இணைப் பாருங்கள் தெளிவாக புரியும்




சரி பொறுத்திருந்து பார்ப்போம் . அதுவரையில் windows 8 theme

தரவிறக்க (32-bit) (64-bit)

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget