APOLLOPARTHIBAN: labtop

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Friday, September 2, 2011

மடிக்கணினிகளில் கட்டாயமாக இருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள் - 2.

மடிக்கணினிகளில் கட்டாயமாக நிறுவப்பட்டிருக்க வேண்டிய

முக்கிய 5 மென்பொருட்கள் பற்றி தொடராக இங்கே பார்த்து வருகிறோம்.

Aerofoil

மடிக்கணினியின் பேட்டரி வேலை செய்யும் நேரத்தை 10% வீதத்திலிருந்து 25 % வீதம் வரை அதிகரிக்கின்றது இந்த மென்பொருள்.

கணினியின் சக்தியை விரயமாக்கும் தேவையில்லாத சிலவற்றை நிறுத்தி வைப்பதன் மூலம் இதை செய்கிறதாம். உதாரணமாக விண்டோஸ் 7 இயங்குதளத்தில் Aero glass interface, the Windows sidebar, muting the sound போன்றவையாகும்.

குறிப்பு - இந்த மென்பொருளை நிறுவ முன்னர் இதே போன்று செயற்படும் வேறு மென்பொருட்கள் கணினியில் இருந்தால் அவற்றை நீக்கிவிடுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்

டவுண்லோட் - http://silentdevelopment.blogspot.com/2010/05/aerofoil-151-released.html

மடிக்கணினிகளில் கட்டாயமாக இருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள் - 1

மடிக்கணினிகளில் கட்டாயமாக நிறுவப்பட்டிருக்க வேண்டிய முக்கிய 5 மென்பொருட்கள் பற்றி தொடராக இங்கே பார்க்கலாம்.

1. Prey - மடிக்கணனிகள் திருடப்பட்டுவிட்டால் திருடியவர் இணையத்தை பயன்படுத்தும் போது அது எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க உதவுகிறது இந்த மென்பொருள்.

நிறுவியதும் கணினியில் மறைந்துகொள்ளும் இந்த மென்பொருளை உங்களுக்கு தேவையான நேரத்தில் இணையத்தின் மூலம் ஆக்டிவேட் செய்ய முடியும்.

திருடியவர் குறிப்பிட்ட மடிக்கணினியில் இணையத்தை பயன்படுத்த தொடங்கியதும் உடனே அக்கணினி எங்கிருக்கிறது என்பதையும் மற்றும் ஏனைய தகவல்களையும் தந்து விடும்.

வீடியோ விளக்கம்:

http://www.youtube.com/watch?v=thfwN0lq9xI&feature=player_embedded

டவுண்லோட் செய்வதற்கு - http://preyproject.com/

Thursday, August 25, 2011

உங்கள் கணிணியில் பேட்டரியின் தற்போதைய நிலை அறிய மின்கல விபர பார்வையாளர் மென்பொருளை தரவிறக்குங்கள்


உங்கள் கணிணியின் மின்கல விபரத்தை பார்வையிடும் மென்பொருள் தற்போதைய நிலை மற்றும் உங்கள் பேட்டரி பற்றிய தகவல்களை காட்டுகிறது. இது மடிக்கணினிகள் மற்றும் நெட்பு கணினிகளில் ஒரு சிறிய வசதியுடன் உள்ளது. பேட்டரி தகவல், பேட்டரி பெயர், உற்பத்தி பெயர், வரிசை எண், தயாரிப்பு தேதி, (சார்ஜ் / வெளியேற்றுகிறது), தற்போதைய
பேட்டரி திறன், முழு சார்ஜ் திறன், மின்னழுத்தம், கட்டணம் / வெளியேற்ற விகிதம், போன்றவற்றை காட்டுகிறது.
மின்கலம் விபரத்தை பார்வையிடுவதற்க்கு ஒவ்வொரு 30 விநாடிகள் அல்லது நீங்கள் தேர்வு செய்த நேரத்தில் விபரத்தை புதிய சாளரத்தில் வழங்குகிறது.


கணினி தேவைகள் மற்றும் வரம்புகள்:


இந்த பயன்பாடு விண்டோஸ் 2000 தொடங்கி விண்டோஸ் 7 வரை விண்டோஸ் எந்த பதிப்பு மீது செயல்படுகிறது.

Saturday, August 13, 2011

மடிக்கணினியின் மின்கல காப்பை( BATTERY BACKUP) எவ்வாறு அதிகரிப்பது ?

இந்த காலம் மடிக்கணினியின் காலம் என்றே குறிப்பிடலாம் அவ்வாறு இப்பொழுது மடிக்கணினியின் ஆதிக்கம் அதிகரித்து உள்ளது யாரை எங்கு பார்த்தாலும் ஒரு மடிகணினியுடன் தான் இருக்கிறார்கள் . பெரும்பாலும் வேலை செய்பவர்கள் மடிக்கணினியை தான் விரும்புகிறார்கள் அதற்க்கு நிறைய காரணங்கள் இருக்கிறது . மடிக்கணினியை நாம் எங்கு எப்பொழுது வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம் ஒரு கைபேசியோஅல்லது ஒரு USB மோடமோ இருந்தால் போதும் நாம் மடிக்கணினியின் மூலம் எங்கு இருந்தாலும் இணையத்தை உபயோகிக்கலாம் அது மட்டுமல்ல மற்ற சாதனகளுடம் இணைப்பதற்கு மிக எளிதாகவும் இருக்கும் இதனால் மடிக்கணினி அதிக புகழ் பெற்றுவிட்டது .

இதை இல்லாவ்வற்றையும் விட இன்றியமையாத ஒன்று என்னவென்றால் மடிக்கணினியை நாம் மின்சாரம் இல்லாத நேரங்களிலும் பயன்படுத்தலாம் என்பது தான். இந்த ஒரு விஷயத்தால் வேலை செய்யும் அனைவரும் மடிக்கணினியை பயன்படுத்த ஆசைபடுகிறார்கள்.

மடிக்கணிணியில் மின்கலத்தை உபயோக படுத்துகிறோம் இந்த மின்கலம் மின்சாரம் உள்ளபோது மின்சாரத்தை சேகரித்து வைத்துக்கொள்ளும் அதன் பின் மின்சாரம் இல்லா நேரங்களில் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பொதுவாக மடிக்கணினிகள் இரண்டு மணிநேரம் மின்கலத்தின் காப்பு இருக்கும் ஆனால் நாம் மடிகணியை பராமரிப்பது பொறுத்தே அந்த மின்கலத்தின் காப்பு இருக்கும் நாம் அதை பராமரிக்க தவறினால் அதன் காப்பு மிகவும் குறைந்துவிடும் சில மடிக்கணினிகளை அரைமணி நேரம் மின்சாரம் கூட இல்லாமல் உபயோகிக்க முடியாது.நாம் மடிக்கணினியை மிகவும் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும்.

இதோ மடிக்கணினியை பராமரிக்க ஒரு இலவச மென்பொருள் மைக்ரோசாப்ட்டின் FIX IT . இந்த மென்பொருளை மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.



இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள் பின்னர் அந்த மென்பொருளை திறக்கவும் அதில் ACCEPT பொத்தானை அழுத்தவும் பின்னர் அந்த மென்பொருள் சில FIX IT கோப்புகளை தரவிறக்கும் அதற்கு பின்னர் கீழே உள்ளதை போல தோன்றும்.






பின்னர் இதில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யவும்.அதில் முதலில் உள்ளது சிக்கல்களை தேடி தீர்க்க குடியது . இரண்டாவது உள்ளது வெறுமனே சிக்கல் தேடுகிறது மற்றும் தனியாக ஒவ்வொரு சிக்கலுக்கும் தீர்வு கொடுக்கிறது.


அந்த சிக்கல்களை சரி செய்த பின்னர் கீழே உள்ளதை போல தோன்றும்.பின்னர் அதில் NEXT பொத்தானை அழுத்தி அடுத்த சிக்கலுக்கு செல்லவும் அல்லது அதை விட்டு வெளியேறவும்.


இதை நீங்கள் பயன்படுத்தினால் உங்கள் மடிக்கணினியின் மின்கலம் காப்பு (BATTERY BACKUP) சற்று அதிகரிக்கும்.

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget