APOLLOPARTHIBAN: google

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Sunday, August 5, 2012

கூகிள் குரோம்(google chrome) உபயோகிப்பவர்களுக்கு




சமீப காலமாக, தமிழ் உட்பட பல இந்திய மொழி வலைப்பக்கங்கள் யுனிகோட் வடிவமைப்பில் உருவாக்கப் பட்டிருந்தாலும், ஒரு சில வலைப்பக்கங்கள், யுனிகோட் அல்லாத பழைய எழுத்துருக்களை பயன்படுத்தியே உருவாக்கப்படுவதால்,உதாரணமாக (தினத்தந்தி தமிழ் செய்தித்தாள்) நமது உலாவிகளில் அந்த பக்கங்களை வாசிப்பதற்கு, அந்த குறிப்பிட்ட எழுத்துருவை ந்மது கணினியில் நிறுவியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.



இல்லையெனில் அவற்றை வாசிப்பது சாத்தியமற்று போகிறது.


                                           


இந்த பிரச்சனைக்கு Google Chrome உலாவியில் (நெருப்புநரி உலாவிக்கும்) எளிதான,சரியான இலவச தீர்வாக அமைவது Padma Transformer for Indic Scripts நீட்சியாகும். (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)


                                           


இந்த நீட்சியை தரவிறக்கி Google Chrome உலாவியில் நிறுவியபிறகு, இதற்கான அறிவிப்பு தோன்றுவதை கவனிக்கலாம்.


                             


இனி அந்த வலைப்பக்கங்களை திறக்கையில், எழுத்துருக்களை நிறுவாமலேயே தெளிவாக வாசிக்க இயலும்.எழுத்துருக்களை தரவிறக்க தேவையில்லை.

                                              Padma Transformer for Indic Scripts தரவிறக்க


-- 
    
                 
                   S.PARTHIBAN

                                                                                                      
 

Sunday, July 29, 2012

கூகுள் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய மென்பொருள்

மின்னனு புத்தகங்கள் பெரும்பாலும் பதிவிறக்கம் செய்ய அனைவரும் நாடுவது கூகுள் தளம் ஆகும். இந்த தளத்தில் உள்ள மின்னனு புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய எந்த ஒரு இணைப்பு சுட்டியும் இருக்காது. எனவே இந்த புத்தகங்களை நம்மால் பதிவிறக்கம் செய்ய முடியாது. கணிப்பொறி வாயிலாக காண முடியுமே தவிர பதிவிறக்கம் செய்ய முடியாது. எனினும் இந்த புத்தகங்களை விலைகொடுத்து வாங்கி கொள்ள முடியும். இதனை இலவசமாக பெற முடியாத என்றால், ஏன் முடியாது, முடியும். அதற்கு ஒரு இலவச Google Books Downloader மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருள் மூலமாக கூகுள் புத்தகங்களை இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த Google Books Downloader மென்பொருளை ஒப்பன் செய்து பதிவிறக்கம் செய்ய வேண்டிய புத்தகத்தின் முகவரியை குறிப்பிட்டு, குறிப்பிட்ட புத்தகமானது எந்த இடத்தில் சேமிக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து, பின் Download Book as PDF, Download Book as Image என்ற பொத்தான்களை அழுத்தி கூகுள் புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பின் சிலமணி நேரங்களில் நீங்கள் குறிப்பிட்ட புத்தகமானது, நீங்கள் குறிப்பிட்ட பைல் பார்மெட்டில், குறிப்பிட்ட இடத்தில் தரவிறக்கம் செய்யப்பட்டு இருக்கும்.
-- 
    

                                                                                                      
 

Thursday, June 7, 2012

Mail.com - எளிய பெயரில் ஈமெயில் ஐடி உருவாக்க...

மின்னஞ்சல் முகவரி என்பது நமக்கு எப்போதும் இன்றியமையாத ஒன்றாகும். ஜிமெயில் மூலம் இப்போது புதியதாக மின்னஞ்சல் கணக்கு தொடங்க நினைக்கும் ஒருவரால், எண்களை பயன்படுத்தாமல் மின்னஞ்சல் முகவரி உருவாக்க இயலாது(ஆங்கில வார்த்தை கொண்டு). எளிய வகையில் ஈமெயில் முகவரி உருவாக்க உதவும் mail.com பற்றி இன்றைய பதிவில் காண்போம். 

Mail.com ஆனது ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் போன்றவற்றுக்கு அடுத்து மிக அதிகம் பேர் பயன்படுத்தும் ஒரு மின்னஞ்சல் கணக்கு. இதன் மிகப் பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், வழக்கமாக மின்னஞ்சல் முகவரி உருவாக்கும் போது gmail.com, yahoo.com, ymail.com என்று குறிப்பிட்ட சிலவற்றை மட்டுமே டொமைன் ஆக தரும், ஆனால் mail.com 200 டொமைன்களை தருகின்றது. இதன் மூலம் உங்களுக்கு தேவையான ஒன்றை, மிகக் குறைந்த எழுத்துக்களை பயன்படுத்தி உருவாக்கி விடலாம். உதராணம் 


இது போல மொத்தம் 200 வகையான டொமைன்களில் உங்கள் மின்னஞ்சல் கணக்கை நீங்கள் உருவாக்கலாம். இதன் மூலம் புதியதாக தொடர்பு கொள்ள விரும்பும் நண்பர்களுக்கு நீங்கள் எளிதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை சொல்லி விடலாம்.

இதில் நான் உருவாக்கிய இரண்டு மின்னஞ்சல் முகவரிகள்:


  • prabu[at]playful.com
  • prabu[at]iname.com

இதன் மற்ற சில சிறப்பம்சங்கள்: 

1. Unlimited ஈமெயில் Storage
2. Spam Filter மற்றும் வைரஸ் மின்னஞ்சல்களில் இருந்து பாதுகாப்பு
3. பயன்படுத்த எளிய அமைப்பு 
4.எளிதில் நினைவில் கொள்ளும் வண்ணம் மின்னஞ்சல் முகவரி உருவாக்கும் வசதி. 
5. அலுவலக பயன்பாடுகளுக்கு உகந்த ஒன்று. 


இதன் குறைபாடு: 

1. ஈமெயில் Forwarding என்ற ஒரு வசதி இலவசமாக இல்லை. 


-- 
    
                 
                   S.PARTHIBAN

                                                                                                      
 

Friday, February 24, 2012

இண்டர்நெட் இல்லாமல் கூகுள்குரோமினைஇன்ஸ்டால்செய்ய

சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை போல கூகுள் நிறுவனம் எல்லா இடத்திலும் வெற்றிகொடி நாட்டி வருகிறது, சாதாரண சர்ச் இஞ்சின் என்ற நிலைமை மாறி இண்டர்நெட் என்றாலே கூகிள்தான் என்ற ஒரு நிலை உள்ளது, எங்கு பார்த்தாலும் கூகிள் நிறுவனத்தின் சேவைகள் தான், ஜிமெயில்,ஆர்குட், Youtube, Blog போன்று பல சேவையினை வழங்கி வருகிறது, தற்போது ஆப்ரேட்டிங் சிஸ்டம் உருவாக்கும் பணியில் மும்முரமாகி இருக்கிறது கூகிள், சரி நான் சொல்ல வந்ததை விட்டுட்டு எங்கேயோ சென்று விட்டேன். நான் கூற வந்தது ப்ரவுசர் (GOOGLE CHROME) இதனை நாம் இண்aடர்நெட் இணைப்பு இல்லாமல் நிறுவ முடியும்.




இந்த கூகிள் குரோமினை பதிவிறக்க: Download
இதனை பதிவிறக்கி கொண்டு, இணைய வசதி இல்லாமலேயே கூகுள் குரோமினை இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும். கூகிள் நிறுவனம் அனைத்தும் துறைகளிலும் வேகமாக முன்னேறி வருகிறது, ஈ-மெயில் என்றால் யாகூவினை பின்னே தள்ளி விட்டு ஜி-மெயில் முன்னேறி வருகிறது, அதே போல் தேடுபொறி சேவையிலும் மைக்ரோசாப்டின் தேடுபொறிகளை ஒரம் கட்டி விட்டதே என்று தான் சொல்ல வேண்டும்

Monday, February 20, 2012

கூகிள் குரோம்(google chrome) உபயோகிப்பவர்களுக்கு மேலும் ஒரு புதிய வசதி ,,,

நாம் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு சில வலைப்பக்கங்கள் பல விளம்பரங்கள், பிற தகவலகள் என பலதும் கலந்த கலவையாக இருக்கும். அவற்றில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வாசிக்க வேண்டுமெனில், அருகிலுள்ள கலர் கலரான பிற விளம்பரங்கள், படங்கள், பிற செய்திகள் நமக்கு எரிச்சலை தரும் விஷயமாக இருப்பதுண்டு.இது போன்ற சமயங்களில் நமக்கு பெரும் துணையாக இருப்பது Google Chrome உலாவிக்கான Reading Glasses நீட்சி! 



(தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).

Install பொத்தானை அழுத்தி உங்கள் கூகுள் க்ரோம் உலாவியில் பதிந்து கொண்ட பிறகு, இது நிறுவப்பட்டதற்கான அறிவிப்பு வலது மேற்புற மூலையில் தோன்றியிருப்பதை கவனிக்கலாம்.

இனி உங்களுக்கு தேவையான வலைப்பக்கங்களை திறந்து கொண்டு வாசிக்கிறீர்கள். உதாரணமாக..


இந்த பக்கத்தில் தலையங்கத்தை மட்டும் வாசிக்க வேண்டும் எனில், அதிலுள்ள டெக்ஸ்டின் ஏதேனும் ஒரு பகுதியை தேர்வு செய்து, வலது மேற்புற டூல்பாரில் உள்ள மூக்கு கண்ணாடி ஐகானை க்ளிக் செய்தால் போதுமானது.


நமக்கு தேவையான டெக்ஸ்ட்டை தவிர மற்றதனைத்தும் fade ஆகி, நாம் படிக்கும்பொழுது ஏற்படும் அலுப்பை தவிர்க்கிறது. மறுபடியும் பழையபடி மாற்ற, அதே ஐகானை க்ளிக் செய்தால் போதுமானது.

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget