APOLLOPARTHIBAN: password

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Tuesday, July 26, 2011

கடவுச்சொல் இல்லாமல் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்




கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள்

நுழையலாம். எப்படி நாமும் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்.

கணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை கண்டுபிடிப்பது ஹாலிவுட் படங்களில் மட்டுமல்ல இனி நாமும் நம் முகத்தை காட்டி கணினிக்குள் நுழையலாம். இதற்காக பல மென்பொருட்கள் இருந்தாலும் சில நேரங்களில் நாம் உள் நுழைய முடிவதில்லை. ஆனால் அதிகமான மக்களின் பேராதரவோடு இந்த முயற்சியில் வெற்றி பெற்ற ஒரு மென்பொருள் உள்ளது.

மென்பொருளின் பெயர் பிலிங்.இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளை நம் கணினியில் இண்ஸ்டால் செய்துகொள்ள வேண்டியது தான். வெப்கேம் அல்லது மடிக்கணினியுடன் வரும் கேமிரா முன் நம் முகத்தை காட்ட வேண்டும் அவ்வளவுதான் இனி உள்ளே செல்லலாம். விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இதன் 32 பிட் மற்றும் 64 பிட் வெர்சனும் கிடைக்கிறது.மென்பொருளின் அளவு 8.3 MB தான். மென்பொருள் இயக்க 25 முதல் 30 MB வரை இடம் தேவைப்படுகிறது. கணினிக்கு முன் இருந்து கொண்டு நம் முகத்தை காட்டினால் போதும் உள்ளே செல்லலாம். புதுமை விரும்பிகளுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த முகவரியைச் சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.
http://www.luxand.com/blink/ Download

Thursday, July 21, 2011

Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி

நமது கம்ப்யூட்டரில் நாம் நமக்கு தனிப்பட்ட விஷயங்களை வைத்து இருப்போம் அவற்றை மற்றவர்களிடம் இருந்து மறைத்து வைக்க சில சாஃப்ட்வேர்களையும் பயன்படுத்தி இருப்போம். ஆனால் அவை மற்றவர்க்கு நாம் அதை பயன்படுத்துவது தெரிந்தும் இருக்கும். எப்படி இதை மற்றவர்க்கு தெரியாமல் சாஃப்ட்வேர் இல்லாமல் செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.



  • முதலில் notepad ஐ ஓபன் செய்து கீழே உள்ள coding ஐ copy செய்யவும்.


cls
@ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%==type your password here goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
:End

  • இங்கு பச்சை நிறப் பிண்ணனியில் உள்ள type your password hereஎன்பதற்க்கு பதிலாக உங்கள் password ஐ நீங்கள் தரலாம்.
  • இப்போது இந்த file ஐ நீங்கள் என்ன பெயரில் மற்றும் எங்கு வேண்டுமானாலும் save செய்யுங்கள். ஆனால் அதை .bat என்ற extension உடன் Save செய்யவும். (Ex: yourname.bat)
  • இப்போது நீங்கள் Save செய்த இடத்தில் ஒரு புது File ஒன்று நீங்கள் குறிப்பிட்ட பெயரில்(Ex: yourname) உருவாகி இருக்கும்.
  • அதை click செய்யவும் இப்போது "Locker" என்ற பெயரில் புதிய Folder ஒன்று அங்கு உருவாகி இருக்கும்.
  • புதிய ஃபோல்டரில் உங்கள் பெர்சனல் File களை copy செய்யவும்.
  • இப்போது வெளியே வந்து மீண்டும் உங்கள் yourname ஐ click செய்து ஓபன் செய்யவும்.
  • இப்போது command promptஆனது ஓபன் ஆகி இந்த ஃபோல்டர் ஐ Secure செய்யவா என்று கேட்கும். இப்போது இங்கு Y என கொடுக்கவும்.இப்போது பாருங்கள் உங்கள் ஃபோல்டர் மறைந்து இருக்கும்.
  • மீண்டும் yourname ஐ ஓபன் செய்து command prompt இல் உங்கள் Password கொடுத்தால் அது மீண்டும் வந்து விடும்.
இதை நீங்கள் தேவையான போது செய்து கொள்ளலாம்.

  • உங்கள் yourname ஐ Hidden செய்து வைப்பதன் மூலம் அதையும் மறைத்து வைக்கலாம். {மீண்டும் Hidden செய்த folder ஐ பார்க்க My computer--> Tools--> Folder Options--> View--> Click "Show Hidden Files, Folders and Drives". }
  • நீங்கள் Password ஐ மறந்து விட்டாலும் இந்த Notepad File ஐ ஓபன் செய்து அதில் ஏற்கனவே password கொடுத்த இடத்தில் பார்த்து நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

Wednesday, July 20, 2011

எந்த மென்பொருளும் இல்லாமல் Folder க்கு Password கொடுப்பது எப்படி..?




எந்தமென்பொருளும் இல்லாமல் போல்டருக்கு பாஸ்வேர்ட் கொடுப்பது Windows Xp system இல் முடியும். இதற்கு உங்கள் Hard disk NTFS முறையில் Format செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இனி எந்த போல்டரை உங்களுடையதாக மட்டும் ஆக்கிட வேண்டுமோ அதில் ரைட் கிளிக் செய்து Properties கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் Windows sharing என்ற Tab ஐக் click செய்தால் “Make this folder private” என்ற பெட்டி தெரியும். இதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.

பின் Apply என்ற பட்டனை அழுத்தவும். உங்களுடைய கம்ப்யூட்டர் அக்கவுண்டிற்கு தனியாக Password இல்லை என்றால் கம்ப்யூட்டர் உங்களிடம் இந்த Folder க்கு Password கேட்கும்.



Password கொடுத்து உறுதி செய்தபின் “Create Password” என்ற பட்டனை அழுத்தி பின் Password விண்டோவினை மூடவும்.

பின் Properties Dialog Box இல் OK அழுத்தி மூடவும். இனி Password தராமல், நீங்கள் உட்பட, இந்த Folder க்குள் நுழைய முடியாது. எனவே, நீங்களும் இந்த Password ஐ சரியாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எந்த மென்பொருளையும் பிறர் பயன்படுத்தாமல் செய்ய!!




கணணியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு குறைபாடுகள் வரலாம். நீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்று நினைக்கலாம்.



சிலர் உங்கள் மென்பொருளில் நுழைந்து எதாவது மாற்றம் செய்துவிடலாம். அலுவலகத்தில் வேலை செய்யும் போதும், கல்லூரிகளில், பள்ளிகளில் போன்ற பொது இடங்களில் பணிபுரியும் சூழ்நிலையில் இந்த மாதிரி கட்டுப்படுத்தும் செயல் அவசியமானது. இதனை நீங்கள் Group Policy Editor மூலமாகவும் செய்யலாம்.

ஆனால் எளிமையாக கையாள இலவச மென்பொருள் Appadmin உள்ளது. முக்கியமான மென்பொருள்களை எவரும் பயன்படுத்த முடியாதபடி இந்த மென்பொருள் மூலம் எளிமையாக செய்யலாம்.

இது மென்பொருள்களுக்கு கடவுச்சொல் கொடுத்து(password protect) அதை முடக்குகிறது. இதன் கடவுச்சொல் தெரிந்தவர்கள் மட்டுமே இதை பயன்படுத்த முடியும். இதில் முதலில் உங்களுக்கான கடவுச்சொல்லை கொடுத்து விட வேண்டும்.

பின் Block என்பதை கிளிக் செய்தால் எந்த மென்பொருளை தடை செய்கிறீர்களோ அதனை தேர்வு செய்துவிட வேண்டும். மேலும் இன்னொரு வசதியாக எந்த மென்பொருளையும் இதன் விண்டோவில் இழுத்து விட்டால்(Drag and drop) கூட போதும்.

இதன் வடிவமைப்பு பயன்படுத்த எளிமையாக உள்ளது. இதை நிறுவத்தேவையில்லை. அப்படியே தரவிறக்கி பயன்படுத்தலாம்.

தரவிறக்க சுட்டி

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget