APOLLOPARTHIBAN: camera

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Saturday, April 7, 2012

ஷட்டர் க்ராஷ் (SHUTTER CRASH)

 ஷட்டர் க்ராஷ் (Shutter Crash) காமிராவுக்கு ஹார்ட் அட்டாக் மாதிரி.

ஷட்டர்:
உங்களுக்குத் தெரிஞ்சாலும், ஷட்டருக்கு ஒரு சின்ன அறிமுகம். ஷட்டர் (shutter) லென்ஸ் மூலமா உள்ள வாரும் ஒளிய நிறுத்தும் அல்லது அப்பாச்சர் (Aperture) அளவுக்கு ஏற்ப ஒளிய காமிராவோட சென்சருக்குஅனுப்பும். கிளிக் அதுதான் காமிராவோட இதயத் துடிப்பு!
 
(படம் - 1)
ஷட்டர்கள் காமிரா மாடல்களுக்கு ஏற்ப வேறுபடும். (உ+ம்) Canon EOS 1Dயோட ஷட்டர் இப்படியிருக்கும்.

(படம் - 2)
ஒவ்வொரு முறை நீங்கள் படம் எடுக்கும்போதும் ஷட்டர் திறந்து மூடுகிறது. இச் செயற்பாட்டுக்கு மெல்லிய பிளேடுகள் மூல காரணம். பிளேடுகளின் இணைப்புகள் தளர்வடைதல், பிளேடுகள் வளைதல் மற்றும் உடையும்போது ஷட்டர் க்ராஷ் ஆகிறது. ஷட்டர் க்ராஷ் ஆகினால் என்ன நடக்கும்? படத்தில் ஒரு பகுதியோ அல்லது முழுப் பகுதியோ இருட்டாக காட்சியளிக்கும் (பார்க்கவும் படம் - 3) அல்லது காமிரா பிழைச் செய்தி காட்டி இயங்க மறுக்கும்.

(படம் - 3)
ஷட்டர் க்ராஷ் தவிர்க்கக் கூடியதா?
பாவிக்காமல் வைத்திருந்தால் தவிர்க்கலாம்! எந்த உபகரணமும் தேய்வு அடையக் கூடியதும், பழுதடையக் கூடியதுமே. எனவே இங்கு தவிர்த்தல் என்பது நம கையில் இல்லை. கீழுள்ள சுட்டியூடாக உங்கள் ஷட்டரின் ஆயுளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
என்னுடைய Canon EOS 450D ஷட்டரின் சராசரி ஆயுள் 35066.1. அதாவது ஏறக்குறைய 35066.1 தடவைகளின்போது/படங்களின்போது என்னுடைய காமிராவுக்கு ஹார்ட் அட்டாக் வரலாம். இந்த எண்ணிக்கை கூடிக் குறையலாம். உண்மையில் என்னுடைய காமிராவுக்கு ஏறக்குறைய 37000 படங்களின் பின் மேலேயுள்ள படத்தைத்தான் (படம் - 3) தந்தது.

ஷட்டர் பழுதடைந்து விட்டது என்பதை விளங்கிக் கொண்டதும் உடனடியாக காமிராவின் இயக்கத்தை நிறுத்தி விடுங்கள். நீங்கள் மேலும் முயன்றால், உடைந்த ஷட்டர் பிளேடுகள் காமிராவின் சென்சரை தேமாக்கி முழு இழப்பை உருவாக்கிவிடும். ஒரு நல்ல டெக்னிஷியனிடம் காட்டி புது ஷட்டர் பிளேடுகள் வாங்கி மாற்றிவிடுங்கள்.

இதுவரை எத்தனை கிளிக்?
ஒபன்டா மென்பொருள் உங்களுக்கு உதவக் கூடியது. இது காமிரா பற்றிய பல விடயங்களைத் (EXIF) தரக்கூடியது. அதில் உங்கள் காமிரா எத்தனை கிளிக் செய்துள்ளது என்பதை (படம் - 4) உங்களால் கண்டு கொள்ள முடியும். (காமிராவோட பொதுவான சீரியல் இலக்கம், உள்ளக சீரியல் இலக்கம், பாவிக்கப்பட்ட லொன்ஸ் என்பனவற்றையும் கண்டுகொள்ளலாம்.) மென்பொருள் கொண்டு சேமித்த கோப்புகள், மற்றும் சில வகை காமிராக்களின் தரவுகளை இது சில வேளை விட்டுவிடலாம். நான் சோதனை செய்து பார்த்ததில், Nikon D70S தரவுகளை சரியாக கணித்தது, Canon EOS 450D தரவுகளை சரியாக கணிக்கவில்லை.

(படம் - 4)
  உங்களுக்கு சரியான முழு தகவலும் கிடைக்கவிட்டால் கீழேயுள்ள சுட்டிகள் காட்டும் இடங்களில் முயற்சி செய்யுங்கள். பொதுவாக ஒபன்டா பல காமிராக்களைக் கையாளக் கூடியது.

Wednesday, March 14, 2012

டிஜிட்டல் கேமிரா வாங்க உதவும் பயனுள்ள தளம்.

புகைப்படம் எடுப்பது பலருக்கும் பொழுது போக்காக இருந்தாலும் பல நேரங்களில் சிறந்த கேமிரா எது வென்று தெரியாமல் நமக்கு பயன் படாமலே இருக்கும், சிறந்த டிஜிட் டல் கேமிரா எது என்று நமக்கு சொல்வதற்காக ஒரு தளம் உள்ளது ஒரு நாட்டில் கிடைக்கும் கேமி ராக்கள் மற்றொரு நாட்டில் கிடை ப்பதில்லை என்ற கால மெல்லாம் மலையேறி விட்டது, ஆம் உலகின் எந்த நாட்டில் இருந் தும் எந்த நிறுவ னத்தின் கேமிராவையும் நாம் வாங்கி கொள்ளலாம், நம் தேவைக்கு தகுந்தபடி சிறந்த கேமிரா எது என்பதை நமக்கு சொல்வத ற்காக ஒரு தள ம் http://snapsort.com இருக்கிறது.
புகைப்படம் எடுப்பதற்காக கேமிரா வாங்கினாலும் அதில் குறிப்பிட்டு நம் தேவையை சொல்லி அதற்கான கேமிராவை வாங்கினால் மேலும் சிறப்பாக இருக்கும் என் று எண்ணுபவர்களுக்கு இத்தளம் ஒரு வரப் பிரசாதம் தான்.  என்ன தேவைக்காக பயன்படு த்த போகிறோம், விலை எவ்வளவுக் குள் இரு க்க  வேண்டும் என்று கொடுத்து தேடினால் பல வகையான நிறுவனங்களின்  கேமிராவை காட் டும் ஒவ்வொரு கேமிராவிலும் இருக் கும் சிறப் பம்சம் என்ன என்பதையும் அதை மற்ற நிறு வத்தின் கேமிராவுடன்  ஓப்பிட்டும்  காட்டும்.தற்போது மார்க்கெட்டில் இருக்கும் அனைத்து வகையான  கேமிராக்களையும் நாம் இத்தளத்தில் சென்று தேடலாம், சில கேமிராக்களின்  செயல்படும் வீடியோ கூட இத் தளத்தில் காட்டப்படுகிறது. சரியான விலையில் திறமையான கேமிர வை தேர்ந்தெடுக்க விரும்பும்  அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள் ளதாக இருக்கும்.

Thursday, February 16, 2012

SLR கேமரா பயன்படுத்தும் வழிமுறைகள்.

பள்ளியில் படிக்கும் காலங்களில் குரூப் புகைப்படம் எடுக்கையில் அனைத்து மாணவர்களையும் நிற்க வைத்து டிரங் பெட்டி சைஸ் கேமராவை கருப்பு துணியை போர்த்தி புகைப்படம் எடுப்பார்கள்.அடுத்து கருப்பு வெள்ளை புகைப்படங்கள் வந்தது.அடுத்து கலர் புகைப்படங்கள் வந்தது. அதுவும் முதலில் சிங்கப்பூர் மலேசியாவில் சென்று பிரிண்ட் போட்டுவருவார்கள்.தற்போது டிஜிட்டல் வரை வந்து அதற்கு மேலும் மாடல்கள் கேமரா வந்துவிட்டது.SLR கேமராவும் அந்த வகையில் வந்துள்ள கேமரா..இதில் பல செட்டிங்ஸ் உள்ளது. ஒவ்வொரு செட்டிங்ஸ்ஸையும் நாம் செட் செய்து பிரிண்ட்போட்டு ரிசல்ட் எப்படி வருகின்றது என பார்க்கவேண்டும். ஆனால் இந்த தளத்தில் SLR கேமரா மூலம் நாம் எடுக்கும் புகைப்படங்களை விதவிதமான செட் செய்து அப்போதே ரிசல்ட் பார்க்கலாம்.அந்த முகவரி தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில ஓரு சிறுமியின் புகைப்படம் இருக்கும். அதில் கீழே பலவிதமான செட்டிங்ஸ் இருக்கும். நாம்அதில் உள்ள ஸ்லைடரை தேவையான அளவுக்கு நகர்த்தி பின்னர் அதில் உள்ள Snap Photo கிளிக் செய்யவும்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.நமது செட்டிங்ஸ்க்கு ஏற்ப படம் நமக்கு டிஸ்பிளே ஆகும்.
நமது புகைப்படத்தை பற்றிய விமர்சனமும் உடன் தோன்றும். அதற்கேற்ப நாம் புகைப்படங்கள் எடுக்கும் திறமையை வளர்த்துக்கொள்ளலாம்.இந்த பதிவு புதிதாக கேமரா வாங்க நினைப்பவர்களுக்கும் ஏற்கனவே கேமரா வைத்துள்ளவர்களுக்கும் பயன்படும். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget