APOLLOPARTHIBAN: face book

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Sunday, August 19, 2012

பேஸ்புக்கி​ற்குரிய அல்பங்களை தரவிறக்கம் செய்ய உதவும் குரோம் நீட்சி

Download FB album: பேஸ்புக்கி​ற்குரிய

பிரபல சமூக இணையத்தளமான பேஸ்புக் தளத்தில் பயன்படுத்துவதற்கு தேவையான வெவ்வேறு அல்பங்களையும், படங்களையும் தரவிறக்கம் செய்வற்கு கூகுள் குரோம் நீட்சி ஒன்று பயன்படுகின்றது.
குறித்த நீட்சியை நிறுவிய பின்னர் சில கிளிக் மூலம் ஒன்றிற்கு மேற்பட்ட அல்பங்கள் அல்லது படக்கோப்புக்களை ஒரே நேரத்தில் தரவிறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்வரும் படிமுறைகளை செயற்படுத்துவதன் மூலம் படங்களை தரவிறக்கம் செய்ய முடியும்.
1. குறித்த குரோம் நீட்சியின் உதவியுடன் பேஸ்புக் அல்பம் காணப்படும் இணையப்பக்கத்திற்கு சென்று அங்கு காணப்படும் "Download FB photos" எனும் ஐகானை கிளிக் செய்யவும்.
2. தொடர்ந்து தென்படும் படங்களினைத் தெரிவு செய்து "Ctrl+S" கீக்களை பிரயோகித்து கணனியில் சேமிக்கும் போது, குறித்த படங்கள் அடங்கிய போல்டர் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கும்.

Thursday, July 5, 2012

பேஸ்புக்கில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நாம் Offline ஆவது எப்படி?


பேஸ்புக் அடிக்கடி பல மாற்றங்களை செய்து வருவது நாம் அறிந்ததே. ஆனால் நிறைய மாற்றங்களை வாசர்களுக்கு தெரிவிப்பது இல்லை. அதில் சமீபத்திய ஒரு மாற்றம் தான் சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நாம் Offline-இல் இருப்பதாக காண்பிப்பது. 


இதன் மூலம் நீங்கள் ஆன்லைனில் உள்ளபோது உங்களுக்கு யாரேனும் அடிக்கடி சாட்டில் வந்து தொல்லை தந்தால் அந்த குறிப்பிட்ட நபருக்கு மட்டும் நீங்கள் Offline-இல் இருப்பதாக காட்ட முடியும். ஆனால் மற்றவர்களுக்கு நாங்கள் ஆன்லைனில் இருப்பீர்கள். 

குறிப்பாக பெண்களுக்கு இது பயன்படும். [ஆண்கள் மன்னிப்பார்களாக]


முதலில் குறிப்பிட்ட நபரின் பெயர் மீது கிளிக் செய்யவும். இதற்கு அவர் ஆன்லைனில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் பெயர் லிஸ்ட்டில் இல்லை என்றால் Search-இல் பெயரை கொடுத்து தேடவும்.  இப்போது Chat Box  ஓபன் ஆகி இருக்கும். 


இப்போது மேலே படத்தில் உள்ளது சிறிய Settings icon மீது கிளிக் செய்து வரும் மெனுவில் "Go Offine to Mister X" என்பதை கிளிக் செய்து விடுங்கள். இனிமேல் அவருக்கு நீங்கள் எப்போதும் Offline -இல் இருப்பதாகவே தெரியும். 

இதை மாற்ற மறுபடியும் இதே பகுதியில் வந்து Go Online என்று கொடுத்து அவருக்கு நீங்கள் ஆன்லைன் வந்து விடலாம்.


Wednesday, May 9, 2012

பேஸ்புக்கில் தேவையற்ற Apps ஐ நீக்குவது எப்படி?

தொடர்ச்சியாக பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் ஏராளமான பேஸ்புக் Apps களுக்கு பேஸ்புக்கில் உங்கள் விபரங்களை பயன்படுத்துவதற்கென அனுமதி வழங்கியிருப்பீர்கள்.
இதில் சில இணையத்தளங்களை பேஸ்புக் யூசர் நேம் பாஸ்வேர்ட் கொண்டு லாகின் செய்தும் இருக்கலாம்.

பேஸ்புக்கில் பிரைவசி தொடர்பில் அக்கறை கொண்டவராயின் இவ்வாறு அனுமதி அளித்த அப்பிளிகேஷன்களை அறிந்து அவற்றில் தேவையற்ற மற்றும் பழைய அப்களை நீக்கிவிடுவது சிறந்ததாகும்.

இதைச் செயவதற்கென

1. பேஸ்புக்கில் லாகின் செய்தபின்னர் உங்கள் பெயருக்கு கீழே இருக்கும் drop-down  மெனுவில் "Privacy Settings."  ஐ தெரிவு செய்யுங்கள்.
  
2. அதில் Apps and Websites  சென்ற பின்னர் Edit Settings ஐ அழுத்துங்கள்
  
3. "Apps You Use," இல் கிளிக் செய்தபின்னர் "Edit Settings" அழுத்தினால் application settings செல்ல முடியும்.
4. அங்கே பட்டியலிடப்படும் application  களில் பழைய மற்றும் தேவையற்றதை X அடையாளத்தை கிளிக் செய்வதன் மூலம் நீக்கிவிடலாம்.
  
பேஸ்புக் பாதுகாப்பு நடவடிக்கையாக மேலுள்ள படிமுறையை செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் தேவையற்றவர்களுக்கு கிடைப்பதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.
  
application settings நேரடி இணைப்பு https://www.facebook.com/settings/?tab=applications

Saturday, April 21, 2012

face bok Short cut Key.....


இச்சிரமங்களைத் தவிர்ப்பதற்காக Short cut Keyக்களை பயன்படுத்த முடியும். எனினும் இச் Short cut Keyக்கள் கூகுள் குரோம், பயர்பொக்ஸ் என்பனவற்றில் வினைத்திறனாகச் செயற்படுவதுடன் இரண்டு உலாவிகளுக்கிடையிலும் Short cut Keyக்களை பிரயோகிப்பதில் சிறிய வேறுபாடு காணப்படுகின்றது.
அதாவது கூகுள் குரோமில் Alt Key பயன்படுத்தும் அதேவேளை Firefoxல் Shift+Alt Key பயன்படுத்த வேண்டும்.
குரோமிற்கான Short cut Keyக்கள்
Alt+m: New Message
Alt+0: Help Center
Alt+1: Home Page
Alt+2: Profile Page
Alt+3: Manage Friend List
Alt+4: Message List
Alt+5: Notification Page
Alt+6: Account Setting
Alt+7: Privacy Setting
Alt+8: Facebook Fan Page
Alt+9: Facebook Terms
Alt+?: Search Box
Firefoxல் பயன்படுத்தும் போது உதாரணமாக,
Shift+Alt+m: New Message என உபயோகிக்க வேண்டும்.

Wednesday, February 29, 2012

[♥] பேஸ்புக்கை பழைய தோற்றத்திற்கு மாற்ற Disable Timeline........

உலகில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படும் முதன்மை சமூக தளமான பேஸ்புக் தளம் வாசகர்களின் ப்ரோபைல் பக்கங்களுக்கு Timeline எனப்படும் புதிய தோற்றத்தை வெளியிட்டது. இந்த புதிய தோற்றம் சிலருக்கு பிடித்தும் சிலருக்கு பிடிக்காமலும் உள்ளது. இருந்தாலும் இந்த Timeline தோற்றம் பிடிக்குதோ இல்லையோ அனைவரும் கட்டாயமாக உபயோகித்தே ஆக வேண்டும் என வாசகர்களிடத்தில் திணித்தது பேஸ்புக் தளம். 800 மில்லியன் வாசகர்களை கொண்ட ஒரு தளம் இது போல நடந்து கொண்டது பலபேருக்கு அதிருப்தியை அளித்தது. இருந்தாலும் வேறு வழி இல்லாமல் இந்த Timeline தோற்றத்தை உபயோகித்து வருகின்றனர். உங்களுக்கும் இந்த Timeline தோற்றம் பிடிக்கவில்லையா? பழைய தோற்றத்திற்கு மாற விரும்புகிறீர்களா? ஆம் என்றால் கீழே உள்ள வழிமுறையை பின்பற்றி Timeline தோற்றத்தை டிசப்ளே செய்யுங்கள்.


 
முதலில் இந்த  Timeline Remove   ல் கிளிக் செய்து இந்த தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். 
உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 



பயர்பாக்ஸ் மற்றும் குரோம் உலவிகளை பயன்படுத்துபவர்கள் அதற்க்கான லோகோவில் கிளிக் செய்து அந்த நீட்சியை உங்கள் பிரவுசரில் இணைத்து கொள்ளுங்கள் (IE, SAFARI உலவி உபயோகிப்பவர்களுக்கான நீட்சி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்).
இந்த நீட்சி உங்கள் பிரவுசரில் இன்ஸ்டால் ஆகிய உடன் பேஸ்புக் ப்ரோபைல் பக்கத்தை ஓபன் செய்து பாருங்கள் TIMELINE தோற்றம் மறைந்து பழைய தோற்றத்தில் வந்திருப்பதை காண்பீர்கள்.

இந்த நீட்சியை Un Install செய்வதன் மூலம் எந்த நேரத்திலும் Timeline தோற்றத்தை மீண்டும் கொண்டு வரலாம்

Sunday, February 5, 2012

உங்கள் பேஸ்புக் கணக்கை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறிய வேண்டுமா?

பேஸ்புக் முகப்பில் உங்களுக்கு தெரியாமல் வேறுயாரவது விடயங்களை பிரசுரிக்கிறார்களா? அல்லது நண்பர்கள் நீக்கப்படுகின்றனரா? 

அண்மையில் பேஸ்புக் ஸ்தாபகரின் கணக்கே ஹேக் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். இவ்வாறு பேஸ்புக் கணக்கை வேறு யாரும் பயன்படுத்தினால் உடனடியாக உங்களுக்கு தெரியப்படுத்த என்ன செய்யலாம்?
இதற்கு பேஸ்புக்கில் பாதுகாப்பு வசதியொன்று உள்ளது. பேஸ்புக் லாகின் செய்து Facebook.com -> Account -> Account Settings -> Account Security செல்லுங்கள்.
பின்னர் அங்கு IP முகவரியை வைத்து பேஸ்புக் கணக்கு எங்கிருந்து கையாளப்படுகிறதென்ற விபரங்கள் காட்டப்படும். இதில் சந்தேகம் வரும்படியான இடங்கள் காட்டப்பட்டால் உடனடியாக அதை “end activity " செய்துவிடுங்கள்.

மேலதிக பாதுகாப்பு வசதியாக வேறு எங்கிருந்தாவது பேஸ்புக் கணக்கு அக்செஸ் செய்யப்பட்டால் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு கொடுத்து விடலாம். அல்லது உங்கள் கணக்குடன் மொபைல் எண்ணை இணைத்திருந்தால் எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிக்குமாறூம் செய்துவிடலாம்.

மேலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு send me an email என்பதையும், மொபைல் வசதி இருந்தால் send me a text message என்பதையும் டிக் செய்து விட்டால் மின்னஞ்சலில் அல்லது எஸ்.எம்.எஸ்  இல் பேஸ்புக் கணக்கை வேறு இடத்திலிருந்து யாரும் அக்செஸ் செய்தால் அந்த தகவல்கள் தெரியப்படுத்தப்படும்.

Sunday, January 8, 2012

பேஸ்புக் வழியே இலவச sms உங்களின் நண்பரின் மொபைலுக்கு அனுப்ப



                   இணையம் வழியாக sms அனுப்ப எண்ணற்ற தளங்கள் இருந்தாலும் 
உங்களுக்கு  பிடித்த பேஸ்புக் வழியாக அனுப்பினால் உங்களுக்கு மகிழ்ச்சி தானே . அதுவும் உங்களுக்கு பிடித்த மொபைல் எண்ணுக்கு அனுப்பலாம்.இந்த பதிவில் அதை பற்றி பார்க்கலாம்.
          
    முதலில் உங்கள் facebook உள்ளே நுழைந்து கொள்ளுங்கள்
          
              அடுத்து chatsms application செல்லுங்கள் அடுத்து உங்களிடம் அனுமதி கேட்கும் .
    
           அனுமதி கொடுத்தவுடன் அந்த பக்கத்திற்கு சென்று உங்களுடைய sms
ஐ அனுப்பலாம் . இதில் நூறு எழுத்துக்களை மட்டுமே அனுப்ப முடியும்.

-- 

Friday, December 9, 2011

பேஸ்புக் ஆல்பங்களை ஷிப் கோப்புகளாக சேமிப்பதற்கு


முக்கியமான ஒளிப்படங்களை சேமிப்பதற்கு பேஸ்புக்கையே நாடுகின்றனர்.
எனினும் ஆல்பங்களாக சேமிக்கப்பட்டிருக்கும் படங்களை ஷிப் கோப்புக்களாக தரவிறக்கி கணணியில் சேமிக்க உதவுகிறது ஒரு இணையத்தளம்.
குறிப்பிட்ட இணையத்தளத்திற்கு சென்ற பின்னர் பேஸ்புக் கணக்கின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் தந்து உள்ளே சென்றதும், உங்களது ஆல்பங்களையோ அல்லது நண்பர்களின் ஆல்பத்தையோ தெரிவு செய்து ஷிப் கோப்புக்களை தரவிறக்கி கொள்ளலாம்.

Saturday, November 5, 2011

பேஸ்புக்கிலிருந்து வரும் தேவை இல்லாத இமெயில்களை தடுப்பது எப்படி?


இன்றைய இணைய யுகத்தில் பேஸ்புக் பயன்படுத்ததாவர் எவருமே இருக்க மாட்டார். அதனால் நமக்கு சில பிரச்சினைகளும் உள்ளது. முக்கியமானது தேவை இல்லாமல் மின்னஞ்சல்கள் வருவது.அதை எப்படி தவிர்ப்பது என்று சொல்வதேஇந்தப் பதிவு.


பேஸ்புக் மூலம் நமக்கு சில பிரச்சினைகளும் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது நம் நண்பர்கள் நம் ஸ்டேட்டஸ் மீது ஒரு கிளிக் செய்தாலே நமக்கு மின்னஞ்சல் வருவது. இதை எப்படி தடுப்பது என்றுதான் இன்றைய பதிவு.முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழையவும்.



மேலே உள்ளது போல பக்கத்தின் வலது பக்கம் Home என்பதற்கு அருகில் சொடுக்கவும் செய்து Account Settings செல்லவும். இதில் இடது புறம் Notifications என்பதை சொடுக்கவும்




இப்பொழுது, இதில் மேலே படத்தில் உள்ளதை போல Email Frequencyஎன்பதை சொடுக்கவும். இதன் மூலம் உங்களுக்கு ஒவ்வொரு முறையும் மின்னஞ்சல் வராது, மாறாக Photo Tag, Payment Confirmation, Security, and Privacy Notifications மற்றும் சில முக்கியமான செய்திகள் (இது நீங்கள் ரொம்ப நாளாக பேஸ்புக் பக்கம் வராவிட்டால் பிரபல செய்திகள், உங்கள் சுவற்றில்(Wall) நண்பர்கள் எழுதியது போன்றவை ஒரே மின்னஞ்சலில் வரும் ).

எந்த மின்னஞ்சலும் வேண்டாம் என்பவர்களும் இதையே தெரிவு செய்து கொள்ளலாம்.

இல்லை எனக்கு சில விஷயங்கள் மின்னஞ்சலில் வர வேண்டும் என்று கேட்பவர்கள் இதனைசொடுக்கமல் விட்டு கீழே All Notifications என்ற பகுதியில் உங்களுக்கு தேவையான ஒன்றின் மீது (Photos, Pages இது போன்று ) கிளிக் செய்து தேவையான Notification தெரிவு செய்து Save செய்து விடுங்கள். இதன் மூலம் உங்கள் விருப்பமானவற்றை மட்டும் மின்னஞ்சலில் பெறலாம்.

சைட் டிஷ்:

மிக முக்கிய காரியம் முடிந்து விட்டது இனி குட்டி தகவல்கள்.

Facebook அக்கவுண்ட் Email முகவரியை மாற்றுவது எப்படி?

Facebook => Account Settings => Email இதில் உங்கள் Primary இமெயில் ஆக ஒன்றை தெரிவு செய்து கொள்ளலாம். ஏற்கனவே இருந்தால் ஒன்றை தெரிவு செய்து கொள்ளுங்கள், இல்லை புதியதாக ஒன்றை கொடுத்து (Add Another Email) Primary ஆக மாற்றிக் கொள்ளலாம்.

நமது பேஸ்புக் கணக்கை வேறு யாரேனும் பயன்படுத்துகிறாரா என்று அறிவது எப்படி?

Facebook => Account Settings => Security => Login Notifications இதை enable செய்யவும். இதன் மூலம் உங்கள் கணக்கில் நீங்கள் இதுவரை பயன்படுத்தாத கணினியில் இருந்து Log-in செய்தால் உங்களுக்கு மின்னஞ்சல் வந்துவிடும். (கவனிக்க. வேறு கணினி, உங்கள் கணினி அல்ல)

இதை Enable செய்த உடன் ஒருமுறை Log-அவுட் செய்து பின்னர் நுழையவும், அப்போது உங்கள் கணினிக்கு ஒரு பெயர் கேட்கும் கொடுத்து விடுங்கள்.

கடந்த நுழைவுகளை பார்ப்பது எப்படி?

Facebook => Account Settings => Security => Active Sessions இதில் நீங்கள் உங்கள் கணக்கில் நுழைந்த வேறு வேறு இடம்/கணினி மூலம் நுழைந்து இருந்தால் அவற்றை காட்டும், எது வேண்டாமோ அல்லது சந்தேகமோ அதை End Activity கொடுத்து விடலாம்.

பேஸ்புக் App's களுக்கு கடவுச்சொல் வைப்பது எப்படி?

சில பேஸ்புக் பயன்பாடுகள் (Applications) Secure ஆனது அல்ல. எனவே அவற்றுக்கு கடவுச்சொல் கொடுத்தால் நல்லது தானே. Facebook => Account Settings => Security => App Passwords இதில் பயன்பாட்டின் பெயரைக் கொடுத்து விட்டால் போதும்.

Thursday, October 20, 2011

பேஸ்புக்கில் Timeline ஐ Remove செய்வது எப்படி?

பேஸ்புக் அன்மையில் Timeline எனப்படும் புதிய தோற்றத்தை அறிமுகப்படுத்தி இருந்தது, இந்த தோற்றம் ஒரு சில பேருக்கு பிடித்து இருந்தாலும் எனக்கு .இந்த தோற்றம் பிடிக்கவில்லை....இதனைActivate செய்து விட்டு எப்படி Remove செய்வது என்று தெரியாமல் இருக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.


இங்கு சென்று கீழ் உள்ள படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்.








சரி.இப்பொழுது உங்களுடைய profile இற்கு போய் பாருங்கள்.... பழைய தோற்றம் தெரியும்.

Thursday, September 29, 2011

பேஸ்புக்கில் உங்களை Unfriend செய்தவர்களை சுலபமாக கண்டறிய புதிய வசதி-Timeline Users

பேஸ்புக் தளம் Timeline எனப்படும் புதிய தோற்றத்தை அனைவருக்கும் தெரிவித்து உள்ளது. (இந்த புதிய தோற்றத்தை ஆக்டிவேட் செய்யாதவர்கள் இங்கு சென்று ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்). இந்த புதிய தோற்றத்தின் நோக்கம் பெச்புக்கின் அனைத்து தகவலும் ஒரே பக்கத்தில் எதற்க்காவும் உள்ளே செல்ல வேண்டிய அவசியமில்ல. மற்றும் இந்த புதிய தோற்றத்தில் சில வசதிகள் மறைந்தும் உள்ளது. அதில் ஒன்று தான் உங்களை நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கியவர்களை பார்க்கும் வசதி. அதன் படி உங்களை நீகியவர்களை எப்படி காண்பது என கீழே பார்ப்போம்.

முதலில் உங்கள் பேஸ்புக்கின் profile பகுதிக்கு செல்லுங்கள். அதில் உங்கள் ஸ்க்ரோல் பாரை நகர்த்தி கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளது போல இருக்கும் பகுதிக்கு செல்லுங்கள்.

  • அதில் Made friends என்று இருக்கும் லிங்கில் கிளிக் செய்யுங்கள்.
  • உங்களுக்கு இன்னொரு popup விண்டோ ஓபன் ஆகும்.
  • இந்த மாதத்தில் உங்களுக்கு நண்பர்களாக சேர்ந்தவர்கள் பட்டியல் இருக்கும் அதில் ஒவ்வொரு நபருக்கும் நேராக Friends என்ற ஒரு பட்டன் இருக்கும்.
  • ஆனால் உங்களை யாராவது பட்டியலில் இருந்து நீக்கி இருந்தால் அவர் பெயருக்கு நேராக Add Friend என்ற பட்டன் இருப்பதை பார்க்கலாம்.

இந்த பட்டன் இருந்தால் அவர் உங்களை அவரின் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளார் என அறிந்து கொள்ளலாம்.

Saturday, September 24, 2011

பேஸ்புக்கில் Subscribe வசதியை பயன்படுத்துவது எப்படி?

பேஸ்புக் (Facebook) நிறுவனம் தனது உறுப்பினர்களைத் தக்க வைக்க புத்தம் புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. நாம் இப்போது பார்க்கப் போவது Subscribe வசதியைப் பற்றி. Subscribe என்றால் குறிப்பிட்ட நண்பர்கள் நமக்குப் பிடித்திருந்தால் நாம் அவர்களுக்கு நண்பராகச் சேரப்போவது இல்லை. அவர்களது பப்ளிக் (Public) செய்திகள்/அப்டேட்கள் மட்டும் நமக்குத் தெரிந்தால் போதும். இதனால் Friend Request கொடுத்து தொல்லை செய்யத் தேவையில்லை. சப்ஸ்கிரைப் செய்வதன் மூலம் அவர்களின் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.

பிரபலமானவர்கள், சினிமா நட்சத்திரங்கள் போன்ற உங்களுக்குத் தெரியாத நபர்களின் அப்டேட்களை நாமும் பெற இந்த வசதி உதவுகிறது. இதற்கு அவர்களின் புரோபைல் பக்கத்தில் சென்று Subscribe செய்தால் போதுமானது. இந்த வசதி Twitter இன் Followingவசதி மற்றும் கூகிள் பிளஸின் Add to circles வசதியை ஒத்ததாக எடுத்துக் கொள்ளலாம். இதில் அவர்கள் Public என்று வெளியிடுகிற செய்திகளை மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும். அந்தரங்க தகவல்களை அறிய வேண்டுமானால் சற்று முயற்சி செய்து நண்பரானால் தான் உண்டு. சரி இந்த வசதியை நமது புரொபைலுக்கு ஆக்டிவேட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

கீழுள்ள சுட்டியைக் கிளிக் செய்து பேஸ்புக்கின் சப்ஸ்கிரைப் பக்கத்திற்கு சென்று அதில் Allow Subscribers என்ற பட்டனைக் கிளிக் செய்யுங்கள்
http://www.facebook.com/about/subscriptions
அடுத்து Subscribe Settings பக்கம் வரும். இதில் மூன்று அமைப்புகள் உள்ளன.
1.யாரெல்லாம் உங்கள் செய்திக்கு கமெண்ட் போடலாம் என்பது. (who can comment)
2.யாருடைய ஆக்டிவிட்டிகள் எல்லாம் உங்களுக்குத் தெரிவிப்பது என்பது (Notification)
3.நண்பர்களுடைய நண்பர்கள் அதிகமாக நமக்கு Friend Request கொடுக்காமலிருக்க வழி செய்தல்

மேற்கண்ட அமைப்புகளை அமைத்து விட்டு ஒகே பட்டனைக் கிளிக் செய்தால் உங்களுக்கான Subscribe வசதி ஆக்டிவேட் செய்யப்படும். இதன் பின் உங்கள் செய்திகளைப் பின் தொடர நினைக்கும் நண்பர்கள் Subscribe பட்டனைக் கிளிக் செய்து கொண்டால் நீங்கள் பப்ளிக்காக வெளியிடும் செய்திகள் அவர்களுக்கு சென்று சேரும்.

அடுத்து நாம் அடுத்தவரின் Subscribe வசதியைக் கிளிக் செய்து சேரும் போதே எந்த மாதிரியான அப்டேட்கள் மட்டுமே வேண்டும் என முடிவு செய்து கொள்ளலாம்.
All Updates, Most Updates, Only Important போன்ற வகைகளில் எதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். அதே போல அப்டேட் செய்யப்படும் செய்திகளைப் பொறுத்து ஃபேஸ்புக் வகைப்படுத்தியிருக்கிறது. Status, Photos, Comments, Activites, Likes போன்றவற்றில் வேண்டாதவற்றைத் தவிர்க்கலாம். அல்லது உங்களுக்குப் பிடித்தமானவற்றை வைத்துக் கொள்ளலாம். இந்த மாதிரி Subscribe Option களை விரும்பியவாறு தேர்வு செய்து கொள்வதன் மூலம் அடுத்தவர்களின் அத்தனை செய்திகளும் வராமல் கட்டுப்படுத்தலாம். பிடிக்கவில்லை என்றால் Unsubscribe செய்து கொள்ளுங்கள். கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.

ஏற்கனவே நமது நண்பர்களாக இருந்தவர்கள் Friend Subscriber களாகவும் இப்போது புதிதாக நம்மைத் தொடர்பவர்கள் Public Subscriber களாகவும் பேஸ்புக் பிரித்திருக்கிறது. நம்மைப் பின் தொடரும் Public Subscriber களின் பட்டியல் இங்கே சென்று பார்க்கலாம்.

Tuesday, September 20, 2011

உங்கள் FaceBook பக்கத்தில் தோன்றும் விளம்பரங்களைத் தடுக்க...

நீங்கள் FaceBook கணக்கைத் திறந்துபயன்படுத்தும்போது உங்கள் பக்கத்திலே பலவிளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதைக்காணலாம். இவ்வாறான விளம்பரங்கள் சிலருக்குஉபயோகமாயிருப்பினும் எம்மில் பலருக்குஇடையூறாகவோ காணவும்படலாம். எனவேஇவ்வாறான விளம்பரங்களை எமது FaceBookபக்கத்திலிருந்து நீக்கினால் எப்படியிருக்குமென்றஎண்ணமும் பலருக்குத் தோன்றலாம். அதற்குதீர்வாக இப்பதிவு அமையமெனஎதிர்பார்க்கின்றேன்.



இதற்கு நீங்கள் செய்யவேண்டியது இதுதான். கீழ் உள்ள இணைப்பைப்பயன்படுத்தி குறித்த செயலியை கணணியில் நிறுவிக்கொள்ளுங்கள்.


இப்போ உங்கள் FaceBook பக்கத்தினை பார்த்தீர்களானால் விளம்பரங்கள்நீக்கப்பட்டுக் காணப்படும்.

பயன்படுத்திப் பாருங்கள்.....

Thursday, September 15, 2011

Facebook இல் Game Requests வருவதை நிறுத்துவது எப்படி?

பேஸ்புக்கில் ஒரு சில விளையாட்டுக்கள் இருக்கிறது எப்படி என்றால் நண்பர்களுக்கு அந்த விளையாட்டை பரிந்துரை செய்து அதை அவர்கள் ஏற்றுக்கொண்டால் அவருக்கு அந்த விளையாட்டில் பொயின்ஸ் கிடைத்து அடுத்த லெவலுக்கு போய்விடுவர்..அப்படியான விளையாட்டை ஒரு முறை பரிந்துரை செய்தால் கண்டும் காணாமலும் விடலாம். தொடர்ந்து வேண்டும் என்றே Requests அனுப்பினால்...
பேஸ்புக்கில் உள்நுழைந்துவிட்டு இடது பக்கம் இருக்கு சைட் வாரில் "Game Requests"

குறித்த நபர் அனுப்பிய requests இற்கு நேரே இருக்கும் X என்பதை க்ளிக்செய்து

Ignore all requests என்பதை கொடுங்கள்



இனிமேல் அவரிடம் இருந்து எந்த request உம் வராது..

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget