About Me
- apolloparthiban
- tirunelveli, tamilnadu, India
- இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.
Saturday, September 3, 2011
windows 8 எப்படி இருக்கும் ?
Friday, September 2, 2011
வைரஸ் தாக்கிய Pendrive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க
இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.
1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD ==> Enter கொடுக்கவும்.
4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம் அதற்க்கு நீங்கள் E:என கொடுத்து Enter அழுத்தவும்.
- நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
- சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.
கீபோர்டை நமக்குப் பிடித்தவாறு வடிவமைக்க இலவச மென்பொருள்.
கணிணியின் முக்கிய உள்ளீட்டுச் சாதனமான விசைப்பலகை (Keyboard) பல வகைகளில் வெளிவருகிறது. அதில் நிறுவனம் தயாரித்தபடி குறிப்பிட்ட அமைப்பில் தான் விசைகள் அமைந்திருக்கும். நிறைய பேர் கணிணியைப் புதியதாக பயன்படுத்தும் போது விசைப்பலகையின் அமைப்பு அவர்களுக்கு எளிதாக இருப்பதில்லை. ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு இடத்தில் இருக்கிறதென தேடிப்பிடித்து அழுத்திக் கொண்டிருப்பார்கள்.
நமக்குப் பிடித்த இடத்தில் குறிப்பிட்ட விசைகள் இருந்தால் தட்டச்சிட எளிமையாக இருக்குமே என்று நினைப்பீர்கள். உங்களிடம் ஒரு விசைப்பலகையை பிடித்தமாதிரி வடிவமைக்கக் கொடுத்தால் சந்தோசமாக இருக்குமல்லவா? அதைத்தான் செய்கிறது KeyTweak என்ற இலவச மென்பொருள். இதன் மூலம் நம்மிடம் இருக்கும் விசைப்பலகையில் எந்தெந்த விசைகள் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று மாற்றிக் கொள்ள முடியும்.
இந்த மென்பொருள் மைக்ரோசாப்ட் Scan Code Map ரெஜிஸ்ட்ரி செட்டிங்க்ஸ் களை மாற்றியமைத்து அதன் மூலம் நமக்குப் பிடித்தவாறு விசைப்பலகையை அமைக்க உதவுகிறது. இதனால் குறிப்பிட்ட விசையைத் தேடிக் கொண்டிருக்காமல் எளிதாகவும் வேகமாகவும் தட்டச்சிட முடியும்.
மேலும் குறிப்பிட்ட ஒரு விசையை Disable/Enable செய்யலாம். தேவையில்லாத பட்டன்களை அழுத்தினால் ஒன்றுமே விழாத மாதிரி செய்து விடலாம். இவை எதுவே வேண்டாம் எனில் ஒரே கிளிக்கில் எல்லாவற்றையும் Reset செய்யலாம்.
இந்த மென்பொருளில் பலவிதமான விசைப்பலகை அமைப்புகளுக்கும் மாற்றிக் கொள்ள முடியும். உதாரணமாக மல்டிமீடியா விசைப்பலகையில் (Multimedia keyboards) மேல்பகுதியில் இருக்கும் மல்டிமீடியா பட்டன்களையும் விரும்பிய வேலைகளுக்கு மாற்ற முடியும்.
இந்த மென்பொருளை நிறுவிய பின் இதில் விசைப்பலகை அமைப்பு காட்டப்படும். அதில் தேவையான விசையைத் தேர்வு செய்து Choose New Remapping என்பதில் பிடித்தமான புதிய விசையைத் தேர்வு செய்து Remap key பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் Apply பட்டனைக் கிளிக் செய்து கணிணியை ஒருமுறை ரீஸ்டார்ட் செய்தால் விசைப்பலகையில் நீங்கள் மாற்றிய அமைப்பு வேலை செய்யும்.
தரவிறக்கச்சுட்டி : http://webpages.charter.net/krumsick/KeyTweak_install.exe
மடிக்கணினிகளில் கட்டாயமாக இருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள் - 2.

மடிக்கணினிகளில் கட்டாயமாக நிறுவப்பட்டிருக்க வேண்டிய
முக்கிய 5 மென்பொருட்கள் பற்றி தொடராக இங்கே பார்த்து வருகிறோம்.
Aerofoil
மடிக்கணினியின் பேட்டரி வேலை செய்யும் நேரத்தை 10% வீதத்திலிருந்து 25 % வீதம் வரை அதிகரிக்கின்றது இந்த மென்பொருள்.
கணினியின் சக்தியை விரயமாக்கும் தேவையில்லாத சிலவற்றை நிறுத்தி வைப்பதன் மூலம் இதை செய்கிறதாம். உதாரணமாக விண்டோஸ் 7 இயங்குதளத்தில் Aero glass interface, the Windows sidebar, muting the sound போன்றவையாகும்.
குறிப்பு - இந்த மென்பொருளை நிறுவ முன்னர் இதே போன்று செயற்படும் வேறு மென்பொருட்கள் கணினியில் இருந்தால் அவற்றை நீக்கிவிடுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்
டவுண்லோட் - http://silentdevelopment.blogspot.com/2010/05/aerofoil-151-released.html
மடிக்கணினிகளில் கட்டாயமாக இருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள் - 1
மடிக்கணினிகளில் கட்டாயமாக நிறுவப்பட்டிருக்க வேண்டிய முக்கிய 5 மென்பொருட்கள் பற்றி தொடராக இங்கே பார்க்கலாம்.
1. Prey - மடிக்கணனிகள் திருடப்பட்டுவிட்டால் திருடியவர் இணையத்தை பயன்படுத்தும் போது அது எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க உதவுகிறது இந்த மென்பொருள்.
நிறுவியதும் கணினியில் மறைந்துகொள்ளும் இந்த மென்பொருளை உங்களுக்கு தேவையான நேரத்தில் இணையத்தின் மூலம் ஆக்டிவேட் செய்ய முடியும்.
திருடியவர் குறிப்பிட்ட மடிக்கணினியில் இணையத்தை பயன்படுத்த தொடங்கியதும் உடனே அக்கணினி எங்கிருக்கிறது என்பதையும் மற்றும் ஏனைய தகவல்களையும் தந்து விடும்.
வீடியோ விளக்கம்:
http://www.youtube.com/watch?v=thfwN0lq9xI&feature=player_embedded
டவுண்லோட் செய்வதற்கு - http://preyproject.com/







