APOLLOPARTHIBAN

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Tuesday, February 7, 2012

சிடி / டிவிடி கவர் அட்டை நாமே வடிவமைக்க உதவும் இலவச மென்பொருள்.

நம்மிடம் இருக்கும் சிடி /டிவிடி – களுக்கு அழகான கவர் (அட்டை) நாமே உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
நம் செல்லக்குழந்தையின் பிறந்த நாள் புகைப்படங்களை நாம் சிடி அல்லது டிவிடியில் சேமித்து வைத்திருப்போம் அதிகபட்சமாக சிடியின் மேல் பெயர் எழுதி  வைப்போம் ஆனால் சிடியின் மேல் நம் குழந்தையின் புகைப்படத்தை கவரகாக ஒட்டி வைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு உதவ ஒரு மென்பொருள் உள்ளது.
தறவிரக்க முகவரி :http://elefantsoftware.weebly.com/dvd-slim-download.html
இத்தளத்திற்கு சென்று நாம் மென்பொருளை இலவசமாக தறவிரக்கி பயன்படுத்தலாம். மென்பொருளை தறவிரக்கி நம் கணினியில் நிறுவிய பின் மென்பொருளை இயக்கி சிடி அல்லது டிவிடி எதற்கு கவர் உருவாக்கப்போகிறோம்  என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் அடுத்து நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை  தேர்ந்தெடுத்து கொண்டு சில நிமிடங்களில் அழகான கவர் உருவாக்கலாம். கவர் உருவாக்கிய பின் பிரிண்ட் என்பதை சொடுக்கி பிரிண்ட் செய்து சிடி அல்லது டிவிடி மேல் ஒட்டிவிட வேண்டியது தான் அழகான டிவிடி கவர் சில நிமிடங்களில் இந்த மென்பொருள் மூலம் உருவாக்கலாம்.

யூடியுப் வீடியோக்களை தொந்தரவில்லாமல் பார்ப்பதற்கு

 இணையத்தில் வீடியோக்களை பார்ப்பதற்கு அனைவரும் உபயோகப்படுத்துவது யூடியுப் தளம்.
தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இந்த தளத்தில் புதிதாக பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் அந்த வீடியோக்களை பார்க்கின்றனர்.
 
யூடிபில் நாம் ஏதாவது வீடியோவை ஓபன் செய்தால் முதலில் அவர்களின் விளம்பரங்கள் வரும். அந்த விளம்பரங்கள் முடிய குறைந்த பட்சம் ஒரு நிமிடம் ஆகும் அது வரை நாம் காத்துகொண்டு இருக்க வேண்டும். அந்த விளம்பரம் முடிந்த பிறகு தான் வீடியோவை காண முடியும்.
 
வீடியோ ஓடிக்கொண்டிருக்கும் பொழுதும் இடையில் இந்த விளம்பர வீடியோ தோன்றி எரிச்சலை உண்டாக்கும். இந்த பிரச்சினையை தீர்த்து யூடியூபில் எந்த விளம்பர தொல்லையுமின்றி வீடியோக்கள் காணலாம்.
 
இதற்கு ஒரு குரோம் நீட்சி உள்ளது. இந்த நீட்சியை தரவிறக்கம் செய்து உலாவியில் நிறுவிக் கொள்ளலாம். இதனை நிறுவியதும் யூடியுப் வீடியோவில் ஏதேனும் விளம்பரம் வந்தால் மேலே உள்ள சிறிய நீல நிற பட்டனை அழுத்தினால் அந்த விளம்பரம் தவிர்க்கப்பட்டு விடும்.
 
    
                                            
 

Sunday, February 5, 2012

உங்கள் பேஸ்புக் கணக்கை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறிய வேண்டுமா?

பேஸ்புக் முகப்பில் உங்களுக்கு தெரியாமல் வேறுயாரவது விடயங்களை பிரசுரிக்கிறார்களா? அல்லது நண்பர்கள் நீக்கப்படுகின்றனரா? 

அண்மையில் பேஸ்புக் ஸ்தாபகரின் கணக்கே ஹேக் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். இவ்வாறு பேஸ்புக் கணக்கை வேறு யாரும் பயன்படுத்தினால் உடனடியாக உங்களுக்கு தெரியப்படுத்த என்ன செய்யலாம்?
இதற்கு பேஸ்புக்கில் பாதுகாப்பு வசதியொன்று உள்ளது. பேஸ்புக் லாகின் செய்து Facebook.com -> Account -> Account Settings -> Account Security செல்லுங்கள்.
பின்னர் அங்கு IP முகவரியை வைத்து பேஸ்புக் கணக்கு எங்கிருந்து கையாளப்படுகிறதென்ற விபரங்கள் காட்டப்படும். இதில் சந்தேகம் வரும்படியான இடங்கள் காட்டப்பட்டால் உடனடியாக அதை “end activity " செய்துவிடுங்கள்.

மேலதிக பாதுகாப்பு வசதியாக வேறு எங்கிருந்தாவது பேஸ்புக் கணக்கு அக்செஸ் செய்யப்பட்டால் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு கொடுத்து விடலாம். அல்லது உங்கள் கணக்குடன் மொபைல் எண்ணை இணைத்திருந்தால் எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிக்குமாறூம் செய்துவிடலாம்.

மேலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு send me an email என்பதையும், மொபைல் வசதி இருந்தால் send me a text message என்பதையும் டிக் செய்து விட்டால் மின்னஞ்சலில் அல்லது எஸ்.எம்.எஸ்  இல் பேஸ்புக் கணக்கை வேறு இடத்திலிருந்து யாரும் அக்செஸ் செய்தால் அந்த தகவல்கள் தெரியப்படுத்தப்படும்.

Saturday, February 4, 2012

ஃபோட்டோஷொப் பாவனையாளர்களுக்காக இலவச Plugin !

 
ஃபோட்டோஷொப் பாவனையாளர்களுக்காக இலவச Plugin !
Published on Fri, February 3, 2012 16:00  [views: 208]
Photoshop இல் விளம்பரங்களை வடிவமைக்கும் நண்பர்களுக்கு இந்த மென்பொருளின் உதவி அதிகமாகத்தேவைப்படும்.
33 Mb அளவுடைய இவ் Plugin ஐ கணனியில் நிறுவுவதன் மூலம், எமக்குத்தேவையான Shining எஃபக்ட்டுக்களை இலகுவாக உருவாக்கிக்கொள்ள முடியும். இவ் மென்பொருளின் அட்டைப்படத்தை பார்த்தாலே அதன் உபயோகம் தெரியும். :)
 
அளவு : 33.67 Mb
 

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget