APOLLOPARTHIBAN

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Saturday, February 18, 2012

கணிணியில் உள்ள மென்பொருள்களின் லைசென்ஸ் எண்களை கண்டறிய

Find License Keys of your installed softwaresகணிணியில் பல்வேறான மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தி வருவோம். அதில் இலவச மென்பொருள்களும் இருக்கும்; காசு கொடுத்து உரிமத்துடன் கூடிய மென்பொருள்களையும் (Licensed softwares) வைத்திருப்போம். இந்த மாதிரி மென்பொருள்கள் வாங்கும் போது அதன் சிடி பெட்டியில் அந்த லைசென்ஸ் எண்கள் இருக்கும். அல்லது மின்னஞ்சல் மூலம் அந்த எண்களைப் பெற்றிருப்போம். நிறைய பேர் இந்த முக்கிய லைசென்ஸ் எண்களைத் தனியாக குறித்து வைத்திருக்க மாட்டார்கள். 

வைரஸ் காரணமாக கணிணி செயலிழக்கும் போதோ அல்லது கணிணியில் எதாவது பிரச்சினை ஏற்பட்டு அதனை பார்மேட் (Format) செய்யும் போது மறுபடியும் ஏற்கனவே இருந்த மென்பொருள்களை நிறுவ வேண்டியிருக்கும். அப்போது தான் மென்பொருள்களின் சீரியல் எண் (Serial No) எங்கே என்று தெரியாமல் விழிப்பர். இதற்காக உதவக்கூடிய ஒரு இலவச மென்பொருள் தான் License Crawler. இந்த மென்பொருளின் மூலம் உங்கள் கணிணியில் நிறுவப்பட்டிருக்கும் கட்டண மென்பொருள்களின் லைசென்ஸ் எண்களை விநாடியில் கண்டறியலாம். பின்னர் இதனை எழுதி வைத்துக் கொள்ளலாம். அல்லது Text கோப்பாக சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
இந்த மென்பொருளை தரவிறக்கி License Crawler என்ற கோப்பைக் கிளிக் செய்யவும். இதில் Computer என்பதில் Localhost எனவும் அதற்கு கீழே HKEY_LOCAL_MACHINE என்று தேர்வு செய்து கொள்ளவும். பின்னர் Start Search என்பதைக் கிளிக் செய்தால் மென்பொருள்களின் பெயர் மற்றும் லைசென்ஸ் பெயர், எண்கள் பட்டியலிடப்படும். இதில் உங்கள் விண்டோஸ் உரிம எண், MS-Office போன்ற மென்பொருள்களின் லைசென்ஸ்களும் கிடைத்துவிடும். Save கொடுத்து ஒரு கோப்பில் எல்லாவற்றையும் சேமித்துக் கொள்ளலாம்.

எளிமையான இந்த மென்பொருள் கணிணியில் நிறுவாமலே பயன்படுத்தலாம். பென் டிரைவில் வைத்தும் பயன்படுத்தலாம்.

தரவிறக்கச்சுட்டி: Download LicenseCrawler 

Thursday, February 16, 2012

SLR கேமரா பயன்படுத்தும் வழிமுறைகள்.

பள்ளியில் படிக்கும் காலங்களில் குரூப் புகைப்படம் எடுக்கையில் அனைத்து மாணவர்களையும் நிற்க வைத்து டிரங் பெட்டி சைஸ் கேமராவை கருப்பு துணியை போர்த்தி புகைப்படம் எடுப்பார்கள்.அடுத்து கருப்பு வெள்ளை புகைப்படங்கள் வந்தது.அடுத்து கலர் புகைப்படங்கள் வந்தது. அதுவும் முதலில் சிங்கப்பூர் மலேசியாவில் சென்று பிரிண்ட் போட்டுவருவார்கள்.தற்போது டிஜிட்டல் வரை வந்து அதற்கு மேலும் மாடல்கள் கேமரா வந்துவிட்டது.SLR கேமராவும் அந்த வகையில் வந்துள்ள கேமரா..இதில் பல செட்டிங்ஸ் உள்ளது. ஒவ்வொரு செட்டிங்ஸ்ஸையும் நாம் செட் செய்து பிரிண்ட்போட்டு ரிசல்ட் எப்படி வருகின்றது என பார்க்கவேண்டும். ஆனால் இந்த தளத்தில் SLR கேமரா மூலம் நாம் எடுக்கும் புகைப்படங்களை விதவிதமான செட் செய்து அப்போதே ரிசல்ட் பார்க்கலாம்.அந்த முகவரி தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில ஓரு சிறுமியின் புகைப்படம் இருக்கும். அதில் கீழே பலவிதமான செட்டிங்ஸ் இருக்கும். நாம்அதில் உள்ள ஸ்லைடரை தேவையான அளவுக்கு நகர்த்தி பின்னர் அதில் உள்ள Snap Photo கிளிக் செய்யவும்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.நமது செட்டிங்ஸ்க்கு ஏற்ப படம் நமக்கு டிஸ்பிளே ஆகும்.
நமது புகைப்படத்தை பற்றிய விமர்சனமும் உடன் தோன்றும். அதற்கேற்ப நாம் புகைப்படங்கள் எடுக்கும் திறமையை வளர்த்துக்கொள்ளலாம்.இந்த பதிவு புதிதாக கேமரா வாங்க நினைப்பவர்களுக்கும் ஏற்கனவே கேமரா வைத்துள்ளவர்களுக்கும் பயன்படும். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

Tuesday, February 14, 2012

ஒரே Software மூலம் எல்லா Fileகளையும் ஓபன் செய்ய முடியுமா?

Image Credit: 123rf.com


ஒரே ஒரு மென்பொருள் கொண்டு நாம் அடிக்கடி பயன்படுத்தும் File Format களை ஓபன் செய்ய முடியுமா? Open Freely என்ற மென்பொருள் இதற்கு உதவுகிறது. வெறும் 2MB மட்டுமே உள்ள இந்த மென்பொருள் கிட்டத்தட்ட நிறைய வேலைகளை நமக்கு எளிதாக்கும்.ஏன் இதை பயன்படுத்த வேண்டும்?  எப்படி இதை பயன்படுத்துவது? என்று பார்ப்போமா? 

முதலில் எதற்கு இதை பயன்படுத்த வேண்டும்? 

சில சமயங்களில் நண்பரின் கணினியில் ஒரு File ஐ நீங்கள் ஓபன் செய்ய முயற்சி செய்வீர்கள். ஆனால் குறிப்பட்ட மென்பொருள் இல்லாமல் அதை ஓபன் செய்ய முடியாது. உதாரணமாக MS-Office இல்லாமல் Word, PPT, Excel போன்றவற்றை ஓபன் செய்ய முடியாது. இணைய இணைப்பு இருந்தாலும் அவசரமாக தரவிறக்கம் செய்ய முடியாது. இதே போல PDF File களுக்கும். இது போன்றவற்றை ஒரே ஒரு மூலம் திறக்க முடியும் என்றால் நன்மை தானே. அதற்குதான் Open Freely பயன்படுத்த வேண்டும்.

இது கிட்டத்தட்ட கிட்டத்தட்ட நூறு வகையான File Format களை சப்போர்ட் செய்கிறது என்ன என்ன File-கள் சப்போர்ட் ஆகும் என்று இங்கு பார்த்துக் கொள்ளவும் . கிட்ட தட்ட நாம் அடிக்கடி பயன்படுத்தும் எல்லா வகையும் இதில் உள்ளது.

1. முதலில் இங்கே கிளிக் செய்து அந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

2. எப்போதெல்லாம் ஒரு File ஐ ஓபன் செய்ய முடியவில்லையோ அப்போது இந்த Open Freely ஐ திறந்து Browse கட்டளை மூலம் குறிப்பிட்ட File ஐ திறக்க இயலும்.

3. இதன் சிறப்பம்சம்கள்


  • MS-Office File எளிதாக எடிட் செய்ய முடியும். Word, PPT, மற்றும் Excel போன்றவை.  
  • இதை நாம் வீடியோ பிளேயர் ஆகவும் பயன்படுத்தலாம்
  • நேரடியாக ஒரு Fileஐ ஓபன் செய்து, அதை பிரிண்ட் கொடுக்கலாம்.
  • ZIP, RAR Fileகளை ஓபன் செய்வதோடு மட்டும் இன்றி புதிய Zip, Rar மற்றும் இன்னும் பல File Compression & Decompression செய்யலாம். 

உதாரண File-கள்

Word File

Image File

Video File

Dll File

என்ன நண்பர்களே இதை எப்போதும் உங்கள் Pen Drive இல் வைத்துக் கொள்வது நல்லது தானே? 

Friday, February 10, 2012

மின்னஞ்சல் வரும் போது Sound Alert செய்து நமக்கு தெரியபடுத்தும் மென்பொருள் ?


தற்போதைய உலகில் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துபவர்களே அதிகம். இதற்கு கூகுள் அளிக்கும் புத்தம்புது வசதிகள் தான் முக்கிய காரணமாகும்.
ஜிமெயிலில் புதிதாக ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் அதனை உடனே அறியத்தருவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Gmail Peeper.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ததும் கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் உள்ள Settings என்பதில் ஜிமெயில் முகவரியையும், கடவுச்சொல்லையும் உள்ளிட்டவும்.
அதன்பின் எவ்வளவு நிமிடத்திற்கு ஒருமுறை நமக்கு தகவல் வரவேண்டும் என்பதை செட் செய்திடவும். மின்னஞ்சல் வரும் போது Sound Alert வரும்மாறும் செட் செய்யலாம்.
தற்போது புதிதாக ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் Task Bar-ல் Indication தோன்றும். அதை கிளிக் செய்தால் தோன்றும் விண்டோவில் அந்த மின்னஞ்சல் எங்கிருந்து வந்துள்ளது, அதன் நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

Wednesday, February 8, 2012

G MAIL செய்திகளை திறக்காமல் PREVIEW மூலம் படிக்கலாம்.

உங்களுக்கு வருகின்ற G MAIL செய்திகளை திறக்காமல் அந்த செய்தியினை PREVIEW மூலம் குறித்த மெயிலில் உள்ள செய்தியினை அறிந்து கொள்ள முடியும்.  சிறிய பக்கத்தில் உங்கள் G மெயிலில் உள்ள செய்தியினை பார்க்க படிக்க முடியும். இதன் மூலம் உங்கள் செய்திகளை ஒவ்வொன்றாக திறந்து படிக்கும் நேரத்தை மீதப்படுத்த முடியும் . 


இந்த வசதியினை ஏற்படுத்த பின்வரும் செயல் முறையை கையாள்க. 

உங்கள் G மெயில் கணக்கில் உள் நுழைந்து கொள்க 

பின்ன்னர் OPTION என்பதை கிளிக் செய்க (வலது பக்க மேல் மூலையில் காணப்படும் )

பின்னர் MAIL SETTINGS என்பதை கிளிக் செய்து LABS  என்பதை தெரிவு செய்க . 

பின்னர் MESSAGE SNEAK PEEK என்பதில் ENABLE என்பதை கிளிக் செய்து SAVE  செய்து கொள்ளவும் . 

இப்போது உங்கள் மின்னஞ்சலில் பார்க்க வேண்டிய செய்தியின் மீது வலது கிளிக் செய்தால் சிறிய பக்கத்தில் மின்னஞ்சல் செய்தியை பார்க்கலாம் . 

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget