APOLLOPARTHIBAN

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Wednesday, February 22, 2012

விண்டோஸ் 7 பேக் அப் (Backup and Restore)

நாம் கம்ப்யூட்டரில் அமைத்திடும் டேட்டா பைல்களை பாதுகாத்து பதிப்பது அவற்றைக் காப்பாற்றும் சிறந்த வேலை ஆகும். இதற்கெனவே, விண்டோஸ் 7 சிஸ்டம் ஒரு தனி வசதியினை அளித்துள்ளது. இதனை Backup and Restore என அழைக்கின்றனர். இந்த வசதியினைப் பயன்படுத்துவது குறித்துக் காணலாம்.

முதலில் சிஸ்டத்தில் உள்ள இந்த Backup and Restore வசதியினை இயக்க வேண்டும். இதனை Control Panel பகுதியில் System and Security என்பதைக் கிளிக் செய்து பெறலாம். Backup and Restore என இந்த வசதி தரப்பட்டிருக்கும்.

இந்த வசதியினை இதற்கு முன்னர் நீங்கள் பயன்படுத்த வில்லை எனில், ‘Backup’ என்பதன் கீழாக ‘Windows Backup has not been set up’ என்ற ஒரு செய்தி தரப்படும். இந்த செய்தியின் வலது புறமாக உள்ள Set up backup என்ற லிங்க்கின் மீது கிளிக் செய்திட வேண்டும்.

இந்த புரோகிராம் தொடங்கியவுடன், உங்கள் பேக் அப் பைல்களை எந்த இடத்தில் சேவ் செய்திட வேண்டும் என்ற ஆப்ஷன் கேட்கப்படும். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள முதன்மை ஹார்ட் ட்ரைவினை பேக் அப் ட்ரைவாக தேர்ந்தெடுக்க, விண்டோஸ் சிஸ்டம் இடம் தராது. எக்ஸ்டர்னல் ட்ரைவ் ஒன்றினை கம்ப்யூட்டரில் இணைத்து Refresh என்பதில் கிளிக் செய்திடவும்.

இந்த வகையில் பேக் அப் பைல்கள் பதியப்பட வேண்டிய ட்ரைவினைத் தேர்ந்தெடுத்து செட் செய்த பின்னர், எந்த பைல்களை பேக் அப் செய்திட வேண்டும் என கம்ப்யூட்டர் உங்களைக் கேட்கும். நீங்கள் எதனையும் குறிப்பிட்டுச் சொல்ல வில்லை எனில், விண்டோஸ் தானாக, ஹார்ட் ட்ரைவின் இமேஜ் பைல் ஒன்றை பேக் அப் பைலாக உருவாக்கும். அல்லது, இதற்குப் பதிலாக, Let me choose என்ற பட்டனில் கிளிக் செய்து, நீங்கள் பேக் அப் செய்திட விரும்பும் பைல்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

எந்த ட்ரைவில் பதிய வேண்டும் என்பதனையும், எந்த வகை பைல்களை பேக் அப் செய்திட வேண்டும் என்பதனை யும் தேர்ந்தெடுத்த பின்னர், சிஸ்டம் உங்களுக்கு பேக் அப் ஆக இருக்கும் பைல்களின் தொகுப்பு திரை ஒன்றைக் காட்டி உறுதி செய்திட கேட்கும். பேக் அப் செயல்பாடு தொடங்கும் முன்னர், விண்டோஸ் இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள தான் அமைத்துள்ள கால நேரத்தினைக் காட்டும்.

அந்த நேரத்தில் கம்ப்யூட்டர் இயக்க நிலையில் இருப்பதனை உறுதி செய்திட இந்த கேள்வி கேட்கப்படும். இதில் மாற்றம் தேவை என நீங்கள் கருதினால், Change schedule என்பதில் கிளிக் செய்து, உங்களுக்கு வசதியான நேரத்தினை அமைக்கவும். இறுதியாக Save settings கிளிக் செய்து பேக் அப் செயல்பாட்டினை இயக்கவும்.

முதல்முதலாக பேக் அப் எடுக்கையில், சிறிது கூடுதலாகவே நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதனை அடுத்து எடுக்கப்படும் பேக் அப் செயல்பாட்டிற்குக் குறைந்த அளவிலேயே நேரம் எடுத்துக் கொள்ளப்படும். ஏனென்றால், அடுத்தடுத்து பேக் அப் எடுக்கப்படுகையில், மாற்றம் செய்யப்பட்ட பைல்களில் மட்டுமே பேக் அப் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு ஏற்கனவே பேக் அப் எடுக்கப்பட்ட பைல்களுடன் வைக்கப்படும்.


பேக் அப்பிலிருந்து பைல்களை மீட்டல்:

பேக் அப் செய்யப்பட்ட கோப்பிலிருந்து, நம் பைல்களை விரித்து எடுப்பது மிக மிக எளிதான ஒன்றாகும். முதலில், ஏற்கனவே கூறியபடி, Backup and Restore என்ற செயல்பாட்டினை இயக்கவும். இப்போது அனைத்து பைல்களையும் மீட்க வேண்டுமா, அல்லது அழிக்கப்பட்ட, கெட்டுப் போன பைல்கள் மட்டும் மீட்கப்பட வேண்டுமா என்பதனை முடிவு செய்திட வேண்டும்.

அனைத்து பைல்களையும் மீட்க, Restore my files என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின்னர் Browse for folders என கிளிக் செய்திடவும். அடுத்து இடது பக்கம், உங்கள் பேக் அப் பைலுக்குக் கொடுத்த பெயருடன் உள்ள போல்டரைக் காணவும். அதில் கிளிக் செய்து, பின்னர் Add folder என்பதில் கிளிக் செய்திடவும்.

இந்த போல்டர் இணைக்கப்பட்ட பின்னர், Next என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு, நீங்கள் மீட்கும் பைல்கள், அவை முன்பு இருந்த இடத்தில் பதியப்பட வேண்டுமா அல்லது புதிய இடத்தில் பதியப்பட வேண்டுமா என்பதனைக் கம்ப்யூட்டருக்குச் சொல்ல வேண்டும். இதன் பின்னர், Restore என்பதில் கிளிக் செய்தால், நீங்கள் தேர்ந்தெடுத்தபடி பைல்கள் மீட்கப்படும்.

குறிப்பிட்ட பைல்களை மட்டும் மீட்க வேண்டும் எனில், Restore my files என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், Browse for files என்பதனைக் கிளிக் செய்திடவும். இப்போது உங்களின் பேக் அப் பைல் போல்டருக்குச் சென்று, நீங்கள் மீட்க விரும்பும் பைலைக் கிளிக் செய்திடவும். இங்கேயும், இந்த பைல்களை, அவை இருந்த பழைய இடத்தில் வைத்திடவா, அல்லது புதிய இடத்தில் வைத்திடவா என்ற கேள்வியினை உங்களிடம் கம்ப்யூட்டர் கேட்கும். இதனை முடிவு செய்து காட்டிய பின்னர், Restore என்பதில் கிளிக் செய்திட, பைல்கள் மீட்கப்படும்.


நீங்கள் மீட்க விரும்பும் பைலின் பெயர் உங்கள் நினைவில் இல்லை எனில், Restore my files கிளிக் செய்த பின்னர்,சர்ச் பட்டனைப் பயன்படுத்தி பைல்களைக் கண்டறியவும். சர்ச் முடிவுகளின் பட்டியலைப் பயன்படுத்தி, நீங்கள் மீட்க விரும்பும் பைல்களைத் தேர்ந்தெடுத்துக் காட்டவும். இவற்றை நீங்கள் மீட்க விரும்பும் பைல்களின் பட்டியலில் இணைக்கவும். பின் மீண்டும் Restore கிளிக் செய்து மீட்கவும்.


Monday, February 20, 2012

புதிய பதிப்புகள்தான் வைத்திருக்கின்றோமா?



அட நாம புதிய பதிப்புகள்தான் வைத்திருக்கின்றோமா?..

VLC புதிய பதிப்பு 2.0.0 வெளியாகியுள்ளது. டவுன்லோட் செய்து உபயோகியுங்கள்.
http://www.videolan.org/vlc/

மோசில்லாவின் பாயர்பாக்ஸ்(Mozilla Firefox ) 10.0.2 புதிய பதிப்பு கிடைக்கின்றது.
http://www.mozilla.org/en-US/firefox/new/

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பதிப்பு கிடைக்கின்றது.
http://windows.microsoft.com/en-IN/internet-explorer/products/ie/home

ஆப்பிளின் சபாரி புரோவுசர்(browser) 5.1.2 பதிப்பு கிடைக்கின்றது.
http://www.apple.com/safari/download/

பைல்ஜில்லா(Filezilla-Client) 3.5.3 பதிப்பு கிடைக்கின்றது.
http://filezilla-project.org/download.php

Notepad++ இது வின்டோஸ் நோட்பேட் போன்றது ஆனால் அதைவிட சிறப்பு தகுதிகளை பெற்றுள்ளது என்றே கூறவேண்டும். இது முற்றிலும் சி மொழியில் எழுதப்பட்ட ஒரு இலவச தொகுப்பாகும். இதில் ஒரே விண்டோவில் பல பைல்களை திறக்க முடியும். இதில் உட்பொதிவாக சில கம்ப்யூட்டர் மொழிகளின் கட்டமைப்பை கொண்டுள்ளது. ஊதாரணமாக சி மொழியில் புரோகிராம்களை டைப் செய்யும் போது அதனுடைய அமைப்பை பல்வேறு நிறங்களில் நாம் எளிதில புரியும் வண்ணம் தருகின்றது. இதனுடைய 5.9.8 பதிப்புதான் தற்சமயம் புதிது.
http://notepad-plus-plus.org/


வின்ரார்(WinRAR) 4.11 பதிப்பு நமக்கு கிடைக்கின்றது.
http://www.rarlab.com/download.htm

புதுசு புதுசா யெல்லாமே மாறிகிட்டே இருக்கு..நாமும் மாறிக்குவோம் இதுவரைக்கும் மாறலனா..இவை எல்லாமே இலவசம்தான்..

உங்கள் கணனியினை உங்கள் குரல் மூலம் செயற்பட வைக்க !!



இப்பொழுது  உங்கள் பேச்சாலே உங்கள் கணினியை நீங்கள் செயல்பட வைக்க முடியும்.இதன் மூலம் கணினிஇன் அணைத்து செயல்பாடுகளையும்  நீங்கள் பயன்படுத்த முடியும். 
இவ் மென்பொருளை கொண்டு  கணனியை நமது குரல் கட்டளைகளுக்கு ஏற்ப செயற்பட வைக்கலாம். 

பைல்கள் மற்றும் புரோகிராம்களை  குரல் கடட்டளைகளைக்  கொண்டே திறந்து மூடலாம். மென்பொருளை இன்ரோல் செய்து முயற்சி செய்துதான் பாருங்களன்.
                                                       Download

கூகிள் குரோம்(google chrome) உபயோகிப்பவர்களுக்கு மேலும் ஒரு புதிய வசதி ,,,

நாம் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு சில வலைப்பக்கங்கள் பல விளம்பரங்கள், பிற தகவலகள் என பலதும் கலந்த கலவையாக இருக்கும். அவற்றில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வாசிக்க வேண்டுமெனில், அருகிலுள்ள கலர் கலரான பிற விளம்பரங்கள், படங்கள், பிற செய்திகள் நமக்கு எரிச்சலை தரும் விஷயமாக இருப்பதுண்டு.இது போன்ற சமயங்களில் நமக்கு பெரும் துணையாக இருப்பது Google Chrome உலாவிக்கான Reading Glasses நீட்சி! 



(தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).

Install பொத்தானை அழுத்தி உங்கள் கூகுள் க்ரோம் உலாவியில் பதிந்து கொண்ட பிறகு, இது நிறுவப்பட்டதற்கான அறிவிப்பு வலது மேற்புற மூலையில் தோன்றியிருப்பதை கவனிக்கலாம்.

இனி உங்களுக்கு தேவையான வலைப்பக்கங்களை திறந்து கொண்டு வாசிக்கிறீர்கள். உதாரணமாக..


இந்த பக்கத்தில் தலையங்கத்தை மட்டும் வாசிக்க வேண்டும் எனில், அதிலுள்ள டெக்ஸ்டின் ஏதேனும் ஒரு பகுதியை தேர்வு செய்து, வலது மேற்புற டூல்பாரில் உள்ள மூக்கு கண்ணாடி ஐகானை க்ளிக் செய்தால் போதுமானது.


நமக்கு தேவையான டெக்ஸ்ட்டை தவிர மற்றதனைத்தும் fade ஆகி, நாம் படிக்கும்பொழுது ஏற்படும் அலுப்பை தவிர்க்கிறது. மறுபடியும் பழையபடி மாற்ற, அதே ஐகானை க்ளிக் செய்தால் போதுமானது.

Saturday, February 18, 2012

வருகிறது கூகுள் டிரைவ் – [Cloud Computing]

கூகுள் தனது அடுத்த முயற்சியாக கூகுள் டிரைவ் (Google Drive) வசதியை ஆரம்பிக்கப்போகிறது. இது தான் தற்போது இணையத்தில் உலவிக்கொண்டு இருக்கும் செய்தி. அதெல்லாம் சரிங்க! கூகுள் ஓகே… கூகுள் டிரைவ்னா என்ன?
இதை தெரிந்து கொள்ளும் முன் இதற்கு முன்னோடியாக இருக்கும் Dropbox பற்றி தெரிந்து கொள்வோம்.
Dropbox வருகிறது கூகுள் டிரைவ்     [Cloud Computing]தற்போது இணையம் அனைவரிடையே மிக வேகமாக பிரபலமாகி வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எப்போதுமே ஒரு விஷயம் பிரபலம் ஆகிறது என்றால் அதனோடு தொடர்புடைய விசயங்களும் வளர்ச்சியடைந்து வரும். எளிமையாக கூறுவதென்றால் நம் அனைவருக்கும் தெரிந்த திரைப்படங்களையே எடுத்துக்கொள்ளலாம் முதலில் எப்படி படங்கள் வந்தது தற்போது எந்த அளவிற்கு அதனோடு தொடர்புடைய தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்பதை அறிவோம்.. எடுத்துக்காட்டாக அனிமேஷன் 3D கிராபிக்ஸ் என்று ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளது. இவை எல்லாம் வரும் என்று கருப்பு வெள்ளை காலங்களில் யாரும் சூடம் கொளுத்தி சத்தியம் செய்தாலும் நம்பி இருக்க மாட்டார்கள்.
இது போல இணையத்திலும் கணக்கில் அடங்கா தொழில்நுட்பங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இன்றைய புதிய வசதி ஒரு வருடத்தில் பழையதாகி விடுகிறது அந்த அளவிற்கு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது இணையத்தில் பிரபலமாகி வரும் ஒரு தொழில்நுட்பம் தான் “Cloud computing”
Cloud Computing என்றால் என்ன?
இது பற்றி ரொம்ப விளக்கினால் புதிதாக கேள்விப்படுகிறவர்களுக்கு குழப்பமாக இருக்கும் என்பதால் சுருக்கமாகக் கூறுகிறேன். Cloud Computing என்பது நமது தகவல்களை ஒரு இடத்தில் வைத்துக்கொண்டு அதை நாம் எந்த இடத்தில் இருந்தும் இணையம் அல்லது வழக்கமான நமது நெட்வொர்க் மூலம் பயன்படுத்தும் ஒரு வசதியாகும். இதன் மூலம் எந்த இடத்தில் இருந்து வேண்டும் என்றாலும் நாம் தCloud Computing வருகிறது கூகுள் டிரைவ்     [Cloud Computing]கவல்களை பெற முடியும்.
இன்னும் சுருக்கமாக நமது மின்னஞ்சலை எங்கே இருந்து வேண்டும் என்றாலும் நம்மால் எந்த வித சிக்கலும் இல்லாமல் பயன்படுத்த முடியும். எப்படி? காரணம் நமது தகவல்கள் யாஹூ ஜிமெயில் ஹாட்மெயில் போன்ற வழங்கிகளில் (Server) உள்ளது இதனால் இணையம் மூலம் நம்மால் எளிதாக எந்த சிக்கலும் இல்லாமல் பார்க்க முடிகிறது.
இதையே இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் யோசித்துப்பாருங்கள் அதாவது உங்கள் ஹார்ட் டிஸ்கில் உள்ள தகவல்கள் அனைத்தும் இது போன்ற இடத்தில் இருந்தால்!… இது தான் Cloud Computing. உங்கள் தகவல்கள் அனைத்தும் எடுத்துக்காட்டாக கூகுள் வழங்கியில் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் உங்களால் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இணையம் இருந்தால் போதும் உங்கள் தகவல்களைப் பெற முடியும் அதாவது உங்கள் வீட்டில் இருக்கும் போது தான் இதை பயன்படுத்த முடியும் என்கிற கட்டுப்பாடு இல்லை, எங்கே இருந்து வேண்டும் என்றாலும் உங்கள் Excel கோப்பை அப்டேட் செய்ய முடியும்.
உங்களில் ஒரு சிலர் சில முக்கிய கோப்புகளை மின்னஞ்சல்களிலோ அல்லது வேறு தளங்களிலோ சேமித்து வைத்து இருப்பீர்கள். எதற்காக? அவசரமாக தேவைப்படும் போது பயன்படுத்த. உதாரணத்திற்கு உங்கள் பிறப்பு சான்றிதல் அவசரமாக தேவைப்படுகிறது ஆனால் அதனுடைய கோப்பு (File) உங்கள் வீட்டு கணினியில் இருக்கிறது ஆனால் வீட்டிற்கு சென்று எடுத்து வரும் அளவிற்கு நேரமில்லை அல்லது நீங்கள் தொலைவில் இருக்கிறீர்கள் என்ன செய்வது? இதை நீங்கள் கூகுள் பிகாசாவிலோ அல்லது வேறு இடத்திலோ சேமித்து வைத்து இருந்தால் உடனடியாக உங்களால் அருகில் உள்ள ஏதாவது ஒரு பிரவுசிங் சென்டர் சென்று பிரிண்ட் செய்து பயன்படுத்த முடியும். எவ்வளவு நேரம் மிச்சம்! அதோடு வேலையும் விரைவாக முடியும்.
முன்பு இணையத்தின் வேகத்தின் அளவு மிக மிக மெதுவாக இருந்தது ஆனால் தற்போது இதன் வேகம் அதிகரித்து இருக்கிறது எனவே இது போன்ற வசதிகள் உருவாகி வருகின்றன.
இதற்கு மேல் விளக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.
இனி Dropbox என்றால் என்ன? என்று பார்க்கலாம்
Dropbox என்பது ஒரு தளம். இதில் இலவசமாக நமக்கு 2 GB இடம் தருகிறார்கள் மற்றும் சில போட்டிகளில் வெற்றி பெற்றால் இன்னும் சில MB களை பெற முடியும். பணம் கட்டினால் மேலும் நமக்கு தேவையான அளவு இட வசதியைப் பெற முடியும்.
இது எப்படி வேலை செய்கிறது என்றால் இவர்கள் தரும் ஒரு மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவ வேண்டும் (வீட்டுக்கணினி அலுவலக கணினி என்று எங்கு தேவையோ அங்கு) இதை நிறுவியவுடன் உங்களுடைய பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து உள்ளே நுழைந்து கொண்டால் உங்களது கணினியில் Dropbox என்ற பெயரில் ஒரு ஃபோல்டர் வந்து விடும். இதில் நீங்க என்ன வேண்டும் என்றாலும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட அளவு வரை சேமிக்கலாம். எடுத்துக்காட்டாக உங்கள் வீட்டு கணினியில் JPG கோப்பை சேமிக்கிறீர்கள் பின் அலுவலகம் வந்து உங்கள் கணினியை ஆன் செய்தவுடன் நீங்கள் வீட்டுக் கணினியில் சேமித்த கோப்பு இங்கேயும் வந்து விடும். இணையம் அவசியம் என்பதை மனதில் நிறுத்துங்கள்.
இணையம் இல்லாமலும் உங்கள் கணினியில் உள்ள தகவல்களைப் பார்க்க முடியும் ஆனால் அப்டேட் செய்தால் இங்கே மட்டுமே அப்டேட் ஆகும் மற்ற இடங்களில் ஆகாது காரணம் இணைய இணைப்பு இல்லாதது.
அதே போல நீங்கள் ஒரு Text கோப்பை அடிக்கிறீர்கள் அதை வேறு கணினியில் அப்டேட் செய்தால் உங்கள் வீடு அலுவலகம் என்று அனைத்து இடத்திலும் அப்டேட் ஆகி விடும் காரணம் உண்மையாக அந்த கோப்பு இருக்கும் இடம் Drobox வழங்கி ஆகும். நீங்கள் இதைப் பயன்படுத்த கண்டிப்பாக இணையம் அவசியமாகும். iPhone Android என்று தொலைபேசிகளிலும் இந்த வசதி உள்ளது. எனவே இணையம் இருந்தால் எங்கே இருந்து வேண்டும் என்றாலும் உங்கள் தகவல்களை பார்க்க முடியும். இதை நான் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறேன் மிக மிக அருமையான சேவை. உங்களுக்கும் இதை பரிந்துரைக்கிறேன்.
இதை Windows , Mac , Linux மற்றும் Mobile ல் பயன்படுத்தலாம். உங்கள் ஹார்டிஸ்க் செயலிழந்து விட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை உங்கள் தகவல்கள் மற்ற இடங்களில் பாதுகாப்பாக இருக்கும், இதுவும் இந்த சேவையின் மிக முக்கிய பயன்.
மைக்ரோசாப்ட் கூட இது போல தருகிறது ஆனால் இது போல மென்பொருள் வைத்தல்ல… அதனால் 25 GB இடம் கொடுத்தும் பிரபலம் ஆகாமல் கடை காற்று வாங்கிக்கொண்டு இருக்கிறது icon smile வருகிறது கூகுள் டிரைவ்     [Cloud Computing] சென்ற வருடம் iOS 5 மூலம் Cloud storage வந்த ஆப்பிள் நிறுவனம் குறுகிய காலத்தில் 100 மில்லியன் பயனாளர்களைப் பெற்று இந்த தொழில்நுட்பத்தில் முதல் இடத்தில் இருக்கிறது அதிலும் கடைசி 15 மில்லியன் பயனாளர்களை 21 நாட்களில் பெற்று இருக்கிறது.
கூகுள் டிரைவ்
google drive வருகிறது கூகுள் டிரைவ்     [Cloud Computing]தற்போது தான் தலைப்புக்கே வருகிறேன் icon smile வருகிறது கூகுள் டிரைவ்     [Cloud Computing] இந்த Dropbox வசதியைத் தான் கூகுள் தரப்போகிறது. கூகுள் ஏற்கனவே தனது Google Docs என்ற வசதி மூலம் இதை தருகிறது ஆனால் Dropbox போன்று இதற்கு என்று தனியாக மென்பொருள் வைத்து அல்ல. தற்போது இதற்கு வரவேற்பு அதிகமாவதை உணர்ந்து இந்த வசதியைத் தர திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
நான் Google Docs பயன்படுத்துகிறேன். இதுவும் ரொம்ப அருமையான சேவை, இலவசமாக 1 GB கொடுக்கிறார்கள். நமக்கு அதிக அளவில் இடம் வேண்டும் என்றால் பணம் கட்டி இதில் பெற்றுக்கொள்ளலாம், நான் ரொம்ப நாள் முன்பே நினைத்தேன் கூகுள் ஏன் Dropbox போல இன்னும் வராமல் இருக்கிறது என்று! தற்போது வரப்போகிறது.
இனி வரும் காலங்களில் நமது கணினிகளில் ஹார்ட் டிஸ்க் இயங்கு தளத்திற்கு (OS) மட்டுமே பயன்படும் என்று கருதப்படுகிறது நம் தகவல்கள் எல்லாம் Cloud Computing முறையில் வந்து விடும் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள் ஆனால் இந்தியாவிற்கு இது போல வர பல வருடங்கள் ஆகும் காரணம் இணைய வேகம் தான். தென் கொரியா அமெரிக்கா சிங்கப்பூர் ஜப்பான் போன்ற இணைய வசதி சிறப்பாக உள்ள நாடுகள் இதில் முதலில் வர வாய்ப்பு உள்ளது. அதோடு நமது நாட்டில் இன்னும் இணையம் செலவு மிக்கதாகவே உள்ளது. Unlimited வசதி இருந்தால் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும் இல்லை என்றால் மிகுந்த செலவு பிடிக்கும் விசயமாக இருக்கும்.
Cloud computing என்பது மிகப்பெரிய விஷயம் அதில் ஏகப்பட்ட தகவல்கள் விஷயங்கள் அடங்கி உள்ளது. Just like that ஒரு பதிவில் கூறிவிடக்கூடிய செய்திகள் அல்ல. நான் மேற்கூறியது சிறு அறிமுகம் மட்டுமே. சிலருக்கு குழப்பமாக இருந்து இருக்கலாம் இருந்தாலும் ஓரளவாவது புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன் icon smile வருகிறது கூகுள் டிரைவ்     [Cloud Computing]

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget