APOLLOPARTHIBAN

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Friday, March 2, 2012

ஹார்ட் டிஸ்க் (HARD DISK) பார்டிசன்களை எளிமையாக நிர்வகிக்க,,,,


முதலில் பார்டிசன் என்றால் என்ன என்பதை பார்ப்போம். கணினியில் உள்ள ஹார்ட்டிஸ்க் பெரிய கொள்ளளவில் வரும் போது அதனை நம் வசதிக்கேற்ப வெவ்வேறு அளவுகளில் பல பகுதிகளாக பிரித்து கொள்ளலாம். அதுதான் பாடிசன் எனப்படுகிறது. புரியும் படி சொல்ல வேண்டுமெனில் கணினியில் ஹார்ட்டிஸ்க் 80GB அளவுள்ளதாக கொள்வோம். அதனை நம் பயன்பாட்டுக்கு C: - 20GB , D: - 30GB , E: - 30GB என்று வேண்டிய அளவுகளில் பிரித்து கொள்ளலாம். உபயோகிக்கும் போது C: - இயங்குதளம் , D: - மென்பொருள்கள் , E: - பாடல்கள் , வீடியோ என்று சேமித்து விருப்பப்படி உபயோகித்து கொள்ளலாம்.

பெரும்பாலும் இவை நீங்கள் கணினி வாங்கும் போதே செய்யப்பட்டு வந்து விடும். இதில் எனக்கு ஒரு பிரச்சினை தோன்றியது. C: -ல் 20GB மட்டும் இருந்ததால் நிறுவும் மென்பொருள்களால் நிறைந்து நாளடைவில் Disk is full என்று வந்து விட்டது. D: -ல் அதிகமான இடம் இருந்தாலும் அதனை C: -க்கு நகர்த்துவது கடினமான காரியம்.

இது போன்ற தருணங்களில் முன்பு FDISK எனும் DOS டூலை உபயோகித்து வந்தேன். மொத்த ஹார்ட்டிஸ்க்கையும் திரும்ப பிரித்து C: அதிகமாகவும் D: , E: அளவு குறைவாகவும் நிறுவ வேண்டி இருந்தது. இந்த டூலை உபயோகிக்கும் போது ஹார்ட்டிஸ்க்கில் இருந்த அனைத்து தகவல்களும் அழிந்து விடும். மீண்டும் format செய்து புதியது போல் இயங்குதளம் நிறுவி உபயோக படுத்த வேண்டி இருக்கும். :(

ஆனால் Easeus Partition Master மென்பொருளை அறிந்து கொண்ட பிறகு இந்த வேலை மிக எளிதாயிற்று. இதன் மூலம் எளிய வழி முறைகள் மூலம் பார்டிசன் அளவுகளை கூட்டலாம் / குறைக்கலாம். பார்டிசன்களை அப்படியே காப்பி செய்து கொள்ளலாம். புதிய பாடிசன்களை உருவாக்கலாம். பார்டிசன்களை நீக்கலாம். ஏற்கனவே உள்ள பார்டிசன்களை இரண்டாக பிரிக்கலாம். மேலும் பல வசதிகள் உள்ளன. பார்டிசன்களை Format செய்து கொள்ளலாம்.

இவை அனைத்தையும் உங்கள் ஹார்ட்டிஸ்கில் எவ்வித தகவல் இழப்பும் (Data Loss) இன்றி செய்ய முடியும். இந்த மென்பொருள் இல்ல பயனர்களுக்கு (Home Use) முற்றிலும் இலவசம். இதனை இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். இது விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 இயங்குதளங்களில் இயங்கும்.


மேலும் ஸ்க்ரீன்ஷாட்கள் .இத்தனை உபயோகித்து உங்கள் ஹார்ட்டிஸ்க் பார்டிசன்களில் தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து கொள்ளுங்கள். மாற்றங்கள் செய்த பின்பு மாற்றங்கள் சேமிக்கப்பட்டு உங்கள் கணினியை மீண்டும் துவக்க (Restart) சொல்லும். கணினி மீண்டும் துவங்க ஆரம்பிக்கும் போது நீங்கள் செய்த மாற்றங்கள் செயல்படுத்த படும்.

முக்கிய குறிப்பு : சோதித்து பார்க்கும் போது உங்கள் கணினியில் ஏதேனும் முக்கிய கோப்புகள் / தகவல்கள் இருந்தால் அவற்றைUSB டிரைவிலோ, DVD யிலோ Backup எடுத்து கொள்ளவும்நீங்கள் தெரியாமல் ஏதேனும் தவறுகள் செய்ததால் தகவல்களைஇழக்க நேரிடலாம்

Thursday, March 1, 2012

கற்றுக்கொண்டதை பிற மக்களுக்கு கற்பிப்பது Nokia Phone இன் Life Timer இனை Zero ஆக்குவது எப்படி?

நம்முடைய Phone வாங்கி இன்றுவரை எத்தனை மணித்தியாலங்கள் மற்றும் நிமிடம் பாவித்து இருக்கிறது என்பதை அறிய Phone இல் *#92702689# இனை டைப் செய்தால் போதும், அதை பற்றிய விபரங்கள் அனைத்தையும் காட்டிவிடும்.இதை எப்படி Zero (0) ஆக்குவது என்று பார்ப்போம்.



தேவையானது

01.உங்களுடைய phone இன் Data Cable



04.Nokia PC Suite - உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.இல்லாதவர்கள் இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Nokia PC Suite இனை Exit பன்னிவிட்டு , NSS என்ற மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

உங்களுடைய Phone இனை, Data Cable மூலம் இணைக்கும் போது வரும் தெரிவுகளில் PC Suite எனபதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்








நீங்கள் டவுன்லோட் செய்த PM File இனை Open செய்து கொள்ளுங்கள்



அவ்வளவுதான்......உங்களுடைய Phone இனை Switch OFFஆக்கிவிட்டு, ON செய்து LifeTimer இனை (*#92702689#) பாருங்கள்.....0வில் இருக்கும்.

கீபோட், மவுஸை பயன்படுத்தாத போது லாக் செய்வதற்கு.

தொடர்ச்சியாக கணினியை பயன்படுத்திவிட்டு சிறிது நேர ஓய்விற்காக அவ்விடத்தை விட்டு விலகி செல்லும்போது
குழந்தைகள் மற்றும் ஏனையோர் தேவையில்லாமல்

கணினியின் கீபோட் மற்றும் மவுஸை பயன்படுத்துவதிலிருந்து தடுப்பதற்கு உங்கள் கணினியின் கீபோட் மற்றும் மவுஸை தற்காலிகமாக லாக் செய்து வைக்க KeyFreeze  என்ற மென்பொருளால் முடிகிறது.

இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவிய பின்னர் ரன் செய்து லாக் செய்யலாம். மீண்டும் பயன்படுத்த லாக்கை எடுப்பதற்கு Ctrl+Alt+Del –> கீகளுடன் Esc கீயையும் அழுத்திவிட்டால் போதும்.

டவுண்லோட் செய்வதற்கு இங்கே http://keyfreeze.com/

Wednesday, February 29, 2012

[♥] பேஸ்புக்கை பழைய தோற்றத்திற்கு மாற்ற Disable Timeline........

உலகில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படும் முதன்மை சமூக தளமான பேஸ்புக் தளம் வாசகர்களின் ப்ரோபைல் பக்கங்களுக்கு Timeline எனப்படும் புதிய தோற்றத்தை வெளியிட்டது. இந்த புதிய தோற்றம் சிலருக்கு பிடித்தும் சிலருக்கு பிடிக்காமலும் உள்ளது. இருந்தாலும் இந்த Timeline தோற்றம் பிடிக்குதோ இல்லையோ அனைவரும் கட்டாயமாக உபயோகித்தே ஆக வேண்டும் என வாசகர்களிடத்தில் திணித்தது பேஸ்புக் தளம். 800 மில்லியன் வாசகர்களை கொண்ட ஒரு தளம் இது போல நடந்து கொண்டது பலபேருக்கு அதிருப்தியை அளித்தது. இருந்தாலும் வேறு வழி இல்லாமல் இந்த Timeline தோற்றத்தை உபயோகித்து வருகின்றனர். உங்களுக்கும் இந்த Timeline தோற்றம் பிடிக்கவில்லையா? பழைய தோற்றத்திற்கு மாற விரும்புகிறீர்களா? ஆம் என்றால் கீழே உள்ள வழிமுறையை பின்பற்றி Timeline தோற்றத்தை டிசப்ளே செய்யுங்கள்.


 
முதலில் இந்த  Timeline Remove   ல் கிளிக் செய்து இந்த தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். 
உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 



பயர்பாக்ஸ் மற்றும் குரோம் உலவிகளை பயன்படுத்துபவர்கள் அதற்க்கான லோகோவில் கிளிக் செய்து அந்த நீட்சியை உங்கள் பிரவுசரில் இணைத்து கொள்ளுங்கள் (IE, SAFARI உலவி உபயோகிப்பவர்களுக்கான நீட்சி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்).
இந்த நீட்சி உங்கள் பிரவுசரில் இன்ஸ்டால் ஆகிய உடன் பேஸ்புக் ப்ரோபைல் பக்கத்தை ஓபன் செய்து பாருங்கள் TIMELINE தோற்றம் மறைந்து பழைய தோற்றத்தில் வந்திருப்பதை காண்பீர்கள்.

இந்த நீட்சியை Un Install செய்வதன் மூலம் எந்த நேரத்திலும் Timeline தோற்றத்தை மீண்டும் கொண்டு வரலாம்

Monday, February 27, 2012

உங்கள் Opera இணைய உலாவியை எங்கும் எடுத்து செல்லலாம்


Opera 9.64 USB  இணைய உலாவியை எங்கும் எடுத்து செல்லலாம். இந்த Opera 9.64 USB இனணய உலாவியை உங்கள் pen drive அல்லது flash driveல் எடுத்து செல்லலாம்.
உங்கள் Opera இனைய உலாவியை எங்கும் எடுத்த்டு செல்லலாம்

Opera 9.64 USB  இணைய உலாவி சாதரன Opera இணைய உலாவியை போலவே இருக்கும்.
உங்கள் settings மற்றும் புக்மார்க்குகள் எங்கும் எடுத்து செல்லலாம்.



உங்கள் Opera இனைய உலாவியை எங்கும் எடுத்த்டு செல்லலாம்
Opera 9.64 USB தரவிறக்கம் செய்து பின்பு zip கோப்பை extract செய்து உங்கள் USB அல்லது Flash Driveல் copy செய்ய வேண்டும். 

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget