இணையத்திலிருந்து கோப்புகளைத் தரவிறக்கம் செய்யும் போது சிலர் எதாவது ஒரு தரவிறக்க மென்பொருள்களைப் பயன்படுத்துவார்கள்.
பயர்பொக்ஸ் உலவியைப் பயன்படுத்துபவர்கள் தரவிறக்கம் செய்யும் போது, பயர்பொக்சின் இயல்பான தரவிறக்க வசதியிலேயே தரவிறக்குவார்கள்.
சிறிய கோப்பென்றால் பிரச்சினையில்லை. பெரிய கோப்புகளைத் தரவிறக்கும் போது சிலருக்குக் காத்திருக்கப்பிடிக்காது. பயர்பொக்சில் தரவிறக்கத்தை தற்காலிகமாக நிறுத்தியும் வைக்க முடியாது. தரவிறக்கம் முடியும் வரை நாமும் கணணியை அணைக்காமல் வைத்திருக்க வேண்டும்.
இந்த மாதிரி நிலைகளில் தரவிறக்கம் முடிந்தவுடன் விண்டோஸ் தானாகவே அணைத்துவிடப்பட்டால் எவ்வளவு சுலபமாக இருக்கும் என நினைப்போம்.
இதற்கு உதவுவதற்கு உருவாக்கப்பட்ட ஒரு பயர்பொக்ஸ் நீட்சி தான் Auto Shutdown NG. இந்த நீட்சியின் மூலம் பயர்பொக்சில் தரவிறக்கும் செயல் முடிந்தவுடன் கணணியை தானாகவே அணைத்து விடமுடியும். இதனால் நாமும் கணணியோடு சேர்ந்து காத்திருக்கத் தேவையில்லை.
இந்த நீட்சியை நிறுவிய பின்னர் Firefox Addons சென்று AutoShutdown Option இல் உங்கள் இயங்குதளத்தைத் தேர்வு செய்து விட்டால் போதும்.அடுத்து எதாவது ஒரு கோப்பை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யும் போது அதன் டவுன்லோடு மேனேஜர்(Firefox Download manager) விண்டோவின் அடியில் கணணியை அணைப்பதற்கான(Shut down) பட்டன் ஒன்று புதியதாக வந்திருக்கும்.
இதனை ஒருமுறை கிளிக் செய்தால் இது சிவப்பு நிறத்தில் மாறிவிடும். உங்களுக்கு தரவிறக்கம் முடிந்தவுடன் கணணியை அணைக்க வேண்டுமென்றால் ஒரு முறை கிளிக் செய்தால் போதுமானது.
கணணியை அணைக்க வேண்டாம் என்றால் மீண்டும் அந்த பட்டனையே கிளிக் செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் உங்கள் வேலையைச் செய்யலாம். எல்லா கோப்புகளும் தரவிறக்கி முடிந்தவுடன் இந்த நீட்சி கண்டறிந்து கணணியை அணைத்து விடும்.
|
About Me
- apolloparthiban
- tirunelveli, tamilnadu, India
- இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.
Saturday, March 23, 2013
தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே அணைவதற்கு!
Wednesday, March 13, 2013
கணினி வேகமாக துவங்க...
நம்ம கணினி நல்ல Configuration-ல இருந்தாலும், அது Boot ஆக ரொம்ப நேரம் எடுத்துக்கும். சில நேரங்கள்ல நம்மளே கடுப்பாயி அணைச்சு போட்டுட்டு போய்டுவோம். கீழ குறிப்பிட்டுறுக்கிற மாதிரி வழிமுறைகள்ல பின்பற்றினா… உங்க கணினி வேகமா Boot ஆகும்…
1. நோட்பேட் (Notepad) திறந்து, "del c:\windows\prefetch\ntosboot-*.* /q" (கொட்டேஷன் இல்லாம) தட்டச்சு செய்யுங்க, பின்னர் "ntosboot.bat" – னு
c:\ – ல சேமிச்சு (Save) வையுங்க.
2. Start menu போய், "Run..." செலக்ட் பண்ணுங்க, "gpedit.msc"-னு தட்டச்சு செய்யுங்க.
3. இப்ப "Computer Configuration" – ன, டபுள் கிளிக் பண்ணுங்க, உள்ள "Windows Settings" டபுள் கிளிக் பண்ணி உள்ள போங்க, "Shutdown" – னு இருக்குற ஆப்சன கிளிக் பண்ணுங்க.
4. ஒரு புதிய விண்டோ ஓப்பன் ஆகும், கிளிக் "add", "Browse"-ல போய், முன்ன சேவ் பண்ண File, ஓப்பன் பண்ணுங்க.
5. கிளிக் "OK", "Apply" & "OK",
6. திரும்பவும் "Run..." வந்து, "devmgmt.msc" தட்டச்சு செய்யுங்க.
7. டபுள் கிளிக் "IDE ATA/ATAPI controllers".
8. "Primary IDE Channel" – ல, Right click பண்ணி, "Properties" செலக்ட் பண்ணுங்க.
9. "Advanced Settings" tab கிளிக் பண்ணி, 'none' கொடுங்க.
10. "Secondary IDE channel", Right click பண்ணி "Properties" போய் 9த் ஸ்டெப்ல பண்ண மாதிரி "OK" கொடுங்க.
11. கடைசியா உங்க கணினிய ரீபூட் (Reboot) செச்சு Check பண்ணுங்க
Monday, March 11, 2013
கணனியில் காணப்படும் Driver கோளாறுகளை இலகுவாக சரி செய்வதற்கு
கணனியின் வன்பொருட்பாகங்களையும் (Hardware), அப்பிளிக்கேஷன் மென்பொருட்களையும் ஒருங்கிணைத்து செயலாற்றுவதில் Driver மென்பொருட்களின் பயன்பாடு அளப்பரியதாகும்.
இவ்வாறு குறித்த Driver மென்பொருட்கள் கணனியில் நிறுவுப்படாதவிடத்து அந்த Driver சார்ந்த சேவைகளை பெறமுடியாது போகும். எனவே அம்மென்பொருளினை நிறுவ வேண்டிய தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில் உண்டாகும் சிரமங்களை தவிர்ப்பதற்காக DriverEasy எனும் மென்பொருள் பயன்படுகின்றது.
இம்மென்பொருளானது கணனியில் பொருத்தப்பட்டுள்ள அனைத்துவிதமான வன்பொருட்கள் மற்றும் அவை தொடர்பாக நிறுவப்பட்டுள்ள Driver மென்பொருட்கள் என்பனவற்றை ஸ்கான் செய்து நிறுவப்படவேண்டி Driver மென்பொருட்களை பட்டியலிட்டுக் காட்டும். அதன் பின்னர் Download என்பதனை கிளிக் செய்து நிறுவிக்கொள்ள முடியும்.
Tuesday, February 19, 2013
அஷத்தாலான 6 மென்பொருள் (Softwares)
Adobe Photoshop 7.0 with Serial Key (Full Version ) இலவசமாக டவுன்லோட் செய்ய
----------------------------------------------------------------------------------------------------------------------
CyberLink powerdirector 9 with key Full Version இலவசமாக டவுன்லோட் செய்ய
Note
This is Torrent Download file. You must be Install µTorrent in your System.
This is Torrent Download file. You must be Install µTorrent in your System.
------------------------------------------------------------------------------------------------------------------------
Corel Draw X5 Ful version இலவசமாக டவுன்லோட் செய்ய
Note
This is Torrent Download file. You must be Install µTorrent in your System.
This is Torrent Download file. You must be Install µTorrent in your System.
------------------------------------------------------------------------------------------------------------------------
AutoCad 2013 Full Version with seial Key இலவசமாக டவுன்லோட் செய்ய
1st remove the tick and click download option
---------------------------------------------------------------------------------------------------------------------
CyberLink YouCam 5 Full Version + Serial Key இலவசமாக டவுன்லோட் செய்ய
---------------------------------------------------------------------------------------------------------------------
Proshow Gold 4.5.2949 With Keygen Full Version இலவசமாக டவுன்லோட் செய்ய
Friday, February 15, 2013
குரோமில் ஏற்படும் Shockwave plug-in crashes பிழையை சரி செய்வது எப்படி?
ஏராளமான இணைய பிரவுசர்கள் இருந்தாலும் கூகுள் நிறுவனம் வழங்கும் க்ரோம் பிரவுசர் தற்பொழுது பெரும்பாலானவர்களால் உபயோகப் படுத்தப்படுகிறது. இதன் வேகம், எளிமை, வசதிகள் போன்ற வற்றால் மிக வேகமாக வளர்ந்து வரும் பிரவுசராகும். அதிகம் பயன்படுத்துபவர்கள் வரிசையில் உலகளவில் இரண்டாவது இடத்தையும் இந்தியாவில் முதல் இடத்திலும் உள்ள சிறப்பு மிக்க பிரவுசர் குரோம் பிரவுசராகும். சிறப்பம்சங்கள் இருந்தாலும் உலவியை பயன்படுத்தும் பொழுது சில பிழைகளை சந்தித்து இருப்போம். அதில் Shockwave Plug-in crashed என்ற பிழையும் அடிக்கடி உருவாகும். இந்த பிழையை எப்படி சரி செய்வது என பார்ப்போம்.

பிழையை சரிசெய்வது எப்படி:
அடோப் பிளாஷ் கணினியில் இரண்டு இடத்தில் இன்ஸ்டால் ஆகி இருக்கும். கணினியிலும் (OS Installation), குரோம் உலவியிலும் (Internal Flash Installation) இன்ஸ்டால் ஆகி இருக்கும். ஏதாவது ஒரு தளத்தை ஓபன் செய்யும் பொழுது இவை இரண்டிற்குள் நடக்கும் குழப்பமே இந்த பிழை வர காரணமாகிறது. இதில் ஒன்றை (Internal Flash Installation) செயலிழக்க வைத்து விட்டால் இந்த பிழை வராமல் தடுக்கலாம்.
- இதுவரை உங்களுக்கு இந்த பிழை ஏற்ப்பட வில்லை எனில் நீங்கள் எதுவும் மாற்றம் செய்ய வேண்டாம் பிழை ஏற்ப்படுபவர்கள் குரோம் உலவியை திறந்து அட்ரஸ் பாரில் chrome://plugins என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.
- உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் ஆகும் கீழே படத்தில் காட்டி இருக்கும் இடத்தில் உள்ள + Details என்பதை கிளிக் செய்யவும்.

- அடுத்து உங்களின் விண்டோ கீழே இருப்பதை போல இருக்கும். அதில் Flash (2 files) என்ற பகுதி கீழே இருப்பதை போல இருக்கும்.
- Location என்பதில் உள்ள URL வைத்து இரண்டையும் சுலபமாக வேறுபடுத்தி பார்க்கலாம். மேலே படத்தில் காட்டியுள்ள (Chrome Internal Installation) பகுதியில் உள்ள Disable என்பதை கிளிக் செய்யவும்.
- Disable கிளிக் செய்தவுடன் உங்கள் விண்டோ கீழே இருப்பதை போல இருக்கும்.
- Disable செய்தவுடன் உங்களுடைய விண்டோவை மூடிவிட்டு திரும்பவும் ஓபன் செய்து கொள்ளவும். இனி இந்த பிழை ஏற்படாது.
Note1: இதனை disable செய்வதால் குரோம் பிரவுசரின் புதிய பதிப்பு வெளியிட்டவுடன் ஆட்டோமேட்டிக் அப்டேட் ஆகாது. புதிய பதிப்பை நீங்களே டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவேண்டும்.
Note2: குரோம் உலவியை அப்டேட் செய்து விட்டால் இந்த நீட்சி திரும்பவும் வேலை செய்ய ஆரம்பித்து விடும் திரும்பவும் இதை Disable செய்யவேண்டும்.
Subscribe to:
Posts (Atom)









.jpg)





