APOLLOPARTHIBAN: மடிக்கணினியின் மின்கல காப்பை( BATTERY BACKUP) எவ்வாறு அதிகரிப்பது ?

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Saturday, August 13, 2011

மடிக்கணினியின் மின்கல காப்பை( BATTERY BACKUP) எவ்வாறு அதிகரிப்பது ?

இந்த காலம் மடிக்கணினியின் காலம் என்றே குறிப்பிடலாம் அவ்வாறு இப்பொழுது மடிக்கணினியின் ஆதிக்கம் அதிகரித்து உள்ளது யாரை எங்கு பார்த்தாலும் ஒரு மடிகணினியுடன் தான் இருக்கிறார்கள் . பெரும்பாலும் வேலை செய்பவர்கள் மடிக்கணினியை தான் விரும்புகிறார்கள் அதற்க்கு நிறைய காரணங்கள் இருக்கிறது . மடிக்கணினியை நாம் எங்கு எப்பொழுது வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம் ஒரு கைபேசியோஅல்லது ஒரு USB மோடமோ இருந்தால் போதும் நாம் மடிக்கணினியின் மூலம் எங்கு இருந்தாலும் இணையத்தை உபயோகிக்கலாம் அது மட்டுமல்ல மற்ற சாதனகளுடம் இணைப்பதற்கு மிக எளிதாகவும் இருக்கும் இதனால் மடிக்கணினி அதிக புகழ் பெற்றுவிட்டது .

இதை இல்லாவ்வற்றையும் விட இன்றியமையாத ஒன்று என்னவென்றால் மடிக்கணினியை நாம் மின்சாரம் இல்லாத நேரங்களிலும் பயன்படுத்தலாம் என்பது தான். இந்த ஒரு விஷயத்தால் வேலை செய்யும் அனைவரும் மடிக்கணினியை பயன்படுத்த ஆசைபடுகிறார்கள்.

மடிக்கணிணியில் மின்கலத்தை உபயோக படுத்துகிறோம் இந்த மின்கலம் மின்சாரம் உள்ளபோது மின்சாரத்தை சேகரித்து வைத்துக்கொள்ளும் அதன் பின் மின்சாரம் இல்லா நேரங்களில் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பொதுவாக மடிக்கணினிகள் இரண்டு மணிநேரம் மின்கலத்தின் காப்பு இருக்கும் ஆனால் நாம் மடிகணியை பராமரிப்பது பொறுத்தே அந்த மின்கலத்தின் காப்பு இருக்கும் நாம் அதை பராமரிக்க தவறினால் அதன் காப்பு மிகவும் குறைந்துவிடும் சில மடிக்கணினிகளை அரைமணி நேரம் மின்சாரம் கூட இல்லாமல் உபயோகிக்க முடியாது.நாம் மடிக்கணினியை மிகவும் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும்.

இதோ மடிக்கணினியை பராமரிக்க ஒரு இலவச மென்பொருள் மைக்ரோசாப்ட்டின் FIX IT . இந்த மென்பொருளை மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.



இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள் பின்னர் அந்த மென்பொருளை திறக்கவும் அதில் ACCEPT பொத்தானை அழுத்தவும் பின்னர் அந்த மென்பொருள் சில FIX IT கோப்புகளை தரவிறக்கும் அதற்கு பின்னர் கீழே உள்ளதை போல தோன்றும்.






பின்னர் இதில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யவும்.அதில் முதலில் உள்ளது சிக்கல்களை தேடி தீர்க்க குடியது . இரண்டாவது உள்ளது வெறுமனே சிக்கல் தேடுகிறது மற்றும் தனியாக ஒவ்வொரு சிக்கலுக்கும் தீர்வு கொடுக்கிறது.


அந்த சிக்கல்களை சரி செய்த பின்னர் கீழே உள்ளதை போல தோன்றும்.பின்னர் அதில் NEXT பொத்தானை அழுத்தி அடுத்த சிக்கலுக்கு செல்லவும் அல்லது அதை விட்டு வெளியேறவும்.


இதை நீங்கள் பயன்படுத்தினால் உங்கள் மடிக்கணினியின் மின்கலம் காப்பு (BATTERY BACKUP) சற்று அதிகரிக்கும்.

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget