APOLLOPARTHIBAN: ஒரே கணினியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜி - டாக் இயக்க

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Saturday, August 13, 2011

ஒரே கணினியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜி - டாக் இயக்க

இணையத்தின் ஜாம்பவானாக இருப்பது கூகிள் தான் அந்த அளவுக்கு இணையத்தில் எங்கு திரும்பினாலும் ஏதாவது ஒரு வகையில் கூகுளின் சேவை நமக்கு பயனளிக்கிறது. இப்பொழுது இது வெளியிட்டு உள்ள கூகிள் + சேவை இணையத்தில் பல சாதனைகளை செய்து கொண்டு இருக்கிறது. அதைப்போல் இந்த நிறுவனத்தின் ஜி-டாக் சேவை பற்றி அறியாதவர்கள் இருக்க இயலாது. இந்த மென்பொருளானது ஜி மெயில் இடைமுகம் மூலம் நாம் ஜி-மெயில் பயனர்களிடம் அரட்டையடிக்க உதவுகிறது.


நம்மில் பலர் இந்த மென்பொருளை உபயோக படுத்துகிறோம். நம் வீட்டில் பலரும் இதனை பயன்படுத்துகின்றனர். நம் வீட்டில் வேறு யாராவது இதனை பயன்படுத்தி கொண்டு இருந்தால் நாம் நமக்கு வரும் மின்னஞ்சல்களை நாம் கண்டு அறிய இயலாது இதனால் நாம் உடனடியாக பதில் அனுப்பவேண்டிய மின்னஞ்சல்களுக்கு தாமதமாக அனுப்ப வேண்டிய சூழ்நிலை வரலாம்.

இதற்காக ஒரு சிறிய நுணுக்கம் இதன் மூலம் நாம் ஒரே கணினியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜி-டாக்கை திறக்கலாம். இதற்க்கு எந்த விதமான மென்பொருளும் அவசியம் இல்லை.

இதோஅதற்க்கான நுணுக்கம் :

1. முதலில் START--> ALL PROGRAMS-->GTALK -க்கு செல்லவும்

2. பின்னர் G-TALK-ஐ வலது கிளிக் செய்து PROPERTIES என்பதை தேர்வு செய்யவும் .

3.அதில் TARGET என்ற சொற்பெட்டியில் C:\Program Files\Google\Google Talk\googletalk.exe" /startmenu என்று இருக்கும் அதில் startmenu என்பதை நீக்கிவிட்டு nomutex என்று தட்டாசு செய்து விட்டு OK பொத்தானை அழுத்தவும்.






அவ்வளவு தான் ஜி-டாக்கை மறுதொடக்கம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதை நீங்கள் எவ்வளவு முறை வேண்டுமானாலும் திறக்கலாம்.இதனை திறக்க START-->ALL PROGRAMS--> GTALK என்பதை சொடுக்குங்கள். உங்கள் வீட்டில் உள்ள இல்லா நபர்களுக்கும் ஒரு ஜி-டாக் திறந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget