APOLLOPARTHIBAN: கடைசியாக உங்கள் கணிப்பொறியை எப்பொழுது shutdown செய்தீர்கள்.

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Thursday, August 4, 2011

கடைசியாக உங்கள் கணிப்பொறியை எப்பொழுது shutdown செய்தீர்கள்.

சில அலுவலகங்களில், சில கணினிகள் 24 மணி நேரமும் செயல்பட்டுக்கொண்டிருக்கும். கடைசியாக எப்பொழுது ஷட்டவுன் செய்யப்பட்டது என்பதே மறந்து போயிருக்கும். அதனை சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.


உங்கள் கணினியில் இயங்கு பின்புலத்தில், EventLogger எனப்படும் ஒரு செயலி செயல்பட்டுக்கொண்டே இருக்கும். கணிப்பொறியின் செயல்பாடுகளை அது எழுதி வைத்துக்கொண்டே இருக்கும். அதில் 6006 என்ற என்னுடைய EventId தான், கணிப்பொறியின் இயக்கம் நிறுத்தப்படும்போது எழுதப்படும். அதில் உள்ள தேதி மற்றும் நேரத்தை வைத்து ஷட்டவுன்செய்யப்பட நேரத்தை அறியலாம்.

1. ஸ்டார்ட் --> ரன் --> சென்று Eventvwr.msc என டைப் செய்யுங்கள்.



2. வரும் விண்டோவில் System என்பதை தேர்வு செய்யுங்கள்.
விஸ்டா வாக இருந்தால் Windows Logs என்பதன் கீழ் System என்பதை தேர்வு seyyavum

3. வலது புறத்தில் வரும் தகவல்களை தேதி அடிப்படையில் இறங்குவரிசையில் வரிசைப்படுத்திக்கொள்ளுங்கள்.

4. இப்போது மேலே உள்ள வியூ (View) மெனுவில் Find என்பதை தேர்ந்தெடுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ கிடைக்கும். அதில் EventId என்பதில் 6006 என கொடுத்து Find Next பட்டனை க்ளிக் செய்யவும்.




5. இப்போது வலது புறத்தில் உங்கள் கணினி எந்த தேதியில் எந்த நேரத்தில் கடைசியாக ஷட்டவுன் செய்யப்பட்டது என்பது கிடைக்கும்.



இன்னொரு வழி (சுலபமான வழி) :

கீழே உள்ள ஸ்க்ரிப்டை அப்படியே காப்பி செய்து, ஒரு notepad ஓப்பன் செய்து பேஸ்ட் செய்யுங்கள். அந்த பைலை, ஏதாவதொரு பெயரில், கடைசியில் .vbs என்ற எக்ஸ்டன்ஷனில் உங்கள் டெஸ்க்டாப்பில் சேமித்துக்கொள்ளுங்கள்.

strValueName = "HKLM\SYSTEM\CurrentControlSet\Control\Windows\" _
& "ShutdownTime"
Set oShell = CreateObject("WScript.Shell")
Ar = oShell.RegRead(strValueName)
Term = Ar(7)*(2^56) + Ar(6)*(2^48) + Ar(5)*(2^40) + Ar(4)*(2^32) _
+ Ar(3)*(2^24) + Ar(2)*(2^16) + Ar(1)*(2^8) + Ar(0)
Days = Term/(1E7*86400)
WScript.Echo "ShutdownTime = " & CDate(DateSerial(1601, 1, 1) + Days) _
& " UTC"



நன்றி : VisualBasicScript.com



இப்போது டெஸ்க்டாப்பில் உள்ள அந்த பைலை டபுள் க்ளிக் செய்யுங்கள். தகவல் கிடைக்கும்.



No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget