ணினி உபயோகிப்பவர்களுக்கு வைரஸ் எனும் பெயர் கேட்டால் கொஞ்சம் அலர்ஜியாகத்தான் இருக்கும் அதிலும் புதியவர்களுக்கு கணினியில் ஏதாவது தகராறு என்றால் உடனே அவர்கள் சர்வீஸ் செய்யத்தான் நினைப்பார்கள் பார்மட் செய்யாமல் வைரஸ் நீக்கினாலும் அவர்களுக்கு அந்த பயம் விலகாது சரி இந்த வைரஸ் எப்படித்தான் நம் கணினியின் உள்ளே நுழைகிறது அந்த நுழைவாயிலை கொஞ்சம் அடைத்தால் இந்த பிரச்சினைக்கு கொஞ்சம் தீர்வு கிடைக்கும்.
வைரஸ் இணைய வழியிலும் மற்றும் பென் டிரைவிலும்,பிளாப்பி வழியிலும் தான் ஒரு கணினிக்குள்ளாக வைரஸ் வருகிறது அதிலும் இப்போதெல்லாம் பிளாப்பி என்பது இல்லாமல் போய்விட்டது அது ஏன் தகவல் பரிமாற்றத்துக்காக நாம் பயன்படுத்தும் சிடியின் வழியாக வைரஸ் வருவதில்லை ஏனென்றால் அது எழுதுவதற்கு அனுமதிப்பதில்லை ஆனால் பென் டிரைவ் அப்படியில்லை எத்தனை முறை வேண்டுமானாலும் அழித்து பதிந்து கொள்ளலாம் இந்த இடம் தான் வைரஸ்க்கு துணை செல்கிறது
இப்படி பென் டிரைவில் வரும் வைரஸ் தடுக்க சின்ன வழிமுறையை பின்பற்றலாம் இது சின்ன வழிமுறை ஆனாலும் இதனால் கணினிக்கு அதிக பாதுகாப்பு நிச்சியம், உங்கள் பென் டிரைவில் ஒரு புதிய போல்டர் உருவாக்கி அதற்கு பெயர் autorun.inf என கொடுத்து படத்தில் காண்பித்துள்ளது போல Read Only , Hidden இரண்டையும் தேர்வு செய்து ஓக்கே கொடுத்து விடவும் இனி இந்த போல்டர் உங்கள் பென் டிரைவில் இருந்து மறைந்து விடும்
எதற்காக இந்த போல்டரை உருவாக்கினோம் பெரும்பான்மையான வைரஸ்கள் இந்த Autorun.inf வழியாகதான் வருகிறது அப்படி வரும் வைரஸ்கள் நமது பென் டிரைவில் ஏற்கனவே ஒரு autorun.inf இருப்பதாலும் அது Read Only , Hidden ஆக இருப்பதாலும் அதனால் இந்த பெயரில் autorun.inf உருவாக்கி உள்ளே வரமுடியாது.
ஒரு autorun.inf உருவாக்கி விட்டால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடுமா? நீங்கள் உபயோகி்க்கும் பென் டிரைவ் என்றால் அதில் பாதுக்கப்பு ஏற்படுத்தியிருப்பீர்கள் வேறு ஒரு நண்பரின் பென் டிரைவ் தங்கள் கணினியில் உபயோகிக்க வேண்டிய கட்டாயம் அப்பொழுது என்ன செய்வீர்கள் இங்கும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்
கணினியில் பென் டிரைவ் இனைக்கும் முன்பு ஷிப்ட் கீயை அழுத்தி பிடித்துக்கொள்ளவும் இவ்வாறு செய்வதால் ஒரு வேளை அந்த பென் டிரைவில் வைரஸ் இருந்தால் அது autorun வழியாக தானியங்கியாக திறக்க விடாது இனி கீழே டாஸ்க்பாரில் வலது மூலையில் பென் டிரைவ் கணினியில் இணைந்ததற்கு அறிகுறியாக பச்சை நிற ஆரோ வந்திருக்கும் இனி Windows Key + E உபயோகித்து திறக்கும் விண்டோவில் பென் டிரைவ் தேர்ந்தெடுத்து இருமுறை கிளிக்கி திறக்காமல் வலது கிளிக் வழியாக open என்பதை தேர்ந்தெடுக்கவும் வேண்டுமானால் திறக்கும் முன்பே உங்கள் வைரஸ் காப்பான் கொண்டு சோதித்து விடுங்கள்.
ஒரு வேளை வைரஸ் இருந்தால்
1)Start- 2)Run Type 3) Type cmd
டிரைவின் பெயர் 4) G: (உங்கள் டிரைவின் எழுத்தை பார்த்துக்கொள்ளவும்)
அடுத்தபடியாக 5) ATTRIB -H -R -S AUTORUN.INF
மீண்டும் 6) EDIT AUTORUN.INF
இனி புதிதாக ஒரு ஊதா நிற விண்டோ திறக்கும் அதில் 7)File என்பதில் கிளிக்கி 8)Save as கொடுக்கவும் பின்னர் 9) Exit என கொடுக்கவும்(வெளியேறவும்)
மீண்டும் 10)Start- 11)Run Type 12) Type cmd
13) ATTRIB +H +R +S AUTORUN.INF
அடுத்து 14) EXIT
அவ்வளவுதான் இனி பென் டிரைவ் எடுத்து மீண்டும் கணினியில் இணைத்துக்கொள்ளுங்கள் இப்போது சோதித்து பாருங்கள் வைரஸ் இருக்காது.
உங்கள் வைரஸ் கொல்லி எந்தளவிற்க்கு சிறந்தது என சோதித்து பார்க்க கீழே இருக்கும் கோடிங்கை காப்பி செய்து நோட்பேட் திறந்து பேஸ்ட் செய்து சேமித்து பாருங்கள் உங்கள் ஆன்டிவைரஸ் மென்பொருள் சிறப்பாக செயல்பட்டால் இதை சேமிக்க விடாது அப்படி சேமிக்க அனுமதித்தால் ஆண்டிவைரஸ் மென்பொருளை மாற்றிவிட்டு வேறு நல்ல மென்பொருளை நிறுவுங்கள்
=================================================================================
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
=================================================================================
சில நேரங்களில் வைரஸ் கன்ட்ரோல் பேனல் மற்றும் ரிஜிஸ்டர்யையும் முடக்கி விடும் அதை சரி செய்ய என் முந்தயை பதிவான காணமல் போன கன்ட்ரோல் பேனல் பாருங்கள்
No comments:
Post a Comment