APOLLOPARTHIBAN: photoshop psd பைல்கள் தம்ப்நைல்-ஆக தெரிய வேண்டுமா?

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Wednesday, November 9, 2011

photoshop psd பைல்கள் தம்ப்நைல்-ஆக தெரிய வேண்டுமா?


நண்பர்களே நாம் போட்டோஷாப் மென்பொருளைப்பற்றி அறிந்திருப்போம். வன்தட்டில் psd பைல்களை போட்டோஷாப் மென்பொருள் மூலம் சேமிக்கிறோம். அது தம்ப்நைல்-ஆக தெரிந்தால் நன்றாக இருக்கும் அல்லவா?

போட்டோஷாப்7-ஐ பயன்படுத்தினால் எந்தப்பிரச்சினையும் இல்லாமல் உங்களுக்கு psd file-கள் தம்ப்நைலாக தெரியும். ஆனால் cs2,cs4,cs5, போன்ற வெர்சன்களை பயன்படுத்துவோருக்கு தம்ப்நைல் வடிவில் psd file தெரியாது.

போட்டோஷாப் லேட்டஸ்ட் வெர்சன்களை பயன்படுத்தும் போது இந்தப் பிரச்சினை வருகிறது. இதற்கு இரண்டு தீர்வுகள் உள்ளது.


1. cs2,cs4,cs5, உடன் போட்டோஷாப்7-ஐயும் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

2. சில சிறிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். என்ன மாற்றம் செய்ய வேண்டும் என இனி பார்க்கலாம்.

கீழே உள்ள படத்தை பாருங்கள்.
01
இதில் உள்ள
psicon.dll என்ற பைலை காப்பி செய்து, கீழ்காணும் இடத்தில் பேஸ்ட் செய்ய வேண்டும்.

C:\Program Files\Common Files\Adobe\Shell -

இதில் psicon.dll பைலை பேஸ்ட் செய்து விடுங்கள். shell என்ற போல்டர் இல்லையென்றால் நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். பிறகு psicon.dll பைலை காப்பி செய்து அங்கு பேஸ்ட் செய்து விடுங்கள்.

அடுத்ததாக படத்தில் உள்ள Adobe என்ற பெயரில் இருக்கும் ரெஜிஸ்ட்ரி பைலை இரண்டு முறை கிளிக் செய்து ரன் செய்யுங்கள். வரும் விண்டோவில்yes கொடுத்து பிறகு வரும் விண்டோவில் ok கொடுத்து விடுங்கள்.

அவ்வளவுதான் இனி போட்டோஷாப்7 இல்லாமலேயே உங்களுக்கு psd file-கள் thumbnail-ஆகத் தெரியும்.

psicon.dll –ஐ தரவிறக்க இறுதியாக தரப்பட்டுள்ள லிங்கை கிளிக்கவும்.
இதில் செய்முறை நோட்பேடில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதிவிறக்கி வின்ரேர் மூலம் அன்சிப் செய்து கொள்ளுங்கள்.
மேலே படத்தில் உள்ளவாறு கோப்புகள் இருக்கும்.
பயன்படுத்திப்பார்த்து உங்களுடைய கருத்துக்களை கூறலாமே?



No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget