இது ஒரு இணையம் சார்ந்த பதிவு. எத்தனையோ வகுப்புக்கள் சென்று ஆங்கிலம் கற்றிருப்போம்.ஆனால் வெள்ளைக்காரனின் உச்சரிப்பு மட்டும் நமக்கு சுட்டுப்போட்டாலும் வரலையை என்று ஏங்குபவர்களுக்கே இந்த பதிவு.
இது ஒரு மென்பொருள் அல்ல. இலவசமான சேவையாக பேசும் ஆங்கில ஒன்லைன் Dictionary ஐ ஒரு தளம் வழங்குகிறது. இச்சேவையை நாம் பெற எமது கணிணியில் இருக்கவேண்டியவை:
ஸ்பீக்கர் அல்லது ஹெட்போன்
கூகிள் குறோம் உலாவி
இணைய வசதி
Windows இயங்குதளம்
4 KB அளவுடைய இடம்
இவ்வளவும் இருந்து விட்டால் எத்தகைய ஆங்கில கடினச்சொல்லையும் நாம் சுலபமாக உச்சரிக்க பழகிவிடலாம். இணையத்தில் உலாவும்போதே அதனை கற்றுக்கொள்ளலாம்.
சரி இந்த வசதியை பெற குறித்த இணையத்தினர் கூகிள் குறோமிற்கு ஒரு Addons / Extensions ஐ அறிமுகப்படுத்தியுள்ளனர். அதனை முதலில் உங்கள் கூகிள் குறோம் உலாவியில் இந்த இணைப்புக்கு சென்று நிறுவுங்கள்.
நிறுவிய பின் இணையத்தில் உலாவுங்கள். உலாவும்போது ஏதாவது சொல்லின் உச்சரிப்பை அறிய விரும்பினால் அந்த சொல்லை மட்டும் உங்கள் சுட்டியை பயன்படுத்தி தெரிவுசெய்யுங்கள்.
தெரிவு செய்த பின் Right கிளிக் செய்தால் மேலே படத்தில் உள்ளவாறு பொப்பப் மெனு ஒன்று வரும்.அதில் Pronounce word என்பதை சுட்டுங்கள். புதிய தாவலில் குறித்த இணையத்தளம் திறப்பதோடு அதன் தேடும் பெட்டியில் நீங்கள் தெரிவு செய்த சொல் இருப்பதையும் காணலாம். அதே சமயம் குறித்த சொல்லின் உச்சரிப்பையும் நாம் செவிமடுக்கலாம்.
அதேசமயம் குறித்த உச்சரிப்பை மீள மீள செவிமடுக்க Submit பொத்தானை சொடுக்குங்கள்.
இது மட்டுமில்லாமல் குறித்த இணைய்தளத்திற்கு நேரடியாக சென்று நாம் விரும்பிய சொல்லை கொடுத்தும் உச்சரிப்பை அறியலாம்.இணையத்தளம் செல்ல இங்கே சுட்டவும்.
தற்போதைக்கு 152405 சொற்களின் உச்சரிப்பை நாம் கேட்கலாம்.
No comments:
Post a Comment